Saturday, March 26, 2011

கருனாநிதிடம் சொந்தமாக கார் இல்லையாம்..... எதாவது நம்புகிற மாதிரி சொல்லுங்க.......

தேர்தல் நேரத்தில் நடக்கும், காமெடிகளுக்கு அளவே கிடையாது..... தேர்தலில் போட்டி போடுவோர் அனைவரும் தங்களுது சொத்து விவரங்களை அள்ளிக வேண்டும், என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறை, முதலில் இதற்கு எதிர்ப்பு தெரவித்த அரசியலால் கட்சிகள் அனைத்தும் வேறு வழி இன்றி இப்பொழுது தனது சொத்து கணக்குகளை சமர்பிக்கிறன..... அனால் அது எந்த அளவுக்கு நம்பத்தன்மை மிகுந்தது என்பது அவர்களுது ஆடிட்டர் க்கு மட்டுமே வெளிச்சம்....

இந்த தேர்தலுக்கு உழல் பெருசாளிகள் தங்களுது சொத்து மதிப்பை வெளி இட்டு இருக்கிறார்கள்.... இதை நம்புவர்கள் நம்பிகொள்ளலாம்..........

ஜெயலலிதாவின் சொத்து குறித்த முழு விவரம்:


  • ரொக்கக் கையிருப்பு - ரூ. 25,000.
  • பல்வேறு வகையான வங்கி நிரந்தர வைப்புத் தொகை, சேமிப்பு கணக்கு டெபாசிட், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் டெபாசிட் மொத்தம் ரூ. 2 கோடி மதிப்பில்.
  • இவை அனைத்தும் சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்து நீதிமன்றப் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளது.
  • பாண்டுகள், நிறுவனங்களில் பங்கு முதலீடு ரூ. 50,000. இவையும் கோர்ட் பொறுப்பில் உள்ளன.
  • சொந்தமாக வைத்துள்ள வாகனங்களின் மொத்த மதிப்பு ரூ. 8.35 லட்சம்

    - நிறுவனங்களில் செய்துள்ள முதலீடுகள் விவரம்:

    1. ஸ்ரீ ஜெயா பப்ளிகேஷன்ஸ் - ரூ. 8.5 கோடி.
    2. சசி எண்டர்பிரைஸஸ் - ரூ. 75 லட்சம்.
    3. கோட நாடு எஸ்டேட் - ரூ. 1 கோடி.
    4. ராயல் வேலி புளோரிடெக் எக்ஸ்போர்ட் - ரூ. 65 லட்சம்.

    நிறுவனங்களில் செய்துள்ள மொத்த முதலீட்டின் அளவு ரூ. 10.9 கோடி.

    ஜெயலலிதாவின் அசையும் சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ. 13 கோடியே 03 லட்சத்து 27 ஆயிரத்து 979.

    அசையாச் சொத்துக்கள் விவரம்

    வேளாண் நிலம்:

  • ஆந்திர மாநிலம், குத்துபுல்லாபுர் மாவட்டம், ஜிடிமேட்லா கிராமத்தில் 14.5 ஏக்கர். வாங்கிய தேதி: 10.06.1968 மற்றும் 25.10.168. வாங்கிய போது நிலத்தின் மதிப்பு 1,78,313 ரூபாய் (ஜெ., மற்றும் அவரது தாயார் பெயரால் வாங்கப்பட்டது). தோராயமான இன்றைய சந்தை மதிப்பு 11.25 கோடி ரூபாய்.
  • செய்யூர் கிராமத்தில் 3.43 ஏக்கர். வாங்கிய போது நிலத்தின் மதிப்பு 17,060 ரூபாய். வாங்கிய தேதி: 16.12.1981. தோராயமான இன்றைய சந்தை மதிப்பு ஐந்து லட்சம் ரூபாய்.
  • 79 போயஸ் கார்டன், சென்னையில் 1.5 கிரவுண்ட். வாங்கிய தேதி: 30.07.1991. வாங்கிய போது மதிப்பு: 10.2 லட்சம் ரூபாய். தற்போதைய சந்தை மதிப்பு: 3.24 கோடி ரூபாய்.
  • 8-3-1099 மற்றும் 8-3-1099ஏ, ஸ்ரீநகர் காலனி, ஹைதராபாத் என்ற முகவரியில் 651.18 சதுர மீட்டர் கட்டிடம். வாங்கி தேதி: 11.02.1967. வாங்கி போது மதிப்பு: 50 ஆயிரம் ரூபாய் (ஜெ., மற்றும் அவரது தாயரால் வாங்கப்பட்டது). தற்போதைய சந்தை மதிப்பு: 3.5 கோடி ரூபாய்.
  • ஜி.ஹெச்.18, தரைத்தளம், பர்சன் மேனர், சென்னையில் 180 சதுர அடி. வாங்கிய தேதி: 3.4.1990. வாங்கிய போது மதிப்பு: 1,05,409 ரூபாய். தற்போதைய சந்தை மதிப்பு: நான்கு லட்சம் ரூபாய்.
  • எண்: 213-பி, செயின்ட் மேரிஸ் ரோடு, மந்தவெளி, சென்னையில் 1206 சதுர அடி. வாங்கிய தேதி: 10.07.1989. வாங்கிய போது மதிப்பு: 3,60,509 ரூபாய். தற்போதை சந்தை மதிப்பு: 35 லட்சம் ரூபாய்.

    குடியிருப்பு கட்டடங்கள்:

    -
  • 81 போயஸ் கார்டன், சென்னையில் 10 கிரவுண்ட். வாங்கிய போது மதிப்பு 1,32,009 ரூபாய் (ஜெ., மற்றும் அவரது தாயாரால் வாங்கப்பட்டது). தற்போதைய சந்தை மதிப்பு: 20.16 கோடி ரூபாய். அசையாச் சொத்துக்களின் தற்போதைய சந்தை மதிப்பு மொத்தம் 38 கோடியே 37 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்.

    ஜெயலலிதாவிடம் கடன் நிலுவை எதுவும் இல்லை.

    நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றப் பொறுப்பில் உள்ளது என கூறப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு குறிப்பிடப்பட வில்லை.

    மொத்தமாக, ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களின் மதிப்பு ரூ. 51,40 ,67,979 ஆகும்.

    thatstamil

    கருணாநிதியின் சொத்து விவரம்-சொந்தமாக ஒரு கார் கூட இல்லை


  • கருணாநிதி பெயரில் ரொக்கம்மாக 15 ஆயிரம் ரூபாய். அவரது மனைவி தயாளு அம்மாள் பெயரில் 30 ஆயிரம் ரூபாய், துணைவி ராஜாத்தி பெயரில் 2 லட்சம் ரூபாய் உள்ளது.
    -
  • வங்கிக் கணக்கில் வைப்பு நிதியாக கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் 4 கணக்குகள் உள்ளன. இதில் 5 கோடியே 13 லட்சத்து 49 ஆயிரத்து 152 ரூபாய். அடையாறு கரூர் வைசியா வங்கியில் 13 லட்சத்து 74 ஆயிரத்து 664 ரூபாய். 
    -
  • கர்நாடகா வங்கியில் 39 லட்சத்து 62 ஆயிரத்து 995 ரூபாய். ராயப்பேட்டை இந்தியன் வங்கியில் 10 ஆயிரத்து 958 ரூபாய். சென்னை மகாலிங்கபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 11 ஆயிரத்து 135 ரூபாய்.
    -
  • கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் 11 லட்சத்து 39 ஆயிரத்து 441 ரூபாய். ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கியில் 13 லட்சத்து 15 ஆயிரத்து 180 ரூபாய் என, மொத்தம் 5 கோடியே 91 லட்சத்து 63 ஆயிரத்து 5,256 ரூபாய். 22 பைசா வங்கிக் கணக்கில் பணம் வைத்துள்ளார்.
    -
  • அஞ்சுகம் பதிப்பகம் என்கிற பங்குதாரர் நிறுவனத்தில் 50 சதம் பங்குகள் 78,330 ரூபாய். இந்த நிறுவனத்திற்கு சென்னை, 180/93, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் சொந்தான கட்டடம் மற்றும் நிலம். கோபாலபுரம் 15-4வது குறுக்குத்தெருவில் அஞ்சுகம் அம்மாள் அறக்கட்டளைக்கு செட்டில்மென்ட் செய்யப்பட்ட 6 ஆயிரத்து 162 சதுர அடி மனை மற்றும் அதில் உள்ள கட்டடம். அறக்கட்டளை சொத்து ஆயுட் காலம் அனுபவ பாத்தியம் உள்ளது. தஞ்சை மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் (சர்வே எண் 29, 30/2, 31/2ஏ) 14.30 ஏக்கர் நிலம். இதற்கான மதிப்பு 4 கோடியே 92 லட்சத்து 56 ஆயிரத்து 855 ரூபாய். இதன் மூலம் அவரது பெயரில் 10 கோடியே 84 லட்சத்து 20 ஆயிரத்து 380 ரூபாய். அவருக்கு திரைப்படம் எடுக்க மும்பையில் மோசர்பேரிடம் 10 லட்சம் ரூபாய் முன்பணம் வாங்கிய வகையில் கடன் உள்ளது என தெரிவித்துள்ளார். வருமான வரி 37 லட்சத்து 34 ஆயிரத்து 20 ரூபாய் கட்டியுள்ளார்.
    -
  • அசையும் சொத்து மதிப்பில், மனைவி தயாளு பெயரில் கலைஞர் "டிவி' நிறுவனத்தின் பங்குதாரர் என்ற வகையில், 6 கோடி ரூபாய் உட்பட 15 கோடியே 39 லட்சத்து 85 ஆயிரத்து 363 ரூபாய். அசையா சொத்துகள் 5 லட்சத்து 22 ஆயிரத்து 635 ரூபாய். இது தற்போதைய நடப்பு சந்தையின் தோராய மதிப்பாக 5 லட்சத்து 51 ஆயிரம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

    -
  • துணைவியார் ராசாத்தி பெயரில் அசையும் சொத்துகள் 20 கோடியே 62 லட்சத்து 61 ஆயிரத்து 924 ரூபாய். அசையா சொத்துகள் 3 கோடியே 8 லட்சத்து 35 ஆயிரத்து 318 ரூபாய். இதற்கு தற்போதைய நடப்பு சந்தையின் தோராய மதிப்பு 3 கோடியே 14 லட்சத்து 38 ஆயிரத்து 628 ரூபாய்.

    -
  • கனிமொழியிடம் ரூ. 1 கோடி கடன் வாங்கிய ராசாத்தி

    -
  • ராசாத்தி தனது மகள் கனிமொழியிடம் இருந்து, பற்றில்லாக் கடனாக வாங்கிய ஒரு கோடியே ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 503 ரூபாய் கடன் உள்ளது என சொத்து விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விஜயகாந்திற்கு ரூ. 2.5 கோடி கடன்-சொத்து மதிப்பு ரூ. 19. 88 கோடி

  • அவரிடம் ரூ. 19. 88 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துகளும், அவரது மனைவி பிரேமலதாவிடம் ரூ. 6.57 கோடி மதிப்பிலான சொத்துகளும் உள்ளன.

  • அவர் கையிருப்பும், வங்கியிலும் மொத்தம் ரூ. 7 லட்சத்து 56 ஆயிரத்து 90-ம், பிரேமலதாவிடம் ரூ. 6 லட்சமும் உள்ளது.

  • 2009-10-ம் ஆண்டில் விஜயகாந்த் ரூ. 53. 77 லட்சத்திற்கும், அவரது மனைவி ரூ. 12.82 லட்சத்திற்கும் வருமான வரி செலுத்தியுள்ளனர்.

  • விஜயகாந்த் ரூ. 7.5 கோடியும், பிரேமலதா ரூ. 1.72 கோடியும் அரசுக்கு வருமான வரி மற்றும் சொத்து வரியில் பாக்கிவைத்துள்ளனர். இது தொடர்பான அவர்கள் மேல்முறையீடும் நிலுவையில் உள்ளது.

  • விஜயகாந்திற்கு ரூ. 2.5 கோடி கடன் உள்ளது.

13 comments:

jothi said...

ப‌திவு முழுக்க‌ சீரிய‌சாக‌ இருந்தாலும் ந‌கைச்சுவைக்கு ப‌ஞ்ச‌மில்லை (முக்கிய‌மாக‌ ம‌னைவி, துணைவி)

உங்களுள் ஒருவன் said...

துணைவி க்கு துணைவியார் என்று வந்தாலும் ஒன்றும் சொல்லுவதற்கு இல்லை

YESRAMESH said...

வாங்க ஏழைகளா வாங்க

உங்களுள் ஒருவன் said...

இந்த ஏழைகள் தான் தேர்தல் சமயத்தில் நமக்கு பிச்சை (இலவசம் ) போட போகிறார்கள்........ @ yesramesh

Unknown said...

மனைவி,துணைவி வைத்துக்கொண்டு தமிழ்நாட்டின் தலைவர் என்கிறார். சுய ஒழுக்கம் இல்லாத ஒருதலைவர் எந்த அருகதையில் ஒரு சமுகத்தை ஆள ஆசைப்படுகிறார். இப்படிப்பட்ட கேவலங்கள் எந்த மாநிலத்திலும் இல்லை... ரெண்டு மனைவிகளுக்கும் சொத்து சேர்த்து அதை தேர்தல் ஆணையத்துக்கு காட்டுகிறார்.. மக்களும் பார்த்து விட்டு துட்டு வாங்கி ஒட்டுபோடுகிறார்கள்.. எங்கு போய் முட்டி கொள்வார்கள் அடுத்தவேளை உணவுக்ககும் வீட்டு வாடகைக்கும் அல்லாடும் ஏழைமக்கள். அரசு ஊழியர் ஒருவர் ரெண்டு மனைவி என்று சொல்லி அரசாங்க வேளையில் சேரமுடியாது... ஆனால் இங்கு ஒரு முதல்வரின் லட்சணமே இரண்டு மனைவிகள் என்பது தான். போங்கைய்யா நீங்களும்.... உங்க நாடும்.. அரசியலமைப்பும்......

உங்களுள் ஒருவன் said...

kama.... எனது பதிவுற்கு வருகை தந்தமைக்கு நன்றி

Anonymous said...

மிச்ச சொத்துக்களை பினாமி அடிச்சுட்டு போயிருக்குமோ!

Unknown said...

//நையாண்டி மேளம் said...

மிச்ச சொத்துக்களை பினாமி அடிச்சுட்டு போயிருக்குமோ! //

ha ha ha

உங்களுள் ஒருவன் said...

நையாண்டி மேளம் மற்றும் ஆகாயமனிதன் அவர்களுகு எனது பதிவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி.....

Hassan said...

யார் எவ்வளவு சொத்துகள் வைத்திருந்தாலும் இறுதியில் உடலை மண் தான் தின்ன போகிறது. சொத்துகளை மறைதென்ன லாபம்.

உங்களுள் ஒருவன் said...

உங்களுது கருத்துக்கு நன்றி ஹசன்.....

சிவகுமாரன் said...

அவங்களை எல்லாம் இங்க வந்து மீனாட்சி அம்மன் கோயில் வாசல்ல தட்டு ஏந்திக்கிட்டு உக்கார சொல்லுங்க . பாவம் நான் ஏதாச்சும் சில்லறை போடுறேன்

உங்களுள் ஒருவன் said...

அனேகமாக மதுரைக்கு வர பேருந்து கு காசு இருக்காது போல.......... அதை நான் குடுத்து விடுகிறேன்........... சிவகுமார்..........

Post a Comment