என் தமிழ் இன மக்களுக்கு நடந்த கொடுமைகளை பார்த்தும் பார்க்காதது போல்..... செல்லும் இந்த உலகமே.... கொஞ்சம் திரும்பி பார்........... என் தமிழ் மக்களின் விடுதலைக்கு உதவி செய்.............
Tuesday, November 02, 2010
நொக்கியா குடித்த உயிர்: மறைக்கப்பட்ட உண்மைகள்
நொக்கியா செல்பேசிகளின் மதர் போடுகள் நீளமாக வருவதால் அதை ஒரு இயந்திரம் கொண்டு துண்டுகளாக வெட்டுவார்கள். இங்கு இருக்கும் “ரவுட்டர் கட்டிங் மிஷின்” எனும் இயந்திரம் மொத்தமாக வரும் செல்போன்களுக்குரிய மதர்போர்டுகளை தனித்தனித் துண்டுகளாக்கி பிரிக்கும். அவ்வாறு அது துண்டுகளாக மதர் போர்டை அறுக்கும்போது சில துண்டுகள் மிஷினில் விழுந்துவிடுவது உண்டு, அதனை கைகளால் எடுக்கும்போது, அங்கே பொருத்தப்பட்டிருக்கும் சென்சர் அதனை உணர்ந்து மெஷினை நிறுத்திவிடும். அவ்வாறு நிறுத்தப்பட்ட மெஷின் திரும்பவும் ஆரம்பிக்க 10 நிமிடங்கள் வரை ஆகும்.
சம்பவ தினத்தன்று அவ்வாறு விழுந்த மதர் போர்டு துண்டு ஒன்றை எடுக்க அம்பிகா முயற்சித்துள்ளார். ஆனால் அங்கே இருந்த சென்சர் வேலைசெய்யவில்லை. உண்மையிலேயே அது வேலைசெய்யவில்லை என்று சொல்வதை விட அதை நிறுத்திவைத்திருந்தார்கள் என்பதே உண்மையாகும். காரணம் அவ்வாறு மெஷின் நின்றால் திரும்பவும் இயங்க 10 நிமிடங்கள் ஆகுமே, அந்த 10 நிமிடத்தில் உற்பத்தி பாதித்துவிடுமே என்ற ஒரு அற்ப காரணம் தான் இந்த நரபலிக்கு முக்கிய காரணம். அன்றைய தினம் அம்பிகா மதர்போட் துண்டை எடுக்க முனைந்தவேளை அவர் களுத்துக்கு பின்பக்கமாக அந்த அறுக்கும் இயந்திரத்தின் பிளேடுகள் அவரைத் தாக்கியுள்ளது.
பலத்த ரத்தக் கசிவுக்கு மத்தியில் அவர் பின்புறத்தில் பிளேடு ஏறிய நிலையில் துடித்துக்கொண்டிருப்பதைக் கண்ட தொழிலாளர்கள் இயந்திரத்தை நிறுத்தினர். அம்பிகாவின் தலைக்கும் தோழுக்கும் இடையே ஆழமாக அந்த பிளேட் சென்றிருந்ததால் பிளேடை உடைத்து அம்பிகாவை மீட்க தொழிலாளர்கள் முற்பட்டுள்ளனர். ஆனால் அங்கு இருந்த சூப்பர்வைசர் அது 2 கோடி ரூபா இயந்திரம் எனக் கூறித் தொழிலாளர்களைத் தடுத்துள்ளார். இந்த புண்ணியவான் பெயர் வெற்றி தேவராஜ். இவர் மேலிடத்தோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு, இயந்திரத்தை உடைக்காது அதனை கவனமாக களற்றி அம்ம்பிகாவை வெளியே எடுக்கலாம் என புண்ணாக்கு ஜடியா கொடுத்துள்ளார்.
ஆனால் அந்த இயந்திரத்தை களற்றுவதற்கான எந்த ரூல் பாக்ஸ்ஸும் அங்கு இல்லை எனத் தெரியவரும்போது, அம்பிகா வலிதாங்காமல் துடிதுடித்துக்கொண்டு இருக்கிறார், ரத்தம் ஆறாகப் பாய்கிறது. இதைஎல்லாம் சற்றும் அசட்டைசெய்யாது, எவ்வாறு இயந்திரத்தைப் பாதுகாப்பது என்று நினைத்திருக்கிறார் வெற்றி தேவராஜ். இவரை எந்த உயிரினத்தில் சேர்ப்பது என்றே தெரியவில்லை ஒருவாறு அங்கு நின்ற ஆண் தொழிலாளர்கள் கோபமடைய, நிலை கட்டுக்கடங்காமல் போனதால் அந்த கம்பிகளை உடைத்து அம்பிகாவை வெளியே எடுத்தனர் சக தொழிலாளர்கள்.
இதனிடையே சுமார் 20 தொடக்கம் 25 நிமிடங்களுக்குப் பின்னரே அம்பிகா மீட்டெடுக்கப்பட்டுள்ளார். ஆலையிலிருந்து இரண்டு கி.மீ தொலைவில் இருக்கும் ஜெயா மருத்துவமனைக்கு அம்பிகா கொண்டு செல்லப்படுகிறார், அங்கிருந்து பின்னர் அபோலோ மருத்துவமனைக்கும் கொண்டுசெல்லப்படுகிறார். இறுதியில் அவர் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் நடந்ததோ வேறுவிதமாக உள்ளது. ஆலையில் இருந்து அம்பிகாவை முதல் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் போதே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு கண் துடைப்புக்காக ஜெயா மருத்துவமனை பின்னர் அப்பலோ என 2 வைத்தியசாலைக்கு கொண்டுசென்று, தாம் ஏதோ மருத்துவம் பார்த்தாக பிலிம் காட்டியுள்ளனர், நொக்கியா நிர்வாகத்தினர்.
இது இவ்வாறிருக்க சம்பவதை நேரில் பார்த்த சக தொழிலாளர்களுக்கு, அம்பிகாவுக்கு ரத்தம் ஏற்றப்படுவதாகவும் விரைவில் அவர் உடல்நலம் தேறிவருவார் என்றும் பொய்கூறி வேலையைச் செய்யும் படி கூறியிருக்கிறார் மற்றுமொரு சூப்பர்வைசர் ஜே.புருஷோத்தமன். அங்கு வேலைசெய்யும் தொழிலாளர்கள் கைத்தொலைபேசிகளை ஆலைக்குள் கொண்டுசெல்லக் கூடாது என்ற காரணத்தால், அம்பிகாவின் மரணம் பலருக்குத் தெரியது. அத்தோடு அது திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளது. ஜே.புருஷோத்தமன் மீது பாலியல் புகார் உள்ளிட்டு 12 புகார்கள் இருக்கின்றன என்றாலும் நிர்வாகம் இவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் அவனது மேலாண்மையில் உற்பத்தி இலக்கு நிறைவேறுகிறது என்பதேயாகும்.
மருத்துவமனையில் அம்பிகாவின் பெற்றோர் கதறி அழுதவாறு இருக்கின்றனர். எந்திரத்தை உடனே உடைத்திருந்தால் தங்களது மகளை காப்பாற்றியிருக்கலாமே என்று அவர்கள் குமுறுகிறார்கள். அந்த எந்திரத்தின் மதிப்பான இரண்டு கோடியை உங்களுக்கு தந்துவிட்டால் தங்களது மகளின் உயிரை திருப்பித்தர முடியுமா என ஆவேசப்படுகிறார்கள். இதில் கொடுமையான விடையம் என்னவென்றால், சென்ற மாதம்தான் நோக்கியா ஆலைக்கு 6 எஸ் (6ஸ்) எனும் சிறந்த பாதுகாப்பு வசதிகள் கொண்ட ஆலை என்ற விருது கொடுக்கப்பட்டாதம். கட்டிங் இயந்திரத்தின் சென்சார் ஃபோர்டு இயங்குவதற்கு தடை போட்டு, அதையும் தொழிலாளிக்கு அறிவிக்காமல், ஏதும் அறியாத அம்பிகாவின் உயிரைக் குடித்துள்ளது இந்த நொக்கியா நிறுவனம்.
போதாக்குறைக்கு சாக்கடை அரசியல்வேறு இங்கு விளையாடுகிறது. அம்பிகா கொலை செய்யப்பட்டதை சாதாரண விபத்தாக மாற்றுவதற்கு தி.மு.க பிரமுகர்கள் ஒருபக்கம் முயல்கிறார்கள்.
அடுத்த மாதம் பின்லாந்தில் ஒரு வெற்றிவிழா நடக்கும். அது நோக்கியாவின் 100 மில்லியன் இலக்கை அடைந்த சாதனைக்கான கேளிக்கை விழா. நோக்கியா முதலாளிகளும், அதிகாரிகளும் சீமைச் சாரயத்தை பருகியவாறு தமது வெற்றியை சல்லாபிப்பார்கள். அவர்கள் அங்கு பருகப்போவது சாராயம் அல்ல ! அம்பிகா போன்ற ஏழைகளின் இரத்தமே !
இப் படுகொலையை தமிழகத் தமிழர்கள் எவ்வாறு கையாளப் போகிறார்கள் ? தமிழர்கள் இந்த செல்பேசியை புறக்கணிப்பார்களா ?
Labels:
bad management,
killer,
management,
nokia,
nokia killer,
worst management
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment