Thursday, March 24, 2011

தேர்தல் அறிக்கை.. ஆஇதிமுக Vs திமுக

திமுக விற்கு எதிராக கார சாரா ஆஇதிமுக தேர்தல் அறிக்கை அதை படித்து விட்டு என்னக்கு சிரிப்பு தான் வருகிறது... புலி ஐ பார்த்து புனை சுடு போட்ட கதையாக.....அடிக்கு போட்டியாக வெளியுட்டு இருக்கும் தேர்தல் அறிக்கை, இந்த மானம்கெட்ட அரசியல்வடிகளுக்கு எங்கு இருந்துதான் தமிழக மீனவர்கள் மீதும், இலங்கை அகதிகள் மீதும் அக்கறை தேர்தல் நேரத்தில் மட்டும் வருகிறது என்று தெரிய வில்லை....
குடிகாரன் பேசு விடுஞ்ச போச்சு என்பது போலே இவர்கள் தேர்தல் அறிக்கை, தேர்தல் முடிந்த உடன் காற்றில் பறக்கும் பட்டம் போல் ஆகி விடும்,
இந்த அறிக்கைகள் வெறும் சாம்பிள் தான்.... இன்னும் மெயின் picture வரல.....

*

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 20 லிட்டர் தண்ணீர் இலவசம்.
*

வீடு இல்லாத ஏழைகளுக்கு இலவசமாக 3 சென்ட் நிலம்.
*

+1, +2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் அளிக்கப்படும். அதேபோல அரசுக் கல்லூரி, தனியார் கல்லூரி, பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படும்.
*

தாய்மார்களுக்கு இலவச மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கப்படும்.
*

58 வயதுக்கு மேல் உள்ள முதியவர்களுக்கு இலவச பஸ் பாஸ் அளிக்கப்படும். நகர்ப்புறங்கள் மட்டுமல்லாமல் கிராமப்புறங்களுக்கும் அவர்கள் இலவசமாக பஸ் பயணம் மேற்கொள்ளலாம்.
*

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும்.
*

6 கிராமங்களில் 60 ஆயிரம் பால் கறவை மாடுகள் இலவசமாக வழங்கப்படும்.
*

மீனவர் பாதுகாப்புப் படை அமைக்கப்படும்.
*

மீனவர்கள் நலனுக்காக கப்பல் பூங்கா அமைக்கப்படும்.
*

மீனவர் குடும்பத்திற்கான உதவித் தொகை ரூ. 2000 ஆக உயர்த்தப்படும்.
*

தனியார் கேபிள் டிவி நிறுவனங்கள் அரசுடமையாக்கப்படும். அரசு மானியத்தில் குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி வழங்கப்படும்.
*

இலங்கை அகதிகள் அனைவரும் தமிழகத்திலேயே கெளரவமாக வாழ நடவடிக்கை எடுக்கப்படும்.
*

தமிழக நதிகளை நீர்வழிச்சாலைகள் மூலம் இணைக்க நடவடிக்கை
*

ஏழை மக்கள் வீடு கட்டுவதற்கு ரூ. 1.80 லட்சம் மானியமாக அளிக்கப்படும்.
*

கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களின் நலன்கள் காக்கப்படும்.

முழு அறிக்கைக்கு thats tamil

5 comments:

ராஜேஷ், திருச்சி said...

அம்மாவிற்கு உள்ளே உதறல் எடுத்துவிட்டது பாவம்.. தி மு க வை விட அதிகமாக வெறும் இலவசங்களை வாரி விட்டுள்ளார்.. அவரின் பேச்சில் கூட ஒரு சுரத்து இல்லாமல் தேமே என்று இருந்தது.. தி மு க தேர்தல் அறிக்கை வெளியீடு லைவிலியாக இருந்தது.. பல கட்சி தலைவர்கள்.. நல்ல கூட்டம் என்று .. ஆனால் அம்மா தனியாக உட்கர்ந்தாது செய்தி படிப்பது போல படித்தார்.. அருகில் யாரையும் அண்ட விடாமல்.. தனி ஆவர்த்தனம்.. இன்னும் தான் என்ற அகந்தை போக வில்லை போலும்.. பாவம்..

ராஜேஷ், திருச்சி said...

அம்மா சிறிதும் சுரத்தே இல்லாமல் தேமே என்று "காப்பி - பேஸ்ட்" தேர்தல் அறிக்கை படித்தது செம காமெடி.. தி மு க தேர்தல் அறிக்கை வெளியிட்ட போது ஆறுகள் பல தலைவர்கள்.. தொண்டர்கள்.. இங்கே அம்மா யாரையும் அருகில் அண்ட விடவில்லை.. அம்மா திருந்தாது என்பதற்கு சாட்சி இது

Unknown said...

ராஜேஷ் கருணாநிதி வீட்டு கழிப்பறையை நீங்கள் சுத்தம் செய்தது போதும்.....கிளம்புங்கள்...

உங்களுள் ஒருவன் said...

இந்த அம்மாவிற்கு உள்ள உதறல் எடுத்திருப்பது என்னமோ உண்மை தான், கடந்த ஐந்து வருடங்களாக கோட நாட்டில் ஒய்வு எடுத்து வீட்டு..... தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை பார்த்து வாக்கு சேகரிக்க வந்து விடுவார்..........
தேர்தல் நேரத்தில் தனது இஷ்டத்துக்கு வாக்குறுதி அளித்து விட்டு......... தப்பி தவறி தேர்தலில் வெற்றி பெற்று விட்டால்... முதல் வேலையாக... கருணாநிதி போட்ட திட்டங்கள், அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும், கருணாநிதி குடும்பம் மிது என்ன என்ன வழக்கு போட முடியுமோ என்று யோசிக்க வேண்டும், பலி வாங்க வேண்டும், இதில் நான்கு ஆண்டுகள் ஓடிவிடும், பின்பு தேர்தல் நேரத்தில் மக்கள் மீது திருப்ப அக்கறை திரும்பும்...........

இது மட்டும் தான் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் நிலைமை...........

உங்களுள் ஒருவன் said...

நன்றி ராஜேஷ் and காமா

Post a Comment