Monday, April 25, 2011

காமம் மா அல்லது இனகவர்சியா????


அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே....
நம்ம ஊரு இப்போ ரொம்ப கேட்டுபோசுனே
அதே சொன்னா வெட்க கேடு
சொல்லடா மானே கேடு.....

இந்த நில்லைமையுள் தான் நானும் இந்த பதிவு எழுதுகிறேன்.... எனது ஊர் அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம். கல்லூரி படிக்கும் காலகட்டத்தில் duck-in செய்து shoe அணித்து கொண்து விட்டை விட்டு வெளியுள் வந்தால் தெருவில் உள்ளவர்களில் நான்கு பேர்களாவது துறை இப்படி tip-top ஆ dress பண்ணிகித்து எங்கு கிளம்பிதிங்க என்று கேட்பார்கள்....... எனது ஊர் ஒன்றும் மிகவும் பின்தங்கிய கிராமம் என்று கூர வில்லை.. அனால் வட இந்திய மோகமோ இல்லை மேற்கு உலக நாகரிகமோ அவல்லோவாக பரவாத, ஒரு சாதாரண தென் இந்திய ஊராக தான் இருந்து வந்தது.

இந்த தேர்தல் மற்றும் தமிழ் புததாணட்டு விடுமுறையை ஒட்டி நான் ஊருக்கு சென்று இருந்தேன், அப்பொழுது என்னக்கு ஒரு printout எடுக்க வேண்டும் என்பதால் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ஒரு புது browsing center க்கு சென்று எடுத்து விடலாம் என்று சென்று இருந்தன், அங்கு பார்த்த காட்சிகள் சென்னையுள் பார்த்து இருந்தால் சரி பிஞ்சுல பழுத்தது என்று கூறி இருப்பேன், அல்லது திருநெல்வேலில் பார்த்து இருந்தால் சே, திருநெல்வேலியும் இப்பொழுது சென்னை போல் கேட்டு விட்டதே என்று நினைத்து இருப்பேன்.. இருந்தாலும் மனதிற்குள் ஒரு சின்ன வலி இருந்திருக்கும், அனால் நான் பார்த்தது எனது சொந்து ஊரில், மனது கேட்க வில்லை,


நான் பார்த்தது ஒரு பையனும் ஒரு பெண்ணும் browsing center cabin குள் அந்த பையன்னின் கைகள் அந்த பெண்ணின் மிது ஊர்ந்து கொண்து இருந்தது, என்னது கோபதிற்கு காரணம், அந்த பெண் பத்தாவது வது படித்து கொண்து இருபாலா என்பது கூட சந்தகமே.... அவள் ஒரு சிறுமி, அந்த சிறுவனுக்கு மிஞ்சி மிஞ்சி போனால் 18 வாது இருக்குமா என்பது கூட சந்தகமே.....

இதை பார்த்த உடன் கூப்பிட்டு திட்டி விடலாமா??? அல்லது browsing center owner ஐ கூப்பிட்டு புகார் செயாலமா??? காவல் துறைக்கு தகவல் குடுக்கலாமா என்று பலவாறாக யோசித்து கொண்டு இருந்தாலும், ஒரு பக்கம் அந்த பெண்ணை பற்றி நினைக்கவும் தவறவில்லை இந்த முன்றில் எந்த முடிவு எடுத்தாலும், அந்த பெண்ணின் பெயர் அந்த பகுதயுள் பலமாக பாதிக்க படும், அவளுக்கு வேறு பெயர் வைத்து இந்த சமுகம் அழைக்கும்.... அவளுது தாய், தந்தையர் நிலைமை என்ன வாகும், சமுகத்தில் அவர்களுது பெயரும் அல்லவா பாதிக்க படும், அவளுடன் கூட பிறந்த திருமணம் ஆகாத அக்கா, தங்கையர் நிலைமை என்ன வாக்கும், அல்லது இதை பார்த்தும் பார்க்காது போல சென்று விடலாமா???? என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து கொண்டு இருக்கும் போதே அவர்கள் கிளம்பி விட்டார்கள்.....

நல்லது, என்று நானும் 15 நிமடத்தில் கிளம்பி விட்டேன், மொத்தமாக நான் அங்கு இருந்த நேரமும் அவோளோதன், சரி அந்த பெண்ணிருக்கும் இந்த விடயம் பிடிக்கவில்லை போல் இருக்கிறது அதனல்தான் உடனே கிளம்பி விட்டால் போலலே இருக்கிறது, என்று அவர்கள் கிழே இறங்கிய சில நிமிடங்களில் நானும் இறங்கி விட்டேன்... அந்த சிறுமியை காணவில்லை, அனால் அவள் கூடே வந்தவன் மட்டும் இருந்து அங்கு தண்ணீர் குடித்து விட்டு அவன் browse செய்தற்காக பணம் குடுத்தான், அப்பொழுதுதான் என்னக்கு தெரிந்தது அவர்கள் சல்லாபம் முன்று அரை மணி நேரம் நடந்து இருந்தது என்று.... இப்பொழுது நினைக்கிறன், அவளுகாக, அவள் குடும்பதிற்காக நான் பார்த்த கரிசனம் தவறு என்று.... வெளிய வந்தும் பார்த்தேன், அந்த சிறுமியை காணவில்லை, நல்ல பெண் போல முதலில் வெளிய சென்று மறைந்து விட்டாள்,

என் இந்த சிறுமி இப்படி நடந்து கொண்டாள்???? அதற்கு காரணம் என்ன???? இது காமம் மா இல்லை இன கவர்ச்சியால் உந்தபட்ட பாலியல் உணர்வா?? கண்டிப்பாக இதை நான் கேடு கேட்ட காதல் என்று மற்றும் சொல்ல மாட்டன், இது கண்டிப்பாக இந்த வயதில் வரும் இன கவர்ச்சியை தவிர வேறு ஒன்றும் இல்லை,

இதற்க்கு காரணம் என்னவாக இருக்கும் என்று கேட்டால் அனைவரும் புற காரணத்தை மட்டுமே சொல்லுவர், சினிமா, மேற்கு உலக நாகரிகம், கலாச்சார சிர்கழிவு, அனால் யாரும் தன் மேல் இருக்கும் தவறை சுட்டிகாட்டி கொள்ளவோ, அல்லது ஏற்கவோ தயாராக இல்லை, அனால் இதை போன்ற பெண்கள் இப்படி கேட்டு போவதற்கு, அவர்கள் வீட்டில் இருபவர்களும் ஒரு காரணம் என்ற நான் சொல்லுவேன்.. ஒரு வயதிருக்கு வந்த பெண்ணோ, அண்ணோ விட்டில் இருக்கும் பொழுது, அவர்களுக்கு மதிப்பு அளித்து, அவர்கள் உடன் நமது நேரத்தை செலவழிக்க வேண்டும், அவர்களுடன் உரையாட வேண்டும், அவர்கள் எதிர்கொள்ளும் வாழ்கை ப்ரசெனைகளின் தீர்வுகளுக்கு வழி கூற வேண்டும், அவர்களுக்கு எல்லா விததிலும் நாம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்,

teen-age இல் அவர்கள் முன்னால் இருக்கும் ப்ரசெனைகளை நாம் தான் அவர்களுக்கு பக்கத்தில் இருந்து தைரியம் குடுக்க வேண்டும் அதற்கு தீர்வு காண உதவ வேண்டும். அனால் இப்பொழுது இருக்கும் அவசர கால கதியில் நாம் வீட்டில் இருபவர்களோடு கலந்து பேசுவதற்காக நாம் செலவிடும் நேரம் மிக குறைவு.... அவர்கள் மேல் நமது அக்கறை, அவர்களுடன் பேசுவது என்பது மிக குறைவு, என்னவே தான் அவர்கள் அவர்களுது சுக துக்கத்தை பகிருந்து கொள்ள, நண்பர்களை தேடு கிறார்கள், அதவும் எதிர் பாலினமாக இருந்தால் மிகவும் எளிதாக ஒன்றிட முடியும், அவர்களுக்கும் அது எதோ ஒரு வகையுள் சயுகரியமாக, more confort ah feel பன்னுரங்க.... இந்த நேரத்தில் சினிமா, மேற்கு உலக கலாச்சாரம், ஆண், பெண் நட்பு என்று அவர்கள் எல்கை விரிகிறது..... காதல் என்ற இன கவர்ச்சியால் அவர்கள் தப்பு செய்யவும் அது தூண்டுகிறது,

பெறோரின் கவன குறைவால் ஏற்பட்டு கொண்டு இருக்கும் இன்னொரு முக்கியமான் விஷயம். இப்பொழுது பரவலாக எல்லா செய்தி தாளிலும், ஐந்து வயது சிறுமி கற்பழித்து கொலை, 8 வயது சிறுமி கொன்ற காமகொடூரன்... என்று பல செய்திகள் நாம் அனைவரும் படித்த விசயங்கள் தான்... அனால் இதில் கவனிக்க வேண்டிய விசயம், இவ்வாறு கற்பழிக்க படும் சிறுமிகள் யாவரும், அவர்களோடு நன்கு பழகும், driver, watchmen, பக்கத்துக்கு வீட்டு மாமா, என் சில சமயம் வாத்தியார்களும், விளையாட்டு ஆசிரியர் களும் தான், நாம் நமது மகளை சிறுமியாக, குழந்தையாக தான் பார்க்கிறோம், அனால் இந்த கேடுகெட்ட சமுகம், அவளை ஒரு Sex-Toy அக தான் பார்கிறார்கள்,

தனது மகளை பிறர் பெண் கேட்டு வரும்போது தான், பல தந்தைகளுக்கு தனது மகள் திருமண வயதை நெருங்கி விட்டால், அவளக்கு திருமணம் செய்ய வேண்டும் என்று தோணும், அது வரை அவளை குழந்தை யாக தான் பார்த்து இருப்பார்கள், அனால் ஐயா உங்களுது கண்ணனுக்கு வேண்டும் என்றால் அவள் ஒரு சிறுமியாக தெரியலாம், அனால் இப்பொழுது பெண்ண்கள் சிறு வயதில், வயதுக்கு மிறிய வளர்ச்சியை கொண்டு இருகின்றர்னர்.... அது இந்த சமுகத்துக்கு ஒரு சிறுமியாக தெரிய்வது இல்லை என்பது தான் வெட்க கேடு....

தயவு செய்து உங்களுது மகள்க்கு good touch and bad touch சொல்லி குடுங்கள்..... பாலியல் கல்வி சொல்லி குடுக்கலாம் ஒன்றும் தவறு இல்லை..... நாம் இது எல்லாம் அசிங்கம், இதை பற்றி எனது பெண்ணிடம் நானே எப்படி பேசுவது என்று யோசிகதிர்கள்... அது அவர்கள் வாழ்கை வே மாற்றி அமைக்க உதவும்.....

இனிமேல அவது உங்களுது குடம்பதிடம் நேரம் ஓதுங்கள், அவர்களோடு மானம் விட்டு பேசுங்கள், வாரத்தில் ஒரு நாலாவது வெளியுள் கூட்டி செலுங்கள், இது உங்களின் குழந்தைக்கு உங்கள் மீது மரியாதையை, அன்பு வைபதற்கு ஒரு காரணமாக அமையும், அவர்கள் முன்பு சொன்னது போல் அது போன்ற தீய பழக்க வழகங்கள் இருக்காது, மற்றும் நீங்கள் உங்கள் குழந்தையோடு நேரம் செலவளிப்பதால் அவர்களை வேறு யாருடனும் அனுப்ப வேண்டிய அவசியம் இருக்காது, என்னவே இரண்டவதாக சொன்னதிற்கும் சாத்திய கூறுகள் குறையும்,

நான் வேறு யாரும் அல்ல, உங்களோடு ஒருவனாக, இந்த சமுக அவலங்களை பார்த்தும், கண்டித்தும்,, பல நேரங்கில் ஒரு பர்வையாலனாக செல்லும்.. உங்களுள் ஒருவன்

4 comments:

பிரகதீஷ் said...

ஹும்..நல்ல சமூக பொறுப்புள்ள பதிவு..அனுதினமும் நாம் கண்டும் காணாமல் அலட்சியமாய் உதறிவிட்டு செல்லும் விசயங்களை பற்றிய இந்த பதிவு நன்று..ஒரு சின்ன வருத்தம்..இந்த சமூகம் காலத்திற்க்கேற்றாற்போல் மாற்றானைக் கண்டு மாறிவிடும் ஒரு இழிச்செயலில் மூள்கிருக்கும் இக்காலகட்டத்தில் உன் உவமைக்காய் சினிமா எனும் ஓர் உன்னத உணர்வையும் பழித்துரைக்க கூட்டிக்கொண்டவிதம் சற்று வருத்தத்தை உமிழச் செய்கின்றது..மற்றபடி அருமை..அத்தியாவசிய பதிவு..நிறைய எதிர்பார்ப்புகளுடன்..

பிரகா

உங்களுள் ஒருவன் said...

நண்பனே.... சினிமா என்பது எங்கோ ஒரு இடதில் நடந்தை மிகை படுத்தி அதை உலகிருக்கு காட்டும் ஒரு மாயகண்ணாடி, அதில் வரும் காதல் காட்சிகளில் வரும் நாயகன், நாயகி போல் தன்னை உருவக படுத்தி, இந்த இளைய சமுகம் கெட்டுபோய் கொண்டு இருப்பதைய நான் இங்கு கூருக்கிறேன்..... மற்றபடி சினிமா வை இழித்து கூர வேண்டும் என்பது என்னது எண்ணம் இல்லை......

ஆனந்தி.. said...

ஹலோ...சகோ...பதிவு செம அருமை...நல்ல விழிப்புணர்வு பதிவு..பெண் குழந்தை வச்சிருக்கிறவங்க மட்டுமில்லை ஆண் குழந்தை வச்சிருக்கிறவங்க கூட அவங்க குழந்தைக்கு இந்த குட் டச் ,பேடு டச் பத்தி அவசியம் சொல்லி தரனும்...கேவலமான சில காம குரூபிகள் நம்மை சுத்தி இன்னும் இருந்துட்டு தான் இருக்காங்க...

ஹேய்...நீங்க நெல்லையா...:)) ஓகே..ஓகே...நான் அன்னைக்கு சிவங்கங்கையா இருக்குமோ னு யோசிச்சேன்...அம்பாசமுட்ரம்...ம்ம்..என் பெஸ்ட் friends நிறைய பேர் நெல்லை தான்...என்னவோ எனக்கும் நெல்லைக்கும் அவ்வளவு ராசி சகோ...என் கிளோஸ் பிரெண்ட் கூட அங்கே வீ.கே.புரம் (பாபநாசம்) ஊரை சேர்ந்தவள் தான்...கலக்குங்க நெல்லை சீமை சகோ..:)))

உங்களுள் ஒருவன் said...

இப்போ சொல்ல போன ஆண்களுக்கு குட பாதுகாப்பு இல்லை, சில ஓரின் சேர்கையாளர்கள் தொல்லை இருக்க தான் செய்கிறது..... குழந்தைகளுக்கு இந்த மாதிரி விசயங்களை பற்றி சொல்லி குடுப்பதில் ஒன்றும் தவறு இல்லை.....

மதுரை னா மட்டும் அருவா இல்லைங்க.... எங்க ஊர்லயும் அருவா famous தான்..... அது மட்டும் இல்லை, தாமிரபரணி ஆறு, பொதிகை மலை சாரல், குற்றால அருவி, அகஸ்தியர் அருவி, வானதிர்த்தம், இன்னும் எத்தனயோ....... அந்த அழகை பற்றி சொல்ல வேண்டும் என்றால் பதிவுகள் போட்டு கொண்ட இருக்கலாம் சகோ......

Post a Comment