ஒவ்வொரு ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை வரும் சட்டமன்ற தேர்தல், நாடளுமன்ற தேர்தல், உள்ளாட்சி அமைப்பு காண தேர்தல், இடை தேர்தல், என பல தேர்தல்கள் நமக்கு வந்து வந்து போனாலும், நாம் என்ன பெரிதாக செய்து விட்டோம், இந்த தேர்தல்களில், அல்லது நம்மால் தேர்ந்து எடுக்க பட்டதாக அறிவிக்க பட வேட்பாளர்கள் தான் என்ன செய்து விட்டார்கள்?????
அவன் 100 ரூபாய்க்கு உழல் செய்தானா தான் 150 க்கு உழல் செய்ய வேண்டும் என்று இருமாபுடனும், முன்னவனை என்ன சொல்லி கைது செய்யலாம், அவன் போட்ட திட்டங்களை தடை செய்து விட்டு, முதல் முன்று வருடம் பதவி, அதிகாரம், எல்லாம் என அனுபவித்துவிட்டு, எங்கே அடுத்த முறை தான் வர முடியோதோ என்ற பயத்தில் மக்களுக்கு ஏனோ தானோ என்று தான் கூறிய வாக்கு உறுதிகளை பாதியாவது நிறைவேர்வுவர்கள்..
எதிர்கட்சியாக இருக்கும் அரசியல்வாதி, தான் செய்த உழல்களில் இருந்து எப்படி தப்பிப்பது, எவனுக்கு எவ்ளோ லஞ்சம் குடுக்க வேண்டும், ஆளும் கட்சியில் இருப்பவன் போடும் வழக்குகளை இல் இருந்து எப்படி தப்பிப்பது என்று யோசித்து கொண்டு, அதற்கான வழக்கு, விசாரணைகளில் காலம் சென்று விடும், இல்லையல் தான் நாடளுமன்றம் சென்றால் முதல் அமைச்சராக தான் வருவேன், இல்லையேல் புறக்கணிப்பு தான்.... தனக்கு அடுத்த பதவியில் இருக்கும் நபரை எதிர் கட்சி தலைவராக உட்கார வைத்து விட்டு... தான் எதாவது கொடநாடு அல்லது வேறு எதாவது ஒய்யு எடுக்கும் ஸ்தலத்துக்கு சென்று விடுவது....... அப்போ அப்போ தனது சொந்த தொலைகட்சியுள் எப்போதோ எடுத்த பேட்டி, அல்லது எதாவது உப்பு சப்பு இல்லாத அறிக்கை குடுத்து விட்டு தான் இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன் என்று காட்டி கொள்ளுவார்கள்..........
தேர்தலுக்கு ஆறு மாதங்கள் வரை அவர்கள் எங்கு இருப்பார்கள் என்ற தெரியாது, அனால் கடைசி ஆறு மாதங்கள் அவர்கள் போடும் கூட்டம் எத்தனை, அறிக்கைகள் எவ்ளோ, அந்த நேரத்தில் எவனாவது ஒருவன் இறந்து விட குடாது, அவன் தியாகி அக்க படுவான், சாலையில் கல் தடுக்கி கிழே விழுந்தவன் வரை, எல்லா கட்சி உம் அவன் குடும்பதுக்கு நிவாரணம் குடக்கும், கொஞ்சம் அதிகமாக போனால், உண்ணாவிரதம், சாலை மறியல், வெகு சன உடங்கங்களால் பிரதான செய்தி அக படும்,
மீனவர் பாண்டியனும், ஜெயக்குமாரும் இலங்கை கடற்படையால் ஒரு தெரு நாயை கொல்வது போல் கொன்றதுக்கு அதவும் தேர்தல் நேரம் என்பதால் எல்லா அரசியல் கட்சிகளும், பாஜகா, காங்கிரஸ் தேமுதிகா தவிர நாளைக்கு அரசியல் கட்சி ஆரம்பிக்கிற எண்ணம் இருக்கும் நடிகர் விஜய் உட்பட அனைவரும் இறந்த மீனவர்கள் விட்டிற்கு சென்றார்கள், ஆர்பாட்டம், பேரணி, ஊர்வலம், உண்ணாவிரதம், என்ன என்ன செய்ய முடியுமோ அவைகள் அனைதும் செய்தார்கள், இறந்தவர்கள் வீட்டிற்கு நிவாரண தொகை அரசாங்கம் குடுபடர்க்கு முன்பே இவர்கள் குடுத்தார்கள்..... நான் உங்கள் வீட்டு பிள்ளை.... உங்கள் வோட்டு எனகு தான் என்று அடர்வும் கேட்டார்கள், நானும் ஒ௦ரு உணவிரத போராட்டத்தில் கலந்து கொண்டேன்.......
என்னக்கு இருக்கும் ஆதங்கம் என்ன வென்றால்...... இதற்கு மு இறந்தவருக்கு குறிபிட்ட சில தமில் இன ஆர்வலர்கள் தவிர வேறு யாரும் அதை பற்றி வாய் கூட திறக்கவில்லை....... அவர்கள் யாரும் மனிதர்கள் இல்லையா???? அப்பொழுது சிங்கள கடற்படை கொலைகள் செய்யாத நலவர்களாக இருந்தார்களா????? தேர்தல் வந்தால் மட்டும் இவர்கள் எப்படி உங்கள் கண்களில் படுகிறார்கள் என்று தெரிய வில்லை ????
சரி இதை எல்லாம் விடுங்க..... இந்த தேர்தலில் நீங்க என்ன செய்ய போறீங்க ???? எவன் ஜெவித்து வந்தாலும் நமக்கு ஒன்னும் பு_____ போவது இல்லை...... பிறகு என்ன அவனுகள பத்தி பேசிக்கிட்டு இருகிறது ப்ரியோகனம் இலிங்க..... நாம என்ன செய்ய போறோம்?? இப்போ அதுதான் கேள்வி..... நிறைய பேருக்கு ரெண்டு கொல்லி வாய் பிசாசுல எதுக்கு ஒட்டு போடலமனு எண்ணம் இருக்கும்...... மஞ்சள் துண்டுக்க இல்ல பச்சை புடவைக ன்னு......... இப்போ ஆட்சி ல இருக்கிற அந்த மஞ்ச துண்டு கிழவன்.... பண்ணின துரோகம் நாம மனசுல இருக்கும், அதுனால அவனுக்கு ஒட்டு போட வேண்டாம் என்று இருக்கலாம், சரி கிழவன் தான் சரி இல்ல, பச்சை புடவைக்க போயிறலாம் ன்னு பார்த்த..... அந்த அம்மா ஆட்சி காலத்துல நடந்த அரசாஜகம் அளவ இல்லாம இருந்துச்சு..... எல்லோரையும் நசுக்கி, அவிங்க போட்ட எஸ்மா, டெஸ்மா எல்லாம் மறக்க குடிய்தா.........தமிழகம முழுவதும் கஞ்சி தொட்டி திறந்த பெருமை இந்த அம்மாவையே சாரும்......
சரி அம்மா வும் வேண்டாம் அய்யாவும் வேண்டும் என்று முன்றாவது ஒரு பலம் மிக்க கட்சி இருகிறதா என்று பார்த்தல் அதவும் இல்லை...... சரி எதாவது சுயட்சை க்கு வோட்டு போடலாம்னு பார்த்த இந்த பண நாயகத்தில்..... அதுக்கு இடம் இல்லாமல் போய் விடுகிறது..... எங்காவது சுயட்சை வெற்றி பெற்றால் நன்மைக்க............. அனால் அப்படி வெற்றி பெறுபவனும் ஆளும் கட்சி யால் வாங்க படுவதற்கு வாய்புகள் மிக அதிகம்.............
நமது வோட்டு ஜெவிக்காத சுயட்சைகு போடுவது செல்லாத ஒட்டு போல தான்....... சரி சுயட்சைக்கு வேண்டாம் எந்த அரசியல் நாய்க்கும் வேண்டாம், நாமா வோட்டே போடவேண்டாம் என்று இருந்தால், அங்கேயும் ஒரு பிரச்சன்னை இருக்கிறது.... நம்ம கள்ள ஒட்டு கண்ணாயிரம் போட்டுவிடுவான்.......... என்ன எங்க செத்து போன தாதா ஒட்டும் அவன் தான் போட்டனா பார்த்து கொங்க.....
நாமா இந்த தேர்தல யாரா சேவிக்க வைக்க வேண்டும் என்று நினைப்பதை விட, யாரு தோற்றால் நமக்கு நல்லது என்று சிந்திக்க வைக்கும் சீமான் என்னை கவர்ந்தவர், இந்த தேர்தலில் யாரு ஜெவிதலும் நமக்கு ஒன்றும் செய்துவிட போவதில்லை, யாரு ஜெவிதல்லும் சீமான் இருக்க போவது என்னோமோ ஜெயில் தான்...
தமிழகத்தை மதிக்காத காங்கிரஸ், நதி நீரில் இருந்து மின்சாரம் வரை, ஈழ தமிழர்கள் முதல் தமிழ்நாடு மீனவர்கள் வரை, இவர்களது துரோகம் நமக்கு கண் முன் இருக்கிறது, முதலில் இவர்களை தோற்கடிப்போம், பின்பு திமுக, ஆஇதிமுக என்ன அனைவரையும் தோற்கடித்து விட்டு..... தமிழர்களை தமிழர்களே ஆளும் நாளுக்கும், தனி ஈழம் அமையும் என்று தினம் தினம் எதிர்பர்போடு இருக்கும் உங்களுள் ஒருவன்
என் தமிழ் இன மக்களுக்கு நடந்த கொடுமைகளை பார்த்தும் பார்க்காதது போல்..... செல்லும் இந்த உலகமே.... கொஞ்சம் திரும்பி பார்........... என் தமிழ் மக்களின் விடுதலைக்கு உதவி செய்.............
Showing posts with label ஆஇதிமுக. Show all posts
Showing posts with label ஆஇதிமுக. Show all posts
Thursday, April 07, 2011
Saturday, March 26, 2011
கருனாநிதிடம் சொந்தமாக கார் இல்லையாம்..... எதாவது நம்புகிற மாதிரி சொல்லுங்க.......
தேர்தல் நேரத்தில் நடக்கும், காமெடிகளுக்கு அளவே கிடையாது..... தேர்தலில் போட்டி போடுவோர் அனைவரும் தங்களுது சொத்து விவரங்களை அள்ளிக வேண்டும், என்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறை, முதலில் இதற்கு எதிர்ப்பு தெரவித்த அரசியலால் கட்சிகள் அனைத்தும் வேறு வழி இன்றி இப்பொழுது தனது சொத்து கணக்குகளை சமர்பிக்கிறன..... அனால் அது எந்த அளவுக்கு நம்பத்தன்மை மிகுந்தது என்பது அவர்களுது ஆடிட்டர் க்கு மட்டுமே வெளிச்சம்....
இந்த தேர்தலுக்கு உழல் பெருசாளிகள் தங்களுது சொத்து மதிப்பை வெளி இட்டு இருக்கிறார்கள்.... இதை நம்புவர்கள் நம்பிகொள்ளலாம்..........
இந்த தேர்தலுக்கு உழல் பெருசாளிகள் தங்களுது சொத்து மதிப்பை வெளி இட்டு இருக்கிறார்கள்.... இதை நம்புவர்கள் நம்பிகொள்ளலாம்..........
ஜெயலலிதாவின் சொத்து குறித்த முழு விவரம்:
- ரொக்கக் கையிருப்பு - ரூ. 25,000.
- பல்வேறு வகையான வங்கி நிரந்தர வைப்புத் தொகை, சேமிப்பு கணக்கு டெபாசிட், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் டெபாசிட் மொத்தம் ரூ. 2 கோடி மதிப்பில்.
- இவை அனைத்தும் சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்து நீதிமன்றப் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளது.
- பாண்டுகள், நிறுவனங்களில் பங்கு முதலீடு ரூ. 50,000. இவையும் கோர்ட் பொறுப்பில் உள்ளன.
- சொந்தமாக வைத்துள்ள வாகனங்களின் மொத்த மதிப்பு ரூ. 8.35 லட்சம்
- நிறுவனங்களில் செய்துள்ள முதலீடுகள் விவரம்:
1. ஸ்ரீ ஜெயா பப்ளிகேஷன்ஸ் - ரூ. 8.5 கோடி.
2. சசி எண்டர்பிரைஸஸ் - ரூ. 75 லட்சம்.
3. கோட நாடு எஸ்டேட் - ரூ. 1 கோடி.
4. ராயல் வேலி புளோரிடெக் எக்ஸ்போர்ட் - ரூ. 65 லட்சம்.
நிறுவனங்களில் செய்துள்ள மொத்த முதலீட்டின் அளவு ரூ. 10.9 கோடி.
ஜெயலலிதாவின் அசையும் சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ. 13 கோடியே 03 லட்சத்து 27 ஆயிரத்து 979.
அசையாச் சொத்துக்கள் விவரம்
வேளாண் நிலம்:
- ஆந்திர மாநிலம், குத்துபுல்லாபுர் மாவட்டம், ஜிடிமேட்லா கிராமத்தில் 14.5 ஏக்கர். வாங்கிய தேதி: 10.06.1968 மற்றும் 25.10.168. வாங்கிய போது நிலத்தின் மதிப்பு 1,78,313 ரூபாய் (ஜெ., மற்றும் அவரது தாயார் பெயரால் வாங்கப்பட்டது). தோராயமான இன்றைய சந்தை மதிப்பு 11.25 கோடி ரூபாய்.
- செய்யூர் கிராமத்தில் 3.43 ஏக்கர். வாங்கிய போது நிலத்தின் மதிப்பு 17,060 ரூபாய். வாங்கிய தேதி: 16.12.1981. தோராயமான இன்றைய சந்தை மதிப்பு ஐந்து லட்சம் ரூபாய்.
- 79 போயஸ் கார்டன், சென்னையில் 1.5 கிரவுண்ட். வாங்கிய தேதி: 30.07.1991. வாங்கிய போது மதிப்பு: 10.2 லட்சம் ரூபாய். தற்போதைய சந்தை மதிப்பு: 3.24 கோடி ரூபாய்.
- 8-3-1099 மற்றும் 8-3-1099ஏ, ஸ்ரீநகர் காலனி, ஹைதராபாத் என்ற முகவரியில் 651.18 சதுர மீட்டர் கட்டிடம். வாங்கி தேதி: 11.02.1967. வாங்கி போது மதிப்பு: 50 ஆயிரம் ரூபாய் (ஜெ., மற்றும் அவரது தாயரால் வாங்கப்பட்டது). தற்போதைய சந்தை மதிப்பு: 3.5 கோடி ரூபாய்.
- ஜி.ஹெச்.18, தரைத்தளம், பர்சன் மேனர், சென்னையில் 180 சதுர அடி. வாங்கிய தேதி: 3.4.1990. வாங்கிய போது மதிப்பு: 1,05,409 ரூபாய். தற்போதைய சந்தை மதிப்பு: நான்கு லட்சம் ரூபாய்.
- எண்: 213-பி, செயின்ட் மேரிஸ் ரோடு, மந்தவெளி, சென்னையில் 1206 சதுர அடி. வாங்கிய தேதி: 10.07.1989. வாங்கிய போது மதிப்பு: 3,60,509 ரூபாய். தற்போதை சந்தை மதிப்பு: 35 லட்சம் ரூபாய்.
குடியிருப்பு கட்டடங்கள்:
- - 81 போயஸ் கார்டன், சென்னையில் 10 கிரவுண்ட். வாங்கிய போது மதிப்பு 1,32,009 ரூபாய் (ஜெ., மற்றும் அவரது தாயாரால் வாங்கப்பட்டது). தற்போதைய சந்தை மதிப்பு: 20.16 கோடி ரூபாய். அசையாச் சொத்துக்களின் தற்போதைய சந்தை மதிப்பு மொத்தம் 38 கோடியே 37 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்.
ஜெயலலிதாவிடம் கடன் நிலுவை எதுவும் இல்லை.
நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றப் பொறுப்பில் உள்ளது என கூறப்பட்டுள்ளது. அவற்றின் மதிப்பு குறிப்பிடப்பட வில்லை.
மொத்தமாக, ஜெயலலிதாவின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களின் மதிப்பு ரூ. 51,40 ,67,979 ஆகும்.
thatstamil
கருணாநிதியின் சொத்து விவரம்-சொந்தமாக ஒரு கார் கூட இல்லை
- கருணாநிதி பெயரில் ரொக்கம்மாக 15 ஆயிரம் ரூபாய். அவரது மனைவி தயாளு அம்மாள் பெயரில் 30 ஆயிரம் ரூபாய், துணைவி ராஜாத்தி பெயரில் 2 லட்சம் ரூபாய் உள்ளது.
- - வங்கிக் கணக்கில் வைப்பு நிதியாக கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் 4 கணக்குகள் உள்ளன. இதில் 5 கோடியே 13 லட்சத்து 49 ஆயிரத்து 152 ரூபாய். அடையாறு கரூர் வைசியா வங்கியில் 13 லட்சத்து 74 ஆயிரத்து 664 ரூபாய்.
- - கர்நாடகா வங்கியில் 39 லட்சத்து 62 ஆயிரத்து 995 ரூபாய். ராயப்பேட்டை இந்தியன் வங்கியில் 10 ஆயிரத்து 958 ரூபாய். சென்னை மகாலிங்கபுரம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 11 ஆயிரத்து 135 ரூபாய்.
- - கோடம்பாக்கம் இந்தியன் வங்கியில் 11 லட்சத்து 39 ஆயிரத்து 441 ரூபாய். ராஜா அண்ணாமலைபுரம் இந்தியன் வங்கியில் 13 லட்சத்து 15 ஆயிரத்து 180 ரூபாய் என, மொத்தம் 5 கோடியே 91 லட்சத்து 63 ஆயிரத்து 5,256 ரூபாய். 22 பைசா வங்கிக் கணக்கில் பணம் வைத்துள்ளார்.
- - அஞ்சுகம் பதிப்பகம் என்கிற பங்குதாரர் நிறுவனத்தில் 50 சதம் பங்குகள் 78,330 ரூபாய். இந்த நிறுவனத்திற்கு சென்னை, 180/93, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் சொந்தான கட்டடம் மற்றும் நிலம். கோபாலபுரம் 15-4வது குறுக்குத்தெருவில் அஞ்சுகம் அம்மாள் அறக்கட்டளைக்கு செட்டில்மென்ட் செய்யப்பட்ட 6 ஆயிரத்து 162 சதுர அடி மனை மற்றும் அதில் உள்ள கட்டடம். அறக்கட்டளை சொத்து ஆயுட் காலம் அனுபவ பாத்தியம் உள்ளது. தஞ்சை மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் (சர்வே எண் 29, 30/2, 31/2ஏ) 14.30 ஏக்கர் நிலம். இதற்கான மதிப்பு 4 கோடியே 92 லட்சத்து 56 ஆயிரத்து 855 ரூபாய். இதன் மூலம் அவரது பெயரில் 10 கோடியே 84 லட்சத்து 20 ஆயிரத்து 380 ரூபாய். அவருக்கு திரைப்படம் எடுக்க மும்பையில் மோசர்பேரிடம் 10 லட்சம் ரூபாய் முன்பணம் வாங்கிய வகையில் கடன் உள்ளது என தெரிவித்துள்ளார். வருமான வரி 37 லட்சத்து 34 ஆயிரத்து 20 ரூபாய் கட்டியுள்ளார்.
- - அசையும் சொத்து மதிப்பில், மனைவி தயாளு பெயரில் கலைஞர் "டிவி' நிறுவனத்தின் பங்குதாரர் என்ற வகையில், 6 கோடி ரூபாய் உட்பட 15 கோடியே 39 லட்சத்து 85 ஆயிரத்து 363 ரூபாய். அசையா சொத்துகள் 5 லட்சத்து 22 ஆயிரத்து 635 ரூபாய். இது தற்போதைய நடப்பு சந்தையின் தோராய மதிப்பாக 5 லட்சத்து 51 ஆயிரம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- - துணைவியார் ராசாத்தி பெயரில் அசையும் சொத்துகள் 20 கோடியே 62 லட்சத்து 61 ஆயிரத்து 924 ரூபாய். அசையா சொத்துகள் 3 கோடியே 8 லட்சத்து 35 ஆயிரத்து 318 ரூபாய். இதற்கு தற்போதைய நடப்பு சந்தையின் தோராய மதிப்பு 3 கோடியே 14 லட்சத்து 38 ஆயிரத்து 628 ரூபாய்.
- - கனிமொழியிடம் ரூ. 1 கோடி கடன் வாங்கிய ராசாத்தி
- - ராசாத்தி தனது மகள் கனிமொழியிடம் இருந்து, பற்றில்லாக் கடனாக வாங்கிய ஒரு கோடியே ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 503 ரூபாய் கடன் உள்ளது என சொத்து விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்திற்கு ரூ. 2.5 கோடி கடன்-சொத்து மதிப்பு ரூ. 19. 88 கோடி
- அவரிடம் ரூ. 19. 88 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துகளும், அவரது மனைவி பிரேமலதாவிடம் ரூ. 6.57 கோடி மதிப்பிலான சொத்துகளும் உள்ளன.
- அவர் கையிருப்பும், வங்கியிலும் மொத்தம் ரூ. 7 லட்சத்து 56 ஆயிரத்து 90-ம், பிரேமலதாவிடம் ரூ. 6 லட்சமும் உள்ளது.
- 2009-10-ம் ஆண்டில் விஜயகாந்த் ரூ. 53. 77 லட்சத்திற்கும், அவரது மனைவி ரூ. 12.82 லட்சத்திற்கும் வருமான வரி செலுத்தியுள்ளனர்.
- விஜயகாந்த் ரூ. 7.5 கோடியும், பிரேமலதா ரூ. 1.72 கோடியும் அரசுக்கு வருமான வரி மற்றும் சொத்து வரியில் பாக்கிவைத்துள்ளனர். இது தொடர்பான அவர்கள் மேல்முறையீடும் நிலுவையில் உள்ளது.
- விஜயகாந்திற்கு ரூ. 2.5 கோடி கடன் உள்ளது.
Labels:
2011,
ஆஇதிமுக,
கருணாநிதி,
சொத்து மதிப்பு,
திமுக,
தேமுதிக,
விஜயகாந்த்,
ஜெயலலிதா
Subscribe to:
Posts (Atom)






