அனால் தமிழகத்தின் மொத்த வாக்கு களோடு(3,67,53,114) ஒப்பித்து பார்கையுள் இது குறையு தான்..... அனால் கடந்த காலங்களில் ஒப்பிட்டு பார்க்கும் பொழுது இது இமாலைய வாக்கு உயர்வு..... இது எல்லா அரசியல் கட்சிக்கும் ஒரு எச்சரிக்கை மணி... தமிழ்நாட்டில் என்ன நடந்தாலும், ஆதிமுக இல்லை என்றால் திமுக, திமுக இல்லை என்றால் ஆதிமுக தான் வோட்டு, என்ற எழுதபடாத சட்டம், முடிவு க்கு வரும் காலம், ஒன்றும் தொலைவில் இல்லை என்பதை சுட்டி காட்டும் சாவு மணியாக தான் நான் இதை பார்கிறேன்.
இதற்கு முந்திய தேர்தல்களில் ஆதிமுக வின் அடக்கு முறை, அடாவடி தனம், ஆகியவற்றிக்கு சாவு மணி அடிக்க அப்பொழுதே குறுஞ்செய்தி அனுப்பியவர்கள், இப்பொழுது இரண்டு கட்சி களும் சரி இல்லாத நிலையுள், ஒரு வலுவான முன்றாவது ஆணி அமையுமா என்று இருந்த ஏக்கமும், கடைசி நேரத்தில் தவிடு போடி ஆனதில், பலருக்கும் மனகஷ்டம், அந்த நேரத்தில் இரு கட்சி களுக்கும் வாக்கு அள்ளிக்க விருப்பம் இல்ல்லாமல் எதாவது ஒரு சுயட்சை க்கு வாக்கு அளித்து அது ஒன்றும்கிற்கும் உதவாமல் போவதற்கு பதில், யாருக்கும் வாக்கு அள்ளிக்க விருப்பம் இல்லை என்றும் பதிவும் இந்த முறை 49 க்கு மக்கள் மத்தியுள் நல்ல செல்வாக்கு இருப்பது தெள்ள தெளிவாக தெரிகிறது...
ஆனாலும் இந்த முறை பல இடங்களில் 49 க்கு வோட்டு போட பலர் அனுமதிக்க படவில்லை... 49 க்கு வோட்டு போடுவதில் வாக்காளர்களின் சுதந்திரம் காக்க படுவது இல்லை, நான் 49 க்கு தான் வோட்டு போடுகிறேன் என்பது அந்த வாக்கு சவாடியுள் இருக்கும் அனைவர்க்கும் தெரிந்து விடும், இதனால் தமக்கு எதுவம் பிரெச்சனை வந்து விடுமோ என்று, பலர் எதோ ஒரு சின்னத்திற்கு குத்தி இருகிறனர், அதையும் மீறி வந்ததது வரத்தும் என்று வாக்கு அளித்தவர்கள் எண்ணிக்கை மட்டும் 24,824
49 க்கு வோட்டு அளிபவர்கள் சுதந்திரம் மட்டும் பாதுகாக்க பட்டால், வோட்டு எணிக்கை எங்கோ சென்று இருக்கும், பார்க்கலாம், மே 13 தேர்தல் முடிவு....... தமிழகத்தில் ஒரு அரசியல் பரட்சி ஏற்படுமா என்று பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்....
சிறு குறிப்பு:
- சென்னை மாவட்டம் அதிக பட்சமாக 3,407 வோட்டும்
- கோயம்புத்தூர் மாவட்டம் இரண்டாவது பட்சமாகக் 3,061 வோட்டும்
- கன்னியாகுமரி இல் குறைந்த patchamaka 170 வோட்டுகளும் பதிவு அகிஉள்ளன
- கூடலூர் தொகுதியுள் அதிகபட்சமாக 787 வோட்டும்
- சிங்கலூர் தொகுதியுள் இரண்டாவது பட்சமாகக் 646 வோட்டும்
- நெய்வேலி, ரிஷிவந்தியம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை 49 க்கு ஒரு வோட்டு கூட பதியபடவில்லை
