Showing posts with label bank robbery. Show all posts
Showing posts with label bank robbery. Show all posts

Friday, November 22, 2013

பாதுகாப்பற்ற தானியங்கி இயந்திரம் (ATM)



நமது நாட்டில் உள்ள பல ATM தகுந்த பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது, அதற்க்கு பெங்களூர் ATM தாக்குதல் சரியான உதாரணம்.

சரி நானும் இங்கு அந்த நிகழ்வை பற்றி தான் பேச போகிறேன் அல்லது பாதுகாப்பை வளபடுத்த என்ன செய்ய வேண்டும் என்று பேச போவது இல்லை. ஏன் என்றால் அதை பற்றி பலர் பல விதமாக பேசி இருப்பார்கள். சரி இதை பற்றி நான் பேச போவது இல்லை என்றால் வேறு எதை பற்றி பேச போகிறேன் என்று நினைகிர்களா ????

நமது மக்கள் இடையில் இந்த காலகட்டதில் பரவும் ஒரு புத்திசாலிதனமான வதந்தியை பற்றி தான். இந்த கட்டுரை படிக்கும் 100இல் 99 பேருக்கு தெரிந்த விசயம் தான். ஆனால் அது உண்மை என்று நினைத்தால் Iam very very sorry my friend. ATM பின் நம்பரை நேர் எதிராக அடித்தால் பணம் வெளி வரும், அதே நேரம் பக்கத்தில் இருக்கும் காவல் நிலையத்திற்கும் தகவல் சென்று அடுத்த சில நிமிடங்களில் நம்மை காப்பாற்ற காவல் துறை ஹீரோ போல வந்து விடுவார்கள், அல்லது தமிழ் படத்தில் வரும் காவல் துறை போல படம் முடிந்த பிறகாவது வந்து விடுவார்கள் என்றால் நினைத்தால் Iam very very sorry my friend. இப்படி ஒரு சேவை இந்தியாவில் மட்டும் அல்ல உலகத்தில் சில நகரங்களை தவிர வேறு எங்கும் இந்த சேவை உயிரோடு இல்லை. என்பது தான் நிதர்சனமான உண்மை.

The concept of an alternative emergency PIN system, or duress code, for ATM systems has been around since at least July 30, 1986, when Representative Mario Biaggi, a former police officer, proposed it in the U.S. Congressional Record, pp. 18232 et seq. Biaggi then proposed House Resolution 785 in 1987 which would have had the FBI track the problem of express kidnappings and evaluate the idea of an emergency PIN system. HR785 died in committee without debate.

இந்த சட்டம் நடைமுறைக்கு வருவது முன்பே கலைக்க பட்டு விட்டது, அதற்கு பின் வரும் காரணங்கள் இந்த சட்டம் நடைமுறைக்கு வாராமல் போனதற்கு காரணம்.

உதாரணம் 1.

ஒருவரின் பின் நம்பர் 5555, 8888 என்று இருந்தால் அவர் எப்படி போட்டாலும் அவருது பின் நம்பர் அது தான்.

உதாரணம் 2.

ஒருவரின் பின் நம்பர் 1251. 8568 என்று இருக்கிறது என்றால் கை தவறுதலாக கூட இரண்டாவது மற்றும் முன்றாவது என்னை மாற்றி போட வாய்ப்பு இருக்கிறது,

எனவே காவல் துறைக்கு தேவை இல்லாத Fake Call’s அதிகமாக்க செல்ல வழி இருக்கிறது. என்று இந்த சேவை நடைமுறைக்கே வரவே இல்லை. ஆனால் 2006 இல் இருந்து இந்த சேவை இருபத்து போலவே பல சமுக தளங்களில் மற்றும் இமெயில் முலம் இது போன்ற பொய்யான தகவல் பரவி கொண்டு இருக்கிறது.

இந்த ATM Pin no reversal System உண்மையாக இருந்தால் இந்த நேரம் காவல் துறையும், வங்கியும் இப்படி ஒரு சேவை இருக்கிறது அன்று தகவல் வெளிவிட்டு இருப்பார்கள், அவர்கள் இதை பற்றி வாய் திறக்காமல் இருப்பதே இப்படி ஒரு சேவை பழக்கத்தில் இல்லை என்பதற்கு ஒரு சான்று.

நம்மில் சில புத்திசாலி நண்பர்கள் கேட்பார்கள், இந்த தகவல் வெளிய தெரிந்தால் திருடன் உசார் ஆகி விடமாட்டனா என்று ???அதனால் தான் இந்த தகவலை அரசாங்கம் வெளிய தெரிவிக்க வில்லை என்று.... இந்த விசயம் திருடனுக்கு தெரிந்தால் இவன் உண்மை சொல்லுகிறானே இல்லை போய் சொல்லுகிறானே என்ற குழப்பத்தில விட்டு சென்றாலும் விட்டு விடுவான்.

இது போன்ற இணையத்தில் பரவும் மேலும் சில பொய்யான பரப்புரைகளை பற்றின அவனகள் உடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன். நான் வெறும் யாரும் அல்ல.. உங்களுள் ஓருவன் தான்

Thursday, February 23, 2012

ENCOUNTER க்கு பிறக்கு வேளச்சேரி.......

நேற்று இரவு தான் வங்கியை கொள்ளை அடிப்பது எப்படி ??? என்ற ஒரு பதிவு போட்டு விட்டு... கொஞ்ச நேரம் தொலைக்காட்சி பார்த்து விட்டு இரவு 12 மணிக்கு தூங்க சென்று விட்டேன்... காலையில் எழுந்த உடன் ஒரே சோம்பல்.... என்று அலுவலகம் செல்ல வேண்டுமே என்று கடுப்பு ஒரு பக்கம்...... இன்று ஒரு நாள் விடுப்பு போட்டால் என்ன வென்று ஒரு சோம்பல்....... கடைசியுள் சோம்பல் ஜெவித்து அலுவகத்திற்கு விடுப்பு தெரிவிக்கலாம் என்று எண்ணி கொண்டு ..... எழுந்து தொலைகாட்சி ஐ அன் செய்தல்.... வங்கி கொள்ளையர்களை காவல் துறை என்கௌன்ட்டர் செய்த தகவல் அணைத்து சேனல் இல்லும் இந்த செய்தி தான்......

பரவா இல்லையா நமது காவல் துறை இப்பொழுது முழித்து கொண்து விட்டார்களே என்று எண்ணி கொண்து செய்தியை உற்று நோக்கினாள் அந்த இடங்கள் யாவும் எங்கோ பார்தது போல இருந்தது..... சரி எந்த ஏரியா என்று பார்த்தல், வேளச்சேரி, அடே நம்ம ஏரியா.... நேரு நகர், சரியாய் போச்சு எங்க என்று பார்த்தல் எனது தெரிவிருக்கு அடுத்த தெரு தான்...... அட பாவிகளா இங்க தான் இருந்திர்கள என்று எண்ணி கொண்து வெளிய வந்தால் பகத்து பெட்டி கடை காரரிடம் என்ன நா நம்ம ஏரியா வ இப்படி என்று கேட்டேன்.... அப்போதான் கொஞ்சம் கொஞ்சமாக தகவல் கசிந்து தெரிவில் மக்கள் சிறு சிறு குட்டமாக நின்று இதை பற்றி பேசி கொண்டு இருந்தார்கள்.......


சரி எனது அறைக்கு வந்து... நன்றாக குறைட்டை விட்டு தொங்கி கொண்டு இருந்த நண்பர்களை எழுப்பி விசயத்தை சொனேன்...... அவர்களும் ஒன்றும் தெரிய வில்லை..... கிட்டதிட்ட 200 அடி தான் இருக்கும் என்கௌன்ட்டர் நடந்தே இடத்திற்கும், என்னது ரூமிற்கும்.... இரவில் ஒரு சின்ன சத்தம் கூட கேட்க வில்லை..... ஆனால் போலீஸ் ஒரு மணி நேரம் கடும் துப்பாக்கி சண்டை நடந்ததாக கூறுகிறார்கள்...... சரி போலீஸ் சிலேன்செர் பயன் படுத்தி இருக்கலாம்..... ஆனால் கொள்ளையர்கள் ???????

என்னது நண்பர் ஒருவரின் facebook பதிவு....

இவங்க அவங்கள பிடிக்க போனாங்களாம்... அவங்க ஷூ எல்லாம் போட்டுக்கிட்டு ரெடியா இருந்தாங்களாம்......

என்னையா கலர் கலரா ரீல் சுத்துறீங்க ?!?!

இதை எல்லாம் பார்க்கும் பொழுது எங்களுக்கு சந்தேகம் வருகிறது உண்மையுள் இது என்கௌன்ட்டர் தானா என்று.....

காலையில் டீ குடிக்க வழக்கமாக செல்லும் பாய் கடைக்கு சென்றோம்..... அங்கு சென்று பாய் ஐ வம்புக்கு இல்லுக்கலாம்.. என்று பார்தால்... உள்ள இரண்டு காவல் துறை ஆணையாளர்கள்.... டீ, வடை என்று ஒரு வெட்டு வெட்டி கொண்டு இருந்தார்கள்...... சரி அவர்கள் போகட்டும் என்று பொறுமையாக இருந்தோம்..... அப்பொழுது அவர்களுள் ஒருவர்க்கு தொலைபெசியுள் அழைப்பு வர... இருவரும் மாமனார் விட்டில் சாபிட்டு விட்டு செல்வது போல் சென்றார்கள்..... அதன் பிறர்க்கு பாய் இடம்.... என்ன அண்ணே.... உங்களுக்கும் அந்த பசங்களுக்கும் ஒரு link இருக்குனு வெளிய சொல்லுறாங்க அப்படியா என்று கேட்டேன்... உடனே அவர் ஏப்பா சும்மா இருங்க பா... இப்போ தான் போலீஸ் போகுது.... என்னே அண்ணே உங்கள் தொகிடுவன்களா என்று கேட்டேன்... எப்படி தொகுவங்கே???? அதான் ஓசி டீ, வடை எல்லாம் குடுத்து இருக்கேனே என்று கூறினர்...... இனிமேல இந்த ஏரியா ல north indians ah பார்க்க முடியாது போல என்று கேட்டேன்.... அதற்க்கு அவர்.... இவங்க எங்களை (முஸ்லிம்) தான் சந்தேகம் படுவாங்க.... north indians வந்தா விட்டு விடவார்கள் என்று கூறினர்... இதும் உண்மை தானே.....

எதோ ஒன்று, இரண்டு, முஸ்லிம் இன் தவரான அணுகு முறையால் ..... எல்லா முஸ்லிமையும் கூறை கூருவது, சந்தேகம் படுவது ஏற்புடையது அன்று...... அவர்களும் நம்மை போல் ஒரு சாதாரண வாழ்கை நடத்தும் மக்கள் தானே...... இவர்களை மட்டும் ஒரு சந்தேக பார்வை பார்ப்பது நல்லவா இருக்கு....

corparation bank atm பக்கத்தில் தான் இந்த encounter நடந்து இருந்தது. சரி அந்த பக்கம் சென்று நிலைமை எப்படி என்று தெரிந்து வரலாம் என்று அந்த பக்கம் சென்றேன்...... அங்கு ஒரு போலீஸ் பேருந்து நிறைய காவலர்கள் ஒவொருவராக வந்து கொண்டு இருந்தார்கள்..... அப்போதுதான் majistrate விசாரணை முடித்து கிளம்பினர், அல்லது வேறு முக்கியமான நபர் வந்து பார்த்து விட்டு சென்று இருக்கலாம்..... அந்த இடம் முழுவதும் மீடியா, போலீஸ் என்று அந்த இடம் முழவதும் ஆட்கள் நிரம்பி இருந்தனர்.... அந்த தெரிவிற்குள் பொது மக்கள் யாரையும் அனுமதிக்க வில்லை...... என்னவே என்னால் சென்று பார்க்க முடிய வில்லை.......

அந்த இடதில் இருந்த பொது மக்கள் தங்களுடைய தொலைபெசியுள் பேசி கொண்டு இருந்தார்கள்..... அவற்றை ஒட்டு கேட்கும் போது கேட்ட சில வரிகள்.....

  1. மச்சி நா அப்போ அங்க தண்டா இருந்தேன்..... நைட் ஒரு சத்தமா இருந்துச்சு வெளிய வந்தா போலீஸ் துப்பாக்கி ல சுட்டு கிட்டு இருந்தாங்க
  2. போலீஸ் என்னிடம் தான் வழி கேட்டார்கள்.....
  3. போலீஸ் வருவதை முதலில் பார்த்ததே நான் தான்....
  4. போலீஸ் அந்த பசங்களை பற்றி என்னிடம் தான் கேட்டார்கள்
  5. அந்த பசங்கள என்னக்கு நல்லாவே தெரியும்... அவனுக்கே யார்கிட்டையும் அதிகமா பேச கூட மாட்டார்கள்.....
  6. நம்ம தேருக்கு பக்கத்துல தான் அவனுக இருந்தானுக.....

என்று விதம் விதமாக தொலைபெசியுள் கூறி கொண்டு இருந்தார்கள்...... இதை எல்லாம் என்னக்கு கேட்க்கும் பொழுது சிரிப்பு தான் வந்தது...... வதந்திகள் இப்படி தான் கிளம்பு கிறார்கள்.... ஒரு விசயம் நடந்தால்.... தனக்கு எதுவம் அதை பற்றி தெரியாது என்று கூறினால் நம்மை சுற்றி இருபவர்கள் நம்மை மதிக்க மாட்டார்களோ என்ற ஒரு சின்ன காரணத்திற்கு இப்படி வதந்திகள் கிளும்புகின்றன........ இதற்கு மேலாக எனது நண்பன்... அவனது அலுவலகதிற்கு தொலைபசியுள் அழைத்து ஒரு மணி நேரம் permission காரணம், போலீஸ் யாரையும் தெருவை விட்டு வெளிய வர கூடாது என்று கூறி இருக்கிறார்கள்..... என்று கூறி பெர்மிச்சியன் வாங்கி விட்டான்.... என்ன கொடுமை சார் இது..........

காலை 11 மணிக்கு வேலைக்கு செல்பவர்கள், மாணவர்கள் அனைவரும் சென்று விட.... இல்லத்து அரசிகள்... கூட்டம் கூட்டமாக அந்த தெருவிற்கு சென்று வந்து கொண்டு இருந்தார்கள், எக்கா உன்னக்கு விசயம் தெரியுமா இவனுக அங்க வழிப்பறி பண்ணினன்களா அவனுகளா.... பேங்க் ல கொள்ளை அடிச்சா பணத்தை அந்த விடல தான் இன்னும் இருக்கமே... உனக்கு தெரயும்மா????? எங்க விட்டுக்காரர் தான் சொன்னாரு..... என்று பெண்கள் ஒரு பக்கம் வதந்தியை கிலோ கணக்கா பரப்பி கொண்டு இருக்க..... நான் எனது விட்டிருக்கு பகத்தில் இருக்கும் பெட்டி கடை காரரிடம் சும்மா ஒரு மொக்கையை போட அப்பொழுது அங்கு வந்தே பெரியவர்..... இந்த பொம்பளைங்க எங்க கூட்டமா பொய்த்து வரலுங்க... என்ன திருவிழவா என்று கேட்டார்.... நான் கூறினேன்... அதான் நேற்று திபாவளி கொண்டடி இருகண்களா அதான் என்று கூறினேன்... அந்த பெண்களை திட்டி கொண்டு பெரியவர் புலம்ப ஆரம்பித்தார்..... நான் கேட்டேன் பெரியவரே இந்த பசங்களுக்கு விடு பார்த்து குடுத்த புரோக்கர் யாருன்னு கேட்டேன்.... இதுல்லாம் இப்படி நடக்கும்னு யாருக்கு பா தெரியும்..... வரும் பொது எல்லாம் நல்ல பசங்கள தான் இருகாங்க..... ஆனா இப்போ.... என் நானே அவர்களுக்கு அந்தே விட்டை முடித்து குடுத்து இருக்கலாமான்னு சொல்லுறார்.....

அவரிடம் அண்ணே அந்த வீடு விலைக்கு வந்தால் சொல்லுங்கள் கம்மியான விலைக்கு வாங்கி விடலாம்.... என்ன ஐந்து நபர்கள் செத்த வீடு... ஒருத்தன் வர மாட்டன்.... நாமா அத வாங்கிடலாம்......

எங்களுக்கு உள்ள வருத்தம் என்ன வென்றால் பக்கத்துக்கு தெரிவில் தான் இருந்து இருந்தான் .... ஒரு ஷேர் குடுத்து இருக்கலாம், பாவிபய... கூடவே சுத்துறிய செவாலை நீயாவது இத கேட்க மாட்டிய..... எங்கங்க கேட்கிறான் கண்ட கண்ட போலீஸ் எல்லாம் வந்து என்கௌன்ட்டர் பண்ணும் சொன்னா கேட்கிரேன..... இப்போ என்கௌன்ட்டர் அச்சுல........


இனிமேல எங்களுக்கு எங்க ஏரியா வில் உள்ள problems.......

  1. இரவு பத்து மணிக்கு மேல் வெளிய வரே முடியாது.....
  2. எப்பொழுதும் போலீஸ் ரவுண்டு ஆப் இருக்கும்......
  3. இந்த ஏரியா வில் இருக்கும் பெச்லோர்ஸ் பசங்க எல்லாரயும் ஒரே சந்தேக பார்வை உடன் தான் பார்ப்பார்கள்....
  4. சும்மாவே பெச்லோர்ஸ் க்கு வீடு குடுக்க மட்டங்க... இப்போ இது வேரயா.......
  5. இந்த ஏரியா வில் இருக்கும் நோர்த் இந்தியன்ஸ் எல்லோரும் மீதும் போலீஸ் பார்வை பயங்கரமா இருக்கும்........ (நம்ம ஆளுங்க ஒரு விசயம் நடந்த பிறர்க்கு தான் அந்த விசயம் பத்தி கவனம் செல்துவார்கள்.... உன்னை போல் ஒருவன் படத்தில் கமல் சொல்லுவது போல்..... ஒரு தீவிரவாதி வயதில் குண்டு வைத்து வந்தால்..... வருபவர்கள் அனைவரையும் வயதில் மட்டும் தேடி பார்ப்பார்கள்..... ஒருவன் காலில் குண்டு வைத்து வந்தால் அவனை விட்டு விடுவார்கள் )
  6. பெச்லோர்ஸ் பசங்க அனைவரின் அட்ரஸ் உம் வாங்க படும்

இந்த என்கௌன்ட்டர் பற்றி இணையத்தில் வரும் தகவல்கள் பார்க்கும் பொது உண்மையுள் இந்த என்கௌன்ட்டர் தேவை தானே என்று யோசிக்க தோன்றுகிறது....... இவர்கள் அப்படி என்ன தப்பு செய்து விட்டார்கள்..... வங்கியுள் பணத்தை கொள்ளை அடித்தார்கள் அவோலோதனே ..... இவர்கள் என்ன கொலை, கற்பழிப்பு என்று தேச துரோக செயல்களா செய்தார்கள்...... இவர்கள் பணம் கொள்ளை அடித்து தவறு என்று நீங்கள் கூறினால் அப்படி என்ன்றால் ஜெயா, கருணா, ராஜா, இவர்களை என்ன செய்யலாம் ??? நீங்களே கூறுங்கள், சிறிதாக வழிப்பறி, செயின் பறிப்பு, பிக் பாக்கெட் என்று செய்தல் பொது மக்கள் தரும அடி, போலீஸ் லாக் அப்..... பெரிய spectrum கொள்ளை நில அபகரிப்பு என்று போனால் ஜெயில் தண்டனை, உச்ச நிதிமன்றம், வைத்தா... என்று இழுத்து அடிபர்கள்.....

ஆனால் இவர்களை போல வங்கி கொளையர்களை மட்டும் என்கௌன்ட்டர் என்றால் என்ன நியாயம் மக்களே ..... நீங்கேள கூறுங்கள்.... இந்த என்கௌன்டர் போலீஸ்இன் மரியாதையை, காப்பறு வதற்காக செய்ய பட்டது என்றே நான் கூருவேன்.... கடந்த ஒரு மாதமாக போலீஸ் ஐ எல்லோரும் திட்டி தான் வருகிறார்கள்... ஒரு வங்கி கொள்ளை அடிக்க பட்டு உள்ளது... இவர்கள் என்னதான் செய்யது கொண்டு இருக்கிறார்கள் ....... இவர்கள் இந்த கொள்ளைகரர்களை பிடிக்க ஒரு துப்பு இல்லை என்று அனைவரும் கூறி கொண்டு தான் இருக்கிறார்கள்,.... அந்த நேரத்தில் இரண்டாவது வங்கியும் கொள்ளை அடிக்க பட்டு விட கொதித்து பொய் விட்டது இந்த மானம்கெட்ட காவல் துறை...... அவர்களை பற்றி ஒரு தொலைபேசி அழைப்பு வந்த உடன் ஒரு பட்டலியன் உடன் போலீஸ் வந்து அனைவரையும் கொன்று விட்டது .... எது என்ன என்று விசாரிக்க கூட வில்லை...... ஒருவனை யாவது உயிரோடு பிடித்து இருந்தால் இவர்களை பாராட்டி இருக்கலாம்...... ஆனால் இவர்கள் செய்தது பேர், பெருமைக்க செய்த என்கௌன்ட்டர் இதில் பெருமை வேறு...... தமிழகத்தில் நடந்த மிக பெரிய என்கௌன்ட்டர் இது தான் என்று.......


நாம் கசாபைய உயிரோடு கறியும் சோறும் போட்டு தான் பார்த்து கொண்து இருக்கிறோம்...... பணத்தை கொள்ளை அடித்து தவறு தான்.... நாங்கள் இதை தவறு இல்லை என்று கூறவில்லை..... ஆனால் அதற்க்கு என்கௌன்ட்டர் ரொம்ப அதிகம்..... அட்லீஸ்ட் ஒருவன் வது உயிரோடு பிடித்து இருக்கலாம்...... மனித உயிர் என்றால் இவர்களுக்கு அவொலோ கேவலமா...... இவர்கள் north indians ...... இவர்களை போட்டாள் கேட்க ஆல் கிடையாது என்று கையாலகாத காவல் துறை தனது கை வரிசை காட்டி இருக்கிறது... இது உண்மையுள் பெருமை படவேண்டிய விசயம் அல்ல....... வருத்த பட வேண்டிய விசயம்........ நான் வேறு யாரும் அல்ல உங்களுள் ஒருவனாக இந்த சமுக அவலங்களை பார்த்து கொண்டு இங்கு புலம்பி கொண்டு இருக்கும் ஒரு சாதரனே சாமானியன்..... நான் உங்களுள் ஒருவன்.........

Wednesday, February 22, 2012

வங்கியை கொள்ளை அடிப்பது எப்படி ???

என்னடா இவன் வங்கியை கொள்ளை அடிப்பது எப்படி ன்னு சொல்ல போறனு நினைதிர்கள் என்றால் அது சரி தான்... நான் ஒரு வங்கியை கொள்ளை அடிக்க நினத்தால் நா என்ன என்ன செய்வேன் என்று தான் இதில் கூற போகிறேன்.

என்னன்னா இப்ப சென்னை ல வங்கியை கொள்ளை அடிப்பது எளிது என்று இரண்டு முறை north indians நமக்கு காட்டி விட்டார்கள் அதவும் ஓர மாததில்.

இதற்கு காரணம் உடனே சினிமா தான் என்று ஒரு கூட்டம் என்று கூரினாலும் அது ஒரு levelku உண்மை தான். என்னன்னா ஒரு வங்கியை கொள்ளை அடிப்பது போல் ஒரு 10 ஹாலிவுட் படம் பார்த்தல் நீங்கள் ஒரு கொள்ளைக்காரன் ஆகிவிடலாம். என்ன என்றால் சினிமாவில் நாம் நினைப்பதை விட, நம்மால் செய்ய முடியாததை கூட செய்ய முடியும் என்று காட்டுபவர்கள்...... நான் இங்கு சினிமா காரர்களை குறை கூற வில்லை...... அவர்கள் நம்மக்கு ஒரு விழிப்புணர்வு குடுக்கவே இவ்வாறு படம் எடுத்து நாம் ஜாக்கிரதை யாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்..... ஆனால் நாமோ அந்த படத்தை பார்த்து ரசித்து விட்டு, அல்லது படமா எடுத்து இருக்கிறான் படம் என்று திட்டி விட்டு வந்து விடுகிறோம்..... அத்துடன் அனைத்தையும் மறந்தும் விடுகிறோம்..... அதன் பிறகு எங்காவது அதை போல் ஒரு சம்பவம் நடந்தால் இந்த சினிமாவை பார்த்து விட்டுத்தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றேன என்று சினிமாவை எதிர்த்து பட்டிமன்றம் வைத்து விட்டு... அதன் பிறக்கு நமது சாதாரண வாழ்கைக்கு திரும்பி விடுகிறோம்......

சரி இந்த சினிமா நமக்கு குடுக்கும் படிபின்னை என்னவென்றால் நம்மை சுற்றி எவ்வாறு எல்லாம் பிராட், பிட்டலாட்டம், மொள்ளமாரித்தனம், நடகின்றேன என்று நம்மக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறார்கள், நாம் அதை பார்த்து விட்டு, திரும்பவும் நமது ஆஜாக்கிரதை தனமாகவே இருந்தால், நம்மை அவர்கள் ஏமாற்றுவது எளிது, என்ன என்றால் real life இல்... நமது திருடர்கள் மிகவும் புத்திசாலிகள்..... நாம் தான் ஜாக்கிரதை யாக இருக்க வேண்டும்.... திருடுபவர்கள் திருட வேண்டும் என்று நினைத்து விட்டால் எப்படியும் திருடுபார்கள்..... அவர்கள் இந்த சினிமாவை பார்த்து தான் திருட வேண்டும் என்பது அல்ல... சினிமாவில் காட்டுவது ஒரு சந்தர்பத்தை மட்டும் வைத்து.... ஆனால் உண்மையான திருடர்கள் அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது... என்னவே அவர்கள் பல வழிகளில் முயற்சி செய்து பார்ப்பார்கள் .

சரி, இப்பொழுது நான் ஒரு வங்கியை கொள்ளை அடிக்க போவது போல் நினைத்து கொள்ளுங்கள், அல்லது சினிமாவிருக்கு ஒரு வங்கியை கொள்ளை அடிப்பது போல் ஒரு கதை தயாரிப்பது போல் நினைத்து கொள்ளுங்கள்.....

அந்த north indians இடம் இருந்து யோசிப்போம்..... அவர்கள் முதலில் சென்னைக்கு வந்தற்கு காரணம், என்ன வென்றால் நாம் இப்பொழுது நமது சொந்த ஊரில் இருந்தால், அனைவர்க்கும் நம்மை தெரியும், ஊரின் எல்லையுள் இருந்து தம் அடித்தால் கூட நமது விட்டிருக்கு செய்தி பொய் சேர்ந்து விடும், அதனால் தான் உடைய ஊரில் பல பேர் யோகியர்கள் அகவே இருப்பார்கள், ஆனால் வெளி ஊருக்கு வந்தால் அவர்கள் தம், தண்ணி, என்று சகல கெட்ட விசயங்களும் இருக்கும்... யாரை பற்றியும் சிந்திக்காமல் தான் விருப்ப படி நடந்து கொள்ள முடியும். என்னவே தான் இவர்கள் தங்களுடைய ஊரை விட்டு இங்கு சென்னை க்கு வந்து தங்கள் கை வரிசையை காட்டுகிறார்கள்......

அதன் பிறர்க்கு சென்னையுள் ஒரு நல்ல apartment ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி விடுகிறார்கள், மாணவர்கள் போல, Software Company Workers போல தங்கி விடுகிறார்கள், இவர்களை சுற்றி இருபவர்கள், இவர்கள் மீது சந்தேகம் வராமல் நடந்து கொள்ளுகிறார்கள்.

இவர்கள் மொத்தம் இரண்டு குழுக்களாக இருப்பார்கள்..... ஒரு குழு உளவு பார்க்க.... அவர்கள் வங்கியை கொள்ளை அடித்த பின்பும் அவர்கள் அங்கைய தான் சுற்றி சுற்றி வருவார்கள்..... என்ன என்றால் இவர்கள் மிது சந்தேகம் வராமல் இருக்க..... இன்னொரு குழு வங்கியை கொள்ளை அடிக்க அவர்கள் உளவு பார்க்க வந்த குழுவிடம் இருந்து தகவல் வந்த பிறகே இவர்கள் ஊருக்கு வருவார்கள்.... பெரிய ஹோட்டல் அல்லது லொட்ஜ் இல் ரூம் எடுத்து தங்கி விட்டு... காரியம் முடிந்த உடன் தங்கள் ஊருக்கு சென்று விடுவார்கள்......


உங்களுக்கு இப்பொழுது சந்தேகம் வரலாம், இவர்கள் கொள்ளை அடித்த பணத்தை என்ன செய்யார்கள் என்று..... அதற்க்கு பல வழிகள் இருகின்றேன......

  1. பணத்துடன் ரயில் அல்லது பேருந்தில் அழுக்கு துணிமணி கொண்டு செல்வது போல... செல்வது....
  2. பணத்தை எதாவது ஒரு இடத்தில மறைத்து வைப்பது

இவை எல்லாம் பழைய டெக்னிக் என்று நீங்கள் நினைதால், அதை இரண்டு குழுக்களும்... குறைந்தது பத்து பேராவது இருப்பார்கள்.... அவர்கள் அனைவரும் சமமாக பங்கு பிரித்து..... ஒவோருவர் பெயரில்லும் இரண்டு வங்கி கணக்குகள் தொடங்கி வைத்து இருப்பார்கள்.... அதில் சமமாக deposit பண்ணி வைத்தால் யாருக்கும் சந்தேகம் வராது.......

இவை அனைத்தும் சினிமா பார்க்கும் சராசரி மனிதன் கூட யோசிக்கும் விசயம் தான்...... இப்படி பட்ட மக்கள் நமக்கு மத்தியுள் தான் இருக்கிறார்கள்...... நாம் தான் அவர்கள் யார் என்று கண்டு பிடித்து காவல் துறை இடம் ஒப்படிக்க வேண்டும். என்ன என்றால் காவல் துறை நமது நண்பர்கள் அல்லவா......... :-)

பிறக்கு இவர்களால் கண்டிப்பாக கண்டு பிடிக்க முடியாது.....நாம் தான் இந்த காவல் துறைக்கு கண்டு பிடித்து குடக்க வேண்டும்..... இது அவர்கள் சம்பந்த பட்ட விசயம் மட்டும் அல்ல...... நமது உயிர் மற்றும் உடமை சம்பந்த பட்ட விசயம்........ என்னவே தான் நாம் நம்மை சுற்றி நடப்பவரை வைத்து, யார் நல்லவன் யார் கேட்டவன் என்று முடிவு நாம் தான் எடுக்க வேண்டும்.... இந்த குற்றவாளிகள் ஒன்றும் வெளியுள் இருந்து வரவில்லை..... நமக்குள் நம்முள் ஒருவனாக நம்மை சுற்றி தான் இருக்கிறார்கள்..... நாம் தான் சுதாரித்து நடந்து கொளவேண்டும்..... நானும் உங்களோடு ஒருவனாக இருக்கும் உங்களுள் ஒருவன் தான்.........