Tuesday, March 13, 2012

தமிழனுக்கு மானம் இருகிறதா??????

ஐ நா வின் கூட்டத்தில் நடக்க இருக்கும் இலங்கை க்கு எதிரான வாக்கு எடுப்பில் இந்தியா என்ன செய்ய போகிறது?????? தமிழர்களை கண்டால் பிடிக்காத இந்த கேடு கேட்ட காங்கிரஸ் செய்யும் பெரிய காரியம் இந்த வாக்கு எடுப்பில் கலந்து கொள்ளாமல் இருப்பது மட்டுமே......

என் என்றால் இப்பொழுது இந்தியாவிற்கு தேள் கொட்டினது போல் தான்...... கத்தவும் முடியாது கத்தாமல் இருக்கவும் முடியாது..........

இந்தியா இலங்கைக்கு அதரவாக செயல் பட்டாள் அவர்களும் இந்த தமிழ் மக்களின் படுகொலையில் பங்கு இருக்கிறது என்று..... அப்படி இல்லாமல் இலங்கைக்கு எதிராக செயல் பட்டாள் இலங்கை இந்தியா வை காட்டி குடுத்து விடும் ..... என்னவே இப்பொழுது இந்தியா இரு தலை கொல்லி எறும்பாக தவித்து கொண்து இருக்கிறது..... இன்னொரு பக்கம் காங்கிரஸின் செல்வாக்கு இந்தியா முழவதும் குறைந்து கொண்டு இருக்கிறது சமிபத்திய தேர்தல் இதற்க்கு எடுத்து காட்டு....

இந்த நேரத்தில் தமிழ் நாட்டில் உண்மையுள் நாம் என்ன செய்ய வேண்டும்... ஐ நா வில் நடக்க இருக்கும் வாக்கு எடுப்பில் இந்தியா இலங்கைக்கு அதரவாக செயல் பட கூடாது என்று போரட்ட வேண்டும்........இந்தியாவிற்கு அழுத்தம் குடுக்க வேண்டும், நான் எதோ இந்தியாவை முன்றாம் நபராக பார்பதாக நீங்கள் என்ன வேண்டாம்.... நான் இந்தியவை எதிர்ப்பவன் அல்ல.... தமிழர்களை திரோகியாய் பார்க்கும் இந்த காங்கிரேசை தான் எதிர்கிறேன்.... இலங்கையுள் தமிழர்களை படுகொலை செய்யும் பொது அவர்களுக்கு ஆயுத உதவி செய்தது இந்த காங்கிரஸ் தான்..... தமிழ் மீனவர்களை இலங்கை ராணுவம் கொல்லும் போதும் சரி வாய் முடி இருந்தவர்கள் தானே இவர்கள், எங்கோ இருக்கும் சோமாலிய கடல் கொள்ளைகரர்களை பிடிக்கும் நமது கடலோர காவல் படை என்னோ தமிழ் மீனவர்கள் தாக்க படும் போதும் எங்கு போனார்கள் என்று தெரிய வில்லை.....

இன்னும் கூட தமிழகத்தில் இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் மற்றும் தமிழ் இன கொலைகளை பற்றி தமிழகத்தில் பேச எந்த அரசியல் கட்சியும் முன் வரவில்லை.... எதோ சில அரசியல் சாராத இயகங்கள் அப்பொழுதில் இருந்து போராடி கொண்டு தான் இருக்கிறது.... அனால் தமிழகத்தில் பெரிய அரசியல் கட்சிகள் அனைத்தும் அரசியல் நோக்கதிருக்கு மட்டுமே இதை பயன் படுத்தி கொண்டு இருக்கிறார்கள்...... திமுகவோ காங்கிரஸின் அடி வருடியாக இருந்ததது.... ஆதிமுகவோ அவர்கள் அப்பொழுது ஆட்சியுள் தான் இல்லை என்று பார்த்தல்.... அவர்கள் தமிழகத்தில் கூட இருந்தாக தெரிய வில்லை..... அனால் தேர்தலுக்கு முன்னால் ஒரு நான்கு மாசம் மட்டும் பிரசாரம் செய்து வென்று விட்டார்கள்..... இப்பொழுது அவர்களும் இவர்களை போல கடிதம் மட்டுமே எழுதி வருகிறார்கள்.

இப்பொழுது காங்கிரஸ் எல்லா மட்டத்திலும் அடி பட ஆரம்பித்தவுடன் அதன் அடிவருடியாக இருந்த திமுகா இப்பொழுது முழித்து கொண்டு இலங்கையுள் நடந்த போர் குற்றம் குறித்த சேனல் 4 ஆவன படத்தை கலைங்கர் தொலைகாட்சி யுள் ஒலிபரப்புகிறார்கள். அவர்கள்ளிடம் கேட்க நினைப்பது ஒன்று தான்.... 2009 இல் என்ன ______ பண்ணிக்கிட்டு இருதிங்க??????? அப்பொழுது நடந்த நாடகங்கள் நாம் கண்டிப்பாக மறக்க கூடாது.

நாம் பழைய கதைகள் பேசி கொண்டு இருப்பது பயன் அல்ல.... இனிமேல் என்ன செய்ய வேண்டும் என்று பார்போம்..... இப்பொழுது ஒரு முக்கியமான தருணத்தில் இருக்கிறோம். இப்பொழுதாவது என் தமிழ் இன சொந்தங்களுக்கு நடந்த கொடுமைகளை அனைவர்க்கும் கொண்டு சேர்க்க வேண்டும்... இந்தியா இலங்கைக்கு அதரவாக ஐ நா சபையில் வாக்கு அளிக்க கூடாது.. channel 4 இல் வெளியான கொலை களம் புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களை அன்னைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.... தமிழ் ஈழத்தில் நடந்த வன் கொடுமைகளை பற்றிய தெரிதல், அது பற்றிய புரிதல்கள் அனைவரும் பெற வேண்டும்... அதற்கு நாம் அனைவரும் கண்டிப்பாக பாடுபட வேண்டும்... முத்துகுமரன் மரண வாக்குமுலம் அனைவரும் படிக்கச் வேண்டும்.....

இப்பொழுதாவது என்னது மானம் உள்ள தமிழ் இனம் முழித்து கொள்ளுமா என்ற நப்பாசை இல் உங்களிடம் புலம்பும் உங்களில் ஒருவன்........

Thursday, February 23, 2012

ENCOUNTER க்கு பிறக்கு வேளச்சேரி.......

நேற்று இரவு தான் வங்கியை கொள்ளை அடிப்பது எப்படி ??? என்ற ஒரு பதிவு போட்டு விட்டு... கொஞ்ச நேரம் தொலைக்காட்சி பார்த்து விட்டு இரவு 12 மணிக்கு தூங்க சென்று விட்டேன்... காலையில் எழுந்த உடன் ஒரே சோம்பல்.... என்று அலுவலகம் செல்ல வேண்டுமே என்று கடுப்பு ஒரு பக்கம்...... இன்று ஒரு நாள் விடுப்பு போட்டால் என்ன வென்று ஒரு சோம்பல்....... கடைசியுள் சோம்பல் ஜெவித்து அலுவகத்திற்கு விடுப்பு தெரிவிக்கலாம் என்று எண்ணி கொண்டு ..... எழுந்து தொலைகாட்சி ஐ அன் செய்தல்.... வங்கி கொள்ளையர்களை காவல் துறை என்கௌன்ட்டர் செய்த தகவல் அணைத்து சேனல் இல்லும் இந்த செய்தி தான்......

பரவா இல்லையா நமது காவல் துறை இப்பொழுது முழித்து கொண்து விட்டார்களே என்று எண்ணி கொண்து செய்தியை உற்று நோக்கினாள் அந்த இடங்கள் யாவும் எங்கோ பார்தது போல இருந்தது..... சரி எந்த ஏரியா என்று பார்த்தல், வேளச்சேரி, அடே நம்ம ஏரியா.... நேரு நகர், சரியாய் போச்சு எங்க என்று பார்த்தல் எனது தெரிவிருக்கு அடுத்த தெரு தான்...... அட பாவிகளா இங்க தான் இருந்திர்கள என்று எண்ணி கொண்து வெளிய வந்தால் பகத்து பெட்டி கடை காரரிடம் என்ன நா நம்ம ஏரியா வ இப்படி என்று கேட்டேன்.... அப்போதான் கொஞ்சம் கொஞ்சமாக தகவல் கசிந்து தெரிவில் மக்கள் சிறு சிறு குட்டமாக நின்று இதை பற்றி பேசி கொண்டு இருந்தார்கள்.......


சரி எனது அறைக்கு வந்து... நன்றாக குறைட்டை விட்டு தொங்கி கொண்டு இருந்த நண்பர்களை எழுப்பி விசயத்தை சொனேன்...... அவர்களும் ஒன்றும் தெரிய வில்லை..... கிட்டதிட்ட 200 அடி தான் இருக்கும் என்கௌன்ட்டர் நடந்தே இடத்திற்கும், என்னது ரூமிற்கும்.... இரவில் ஒரு சின்ன சத்தம் கூட கேட்க வில்லை..... ஆனால் போலீஸ் ஒரு மணி நேரம் கடும் துப்பாக்கி சண்டை நடந்ததாக கூறுகிறார்கள்...... சரி போலீஸ் சிலேன்செர் பயன் படுத்தி இருக்கலாம்..... ஆனால் கொள்ளையர்கள் ???????

என்னது நண்பர் ஒருவரின் facebook பதிவு....

இவங்க அவங்கள பிடிக்க போனாங்களாம்... அவங்க ஷூ எல்லாம் போட்டுக்கிட்டு ரெடியா இருந்தாங்களாம்......

என்னையா கலர் கலரா ரீல் சுத்துறீங்க ?!?!

இதை எல்லாம் பார்க்கும் பொழுது எங்களுக்கு சந்தேகம் வருகிறது உண்மையுள் இது என்கௌன்ட்டர் தானா என்று.....

காலையில் டீ குடிக்க வழக்கமாக செல்லும் பாய் கடைக்கு சென்றோம்..... அங்கு சென்று பாய் ஐ வம்புக்கு இல்லுக்கலாம்.. என்று பார்தால்... உள்ள இரண்டு காவல் துறை ஆணையாளர்கள்.... டீ, வடை என்று ஒரு வெட்டு வெட்டி கொண்டு இருந்தார்கள்...... சரி அவர்கள் போகட்டும் என்று பொறுமையாக இருந்தோம்..... அப்பொழுது அவர்களுள் ஒருவர்க்கு தொலைபெசியுள் அழைப்பு வர... இருவரும் மாமனார் விட்டில் சாபிட்டு விட்டு செல்வது போல் சென்றார்கள்..... அதன் பிறர்க்கு பாய் இடம்.... என்ன அண்ணே.... உங்களுக்கும் அந்த பசங்களுக்கும் ஒரு link இருக்குனு வெளிய சொல்லுறாங்க அப்படியா என்று கேட்டேன்... உடனே அவர் ஏப்பா சும்மா இருங்க பா... இப்போ தான் போலீஸ் போகுது.... என்னே அண்ணே உங்கள் தொகிடுவன்களா என்று கேட்டேன்... எப்படி தொகுவங்கே???? அதான் ஓசி டீ, வடை எல்லாம் குடுத்து இருக்கேனே என்று கூறினர்...... இனிமேல இந்த ஏரியா ல north indians ah பார்க்க முடியாது போல என்று கேட்டேன்.... அதற்க்கு அவர்.... இவங்க எங்களை (முஸ்லிம்) தான் சந்தேகம் படுவாங்க.... north indians வந்தா விட்டு விடவார்கள் என்று கூறினர்... இதும் உண்மை தானே.....

எதோ ஒன்று, இரண்டு, முஸ்லிம் இன் தவரான அணுகு முறையால் ..... எல்லா முஸ்லிமையும் கூறை கூருவது, சந்தேகம் படுவது ஏற்புடையது அன்று...... அவர்களும் நம்மை போல் ஒரு சாதாரண வாழ்கை நடத்தும் மக்கள் தானே...... இவர்களை மட்டும் ஒரு சந்தேக பார்வை பார்ப்பது நல்லவா இருக்கு....

corparation bank atm பக்கத்தில் தான் இந்த encounter நடந்து இருந்தது. சரி அந்த பக்கம் சென்று நிலைமை எப்படி என்று தெரிந்து வரலாம் என்று அந்த பக்கம் சென்றேன்...... அங்கு ஒரு போலீஸ் பேருந்து நிறைய காவலர்கள் ஒவொருவராக வந்து கொண்டு இருந்தார்கள்..... அப்போதுதான் majistrate விசாரணை முடித்து கிளம்பினர், அல்லது வேறு முக்கியமான நபர் வந்து பார்த்து விட்டு சென்று இருக்கலாம்..... அந்த இடம் முழுவதும் மீடியா, போலீஸ் என்று அந்த இடம் முழவதும் ஆட்கள் நிரம்பி இருந்தனர்.... அந்த தெரிவிற்குள் பொது மக்கள் யாரையும் அனுமதிக்க வில்லை...... என்னவே என்னால் சென்று பார்க்க முடிய வில்லை.......

அந்த இடதில் இருந்த பொது மக்கள் தங்களுடைய தொலைபெசியுள் பேசி கொண்டு இருந்தார்கள்..... அவற்றை ஒட்டு கேட்கும் போது கேட்ட சில வரிகள்.....

  1. மச்சி நா அப்போ அங்க தண்டா இருந்தேன்..... நைட் ஒரு சத்தமா இருந்துச்சு வெளிய வந்தா போலீஸ் துப்பாக்கி ல சுட்டு கிட்டு இருந்தாங்க
  2. போலீஸ் என்னிடம் தான் வழி கேட்டார்கள்.....
  3. போலீஸ் வருவதை முதலில் பார்த்ததே நான் தான்....
  4. போலீஸ் அந்த பசங்களை பற்றி என்னிடம் தான் கேட்டார்கள்
  5. அந்த பசங்கள என்னக்கு நல்லாவே தெரியும்... அவனுக்கே யார்கிட்டையும் அதிகமா பேச கூட மாட்டார்கள்.....
  6. நம்ம தேருக்கு பக்கத்துல தான் அவனுக இருந்தானுக.....

என்று விதம் விதமாக தொலைபெசியுள் கூறி கொண்டு இருந்தார்கள்...... இதை எல்லாம் என்னக்கு கேட்க்கும் பொழுது சிரிப்பு தான் வந்தது...... வதந்திகள் இப்படி தான் கிளம்பு கிறார்கள்.... ஒரு விசயம் நடந்தால்.... தனக்கு எதுவம் அதை பற்றி தெரியாது என்று கூறினால் நம்மை சுற்றி இருபவர்கள் நம்மை மதிக்க மாட்டார்களோ என்ற ஒரு சின்ன காரணத்திற்கு இப்படி வதந்திகள் கிளும்புகின்றன........ இதற்கு மேலாக எனது நண்பன்... அவனது அலுவலகதிற்கு தொலைபசியுள் அழைத்து ஒரு மணி நேரம் permission காரணம், போலீஸ் யாரையும் தெருவை விட்டு வெளிய வர கூடாது என்று கூறி இருக்கிறார்கள்..... என்று கூறி பெர்மிச்சியன் வாங்கி விட்டான்.... என்ன கொடுமை சார் இது..........

காலை 11 மணிக்கு வேலைக்கு செல்பவர்கள், மாணவர்கள் அனைவரும் சென்று விட.... இல்லத்து அரசிகள்... கூட்டம் கூட்டமாக அந்த தெருவிற்கு சென்று வந்து கொண்டு இருந்தார்கள், எக்கா உன்னக்கு விசயம் தெரியுமா இவனுக அங்க வழிப்பறி பண்ணினன்களா அவனுகளா.... பேங்க் ல கொள்ளை அடிச்சா பணத்தை அந்த விடல தான் இன்னும் இருக்கமே... உனக்கு தெரயும்மா????? எங்க விட்டுக்காரர் தான் சொன்னாரு..... என்று பெண்கள் ஒரு பக்கம் வதந்தியை கிலோ கணக்கா பரப்பி கொண்டு இருக்க..... நான் எனது விட்டிருக்கு பகத்தில் இருக்கும் பெட்டி கடை காரரிடம் சும்மா ஒரு மொக்கையை போட அப்பொழுது அங்கு வந்தே பெரியவர்..... இந்த பொம்பளைங்க எங்க கூட்டமா பொய்த்து வரலுங்க... என்ன திருவிழவா என்று கேட்டார்.... நான் கூறினேன்... அதான் நேற்று திபாவளி கொண்டடி இருகண்களா அதான் என்று கூறினேன்... அந்த பெண்களை திட்டி கொண்டு பெரியவர் புலம்ப ஆரம்பித்தார்..... நான் கேட்டேன் பெரியவரே இந்த பசங்களுக்கு விடு பார்த்து குடுத்த புரோக்கர் யாருன்னு கேட்டேன்.... இதுல்லாம் இப்படி நடக்கும்னு யாருக்கு பா தெரியும்..... வரும் பொது எல்லாம் நல்ல பசங்கள தான் இருகாங்க..... ஆனா இப்போ.... என் நானே அவர்களுக்கு அந்தே விட்டை முடித்து குடுத்து இருக்கலாமான்னு சொல்லுறார்.....

அவரிடம் அண்ணே அந்த வீடு விலைக்கு வந்தால் சொல்லுங்கள் கம்மியான விலைக்கு வாங்கி விடலாம்.... என்ன ஐந்து நபர்கள் செத்த வீடு... ஒருத்தன் வர மாட்டன்.... நாமா அத வாங்கிடலாம்......

எங்களுக்கு உள்ள வருத்தம் என்ன வென்றால் பக்கத்துக்கு தெரிவில் தான் இருந்து இருந்தான் .... ஒரு ஷேர் குடுத்து இருக்கலாம், பாவிபய... கூடவே சுத்துறிய செவாலை நீயாவது இத கேட்க மாட்டிய..... எங்கங்க கேட்கிறான் கண்ட கண்ட போலீஸ் எல்லாம் வந்து என்கௌன்ட்டர் பண்ணும் சொன்னா கேட்கிரேன..... இப்போ என்கௌன்ட்டர் அச்சுல........


இனிமேல எங்களுக்கு எங்க ஏரியா வில் உள்ள problems.......

  1. இரவு பத்து மணிக்கு மேல் வெளிய வரே முடியாது.....
  2. எப்பொழுதும் போலீஸ் ரவுண்டு ஆப் இருக்கும்......
  3. இந்த ஏரியா வில் இருக்கும் பெச்லோர்ஸ் பசங்க எல்லாரயும் ஒரே சந்தேக பார்வை உடன் தான் பார்ப்பார்கள்....
  4. சும்மாவே பெச்லோர்ஸ் க்கு வீடு குடுக்க மட்டங்க... இப்போ இது வேரயா.......
  5. இந்த ஏரியா வில் இருக்கும் நோர்த் இந்தியன்ஸ் எல்லோரும் மீதும் போலீஸ் பார்வை பயங்கரமா இருக்கும்........ (நம்ம ஆளுங்க ஒரு விசயம் நடந்த பிறர்க்கு தான் அந்த விசயம் பத்தி கவனம் செல்துவார்கள்.... உன்னை போல் ஒருவன் படத்தில் கமல் சொல்லுவது போல்..... ஒரு தீவிரவாதி வயதில் குண்டு வைத்து வந்தால்..... வருபவர்கள் அனைவரையும் வயதில் மட்டும் தேடி பார்ப்பார்கள்..... ஒருவன் காலில் குண்டு வைத்து வந்தால் அவனை விட்டு விடுவார்கள் )
  6. பெச்லோர்ஸ் பசங்க அனைவரின் அட்ரஸ் உம் வாங்க படும்

இந்த என்கௌன்ட்டர் பற்றி இணையத்தில் வரும் தகவல்கள் பார்க்கும் பொது உண்மையுள் இந்த என்கௌன்ட்டர் தேவை தானே என்று யோசிக்க தோன்றுகிறது....... இவர்கள் அப்படி என்ன தப்பு செய்து விட்டார்கள்..... வங்கியுள் பணத்தை கொள்ளை அடித்தார்கள் அவோலோதனே ..... இவர்கள் என்ன கொலை, கற்பழிப்பு என்று தேச துரோக செயல்களா செய்தார்கள்...... இவர்கள் பணம் கொள்ளை அடித்து தவறு என்று நீங்கள் கூறினால் அப்படி என்ன்றால் ஜெயா, கருணா, ராஜா, இவர்களை என்ன செய்யலாம் ??? நீங்களே கூறுங்கள், சிறிதாக வழிப்பறி, செயின் பறிப்பு, பிக் பாக்கெட் என்று செய்தல் பொது மக்கள் தரும அடி, போலீஸ் லாக் அப்..... பெரிய spectrum கொள்ளை நில அபகரிப்பு என்று போனால் ஜெயில் தண்டனை, உச்ச நிதிமன்றம், வைத்தா... என்று இழுத்து அடிபர்கள்.....

ஆனால் இவர்களை போல வங்கி கொளையர்களை மட்டும் என்கௌன்ட்டர் என்றால் என்ன நியாயம் மக்களே ..... நீங்கேள கூறுங்கள்.... இந்த என்கௌன்டர் போலீஸ்இன் மரியாதையை, காப்பறு வதற்காக செய்ய பட்டது என்றே நான் கூருவேன்.... கடந்த ஒரு மாதமாக போலீஸ் ஐ எல்லோரும் திட்டி தான் வருகிறார்கள்... ஒரு வங்கி கொள்ளை அடிக்க பட்டு உள்ளது... இவர்கள் என்னதான் செய்யது கொண்டு இருக்கிறார்கள் ....... இவர்கள் இந்த கொள்ளைகரர்களை பிடிக்க ஒரு துப்பு இல்லை என்று அனைவரும் கூறி கொண்டு தான் இருக்கிறார்கள்,.... அந்த நேரத்தில் இரண்டாவது வங்கியும் கொள்ளை அடிக்க பட்டு விட கொதித்து பொய் விட்டது இந்த மானம்கெட்ட காவல் துறை...... அவர்களை பற்றி ஒரு தொலைபேசி அழைப்பு வந்த உடன் ஒரு பட்டலியன் உடன் போலீஸ் வந்து அனைவரையும் கொன்று விட்டது .... எது என்ன என்று விசாரிக்க கூட வில்லை...... ஒருவனை யாவது உயிரோடு பிடித்து இருந்தால் இவர்களை பாராட்டி இருக்கலாம்...... ஆனால் இவர்கள் செய்தது பேர், பெருமைக்க செய்த என்கௌன்ட்டர் இதில் பெருமை வேறு...... தமிழகத்தில் நடந்த மிக பெரிய என்கௌன்ட்டர் இது தான் என்று.......


நாம் கசாபைய உயிரோடு கறியும் சோறும் போட்டு தான் பார்த்து கொண்து இருக்கிறோம்...... பணத்தை கொள்ளை அடித்து தவறு தான்.... நாங்கள் இதை தவறு இல்லை என்று கூறவில்லை..... ஆனால் அதற்க்கு என்கௌன்ட்டர் ரொம்ப அதிகம்..... அட்லீஸ்ட் ஒருவன் வது உயிரோடு பிடித்து இருக்கலாம்...... மனித உயிர் என்றால் இவர்களுக்கு அவொலோ கேவலமா...... இவர்கள் north indians ...... இவர்களை போட்டாள் கேட்க ஆல் கிடையாது என்று கையாலகாத காவல் துறை தனது கை வரிசை காட்டி இருக்கிறது... இது உண்மையுள் பெருமை படவேண்டிய விசயம் அல்ல....... வருத்த பட வேண்டிய விசயம்........ நான் வேறு யாரும் அல்ல உங்களுள் ஒருவனாக இந்த சமுக அவலங்களை பார்த்து கொண்டு இங்கு புலம்பி கொண்டு இருக்கும் ஒரு சாதரனே சாமானியன்..... நான் உங்களுள் ஒருவன்.........

Wednesday, February 22, 2012

வங்கியை கொள்ளை அடிப்பது எப்படி ???

என்னடா இவன் வங்கியை கொள்ளை அடிப்பது எப்படி ன்னு சொல்ல போறனு நினைதிர்கள் என்றால் அது சரி தான்... நான் ஒரு வங்கியை கொள்ளை அடிக்க நினத்தால் நா என்ன என்ன செய்வேன் என்று தான் இதில் கூற போகிறேன்.

என்னன்னா இப்ப சென்னை ல வங்கியை கொள்ளை அடிப்பது எளிது என்று இரண்டு முறை north indians நமக்கு காட்டி விட்டார்கள் அதவும் ஓர மாததில்.

இதற்கு காரணம் உடனே சினிமா தான் என்று ஒரு கூட்டம் என்று கூரினாலும் அது ஒரு levelku உண்மை தான். என்னன்னா ஒரு வங்கியை கொள்ளை அடிப்பது போல் ஒரு 10 ஹாலிவுட் படம் பார்த்தல் நீங்கள் ஒரு கொள்ளைக்காரன் ஆகிவிடலாம். என்ன என்றால் சினிமாவில் நாம் நினைப்பதை விட, நம்மால் செய்ய முடியாததை கூட செய்ய முடியும் என்று காட்டுபவர்கள்...... நான் இங்கு சினிமா காரர்களை குறை கூற வில்லை...... அவர்கள் நம்மக்கு ஒரு விழிப்புணர்வு குடுக்கவே இவ்வாறு படம் எடுத்து நாம் ஜாக்கிரதை யாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்..... ஆனால் நாமோ அந்த படத்தை பார்த்து ரசித்து விட்டு, அல்லது படமா எடுத்து இருக்கிறான் படம் என்று திட்டி விட்டு வந்து விடுகிறோம்..... அத்துடன் அனைத்தையும் மறந்தும் விடுகிறோம்..... அதன் பிறகு எங்காவது அதை போல் ஒரு சம்பவம் நடந்தால் இந்த சினிமாவை பார்த்து விட்டுத்தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றேன என்று சினிமாவை எதிர்த்து பட்டிமன்றம் வைத்து விட்டு... அதன் பிறக்கு நமது சாதாரண வாழ்கைக்கு திரும்பி விடுகிறோம்......

சரி இந்த சினிமா நமக்கு குடுக்கும் படிபின்னை என்னவென்றால் நம்மை சுற்றி எவ்வாறு எல்லாம் பிராட், பிட்டலாட்டம், மொள்ளமாரித்தனம், நடகின்றேன என்று நம்மக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறார்கள், நாம் அதை பார்த்து விட்டு, திரும்பவும் நமது ஆஜாக்கிரதை தனமாகவே இருந்தால், நம்மை அவர்கள் ஏமாற்றுவது எளிது, என்ன என்றால் real life இல்... நமது திருடர்கள் மிகவும் புத்திசாலிகள்..... நாம் தான் ஜாக்கிரதை யாக இருக்க வேண்டும்.... திருடுபவர்கள் திருட வேண்டும் என்று நினைத்து விட்டால் எப்படியும் திருடுபார்கள்..... அவர்கள் இந்த சினிமாவை பார்த்து தான் திருட வேண்டும் என்பது அல்ல... சினிமாவில் காட்டுவது ஒரு சந்தர்பத்தை மட்டும் வைத்து.... ஆனால் உண்மையான திருடர்கள் அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது... என்னவே அவர்கள் பல வழிகளில் முயற்சி செய்து பார்ப்பார்கள் .

சரி, இப்பொழுது நான் ஒரு வங்கியை கொள்ளை அடிக்க போவது போல் நினைத்து கொள்ளுங்கள், அல்லது சினிமாவிருக்கு ஒரு வங்கியை கொள்ளை அடிப்பது போல் ஒரு கதை தயாரிப்பது போல் நினைத்து கொள்ளுங்கள்.....

அந்த north indians இடம் இருந்து யோசிப்போம்..... அவர்கள் முதலில் சென்னைக்கு வந்தற்கு காரணம், என்ன வென்றால் நாம் இப்பொழுது நமது சொந்த ஊரில் இருந்தால், அனைவர்க்கும் நம்மை தெரியும், ஊரின் எல்லையுள் இருந்து தம் அடித்தால் கூட நமது விட்டிருக்கு செய்தி பொய் சேர்ந்து விடும், அதனால் தான் உடைய ஊரில் பல பேர் யோகியர்கள் அகவே இருப்பார்கள், ஆனால் வெளி ஊருக்கு வந்தால் அவர்கள் தம், தண்ணி, என்று சகல கெட்ட விசயங்களும் இருக்கும்... யாரை பற்றியும் சிந்திக்காமல் தான் விருப்ப படி நடந்து கொள்ள முடியும். என்னவே தான் இவர்கள் தங்களுடைய ஊரை விட்டு இங்கு சென்னை க்கு வந்து தங்கள் கை வரிசையை காட்டுகிறார்கள்......

அதன் பிறர்க்கு சென்னையுள் ஒரு நல்ல apartment ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி விடுகிறார்கள், மாணவர்கள் போல, Software Company Workers போல தங்கி விடுகிறார்கள், இவர்களை சுற்றி இருபவர்கள், இவர்கள் மீது சந்தேகம் வராமல் நடந்து கொள்ளுகிறார்கள்.

இவர்கள் மொத்தம் இரண்டு குழுக்களாக இருப்பார்கள்..... ஒரு குழு உளவு பார்க்க.... அவர்கள் வங்கியை கொள்ளை அடித்த பின்பும் அவர்கள் அங்கைய தான் சுற்றி சுற்றி வருவார்கள்..... என்ன என்றால் இவர்கள் மிது சந்தேகம் வராமல் இருக்க..... இன்னொரு குழு வங்கியை கொள்ளை அடிக்க அவர்கள் உளவு பார்க்க வந்த குழுவிடம் இருந்து தகவல் வந்த பிறகே இவர்கள் ஊருக்கு வருவார்கள்.... பெரிய ஹோட்டல் அல்லது லொட்ஜ் இல் ரூம் எடுத்து தங்கி விட்டு... காரியம் முடிந்த உடன் தங்கள் ஊருக்கு சென்று விடுவார்கள்......


உங்களுக்கு இப்பொழுது சந்தேகம் வரலாம், இவர்கள் கொள்ளை அடித்த பணத்தை என்ன செய்யார்கள் என்று..... அதற்க்கு பல வழிகள் இருகின்றேன......

  1. பணத்துடன் ரயில் அல்லது பேருந்தில் அழுக்கு துணிமணி கொண்டு செல்வது போல... செல்வது....
  2. பணத்தை எதாவது ஒரு இடத்தில மறைத்து வைப்பது

இவை எல்லாம் பழைய டெக்னிக் என்று நீங்கள் நினைதால், அதை இரண்டு குழுக்களும்... குறைந்தது பத்து பேராவது இருப்பார்கள்.... அவர்கள் அனைவரும் சமமாக பங்கு பிரித்து..... ஒவோருவர் பெயரில்லும் இரண்டு வங்கி கணக்குகள் தொடங்கி வைத்து இருப்பார்கள்.... அதில் சமமாக deposit பண்ணி வைத்தால் யாருக்கும் சந்தேகம் வராது.......

இவை அனைத்தும் சினிமா பார்க்கும் சராசரி மனிதன் கூட யோசிக்கும் விசயம் தான்...... இப்படி பட்ட மக்கள் நமக்கு மத்தியுள் தான் இருக்கிறார்கள்...... நாம் தான் அவர்கள் யார் என்று கண்டு பிடித்து காவல் துறை இடம் ஒப்படிக்க வேண்டும். என்ன என்றால் காவல் துறை நமது நண்பர்கள் அல்லவா......... :-)

பிறக்கு இவர்களால் கண்டிப்பாக கண்டு பிடிக்க முடியாது.....நாம் தான் இந்த காவல் துறைக்கு கண்டு பிடித்து குடக்க வேண்டும்..... இது அவர்கள் சம்பந்த பட்ட விசயம் மட்டும் அல்ல...... நமது உயிர் மற்றும் உடமை சம்பந்த பட்ட விசயம்........ என்னவே தான் நாம் நம்மை சுற்றி நடப்பவரை வைத்து, யார் நல்லவன் யார் கேட்டவன் என்று முடிவு நாம் தான் எடுக்க வேண்டும்.... இந்த குற்றவாளிகள் ஒன்றும் வெளியுள் இருந்து வரவில்லை..... நமக்குள் நம்முள் ஒருவனாக நம்மை சுற்றி தான் இருக்கிறார்கள்..... நாம் தான் சுதாரித்து நடந்து கொளவேண்டும்..... நானும் உங்களோடு ஒருவனாக இருக்கும் உங்களுள் ஒருவன் தான்.........

Sunday, November 20, 2011

government bus la ticket எடுப்பவன் கேனையன்...... பேருந்து பயண கட்டணம் ஒரு கிலோமீட்டர் க்கு எட்டு பைசா(0.08 Paise) மட்டுமே.......

என்ன பாஸ் நம்ப முடியலையா ??? என்னக்கும் first அப்படி தான் இருந்துச்சு......
பஸ்சில் பயண கட்டணம் எத்தின உடன்.... பஸ் இல் இருபவர்கள் புலம்பியதை பார்த்த பிறக்கு..... என்னக்கு தோன்றியது... வழக்கமாக சினிமா வில் மட்டுமே பார்த்து பழகிய காட்சிகள்... நேரில் பார்த்த உடன் மணம் கேட்க வில்லை......

நாமே தான் ICWAI படித்த, படித்து கொண்டு இருக்கும், படிக்கும் மாணவன் ஆச்சே.... இந்த பேருந்து கட்டணத்தை நாம் re-calculate செய்து பார்த்தல் என்ன என்று தோன்றியது.... அதில் உருவானதுதான் இந்த பதிவு முதலில் ICWAI என்றால் The Institute of Cost and Works Accountants of India.... அதாக பட்டது என்னன்னா ..... ஒரு பொருளுக்கு விலை நிரண்யம் செய்தல் பற்றி படிப்பது தான் அது.....


ஒரு பொருளுக்கு விலை நிரண்யம் செய்வதற்கு முன் சில அடிபடைகளை தெரிந்து வைத்து கொள்ளுவது நல்லது.

Selling price = Fixed price + variable cost + profit

Fixed cost: (நிரந்தரமான செலவு)
ஒரு பொருள் உற்பத்தி செய்தாலும், 1000 பொருள் உற்பத்தி செய்தாலும், இந்த expenses... குடாது குறையாது..... for an example.... workers salary, Depreciation (தேய்மானம் ) room rent, security salary, traveling cost etc

Variable cost ( மாறும் தன்மை உடைய செலவு)

ஒரு பொருள் உற்பத்தி செய்ய ஏற்படும் செலவு.... இது நாம் எவ்ளோ உற்பத்தி செய்கிறோமோ அதற்க்கு ஏற்றால் போல் இதன் செலவு உயரும்...... அதாவுது அந்த பொருள் உற்பத்தி செய்ய தேவை படும்.. man, meterial, mechin இவ்வை அனைத்தும் அடங்கும்.....

சரி நாம் ஒரு பேருந்து கட்டணம் எப்படி நிரனையம் செய்ய படுகிறது என்று பார்போம்.... அதாவது ஒரு பேருந்தின் ஆயுட் காலம், அதன் விலை, அதன் தெயுமானம்(depreciation charges for an year) அது எவளோ தூரம் செல்கிறது... எரிபொருள் செலவு... ஆகியவறை கொண்டு அதில் பயணம் செய்யும் மக்களிடம் அந்த கட்டணம் வசூலிக்க படுகிறது......
இந்த calculation சில assumption அடிபடையுள் கணிக்க பட்டது.....

Fixed Cost:
Assumption 1:
ஒரு பேருந்தின் விலை approz 1 crore.
life time: 20 yrs, so cost for an year 1 crore/20 yrs = 5 lakhs in a year charged as depreciation.

கவனிக்க: அப்படி 20 yrs, ஒவ்வொரு வருடம் எடுத்து வைத்தால்...இருபதாவது வருட முடியுள் ஒரு பேருந்தின் மொத்த பணமும் திரும்ப கிடைத்து விடும்.... அதாவது போட்ட முதலை அப்படிய எடுத்த விடலாம்..... அந்த இருபது வருடம் கழித்து, அந்த பேருந்தை பழைய இருப்புக்கு பெரிச்சபலம்.. வாங்கினால் கூட அது லாபம் தான்.....

Variable Cost:
Assumption 2 ;
ஒரு பேருந்து ஒரு முறைக்கு (one trip )20 km செல்கிறது என்று வைத்து கொள்ளலாம்.(for an example: saidepet to high court)...அப்படி ஒரு நாளைக்கு 20 முறை செல்லும் என்று வைத்து கொள்ளலாம்..... மொத்தமாக ஒரு நாளைக்கு இருபது கிலோமீட்டர், இருபது முறை செல்லும் என்றால் மொத்தமாக 400 கிலோமீட்டர் செல்லும்....

ஒரு லிட்டர் பெட்ரோல் ஐந்து கிலோமீட்டர் கூடுக்கும் என்று வைத்து கொள்ளுவோம்..... மொத்தமாக ஒரு நாளைக்கு 400 kms / 5 = 80 liters.
ஒரு வருடதிற்கு 80 liters * 365 days = 29200 liters ஒரு லிட்டர் பெட்ரோல் இன்றைய விலை இல் 70 ரூபாய்... அக மொத்தம் 29200 liters * 70 rs = Rs. 20,44,000 for a year.

Assumption 3: பேருந்தின் மொத்த 55 நபர்கள் பயணம் செய்யலாம்..... (total seats available) எப்பொழுதும் எல்லா இருகைகளும் நிரம்பி விடாது.... என்னவே அறுபது சதவிதம் மக்கள் பயணம் செய்பர்கள் என்று வைத்து கொள்ளலாம்... 55 * (60/100) = 33 passengers in a trip மொத்தமாக ஒரு நாளைக்கு 33 passengers in a trip * 20 trips = 660 passengers
அக மொத்தம்... ஒரு பேருந்தில் ஒரு நாளைக்கு 660 மக்கள் மொத்தமாக 400 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்கிறார்கள்.... அதாவது மொத்தம் 400 kms * 390 passengers = 1,56,000 passengers km. ஒரு வருஷம் திற்கு 365 days * 1,56,000 passengers km = 5,69,40,000 kms

கவனிக்க : Peek hoursல பேருந்தின் foot board இல் பயணம் செய்யும் நமது நண்பர்களை நான் இதில் கணக்கில் எடுத்து கொள்ள வில்லை........குத்து மதிப்பாக அனைத்து பேருந்துகளும் இந்த சராசரி 33 நபர்களுடன் செல்லும் என்பதை சொல்ல முடியாது.... என்னவே தான் சராசரியாக 33 நபர்கள் அணைத்து பேருந்துகளுக்கும் பொதுவாக இருக்கும் என்று எடுத்து கொள்ளுகிறேன்....


Assumption 4:
ஒரு பேருந்திற்காக செலவு செய்யும் மொத்த தொகை ஒரு வருடதிற்கு... driver, conductor salary, maintaining cost, dipo rent, mechanic, formen, manager salary இது எல்லாம் சென்னை இல் இருக்கும் மொத்த பேருந்திற்காக செலவு செய்யும் செலவுகள்...... நாம் ஒரு பேருந்திற்கு ஒரு குத்து மதிப்பாக 20 லட்சம் என்று வைத்து கொள்ளலாம்......

Formula :

Fixed cost + veriable cost
----------------------------------
Passengers Kms


Fixed cost = Depreciation charges(assumption 1) + Maintaing cost (assumption 4)
Variable cost = Petrol Expenses (Assumption 2)
Petrol Cost (Assumption 3)
(5,00,000 + 20,00,000 ) + 20,44,000
--------------------------------------------------------------------- = 0.08 Paise
5,69,40,000

அக சரசரியாக ஒரு கிலோமீட்டர் க்கு எட்டு பைசா மட்டுமே...... அவர்கள் நூறு சதவித லாபத்தில் இயங்கினால் குட ஒரு கிலோமீட்டர் க்கு 18 பைசா மட்டுமே..... minimum charges for 10 kms is Rs. 1. 80 only.... அனால் நமது அரசாங்கம் minimum ticket fare என்று Rs. 8 வரை வசுளிகிரர்கள்..... இது கிட்ட திட்ட 10 மடங்கு லாபம்.... இப்பவும் அவர்கள் நஷ்டத்தில் தான் இயங்குகிறேன் என்றால் அவர்கள் முகத்திலே குத்தலாம்.. ஒன்றும் தப்ப இல்லை.....

இந்த கணக்கை நன்றாக தெரிந்தால் தான் லல்லு பிரசாத் யாதவ்.. ஒரு முறை குட ரயில் பயண கட்டணம் குட்டவில்லை... இந்த பொது துறை அமைப்புகளுக்கு சரியாக நிருவாக தலைமை இல்லாதது தான் காரணம் என்று தெரிந்து அவர் கையுள் நிர்வாகம் சென்ற உடன்.... நஷ்டடில் சென்ற railway budget லாபத்திற்கு மாறியது......

இன்றும் வரை BSNL நஷ்டடில் தான் இயங்குகிறது...... அதன் call charges minimum 60 paise per minute.... ஆனால் தனியார் நிறுவனகள்... minimum call charges 0.005 paise per second என்று குடுகிறார்கள்... ஆனால் அவர்கள் லாபடடில் மட்டுமே செல்லுகிறார்கள்... இப்பொழுது சொல்லுங்கள் மக்களே..... இந்த பொது துறை நிறுவனங்களுக்கு நிருவாக திறமை இல்லாத காரணத்தால் பொது மக்கள் நாம் அவஸ்தி படலாமா?????

இவர்களின் பழைய பயண கட்டணம்.... கொண்டு வந்து குறைந்தது 5 ஆண்டுகள் இருக்கும்... அப்பொழுது பெட்ரோல் வில்லை மிகவும் குறையு... அப்பொழுதே அவர்கள் 5 இல் இருந்து 8 மடங்கு லாபத்தில் தான் இயங்கி இருக்கிறார்கள்.... அப்படியும் அவர்கள் நஷ்ட கணக்கு காட்டினால் அவர்களுக்கு சரியான நிறுவாக திறமை இல்லை என்று தான் நாம் ஏற்று கொள்ள வேண்டும்......

அம்மா க்கு சால்ர அடிபவரகள் கொஞ்சம் இங்கே கவனிக்க..... பெட்ரோல் விலை 2009 இல் ஒரு barrel 100 dollars என்று இருந்த பொது தமிழகத்தில் 45 ரூபாய்... இப்பொழுது 70 ரூபாய்.... இது இவர்களது திறமை இல்லாமையே காட்டுகிறது..... இதற்கு எங்கள் வரி பணத்தில் இருந்து கொண்டு எங்களுக்கே அப்பு அடிகிரிங்கள.... இது உங்கலகே நியாம் தானா???
அம்மா நீங்கள் எங்களுக்கு இலவச ஆடு, மாட்டு, குதிரை எல்லாம் குடுக்க வேண்டாம்.... அதற்க்கு பதில் எங்களுக்கு இலவச பயண சீட்டு குடுங்கள்..... எங்களிடம் அநியாமாக இப்படி பணத்தை வசூலித்து எங்களுக்கே அதை திருப்பி தரும் உங்கள் திட்டம் எங்களுக்கு வேண்டாம்....


இப்படி புலம்பி திற்பவன் வேறு யாரும் அல்ல... உங்களோடு உங்கள்ளக்க .... தினமும் நீங்கள் பார்க்கும் சாதாரண பொது ஜனம்.... நான் உங்களுள் ஒருவன்............

Thursday, November 10, 2011

சமுக பணியாளர்கள் என்னும் பொம்மைகள்.....

இந்த சமுக பணியாளர்கள் என்பவர்கள் ஆஇதிமுக வின் விளையாட்டு பொம்மைகள் என்று குறுவது சரியாக இருக்கும்.... என் என்றால் அம்மா ஆட்சிக்கு வந்த முன்று முறையும் இவர்களை வேலையை விட்டு நிக்குவதை ஒரு வேலையாகவ செய்து வருகிறார்.... திரும்பவும் கருணாநிதி வந்த உடன் வேளையில் சேர்த்து கொல்வது ஒரு வாடிக்கையாக வே மாறி விட்டது தமிழ் நாட்டில்......



நானும் தெரியாமல் தான் கேட்கிறேன்.... இவர்கள் மீது உங்களுக்கு அப்படி என்னதான் கடுப்பு..... 09.11.11 அன்று புதிய தலைமுறை தொலைகாட்சி செய்திகளில் நேர்பட பேசு என்ற நிகழ்ச்சியுள் வந்த ஆஇதிமுக வின் (முன்னால் MLA or MP) மலைச்சாமி பேசும் பொது... கொஞ்சம் குட சுரணையே இல்லாமல் கூறுகிறார்... இவர்கள் அனைவரும் திமுக கொண்டு வரப்பட்ட பணிடங்கள் அதனால் தான் நாங்கள் களைத்தோம் என்று......

ஐயா நான் தெரியாமல் தான் கேட்கிறான்... இவர்கள் திமுக பணிக்கு அமர்த்த பட்டவர்கள் என்ற காரணத்துக தான் பனி நிக்கம் செய்கிறன் என்றால்.. இதற்கு பெயர் என்ன...


அதாவது திமுக தமிழகத்தில் என்ன செய்தலும் அதை எதிர்க்க வேண்டும் என்று ஒரே நோக்கத்தில் செய்யல படுவது போல தானே இருக்கிறது.... நிங்கள் அப்படி செயல்பட்டால் எங்களுக்கு சந்தோசம் தான்... ஆனால் நீங்கள் அதை எப்பொழுது செய்து இருக்க வேண்டும் என்றால் நீங்கள் எதிர் கட்சியாக இருக்கும் பொழுது இதை செய்து இருந்திர்கள் என்றால் நாங்கள் சந்தோஷ பட்டு இருப்போம்.... ஆனால் அப்பொழுது கோட நாட்டில் ஓயாக இருந்து விட்டு இப்பொழுது அவர்கள் செய்த எதோ ஒன்று இரண்டு நல்ல காரியத்தில் முடக்குவது ஒன்றும் நன்றாகக வில்லை....

இது எல்லாம் தேவை இல்லாத செலவு... கஜானா தான் காலி ஆகிறது என்று நிங்கள் கூறினால்.... நான் கேட்கிறேன்.... தமிழகத்தில் இது மட்டும் தான் தேவை இல்லாத பனி இடமா.... MP or MLA அரசிலவாதி அவர்களுக்கு செலவு செய்யும் பணம், அவர்களுக்கு குடுக்கும் சலுகைகள் இவற்றை எல்லாமே என்ன கஜானாவை நிறைவு செய்யும் வலிகளா????


அதன் பிறக்கு அண்ணா நூலகம் உங்களை என்ன செய்தது???? அந்த இடத்தில ஒரு மருத்துவ மனை கட்ட வேண்டும் என்று உங்களிடம் யார் கேட்டார்கள் ??? தமிழகத்தில் மட்டும் அல்ல.... ஆசியாவிலைய மிக பெரிய நூலகம் என்று பெயர் பெற்ற நூலகத்தை இடித்து விட்டு தான் அங்கு மருத்துவ மனை கட்ட வேண்டுமா??? என்ன ஏற்கனவே சென்னையுள் traffic ரொம்ப கம்மியாக இருக்கு என்று நினைகிர்களா??? எல்லாத்தையும் ஓர இடத்தில வைபதர்க்கு.. தாம்பரத்தில் ஒன்று திருவான்மியூர் இல் ஒன்று வியாசர்பாடி, அவடி இல் ஒன்று என்று கட்டினால் அனைவரும் பயன் பெறுவார்கள் அல்லவா??? அணைத்து தரப்பு மக்களும் பயன் பெறுவார்கள்..... அண்ணா பல்கலைகலக்திற்கு பக்கத்தில் தான் நூலகம் தேவை..... அதை விட்டு விட்டு.... அதை இடித்து குழந்தைகள் மருத்துவமனை கட்ட போகிறேன் என்கிர்களே நீங்கள் என்ன ___________?????


அம்மா முதலில் இவற்றை செய்வதை விட்டு வித்து.... பெங்களூர் நீதி மன்றத்தில் ஆஜராகிற வழியை பாருங்கள்.... அங்கு செல்லாமல் இருபதற்கு நீங்கள் சொன்னே காரணக்கள்.... சிறு குழந்தைகள் பள்ளி குடம் செல்லாமல் இருபதற்கு சொல்லமும் கரங்களை விட ரொம்ப தமாசாக இருக்கிறது.. அப்படி என்ன என்ன காரணங்கள் சொன்னார் என்று கேட்கிர்களா???


  1. தமிழகத்தில் தேர்தல் வருகின்றது
  2. முதல்வராக இருகின்றேன்
  3. நீதி மன்றத்தில் புதிதாக வெள்ளை அடிக்க பட்டு உள்ளத்தால், ஒவ்வாமை ஏற்பதும்.
  4. நான் வருவதால் அங்கு 144 தடை உத்திரவு பிறப்பிக்க பட்டு உள்ளத்தால் அங்கு உள்ள மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளகிரர்கள்
  5. அம்மாக்கு உடம்பு சரி இல்லை
  6. அத்து குட்டிய கான்னும்
என்று சிறு குழந்தைகள் கூட தோற்று விடும் அம்மா கூறும் காரணகளால்..... அம்மா அவர்களே நிங்கள் முதலில் உங்கள் முதுகில் இருக்கும் அழுகை சரி செய்யுங்கள்..... அதன் பிறர்க்கு நூலகத்தை மாற்றுங்கள், புதிய சட்ட மன்றத்தை மாற்றுங்கள்... என்ன மெரினாவை குட மாற்றி விடுங்கள்.... ஆனால் எங்களுது வரி பணத்தில் உங்களுது ஈகோ யுத்தம் நடத்தாதிங்க ........இப்படி புலம்பும்பி கொண்டு இருப்பவன் வேறு யாரும் அல்ல... உங்களோடு ஒருவனாக இருக்கும் உங்களுள் ஒருவன் தான் ..........

Sunday, August 21, 2011

அம்மா வைத்த செக்மேட்......

நம்ம ஊர்ல ஒன்னுத்துக்கும் பயன்படாம....நடு ரோட்ல அனாதைய நிற்கும் ஒத்தை கட்டிடம்.... அது தாங்க நம்ம கருணாநிதி கஷ்ட பட்டு.... நமது வரி பணத்துல கட்டின புதிய பழைய சட்டமன்றத்துக்கு அம்மா வைத்து இருக்கும் புதிய செக்மேட்..... இந்த செய்தியை படித்த உடன் நான் சொன்னா வார்த்தை இது தான்.... திமுக விற்கு சரியான செக்மேட்....
.
அதாவது பயன்படுத்தாமல் இருக்கும் அந்த கட்டிடம்.... அந்த கட்டிடம் அப்படிய இருந்து விட்டால், ஒரு வேலை அடுத்த முறை திமுக வெற்றி பெற்று வந்தால், அந்த கட்டிடம் திரும்பவமும் சட்டமன்றம் அக்க படும்...... எனவ தான் என்ன செய்தால் இவர்களால் அந்த கட்டிடத்தை திருபவும் சட்டமன்றம் அக கூடாடு என்று 13 பேர் கொண்ட குழு கொண்டு அம்மா முதல் அமைச்சர் அன நாள் முதல் இருந்து யோசித்து எதுக்க பட்ட முடியவு தான் இது.........

இப்பொழுது நவீன வசதிகள் உடன் குடின மருத்வமனையாக மற்றபட உள்ளது பற்றி தான் நானும் சொல்லுகிறேன்... இப்பொழுது இதற்க்கு எதிராக திமுக வால் எந்த போராட்டமும் நடத்த முடியாது.... அப்படி நடத்தினால் உடனே மக்களுக்கு பயன் தர இருக்கும் ஒரு விசயத்தை எதிர்கிறார்கள் என்று இவர்கள் மீது குறை சொல்ல முடியும்.... சரி இப்பொழுது எந்த
போராட்டமும் நடத்த வேண்டாம் என்று இவர்கள் சும்மா இருந்தால்.... அந்த இடத்தில சட்டமன்றம் இருக்கும் வரை மட்டுமே கருணாந்தி பெயர் அந்த கட்டிடம் தில் இருக்கும்.... அது மருத்துவமனையாக மாறி விட்டால்... அங்கு கருணாநிதி பெயர் எங்கும் இருக்காது... மருத்வமனையாக மாற்றிய இதய கனி, கழக தெய்வம், என்று ஒரு பக்கத்திற்கு புகழ்ந்து அவருக்கு ஒரு கல்வெட்டு அல்ல... ஒரு அறை முழுவதும் எழுதி வைத்தாலும்... ஆச்சர்ய படுவதற்கு ஒன்றும் இல்லை....

திமுக என்ன செய்தலும் அவர்களுக்கு இந்த விசயத்தில் கேட்டபெயர் மட்டுமே மிஞ்சும் இந்த சட்டமன்றம் கட்டின பெயர் கருணாநிதி க்கு போகாது.... இதை மருத்வமனையாக மாற்றிய அம்மா க்கு தான்... அந்த பெயர்...

அனால் நான் ஒரு விசயம் கேட்க அசை படு கிறேன்.... கடந்த முறை உங்களது ஆட்சி காலத்தில் தான் தாங்கள் தற்பொழுது இருக்கும் சட்டமன்றம் மிகவும் பழையது ஆகி விட்டது என்னவே சகல வசதிகள் உடன் கூடிய ஒரு சட்டமன்றம் வேண்டும் என்று ராணி மேரி கல்லூரி ஐ இடித்து விட்டு அந்த இடத்தில ஒரு புதிய சட்டமன்றம் கட்ட வேண்டும் என்று ஒற்றை காலில் நின்றிர்கள்..... அந்த விசயத்தை என்னோ மறந்து விட்டிர்கள் போல இருக்கிறது.... சரி விடுங்கள் உங்களுகு தான் selective amnesia வச்சா... பிறகு எப்படி நியாபகம் இருக்கும்.....


இன்னொரு விசயத்தையும் நான் கேட்க வேண்டும் என்று நினைக்கிறன்.... அந்த கட்டிடம் சடமன்றதுக்கு என்று பார்த்து பார்த்து கடிய கட்டிடம்... இப்பொழுது அந்த கட்டிடம் மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்றால் வெளியுள்ள சுவரை மற்றும் வைத்து கொண்து மிதியை அனைத்தும் இடித்து விட்டு தான் அதை மருத்வமனையாக மாற்ற வேண்டும்....... அம்மா அவர்களே உங்களுது ஈகோ ஒரு பக்கம் இருக்கட்டும்.... நீங்கள் திரும்பவும் ஒரு புதிய சட்டமன்றம் கட்ட மாட்டிர்கள் என்பது என்ன நிச்சயம்..... அப்பொழுது இதை விட பொருட்டு செலவு செய்து கட்ட வேண்டும்... அதற்கு இதைய பயன் படுத்தி கொள்ளாமே???????



நீங்கள் தில்லியுள் உள்ளது போல் AIIMS போல் கட்ட வேண்டாம்.... சென்னையுள் ஒரு அதி நவீன மருத்துவமனை கட்டுவதற்க்கு பதில் அந்த பணத்தை தமிழகம் முழவதும் எராளமான அடிப்படை தேவை குட இல்லாமல் இருக்கும் மருத்துவமனை அதிகம்.... அது போன்ற மருத்துவமனைக்கு பிரித்து குடுத்தால் தமிழக மக்கள் மிகவும் சந்தோஷ படுவார்கள்... உண்மைலிய பயன் பெறுவார்கள்... உங்களை நன்றி சொல்லுவார்கள்......
எங்களது வரி பணம் மீது இவர்கள் ஈகோ யுத்தம் நடத்துவதை பார்த்து கொண்து இருக்க முடியாமல் உங்களிதம் புலம்பும் உங்களுள் ஒருவன்

Thursday, July 14, 2011

அம்மா வாழ்க..... என்று பாராட்டும் ராமதாஸ்....

பா.ம.கா. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் (இவர் உண்மையாகவே மருத்துவம் படித்தவர், மற்றவர்களை போல் காசு குடுத்து வாங்கியது அல்ல, ஆனால் இவர் ஒரு அரசியல் விபசாரி, நமக்கு அதுவா முக்கியம், matter க்கு வருவோம்) அம்மா வை இப்பொழுது பாராட்டு வதற்கு ஒரு காரணம் கிடைத்து விட்டது. அவரது பிரதான கொள்கை, கோரிக்கை, அரசியல் கோட்பாட்டு என்று எது பார்தாலும் அதில் இருப்பது புகையிலை ஒழிப்போம், குடியை தடை செய்வவோம் என்பது தான்.....

அவருக்கு இப்பொழுது அம்மாவை பாராட்டு வதற்கும், கொஞ்சம் சந்தர்ப்பம் கிடைத்தால் கட்சி மாறுவதற்கும் கிடைத்த சந்தர்பம் இது என்றால் அது மிகை அல்ல.....

ஏன் என்றால் இப்பொழுது அம்மா அறிவித்து இருக்கும் வரி சலுகைகள் அப்படி..... இது வரை வரி இல்லாமல் இருந்த புகையிலை, குட்கா, மட்கா, போதை பொருள், சாராயம், என்று எல்லா வரிற்கும் வரிகள் போட்டு தள்ளி இருக்கிறார், இவொலோ நாள் ஒரு gold filter Rs.4 என்று இருந்தது இபொழுது Rs.5 ஒரு kings Rs. 5 என்று இருந்தது இப்பொழுது Rs.6, இது வாது பரவால்லை ஒரு quarter ku 10 ரூபாய் வரி... இந்த வரி உயர்க்கும் ராமதாஸ், அம்மாவை பாராட்டு வதற்கும் என்ன இருக்கிறது என்று கேட்கிர்களா??? ......

இங்க தான் சார் மேட்டர் இருக்கு.... ஒரு சதாரண குடியானவன், ஒரு நாளைக்கு quarter 75, water packet, glass, முறுக்கு, உருகாய் என்று 100 ரூபாய்க்குள் முடித்து கொண்டு இருந்த ஒருவன், இந்த திடீர் வரி உயர்வால் ஒரு quatter ku Rs. 10 அதிகமாக குடுக்க வேண்டி இருக்கும், இந்த விலை உயர்வு இதோடு முடிந்து விடுவது அன்று..... சிகரட் க்கு 1 ரூபாய் sidedish அப்படி இப்படி என்று ஒரு 25 ரூபாய் என்று ஒரு நாளைக்கு அதிகமாக 30 ரூபாய் வரை அதிகமாக சிலவு செய்ய வேண்டும் என்று ஒரு 25 % மக்கள் இந்த கேட்ட பழக்க வழக்கத்தை விட வாய்ப்பு இருக்கிறது..... ஏன் நானே தம் அடிப்பதை நிறுத்தி விடலாம் என்று முடிவுக்கு வந்து இருக்கிறேன் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.....

இந்த வரி உயர்வு போதை பொருட்கள் ஒடு முடிந்து விட வில்லை, ஏலேக்ட்ரோனிக் சமாசாரம், மொபைல், என்று எல்லாத்துக்கும் பத்தில் இருந்து இருபத்து சதவிதம் வரை உயருந்து உள்ளது....

இது போன்ற விசயங்களுக்கு வரி உயர்வு போதிங்க.... வாழ்த்துக்கள்.... இன்னும் கொஞ்சம் கூட போட்டு கொள்ளுங்கள்.... சாராயத்துக்கு நூறு ரூவா கூட வரியா போட்டு கொங்க... யாரு வேணாமின்னு சொன்ன.... அப்படியே இந்த பெட்ரோல் மேல இருக்கிற வரிய மட்டும் குறைச்ச போதும்....

இதனால் அரசங்கத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்று திருபவமும் பழைய பல்லவி பாடினால் என்னக்கு கோவம் வந்து விடும், சொல்லிட்டேன்...... சும்மா ஒரு பேசுக்கு கேட்கிறேன்.... 2009 la ஒரு berral பெட்ரோல் $ 100 க்கு போச்சு அப்போ இந்தியாலே 50 ரூவா நு பெட்ரோல் வித்துச்சு... இப்போ பெட்ரோல் ஒரு barrel க்கு $ 90 க்கு தான் விற்பனை ஆகிறது..... நீ என்ன பண்ணனும் அங்க விலை குடினால் இங்க விலை ஏறுதுல அத மாதிரி அங்க விலை குறஞ்சா இங்கயும் விலையே குறைகுன்மா இல்லையா....... அனா இங்க இருக்கிற அரசாங்கம் நல்லா வரிய மட்டும் குடிகிட்ட போவிங்க.... அத மறைக்க இலவசம்னு சொல்லி அத மக்களுக்கே திரும்பி குடுபிங்க.... சரி அதுவது மக்களக்கு கரெக்ட் வருதானு பார்த்த அத இடையல் இருக்கும் அரசியல்வாதிகள் முக்கா வாசியை எடுத்து விட்டு மிச்சத்தை தான் மக்களக்கு வரும், அதவும் அடியுள் இருக்கும் கட்சி தொண்டன் எடுத்து கொல்லுவான், கடைசி பாமர மக்களுக்கு ஊஊஉ......
.


இத நம்ம சொன்ன நம்மள பைதியகாரன்னு சொல்லுவாங்க.... பொங்கட்ட போங்க..... நான் வேறு யாரும் அல்ல... உங்களோடு உங்களாக இருக்கும் உங்களுள் ஒருவன் தான்..... வரி சுமை