Showing posts with label தமிழ்நாடு. Show all posts
Showing posts with label தமிழ்நாடு. Show all posts

Wednesday, June 20, 2012

ஒரு குடிமகனின் புலம்பல்......


என் அருமை இந்திய குடிமகன்களே..... கோட்டர் க்கு வழி இல்லாமல் கட்டிங் காக கூட்டனி வைத்து இருக்கும் இந்திய குடிமகன்களே, மழையை காரணம் காட்டி ரம் அடிக்கும் நண்பர்களே.... வெயிலை காரணம் காட்டி பீர் அடிக்கும் தோழர்கேளே ஒரு வாட்டர் பாக்கெட்டில் கோட்டர் அடித்து தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் வாராமல் தடுக்கும் தமிழ்நாட்டு இன் தன்மான சிங்கங்களே.......
உங்களுக்கெல்லாம் ஒரு கெட்ட செய்தி...... ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு.... கடைசில பீர் விலையும், கோட்டர் விலையும் ஏத்திடாங்க..... இதுவரை பொறுமையாய் இருந்தது போதும்.. பீர் போல பொங்கி எழுவோம்....

பொங்கி எழுந்து என்ன பண்ணனும்னு கேட்கரீங்களா????? போறோம் மச்சி போறோம் ..... பாண்டிச்சேரி போறோம்...... நாலு பீர் அடிக்கிறோம்..... நாற்பது தடவே உச்சா போறோம்..... தலைலே துண்ட போட்டுகிட்டு பாடி பறந்த கிளின்னு பாட்டு பாடுறோம்.... அப்படியே final touch ஆளுக்கு ரெண்டு பீர் போடுறோம்.... அப்படியே கிளம்பி சென்னை வரோம்........
மொதல்ல பால் விலையை கூட்டுனிங்க சரி இது எல்லாம் வீட்ல சமையல் செய்து சாப்பிடரவங்க பிரச்ன்னை.... நாம்தான் கடைல account வச்சு குடிகிறவங்க தானே நமக்கு என்னனு விட்டாச்சு...... அப்புறமா பஸ் ல டிக்கெட் விலையே கூட்டுனிங்க சரி அது பஸ்ல டிக்கெட் எடுத்து போறவங்க பிரச்ன்னை நாம்தான் பஸ்ல டிக்கெட் எடுக்க போறது இல்லைய பிறகு என்னனு விட்டாச்சு.....பெட்ரோல் விலைய கூட்டுனிங்க அதுல்லாம் பைக்ல கார்ல போறன்வங்க பிரச்ன்னை நம்மதான் லிப்ட் கேட்டு போறவங்க தானா so நமக்கு எந்த problem ம்மு இல்லன்னு நினைச்சா வச்சான்ல ஆப்பு .......

இப்படி புலம்பும் பொது ஒரு புகழ் பெற்ற வரிகள் நியாபகத்துக்கு வருகிறது..... ஹிட்லரின் நாஜி காலத்து மார்ட்டின் நிமொல்லரின் கவிதையை நினைவுகூருங்கள். “முதலில் அவர்கள் கம்யூனிஸ்ட்களை ஒடுக்க வந்தார்கள். நான் எதுவும் சொல்லவில்லை ஏனென்றால் நான் கம்யூனிஸ்ட் இல்லை. அடுத்து அவர்கள் தொழிற்சங்கக்காரர்களை ஒடுக்க வந்தார்கள். நான் எதுவும் சொல்லவில்லை ஏனென்றால் நான் தொழிற்சங்கக்காரர் இல்லை. அடுத்து அவர்கள் யூதர்களை ஒடுக்க வந்தார்கள். நான் எதுவும் சொல்லவில்லை ஏனென்றால் நான் யூதர் இல்லை. அப்புறம் அவர்கள் என்னிடம் வந்தார்கள். எனக்காகப் பேச யாரும் மீதி இல்லை.”.
என்ன வாழ்கை டா இது???? எங்கல குடிகரானு சொல்லுற இந்த உலகம்..... இந்த உலகம் எல்லாம் சேர்ந்து இந்த குடிகரானுகளே ஏமாத்துரானுங்க ஒரு கோட்டர் நா ஒரு லிட்டர் ல நாலுல ஒரு பங்கு.. அப்படினா 250 ml இருக்கனும்... அனா ஒரு கோட்டர் ல 180ml தான் இருக்கு.... சொல்லுங்க ‍‌மக்கேளே யாரு யார ஏமாத்துற?????

மாண்புமிகு அம்மா அவர்கள...... பால் விலை, மின்சாரம், பஸ் கட்டணம் உயர்த்தும் பொது தொலைகட்சியுள் வந்த சோகமாய் முகத்தை வைத்து கொண்டு.... நான் யாரிடம் போவேன்.... தமிழ்நாட்டு மக்களாகிய உங்களிடம் தான் நான் வர முடியும்... பொதுத்துறை நிறுவனகள் அனைத்தும் நஷ்டத்தில் இயங்கும் பொது விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று என்று கூரினர்கள்..... இப்பொழுது நான் ஒன்று கேட்கிறேன்... எந்த டாஸ்மாக் நஷ்டத்தில் போகுதுங்கோ??? கொஞ்சம் சொல்லுங்க.... எங்கள் சக குடிமகன்களை அந்த டாஸ்மாக்கு அனுப்பி வைத்து.... நஷ்டம் ஏற்படாமல் பார்த்து கொள்ளுர்கிறோம்......
தமிழ்நாட்டு ஏன் இந்தியாவில அதிகாமாக லாபம் சம்பாதிக்கும் ஒரே தொழில் நம்ம டாஸ்மாக் தான்.... இங்கயும் விலையேற்றம் தாங்க முடியலைங்க............ இப்படி உங்களிடம் புலம்பி கொண்டு இருப்பவன் ஒரு சாதாரண உங்களில் ஒரு குடிமகன்......
பீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்.

Monday, March 21, 2011

எழைகள் உள்ளவரை இலவசங்கள் தொடருமா??? இல்லை இலவசங்கள் தொடரும் வரை எழைகள் இருபார்களா?????

தமிழ்நாடு என்ன இந்தியாவே இவர்கள் கையில் இருந்தால் கண்டிப்பாக ஏழைகளாக தான் இருப்பார்கள்.

பிறகு என்ன மக்களுக்கு இவர்கள் நல்லது செய்கிறன் என்று எல்லாதையும் இவர்கள் விட்டிற்கு கொண்டு சென்றார்கள் என்றால் பிறகு மக்கள் எப்படி சுபிட்சம் அடைவார்கள், மக்கள் நலம் பெருகிரகளோ யிலையோ...இவர்களுக்கு கோடி க்கு மேல் கோடி சேர்த்து கோடிஸ்வரர்கள் அகிகொன்டட தான் இருக்கிறார்கள்.....


எதோ ஒரு படத்தில் ரஜினி சொன்னா மாதிரி.... இவர்களுக்கு வேலை வெட்டி குடுத்தால் சேலை வேஷ்டி க்கு கை ஏந்தி நிற்க வேண்டியது இல்லை, ஐயா தமிழர்கள் உலகத்திற்கு மானம்,மரியாதையை சொல்லி குடுத்தவர்கள்.... இவர்களை மானம் மரியாதையை மறக்க வைத்து இலவசங்களுக்கு (பிச்சை) க்கு கை ஏந்தி நிற்க வைப்பதில் உங்களுக்கு என்ன அவொலோ சந்தோசம்.....

சிறிது நாள்களுக்கு முன்னால் நீங்கள் தான் தமிழகத்தில் படித்தல் மட்டும் போதாது... பகுத்தறிவோடு நடக்க வேண்டும் என்று சொன்னிர்கள்.... இப்பொழுது எப்படி ஐயா எங்கள் தன்மானத்தோடு விளையாட வருகிரிகள்.... எப்படி நீங்கள் எங்களுகு இலவசம் என்று கூறினால் நங்கள் பல்லை காட்டி கொண்டு நீங்கள் போடும் எச்சி துண்டுக்கு வால் அட்டி கொண்டு வந்து விடுவோம் என்று நினைதிர்களா??????

எங்களூக்கு நீங்கள் செய்த துரோகங்களை எப்படி ஐயா மறக்க முடியும்.... நீங்கள் அம்மையார் சோனியாவின் கரங்களை இறுக்கமாக பற்றி கொண்டு... எங்கள் சொந்தங்களை எங்களுது வரி பணம் கொண்டே அழித்ததை எங்களால் எப்படி ஐயா மறக்க முடியும்.....


அந்த நேரத்தில் நீங்கள் அடிய கபட நாடங்கள் என்ன கொஞ்சமா நஞ்சமா..... கொட்டும் மலையில் மனித சங்கலி போராட்டம், உலக வரலாறு லிய முதல் முறையாக காலை உணவிற்கு பின், மதிய உணவிற்கு முன் நடந்த உண்ணாவிரத போராட்டம், அதன் பின் இலங்கயில் இருந்து போர் நிறுத்த அறிக்கை, பின்பு உங்களை வாழ்த்த தயாராக இருந்த பதாதைகள்.... இதற்கு பின் 3 நாட்களில் ஈழத்தில் பல ஆயிர கணக்கில் படுகொலைகளுடன் ஈழ போர் இனித முடிவு அடைந்தது..... தலைய போகும் அவசர காலத்திலும் கூட கடிதம் எழுதுவதையும், தந்தி குடுபத்தையும், மறக்காத நீங்கள், உங்கள் குடும்ப அரசியலுக்காக, மந்திரி பதிவி உங்கள் மகனுக்கு ஒன்று, மருமகனுக்கு ஒன்று, பேரனுக்கு ஒன்று கேட்க மட்டும் டெல்லி க்கு சென்று சாதனை படைத்தவர் அல்லவா நீங்கள்......


எப்படி ஐயா மறக்க முடியும் உங்களுதது சாதனைகளை.......... முத்துகுமரன் வயறு வலியால் இறந்திருப்பான் என்று அவனது மரணத்தை பற்றி பெசியவர்தானே நீங்கள்..... அவனின் மரண சாசனத்தை படித்த பின்பு எந்த தன்மானம் உள்ள தமிழனும் அவாறு கூறி இருக்க முடியாது... தமிழினத்தைய அளித்த பிறகு மொழிக்கு விழா எடுத்த உன்னத தலைவர் அல்லவா நீங்கள்.....

இப்பொழுது தேர்தல் அறிக்கை என்ற பெயரில் இலவசங்கள் குடுத்து தான் செய்த தப்புகளை மறைக்க பார்க்கிறார்.... அன்பார்ந்த தமிழ்நாட்டு வாக்காளர் பெருமக்களே..... இந்த முறை உங்களுது வாக்கை சரியாக பயன்படுத்துங்கள், தமிழினத்தை அளித்த காங்கிரஸ் கும், அதற்கு அடிவருடியாக இருந்த திமுக விற்கும் சரியான படம் புகுத்துங்கள்.......

நான் இந்த பதிவு எழுத ஆரம்பித்த பொது திமுகவின் இலவச தேர்தல் அறிக்கை பற்றிதான் நினைத்தேன்.. அனால் எழுத ஆரம்பித்த உடன் என்னது மனகுமரல்களை நிறுத்த முடியவில்லை ...... அடுத்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்....

இப்படி மனகுமரல்களை கொட்டி கொண்டு இருக்கும் நான் வேறு யாரும் இல்லை, உங்களுள் ஒருவனாக இருந்து சக இன்ப துன்பகளை சகித்து கொண்டு போகும் சாதாரண சாமானியனாக இருக்கும் உங்களுள் ஒருவன்