Showing posts with label லஞ்சம். Show all posts
Showing posts with label லஞ்சம். Show all posts

Tuesday, February 22, 2011

வரபோகும் தேர்தலும், தமிழகதில் அரங்கேற காத்திருக்கும் அதிசியமும்.........

என்ன டா அதிசியம்னு சொல்லுரானே திரும்பவும் பிளையார் பால் குடிக்க போறாரோ... இல்லை கண்ணாடியில் மாதா உருவம் தெரிய போகுதோ என்று நினைக்க வேண்டாம்...... இதற்கு எல்லாம் எப்போதும் மௌவசு உண்டு....... சாமியார்க்கு பக்தர்கள் கூட்டம் குறைந்தாலோ அல்லது கல்லா பெட்டியில் காசு குறைந்தாலோ இது போன்ற அதிசியங்கள் நடைபெற்று விடும்....

ஏன் என்றால் ஏமாறுகிறவன் இருக்கும் வரை எமாற்றுவர்களும் இருக்க தான் செய்வார்கள்...... நமது மக்கள் தான் கடவுள் பெயரால் எதை சொன்னாலும் நம்புவர்கள், எதை குடுத்தாலும் அதை பிரசாதமாக எடுத்து கொண்டு...... கடவுள் க்கு காணிக்கை ரூபாயில் குடுத்தவர்கள்.... இப்பொழுது ஆயரதிலும் லட்சதிலும் காணிக்கை குடுகிரங்க.... ஆனால் கஷ்டத்தில் இருக்கும் பிச்சைகாரனுக்கு ஏனோ ஒரு ரூபாய் பிச்சை போட யோசிகிறாக்கள்...... இவர்களை விட கடவுள் கஷ்டத்தில் இருகிரரோ என்னமோ.... யாருக்கு தெரியும் ????

சரி சரி அட்டைய கவனி அட்டையை கவனி.... நா பேச ஆரம்பிச்ச பேசிகிட்டே இருப்பேன்....

ஏன் கண் முன் நடந்த அதிசிய (அசிங்க) சம்பவம்......

  1. இடம்: கிண்டி காவல் நிலையம் அருகில் இருக்கும் பேருந்து நிலையம்.......
    தாம்பரம், போரூர் இல் இருந்து உயர் நிதிமன்றம், தி. நகர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் நிற்கும் இடம்..... இயற்கையாகவ மரங்கள் வளர்ந்து பயணிகளுக்கு எப்பொழுதும் நிழல் தரும்....
    ஆனால் இப்பொழுது தேர்தல் வரபோகிறது... என்னவே மக்களுக்கு இப்பொழுது எதாவது செய்தல் தான் வோட்டு வாங்க முடியும், இங்கு தமிழகத்தில் அரசியல்வாதி க்கு.... செலெக்டிவ் அம்னேசிய என்றால் தமிழக மக்களுக்கு short term memory loss ... இந்த 4 1/2 ஆண்டுகளில் மக்களக்கு ஒன்றும் செய்யாமல் இப்பொழுது செய்தால் தான் மக்கள் மனதில் இருக்கும் அதை வைத்து வாக்கு வாங்கி விடலாம்..

    அதனால் கிண்டி பேருந்து நிலையத்தில் இவ்வள்ளவு நாளாக மக்களக்கு இயற்கையாக நிழல் தந்த மரங்களை வெட்டி விட்டு அந்த இடத்தில செயற்கை நிழற் குடை அமைக்கிறார் சென்னை மேயர்....

    அரசாங்கமோ மரங்களை வளர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள், highways இல் ஒரு மரம் இருந்தால் பாதையை மாற்றி அமைகிறார்கள்.... ஆனால் இங்கோ இருக்கும் மரத்தை வெட்டிவிட்டு அங்கு செயற்கை நிழற் குடை அமைகிறார்கள்...... என்ன ஒரு புத்திசாலிதனம்...... இதை நினைகையில் எனக்கு அப்படியே புல் அறிகிறது போங்கள்..............

    இதில் இன்னொரு லாபம்மும் இருக்கிறது இப்படி எதாவது சொல்லி பணம் எவ்ளோ கேட்டாலும் உடனே குடுத்து விடுவார்கள்..... அதில் அவர்கள் எவ்வொலோ ஊழல் செய்தாலும் மேலிடம் கேட்காது..... அவர்களும் அதில் ஒரு பணம் பார்த்து கொள்ளலாம்..... யாரும் கேட்க மாட்டார்கள்..... ஆனால் ஆட்சி மாறினால் அடுத்து வருபவன் கேட்பான்... அதை பிறகு பார்த்து கொள்ளள்ளலாம்,

    அய்யா நீ ஊழல் செய், செய்யாத, ஆனா நல்லா இருக்கிற மரத்தை வேட்டாதிங்க....... சரி வெட்டினது தான் வேட்டிடிங்க..... அங்க செயற்கை நிழற் குடையாது அமைக்க வேண்டியது தானா??? பாதி கட்டி பாதி கட்டாமல் ஆனால் பெயர் பலகை மட்டும் பெரியதாக வைத்து விடுவார்கள்.......

  2. அடுத்த 6 மாதங்களில் சாக போகும் மீனவர்கள் ஹீரோக்கள் அக்கபடுவர்கள், நேற்று அரசயல் கட்சி ஆரம்பித்தவன் முதல் இறந்து போன மீனவன் விட்டிற்கு சென்று நஷ்ட இடு, அரசாங்கத்தில் வேலை, வெகுமானம், போராட்டம், சாலை மறியல் எல்லாம் நடக்கும், ஆனால் 2 மாதங்களுக்கு முன் இறந்தவாங்கு இரங்கல் செய்தி குட சொல்லி இருக்க மாட்டார்கள், ஆனால் இப்பொழுது அது அரசியல்...
  3. ராஜா கைது... ஐயா காங்கிரஸ், என்ன சொல்லவரிங்க நீங்க உத்தமபுத்திரன், லஞ்சம், ஊழல், இல்லாத அரசு திமுக தான் இந்த ஊலல்கு காரணம், உங்களுக்கும் அவர்களுக்கும் இந்த ஊழலில் எந்த வித சம்பதமமும் இல்லை என்று சொல்லுரிங்கிகளா??? போங்க சார் போங்க.. நாங்க உங்களை மாதிரி நிறைய பெர பார்த்து விட்டோம்...........
  4. இந்த 6 மாதங்களுக்கு எந்த மீனவனும் இலங்கை படையால் கொலை செய்ய படமாடான்.... அப்படி கொலை செய்ய பட்டால் அல்லது கைது செய்தால் இங்கு போராட்டம் வெடிக்கும், அதவும் அரசியல் கனவு உள்ள அனைவரும் வருவார்கள், இதிலும் வேடிக்கை என்ன வென்றால் கைது செய்ய பட்டவர்களுக்கா இவர்களே போராட்டம் நடத்தி, இவர்களை இவர்களே கைதும் செய்து கொள்வார்கள்.... அதன் பிறகு இலங்கை அந்த மீனவர்களை விடுதலை செய்யும், ஆனால் தேர்தல் முடிந்த பிறகு கொத்து கொத்தாக கொன்று விடுவார்கள்.... ஆனால் அப்பொழுது ஒரு அரசியல் நாயும் வாய் திறக்காது........
    ஏன் என்றால் அவர்களக்கு தேர்தல் முடிந்து விட்டது... இந்த வக்கு இல்லாத வாக்கலர்களால் ஒன்றும் அக போவது இல்லை....
  5. இனி பழைய பாலங்கள், சாலைகள், எல்லாம் சீர் செய்ய படும், மண் சாலை, சிமெண்ட் அல்லது தார் சாலை அக படும்,
    மின்சாரம் தடை இல்லாமல் கிடைக்கும், தபால் துறை, மின்வாரியம், தண்ணீர் எல்லாம் நேரதுக்கு வந்து சேரும், கிட்டதிட்ட சொல்ல போனால் இன்னும் ஆறு மாதங்களுக்கு தமிழ் நாடு சும்மா சொலிக்கும்......
இது அதிசியங்களின் ஒரு பகுதி தான் ரஜினி ஸ்டைல்-ல சொன்னால் கண்ணா இது வெறும் trailor தமா..... main picture பார்த்தே.............. சும்மா அதிருதில்ல?????

இனிமேல் புதிது புதுதாக புது பாலம், பேருந்து நிலையம், பேருந்து நிறுத்தம், மேம்பாலம், தண்ணீர் தொட்டி....... இலவச கலர் டிவி.... செல்போன், காப்பிட்டு திட்டம், வீடு கட்டி தரும் திட்டம், இன்னும் கொஞ்சம் விட்டால் விட்டில் இருந்த படிய வோட்டு போடும் முறை என்று எல்லாம் வரும்......

மக்களே விழித்து கொள்ளுங்கள்..... உங்கள் வோட்டு யாருக்கு என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.... உங்கள் வாக்கு ஒரு புதிய தமிழகத்தை உருவாக்கட்டும்.......
திமுக வையும் காங்கிரஸ் ஐயும் தமிழகதில் இருந்து வேரறுப்போம்..............
நான் வேறு யாரும் இல்லை............. உங்களில் ஒருவன் தான்.............

Monday, February 07, 2011

திருப்பி அடிப்பேன்! - சீமான் பாகம் 16

ஆ.ராசா கைது... அடேங்கப்பா... தன் மீதான ஊழல் கறையைக் கழுவ காங்கிரஸ் எவ்வளவு நியாய உணர்வோடு எடுத்திருக்கும் நடவடிக்கை இது?! லஞ்ச ஊழலை ஒழிப்பதையே பிறவிப் பெரும் கனவாகக்கொண்ட காங்கிரஸ் அரசு அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த தவறுகளுக்காகக் கொதித்து எழுந்து ஆ.ராசாவைக் கைது செய்திருக்கிறது

சரி... கைது நடவடிக்கை பாய்ந்த கண நேரத்திலேயே, 'காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியில் எவ்விதப் பாதிப்பும் இல்லை. கூட்டணி உறுதியாகத் தொடர்​கிறது!’ என அறிவிக்கிறது அதே காங்கிரஸ் கட்சி. நாடகம் இயற்றுவதில் கலைஞர் பெருமகனார் கை தேர்ந்தவர். அவருக்கே நாடகம் நடத்திக் காட்டுகிறது காங்கிரஸ் கட்சி. இறுகிய பிடிக்குள் ராசாவை வைத்துக்​கொண்டு, 'எத்தனை ஸீட்?’ எனக் கேட்கும் காங்கிரஸின் தந்திரம், கலைஞர் பெருமகனாரைத் தத்தளிக்கவைத்து இருக்கிறது. காலம் திரும்புகிறது எனச் சொன்னேனே தம்பிகளே... அது இதுதான்!
ஈழத்துப் படுகொலைகள் இரக்கமற்று நடத்தப்பட்டபோது, 'கலைஞர் அய்யா காப்பாற்றுங்கள்... உங்கள் மந்திரிகளின் பதவிகளை உதறச் சொல்லியாவது, நம் உறவுகளைக் காப்பாற்றுங்கள்...’ எனக் கண்ணீரும் கம்பலையுமாக நாம் கதறிக்கிடந்ததை ஒருகணம் நினைவுக்குக் கொண்டுவாருங்கள் உறவுகளே... காங்கிரஸ் தலைமைக்குத் தவறியும் நெருக்கடியை உண்டாக்கிவிடக் கூடாது என நினைத்து - ஈழ ஆர்வப் போராட்டங்களின் வீரியத்தை அணைத்து, அத்தனையையும் முடக்கிப்போட்ட முதல்வர் பெருமகனார், இன்றைக்கு தலைநகர் நெருக்கடியால் தடுமாறிக்கிடக்கிறார். நம் குலையறுத்தபோது காங்கிரஸின் முகத்தைக் கண்டு​கொள்ளாமல் இருந்தவர், இன்றைக்கு நிலை வெறுத்துத் தவிக்கிறார்.
சுதந்திர இந்தியாவில் அரை நூற்றாண்டு காலத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சி என்றைக்குமே தமிழகத்துக்கு எதிராகத்தான் இருந்தது. காங்கிரஸை அடியோடு வீழ்த்தி அரசியல் புரட்சியை அரங்கேற்றிய தி.மு.க., இன்றைக்கு காங்கிரஸால் சிறுகச் சிறுக வீழ்த்தப்படுகிறது. இனத்துக்குத் துரோகம் செய்தவர்கள் தங்களின் குணத்துக்குக் குட்டு வாங்கும் நேரம் இது. ஆனாலும், நாடக முடிவில் நல்லதொரு தீர்வுக்கு இரு கட்சிகளும் தயாராகி தமிழகக் களத்தை நோக்கி வந்துவிடுவார்கள். கை கோத்துப் போட்டியிடுவார்கள். கை குலுக்கிப் பிரசாரம் செய்வார்கள். கபட நாடகங்களை அரங்கேற்றுவதில் காங்கிரஸ் கட்சி எந்த அளவுக்கு முன்னேறிவிட்டது என்பதற்கு ராசா கைது ஓர் உதாரணம்தான்!
அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலில் ஆ.ராசாவை வளைத்தவர்கள் ஆதர்ஷ் ஊழல் செய்த அசோக் சவானை அப்படியே விட்டுவிட்டார்களே... காமன் வெல்த் ஊழல்வாதிகளின் மேல் கைது நடவடிக்கைகள் பாயவில்லையே... அது என்ன, ஆ.ராசாவுக்கு ஒரு நியாயம்... அசோக் சவானுக்கும் கல்​மாடிக்கும் ஒரு நியாயம்? கேழ்வரகில் நெய் வடியும் கேலிக் கூத்துகளை எல்லாம் நாங்கள் ஏற்கெனவே கண்டிருக்கிறோம் காங்கிரஸ்காரர்களே...
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பெரியவர் மொரார்ஜி தேசாயும் இந்திரா காந்தி அம்மையாரும் போட்டியிட்ட நேரம். இருவரில் பெருந்தலைவர் காமராஜர் யாரைக் கை காட்டுகிறாரோ... அவருக்கே தலைவராகும் தகுதி என்கிற நிலை. 'இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதில் நீங்களே தலைவராகிவிடலாமே...’ என சிலர் அக்கறையோடு காமராஜரிடம் சொல்லி இருக்கிறார்கள். அதற்கு அவர் சொன்ன பதில்... 'நான் சொன்னா ஜெயிக்கவைப்பாங்க... நின்னா ஜெயிக்கவைக்க மாட்டாங்க...!’ இந்தியத் தேசியம், தமிழன் என்றால் தள்ளிவைத்துத்தான் பார்க்கும் என்பதை அப்போதே பெருந்தலைவர் சூசகமாக சுட்டிக்காட்டியதை இன்றைய காங்கிரஸ்காரர்கள் மறுக்க முடியுமா?
காவிரியில் நமக்கு இருக்கும் உரிமைகளை வலியுறுத்தி, கர்நாடகாவை எதிர்க்கிற தகுதி தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் எவருக்காவது இருக்கிறதா? முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரள அரசின் அட்டூழியங்களைச் சுட்டிக்காட்டி மத்திய அரசின் உச்சியை உலுக்கும் சக்தி தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு இல்லாமல் போனது ஏன்? காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் நியாயத்துக்குத் தலை வணங்கினால் அடுத்த முறையும் கர்நாடகத்தில் வெற்றிபெற முடியாது என்கிற அச்சம்தானே காங்கிரஸை வாய் மூடவைக்கிறது. முல்லை பெரியாறு விவகாரத்தில் மூச்சுவிட்டால், கேரளத்தின் காங்கிரஸ் தலைவர்களே கைகோத்து அந்தக் கட்சிக்கு எதிராகத் திரளுவார்கள் என்பதால்தானே, தமிழகம் திட்டமிட்டுத் தட்டிவைக்கப்படுகிறது?
பக்கத்து மாநிலங்​களுக்குப் பயந்து நீர் ஆதார விவகாரங்களில் அமைதியாக இருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள், சிங்கள ராணுவத்தால் சுடப்பட்ட மீனவர்களின் வீட்டுக்குக்கூடப் போகாதது ஏன்? சுடப்பட்டும், சுருக்குக் கயிறு வீசப்பட்டும் எங்கள் மீனவர்கள் கொல்லப்படுவதற்கு நியாயம் கேட்டால், நிரூபமா ராவை அனுப்பி ராஜபக்ஷேவிடம் கோரிக்கைவைக்கிறது காங்கிரஸ் கட்சி. கொலைகாரர்களிடம் கோரிக்கைவைக்கிற அளவுக்குப் பலகீனமாக இருக்கிறதா இந்தப் பாரதத் திருநாடு?
நிர்வாக ரீதியிலும் இந்தியாவை ஏழை நாடாகவே நீடிக்கவைத்திருக்கும் புண்ணியமும் காங்கிரஸ் கட்சியையே சாரும். விவசாயிகளின் தற்கொலைகள் இந்த தேசத்தையே உலுக்குகின்றன. பட்டினிக்குப் பயந்து தற்கொலை செய்துகொள்ளும் ஒரு விவசாயியைப் பற்றி நடிகர் அமீர்கான் 'பீப்ளி லைவ்’ என்கிற படத்தை எடுக்கிறார். பாரதப் பிரதமர் மன்மோகன் அவர்கள் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டுச் சொல்கிறார்... 'நைஸ் ஃபிலிம்!’ தன் ஆட்சியில் நடக்கும் தாங்க முடியா வேதனையைப் பொட்டில் அடித்தாற்போல் புரியவைத்த அந்தக் கலைஞனிடம் கண்ணீரை உகுத்து இருக்கவேண்டிய பிரதம மந்திரியின் பேச்சைப் பார்த்தீர்களா?
இந்த ஆட்சியில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலைக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்கிற வேதனை காங்கிரஸ் அரசை வெட்கப்படுத்தவில்லையா? '40 சதவிகிதத்துக்கும் மேலானவர்கள் ஒருவேளை உணவுக்குக்கூட வழி இல்லாமல் தவிக்கிறார்கள்’ என்பதை இந்த அரசாங்கமே அறிக்கையாக வெளியிடுகிறதே... நாளைய வல்லரசின் இன்றைய லட்சணமா இது? அதே நேரம் பல்லாயிரம் டன் எடையிலான உணவுப் பொருட்கள் சேமிப்புக் கிடங்கில் மண்ணோடு மண்ணாக மட்கிக்கிடக்கிற கோலத்தை எங்கே போய்ச் சொல்வது?
அது குறித்த ஆதங்கத்தை நீதிமன்றம் எழுப்பியபோது, 'அரசு நிர்வாகத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது!’ என அறிவிக்கிறார்கள். அய்யா அறிவார்ந்த பெருமக்களே... எலிகளுக்குக் கொடுக்கும் உணவை ஏழைகளுக்குக் கொடுக்கக் கூடாது என்பதுதானே உங்களின் மக்கள் நல மகத்துவம்?
பாபர் மசூதி இடிப்புக்கு பாரதிய ஜனதா கட்சிதான் காரணம் என இன்று வரை இடித்துரைக்கிறது காங்​கிரஸ் கட்சி. பாரதிய ஜனதா கட்சியினர் அதனை இடிக்கும்வரை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தது இதே காங்கிரஸ் கட்சிதானே... கடப்பாறையும் கம்பியுமாய் வந்தவர்​களைத் தடுக்க சக்தியற்றுப்​போய், டிசம்பர் - 6-ம் தேதியை இந்தியாவின் கறுப்பு தினமாக அறிவிக்கவைத்த அவலத்துக்கு இதே காங்கிரஸ்தானே காரணம்.
மகாத்மா காந்தியடிகளைக் காணச் சென்ற தந்தை பெரியார், 'அய்யா, நம் தேசியக் கொடியும் காங்கிரஸ் கட்சிக் கொடியும் ஒரே மாதிரி இருக்கிறது. இதனால், காங்கிரஸ் கட்சிதான் நாட்டுக்குச் சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தது என்கிற குழப்பம் உண்டாகி, மக்கள் அதற்கே வாக்களிப்பார்கள். இது சர்வாதிகார நிலையை உண்டாக்கிவிடும்!’ எனச் சொல்லி இருக்கிறார். அத்தகைய அபாயம் புரிந்து மகாத்மாவும் காங்கிரஸை உடனடியாகக் கலைக்கச் சொல்லி இருக்கிறார். ஆனால், நேரு அதை மறுக்க... பெரியார் உரைத்தபடியே உச்சபட்ச சர்வாதிகார சக்தியாய் இன்றைக்கு காங்கிரஸ் பெருத்து நிற்கிறது.
கைராட்டையைச் சுமந்த காங்கிரஸ் கொடி இன்றைக்கு 'கை’யையும் சோனியாவின் முகத்தையும் சுமந்து பறக்கிறது. இந்திரா காங்கிரஸை உருவாக்கிய இந்திரா காந்தியின் படம்கூட அந்தக் கட்சியின் கொடியில் இல்லை. அப்பனை மறந்த அற்பர் கூட்டம்தான் இன்றைய காங்கிரஸை வளர்த்து வருகிறது. இந்திரா நேருவாக இருந்தவர் பெரோஸ் காந்தியை மணந்ததால்தான் இந்திரா காந்தி என்றானார். இன்றைக்கு நேரு, இந்திரா, ராஜீவ் உள்ளிட்டவர்களின் நினைவு தினங்களை மறக்காமல் அனுசரிப்பவர்கள் பெரோஸ் காந்தியைப் பற்றி மறந்தும் பேசுவதில்லையே... அது ஏன்?
இன்றைக்கு ராகுல் காந்தியைக்கூட மகாத்மா காந்தியின் பாரம்பரிய வாரிசாக கடைக்கோடி மக்கள் நினைக்கிறார்களே... அந்த நினைப்பை விதைப்பதற்காகவே பெயர் முழுக்க காந்தியை சுமந்து வலம் வருபவர்கள், பெரோஸ் காந்தியின் நினைவிடத்துக்கு செல்லாமல் புறக்கணிப்பது ஏனய்யா?
சில உள்ளீடான கேள்விகளுக்கு காங்கிரஸ் தலைவர்​களிடம் உரிய பதில் இருக்கிறதா? அதெல்லாம் ஏன்... இந்திரா காந்தியின் படத்தையும் சோனியா காந்தியின் படத்தையும் சரிக்குச் சமமாக அச்சிட காங்கிரஸ் தலைவர்களுக்குத் தைரியம் இருக்கிறதா? அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பெரிய அளவு தொகை சோனியா காந்தியின் சகோதரிக்கு வழங்கப்பட்டதாக சுப்பிரமணியன் சுவாமி பகிரங்கமாகக் குற்றம் சாட்டினாரே... அதற்கு இதுவரை மறுப்போ விளக்கமோ வெளிவராதது ஏன்?
நாளைய பிரதமராக தூக்கிவைத்துக் கொண்டாடப்படும் ராகுல் காந்தியிடம் காவிரி விவகாரம் குறித்துக் கேள்வி எழுப்பப்பட... 'நோ காவிரி... நோ இஷ்யூ...’ எனப் பதில் சொல்லி இருக்கிறார். அதைக் கேட்கிறபோது எங்களுக்கும் இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது. 'நோ காங்கிரஸ்... நோ ஓட்ஸ்!’
இன்றைக்கு இந்த அளவுக்கு காங்கிரஸை கருவறுக்கத் துடிக்கிறேன் என்றால், அதற்குக் காரணமே தமிழனின் கோபம் எப்படி இருக்கும் என்பதைப் புரிய வைக்கத்தான்! இந்திரா காந்தி இறந்தபோது மூன்று நாட்கள் முழுப் பட்டினியாய் கிடந்து அழுதவன் நான். என் தாத்தா பாட்டியின் சோகம்கூட என்னை அந்த அளவுக்குத் தாக்கியது இல்லை. அத்தகையப் பற்றாளன்தான் இன்றைக்கு அடிபட்ட புலியாகக் கிளம்புகிறேன். என்னை எதிர்கொள்ளும் சக்தி அந்த இறுமாப்புக்காரர்களுக்கு இருக்கிறதா என்பதைத் தேர்தல் களத்தில் பார்ப்போம்!
இன்றைய நெருக்கடிக்காக நிலைகுலைந்​திருக்கும் அய்யா முதல்​வரே... காஞ்சிபுரத்தில் தோற்றுப்​போன​போது அறிஞர் அண்ணா வார்த்தைகளையே உங்களிடம் சொல்கிறேன்...
'ஒரு நெசவாளியைக் கண்டேன்.அவர், 'நான் நீண்ட காலம் காங்கிரஸில் இருப்பவன். அதனால், நான் எப்படி உங்களுக்கு மாற்றிப் போட முடியும்?’ எனக் கேட்டார். 'காங்கிரஸே மாறிவிட்டதே... கொள்கையில், குணத்தில், கண்டவர்களும் சேர்ந்து காங்கிரஸைக் கெடுத்துவிட்டார்களே... கெட்டுப்போன பிறகும் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க முடியும் என்கிறீர்களே... அது நியாயமா?’ எனக் கேட்டேன்!’

அதே வார்த்தைகளை நானும் கேட்கிறேன் அய்யா... கெட்டுப்போன பின்பும் ஏனய்யா காங்கிரஸைக் கெட்டியாகப் பிடித்து இருக்கிறீர்கள். கை தூக்கிவிட்ட பெருந்தலைவர் காமராஜரையே கைது செய்யச்சொல்லி ஆணையிட்டார் இந்திரா காந்தி. 'முடிந்தால், காமராஜர் மீது கை வைத்துப்பார்’ என சபதம் போட்டீர்கள் அன்றைய தமிழக முதல்வராக இருந்த நீங்கள். இந்திரா காந்தியையே இடியாய் குலுக்கிய நீங்கள், சோனியா காந்தியிடம் சுருண்டுபோனது ஏனய்யா?
உங்களின் தலைகீழ் மாற்றத்தைக் காணச்சகிக்​காதவனாகச் சொல்கிறேன்... எதிர்த்தவர்களையே வரலாறு வணங்கும்... உதிர்த்தவர்களை உதிர்த்துவிடும்!


திருப்பி அடிப்பேன் தொடரும்


பாகம் 15
பாகம் 14
பாகம் 13
பாகம் 12
பாகம் 11
பாகம் 10
பாகம் 9
பாகம் 8
பாகம் 7
பாகம் 6
பாகம் 5
பாகம் 4
பாகம் 3
பாகம் 2
பாகம் 1

Friday, January 28, 2011

திருப்பி அடிப்பேன் - பாகம் 13




''என் தேசத்தை நாசமாக்கிய ஒரே சொல்... இலவசம்!'' - குன்றக்குடி அடிகளார் ....ஆனால், 'ஏழைகள் இருக்கும் வரை இலவசங்கள் தொடரும்!’ என்கிறார் தன்மானத் தமிழர்களைக்
காக்கப் பிறந்த தலைவர் கருணாநிதி. இலவசங்கள் தொடரும் வரை ஏழைகள் தொடருவார்கள் என்கிற பேருண்மை அந்தப் பெரியவருக்குத் தெரியாதுபோலும்.

''பசியில் வாடுபவனுக்கு மீனைக் கொடுக்காதே... மீன் பிடிக்கக் கற்றுக்கொடு!'' என்கிற மேலை நாட்டுப் பொன்மொழி இந்த ஏழை நாட்டுத் தலைவர்களுக்கு ஏன் புரியாமல்போனதோ?
தொலைக்காட்சி இலவசம், உடுப்பு இலவசம், அடுப்பு இலவசம் என அனுதினமும் ஓர் அறிவிப்பை வெளியிட்டு, கையேந்தும் பெரு​மக்களை பெருக்கிக்கொண்டே போ​கிறது இந்த அரசாங்கம்.
65 ஆண்டு கால சுதந்திரத்தில், 45 ஆண்டுகள் இந்தத் தாய்த் தமிழகத்தை திராவிட இயக்கங்கள் ஆண்டிருக்​கின்றன. இன்றைக்கு இலவ​சத்தை மகத்தான திட்டமாக வாய் வலிக்​கச் சொல்பவர்கள், இத்தனை காலங்கள் ஆண்டும் என் மக்களைக் கையேந்த​வைத்த கயமைக்குப் பொறுப்பு ஏற்பார்களா?

கலைஞரின் 'இளைஞன்’ படம் தமிழ்த் திரையுலகத்தின் புரட்சியாய், புகழாரக் கூட்டத்தால் கொண்டா​டப்படுகிறது. மாக்ஸிம் கார்க்கியின் 'தாய்’ நாவலை, தாய்க் காவியமாக வடித்த முதல்வர் பெருமகனாருக்குச் சொல்கிறேன்... அய்யா, கார்க்கியின் எழுத்துகள் மேல் நீங்கள்கொண்டு இருக்கும் ஈர்ப்பும் பிரியமும் என்னை வியக்கவைக்கிறது. கார்க்கி எழுதிய சாலச் சிறந்த வாக்கியம் ஒன்றை உங்களுக்குச் சொல்கிறேன்.
'பிச்சை போடுபவனைக் காட்டிலும் அருவருக்கத்தக்கவன் யாரும் இல்லை. பிச்சை எடுப்பவனைக் காட்டிலும் பரிதாபத்துக்கு உரியவன் யாரும் இல்லை!’
கார்க்கியின் எழுத்துகளைப் பல சந்தர்ப்பங்களில் புகழ்ந்து உரைத்திருக்கும் நீங்கள், இந்த வரிகளுக்கு என்ன அய்யா பதில் சொல்ல முடியும்? உடனே, பிச்சைக்கும் இலவசத்துக்கும் வித்தியாசம் இருக்கிறது என வழக்கம்போல் விளக்கப் புராணம் பாடாதீர்கள். தனி மனிதனுக்குப் போட்டால் பிச்சை... தமிழ்நாட்டுக்கே போட்டால் இலவசமா? எங்களின் பணத்தை எங்களுக்கே பிச்சையாக்கும் வித்தையை இத்தனை காலம் நீங்கள் பயன்படுத்தாமல் இருந்ததே ஆச்சர்யம்தான்.
இலவசத் திட்டங்களுக்காக அரசாங்கம் இழக்கும் தொகையை நீங்கள் எதன் மூலமாக ஈடுகட்டுகிறீர்கள்? மது விற்பதன் மூலமாக... ஏழைக் குடியானவன் சாராயம் காய்ச்சினால், சட்டப்படி அது குற்றம். அரசாங்கமே சாராயம் காய்ச்சினால், அது திட்டம். நல்லா இருக்கிறதய்யா உங்கள் நியாயம்? தீபாவளி தினத்தில் மட்டும் 90 கோடிக்கு சாராயம் விற்றதாக இந்த அரசாங்கம் சாதனை அறிக்கை வெளியிடுகிறது. வயிற்றுக்கு விஷம் வைத்துவிட்டு, வாய்க்கு உணவு கொடுப்பதுதான் உங்கள் சாதனையின் மகத்துவமா அய்யா?
இலவசம் என்றால் என்ன பொருள் உங்கள் அகராதியில்? பல்துறைப்பட்ட வருமானத்தின் அரசுத் திட்டங்களைச் செயல்படுத்தியதுபோக, மீதம் இருக்கும் உபரி வருமானத் தொகையை வைத்து மக்களுக்கு ஏதாவது வழங்​கினால் அதற்குப் பெயர்தான் இலவசம். ஆனால், 80 ஆயிரம் கோடியை தமிழகத்தின் கடனாக ஏற்றிவைத்துவிட்டு, இழுத்துக்கோ பறிச்சுக்கோ என்கிற நிலைமையிலும், இலவசத்தை வழங்கினால், அதற்கு உண்மையான அர்த்தம் 'உள்நோக்கம்’ என்பதுதானே!
உடனே அறிவார்ந்தவரும் மூத்த அமைச்சருமான அய்யா அன்பழகனார் அறிவிக்கிறார்... 'தமிழக அரசின் 80 ஆயிரம் கோடி கடன் தமிழக மக்களைப் பாதிக்காது!’ அப்படி என்றால், எங்களின் கடனை கன்னடக்​காரன் கட்டுவதாகச் சொல்லி இருக்கிறானா? இல்லை தெலுங்குக்காரன் திரட்டிக் கொடுப்பதாகச் சொல்லி இருக்கிறானா?
இலவசங்கள் தொடர்ந்துகொண்டே போகட்டும்... என்றைக்கோ ஒரு நாள் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, இலவசங்களைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டால், தமிழகத்தின் நிலை என்னாகும் என்பது உங்களின் புத்திக்குப் புலனாகவில்லையா முதல்வரே?
இலவசம் இல்லாமல் போனால், பிறர் சவம் என்றாலும், பிய்த்துத் தின்னும் நிலை வந்துவிடாதா? இத்தனை காலம் உண்டபடியே உறங்கியவனை, ஒரே நாளில் உழைப்புக்குப் பழக்கப்படுத்திவிட முடியுமா? கொலை, கொள்ளை, வழிப்பறி என இந்த நாடே சுடுகாடாகிவிடாதா? அப்படி ஒரு நிலை வரத்தானே இத்தனை இலவசங்களை அறிவித்து, எம்மக்களின் சொரணைக்குச் சுருக்குப் போட்டுவிட்டீர்கள்?
தேர்தல் நெருங்க... நெருங்க... எப்படி எல்லாம் இலவசங்களை அறிவிக்கலாம் என மூளையைக் கசக்கி முப்பொழுதும் யோசிக்கிறீர்கள். வாரம் ஐந்து முட்டை என அறிவித்து குழந்தைகளைக் குதூகளிக்க​வைத்தீர்கள்... இத்தனை காலம் ஒரு முட்டை போட்ட கோழிகள் திடீரென ஐந்து முட்டைகள் போட ஆரம்பித்துவிட்டதா அய்யா? நாலரை ஆண்டு காலம் ஏழைகள் எந்தக் குடிசையில் வாழ்ந்தாலும் சரி என நினைத்த நீங்கள், இப்போது திடீரென வீடு வழங்கும் திட்டத்துக்கு வித்திட்டு இருக்கிறீர்கள். கடகட வேகத்தில் மூன்று லட்சம் வீடுகளைக் கட்டவைக்கும் நீங்கள், அடுத்த மூன்று லட்சம் பேருக்கு வீடு கட்டிக் கொடுப்பதற்கான ரசீதைக் கொடுத்து இருக்கிறீர்கள். 'எங்கள் ஆட்சி மீண்டும் வந்தால், உங்களுக்கு வீடு நிச்சயம்!’ என்பதை ஏழைகள் மனதில் எவ்வளவு சூசகமாக ஏற்றி இருக்கிறீர்கள் பார்த்தீர்களா? அடிக்கத் திட்டமிட்டு இருக்கும் கொள்ளையில் மக்களையும் மறைமுகப் பங்குதாரர்களாக மாற்றுவதற்குத்தானே இலவசம் என்கிற பெயரில் இந்தக் கையூட்டு?
ஆனால், உங்கள் நெஞ்சத்தில் கைவைத்துச் சொல்லுங்கள்... இலவசமாக்கப்பட்டு இருக்க​வேண்டி​யது கல்வியும், மருத்துவமும்தானே... ஏழைக்கு ஓர் உயிர்; பணக்காரனுக்கு ஓர் உயிர் என்கிற பாராமுக நிலைப்பாடுதானே இன்றுவரை தொடர்கிறது. கல்வி ஏற்றத்தாழ்வுகளை இன்று வரை இந்த அரசாங்கத்தால் களைந்து எடுக்கமுடியாமல் போனது ஏன்?
ஒரு ரூபாய்க்கு அரிசி போட்டு, 'உழைப்பு தேவை இல்லை!’ என்கிற சோம்பேறித்தனத்தை விதைப்புச் செய்தீர்கள். புத்தியை மழுங்கடிக்க இலவசத் தொலைக்​காட்சி கொடுத்தீர்கள். எவன் வீட்டில் இழவு விழுந்தாலும் தன் வீட்டில், 'மானாட மயிலாட’ ஆடினால் சரி என்கிற சாக்கடை எண்ணத்துக்குள் ஒவ்வொரு தமிழனையும் தள்ளினீர்கள். உங்களின் இலவசம் ஏற்படுத்திய பாதிப்பு என்ன என்பதை காவிரிக் கரையோர விவசாயிகளிடம் கேட்டுப் பாருங்​கள்... கூலிக்கு வேலை இல்லாமல் திண்டாடிய காலம் போய், வேலைக்கு ஆள் இல்லாமல் அல்லாடும் காலம் உருவாகி இருக்கிறது. இது ஆரோக்கியமான மாற்றம் அல்ல அய்யா... அயோக்கிய மாற்றம்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் விவசாய மாவட்டங்​களில் பட்டினிச் சாவுகள் தொடர்ந்தபோது, அரசாங்கமே சோறு போடும் என அறிவித்தார் அன்​றைய முதல்வர் ஜெயலலிதா. கூட்டுப் பொறியலோடு குக்கிராமங்கள்தோறும் சாப்பாடு தயாரானது. அப்போது நீங்கள் சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா அய்யா... ''ஊருக்கே படியளந்த மக்களை சோற்றுக்குக் கையேந்த வைத்துவிட்டார் ஜெயலலிதா!''
அந்த அம்மையாரின் நிலைப்பாட்டை நான் நியாயப்​படுத்தவே இல்லை. ஆனால், அன்றைக்கு எம் விவசாய வர்க்கம் கையேந்தியதைக் காணச் சகிக்காத நீங்கள், இன்​றைக்கு ஒரு ரூபாய்க்கு அரிசி போடுகிறீர்களே... நீங்கள் அரிசி போட்டால், அது மகத்தான திட்டம்... அந்த அம்மையார் ஆக்கிப்போட்டால் அது குற்றமா?
நாவைச் சுழற்றியே நாட்டைச் சுழற்றும் உங்களின் அபூர்வ ஆட்சியை மீண்டும் தக்கவைக்க நீங்கள் தீட்டி வரும் சில திட்டங்கள்பற்றிக் கேள்விப்பட்டேன். 'ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஓர் அலைபேசி இலவசம்’ என அறிவிக்கப்போகிறீர்களாமே... தொலைக்காட்சியை இலவசமாக வழங்கி இணைப்புக்கு எங்களிடமே பணம் பறித்ததைப்போல, அலைபேசியை இலவசமாக வழங்கி இணைப்புக்கு எந்த நிறுவனத்திடம் பேசி வைத்திருக்கிறார்களோ?


உலகத்தில் தமிழகத்தைத் தவிர வேறு எங்கேயுமே சுய மரியாதைக்கு கட்சி தொடங்கியதாகவோ, தன்​மானத்துக்காக இயக்கம் தொடங்கியதாகவோ, சரித்திரம் இல்லை. ஆனால், இன்றைக்கு அவமரியாதையின் அடை​யாளமாகவும், அவமானத்தின் சின்னமாகவும் எம் மக்கள் மாறிக்கிடக்கிறார்களே... அடுப்பு இலவசம், உடுப்பு இலவசம், மின்சாரம் இலவசம், சம்சாரம் இலவசம் (இலவசத் திருமணங்கள்), முட்டை இலவசம், சட்டை இலவசம் என அள்ளி வழங்கும் இந்த அரசாங்கம் தேர்தல் நெருங்குவதால் சீக்கிரமே இன்னொரு இலவசத்தையும் அறிவிக்கப் போகிறது. இனமானம் மிகுந்த தன்மானம் தளும்பிய தமிழர் பெருமக்களே... அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனாலும், காத்திருங்கள்... 'இல்லங்கள் தோறும் பிள்ளைகளும் இலவசம்!’

பாகம் 12
பாகம் 11
பாகம் 10
பாகம் 9
பாகம் 8
பாகம் 7
பாகம் 6
பாகம் 5
பாகம் 4
பாகம் 3
பாகம் 2
பாகம் 1

Monday, November 22, 2010

உங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம் நாற்பதாயிரம் ஒரு ஓட்டு

தினமலரில் ஸ்பெக்ட்ரம் 2 ஜி ஒதுக்கீட்டால் அரசுக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு சம்பந்தமாக வந்த ஒரு கட்டுரையில் இந்த பணத்தை வைத்து என்ன செய்யலாம் என்று கூறியுள்ளனர்

இதில் எனக்கு பிடித்த ஒரு விஷயத்தை சொல்லியிருந்தனர். அது சத்தியமா தமிழ்நாட்டை திருத்துவதற்க்கோ இல்லை பொருளாதாரத்தில் உயர்த்துவதற்க்கோ இல்லை. இருந்தாலும் அது தமிழ்நாட்டின் சொத்தான ஓட்டுக்கு பணமே. அவர்கள் சொல்லிருந்த விஷயமாவது
"தமிழகத்தில் நான்கு கோடியே 30 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஸ்பெக்ட்ரம் தொகையை பிரித்துக் கொடுத்தால், ஒரு ஓட்டுக்கு 42 ஆயிரம் ரூபாய் தர முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஐந்து ஓட்டுகள் உள்ள குடும்பத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய் தர முடியும். பொருளாதார வல்லுனர்கள் இந்த தகவல்களை தெரிவித்துள்ளனர். இதுவே மக்களின் எதிர்பார்ப்பாக அமையும் என்பதில் வியப்பில்லை."
இந்த விஷயம் தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதாவது எப்படினாலும் நாம் ஓட்டுக்கு பணம் வாங்குவதை நிறுத்த போவதில்லை. அதனால் நான் உங்களை பணம் வாங்காதிங்கனு சொல்ல போறதில்லை. கம்மியா வாங்கிடாதிங்கனு தான் சொல்றேன். உங்களுடைய ஒரு ஓட்டுக்கு நாற்பத்திரண்டு ஆயிரம் ரூபாய் மதிப்பு இருக்கிறது.( அது நம்ம பணம்ங்க. அப்புறம் நாம தானே இன்கம் டாக்ஸ் எல்லாம் செலுத்துறோம். அரசியல்வாதிகளா ஒழுங்கா செலுத்துரானுங்க?) இந்த பணத்தை அடித்தது நம் தமிழ்நாட்டில் இருக்கும் கட்சியை சேர்ந்தவர்களே என்று சொல்லபடுகிறது. அப்படியானால் நமக்கு தானே முதலுரிமை. நம்ம ஊர்காரங்க பணம் அடிச்சதெல்லாம் எதுக்காக? நாம பாட்டுக்கு ஒரு ஓட்டுக்கு ஆயிரம்னு ஆரம்பிச்சு திருமங்கலத்துல இருபத்தி ஐந்தாயிரம் வரைன்னு போயிட்டோம். யாருக்காக இருந்தாலும் நமக்கு ஓட்டுக்கு பணம் குடுக்கனும்னா கண்டிப்பாக இப்படி மாபெரும் ஊழல் செஞ்சு தானே ஆகணும்.இல்லையா இப்பவெல்லாம் இருபத்தி ஐந்தாயிரத்துக்கு கம்மியா எங்க தொகுதியில நாங்க வாங்குரதில்லைங்க ( நானும் திருமங்கலத்திருக்குட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்தவன்).


ஆனால் இது இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த விஷயம். இப்போ வருடங்களும் அதிகமாகிடுச்சு. ஊழலும் அதிகமாகிடுச்சு. நம்ம விலையும் அதிகமாகிடுச்சு. நாம தான் அதை ஒழுங்கா வசூல் செய்யணும். பொருள் நம்முடையது. அவங்களால எவ்வளவு கொடுக்க முடியும்னு தினமலர் சொல்லிருச்சு.( ப்ரோக்கர் கமிசன் கிடையாதுங்க ) இனி நாம என்ன செய்யனும்னா ஒழுங்கா உட்காந்து யோசிச்சு நல்ல விலையா பேசணும்.

என்னை கேட்டால் ஒரு ஓட்டுக்கு நாற்பதாயிரம் கேட்கலாம்னு சொல்லுவேன். அவங்களால நாற்பத்திரண்டு கொடுக்க முடிந்தாலும் அங்கே பணம் பட்டுவாடா செய்பவருக்கும் ஒரு நல்ல தொகை கிடைக்க வேண்டுமே.( அது தனி பதிவாக போடுறேன். பணம் பட்டுவாடா செய்பவர்கள் தயவு செய்து பின்னர் என்னை சந்திக்கவும்.) அதனால் தான் சொல்கிறேன். உங்களுக்கும் வேணாம் அவர்களுக்கும் வேணாம். நாற்பதாயிரம் ரூபாய் கேளுங்கள் என்கிறேன். ஆனால் பணம் வாங்குவதற்கு கொடுக்கப்படும் பணத்திற்கு நான் ஜவாப்தாரி இல்லை. நல்ல ப்ரோக்கர்களை தேடி கேளுங்கள். நாற்பதாயிரம் ரூபாய் ஓட்டு உங்களுக்கு இல்லையென்றால் எதிர்கட்சிக்கு என்று கூறிவிடுங்கள்.

திரும்பவும் சொல்கிறேன். ஏமாந்து விடாதிர்கள். ஒரு ஓட்டுக்கு நாற்பதாயிரம் ரூபாய் என்றால் நான்கு பேருக்கு ஒரு லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைவரையும் லட்சாதிபதியாவதற்க்கு கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு இது. ஏமாறுபவர்கள் பின்னர் யாரிடமும் கேட்க முடியாது. இது ஒரு முறையே கிடைக்கும் வாய்ப்பு.

( அய்யா நான் யாரையும் குறை சொல்ல வரலைங்க. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்னும் அடிப்படையில் கொடுத்திருக்கிறார். இதில் என்ன தவறு இருக்கிறது. அவர் வாங்கிய வீடு பத்து வருஷங்களுக்கு முன்னர் ஒரு கோடி என்றால் இப்போதும் அதே விலையிலே அவர் விற்பார். தயவு செய்து வீடு வாங்க ராசாவை அணுகவும்)

source url: http://maanangettatamilan.blogspot.com/2010/11/blog-post_20.html