Showing posts with label tamilan. Show all posts
Showing posts with label tamilan. Show all posts

Thursday, February 24, 2011

‘IBN7 Diamond States Awards’ தமிழக மீனவனும்.....

IBN - 18 ஒரு சிறந்த ஆங்கில செய்தி தொலைகாட்சி, அது சமிபத்தில் diamond state award என்று வழங்கியது... இது தொடர்ந்து முன்றாவது வருடம் நடக்கும் பட்டம் வழங்கும் விழா....

இதில் சிறப்பு என்னவென்றால் தமிழகதிருக்கு முன்று விருது கிடைதிருகிறது...
  1. நீர் மற்றும் சுகாதாரம்
  2. பெண்கள் வேலைவாய்ப்பு
  3. குடிமக்கள் பாதுகாப்பு
இந்த விருதை வாங்க தமிழகத்தில் இருந்து முத்த அமைச்சர்கள் கனிமொழி மற்றும் வேறு 2 அமைச்சர்கள் சென்று வாங்கி வந்தார்கள்... அதை அவரகளே தமிழக முதலமைச்சர் அவர்களிடம் குடுத்தார்கள்.... ஐயா நான் இங்கு கேட்க விரும்பவது ஒன்று தான்.... உங்கள்கு இந்த விருது வாங்கும் பொது சிரிப்பு வரவில்லியா????


முதல் 2 விருது குட ஒத்து கொள்ளலாம்..... என்னென்றால் நீர் மற்றும் சுகாதாரம் அங்கு இங்கு எதோ செய்து அந்த துறை நன்றாக இருக்கலாம்
பெண்கள் வேலைவாய்ப்பு, வோட்டு காக அனைவர்க்கும் அரசாங்கத்தில் வேலைவாய்ப்பு அமைத்து குடுத்து இருபிர்கள்... இந்த அரசியல் சானகிய தனம் பிற மாநிலடிருக்கு தெரியாமல் இருக்கலாம், அதனால் இந்த விருது உங்கள்கு கிடைதிருக்கலாம்........ அனால் என்ன ஐயா செய்திர்கள் முன்றாவது விருதுக்கு ?????

எந்த முட்டாள் இந்த விருதை தமிழகத்திற்கு குடுத்தான் என்று தெரிய வில்லை..... ஐயா எங்களது மீனவர்கள் அடிக்கடி இலங்கை இராணுவதால் கொலை செய்ய பட்டும், அவனது உடைமைகள் கொள்ளை அடிக்க படுகின்றன....

தமிழக குடிமகன் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றால் எங்கள் மீனவர்கள் தமிழர்களோ இல்லை இந்தியர்களோ இல்லையா ?????? அல்லது அவர்கள் இந்திய குடிமக்கள இல்லையா????

ஐயா எங்களை காப்பற்ற முடிய விட்டால்.... என் ஐயா எங்களுக்கு முதலமைச்சராக இருகிரிக்கள்?????? தயவு செய்து எங்களை விட்டு விடுங்கள், எங்கள் பிணத்தின் மிது உங்கள் மானம்கெட்ட அரசியல் எங்களுக்கு வேண்டாம்.....

தயவு செய்து எங்களை விட்டு விடுங்கள்.... எங்கள் பாடை நங்கள் பார்த்து கொளுகிறோம்......

Monday, February 07, 2011

திருப்பி அடிப்பேன்! - சீமான் பாகம் 16

ஆ.ராசா கைது... அடேங்கப்பா... தன் மீதான ஊழல் கறையைக் கழுவ காங்கிரஸ் எவ்வளவு நியாய உணர்வோடு எடுத்திருக்கும் நடவடிக்கை இது?! லஞ்ச ஊழலை ஒழிப்பதையே பிறவிப் பெரும் கனவாகக்கொண்ட காங்கிரஸ் அரசு அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த தவறுகளுக்காகக் கொதித்து எழுந்து ஆ.ராசாவைக் கைது செய்திருக்கிறது

சரி... கைது நடவடிக்கை பாய்ந்த கண நேரத்திலேயே, 'காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணியில் எவ்விதப் பாதிப்பும் இல்லை. கூட்டணி உறுதியாகத் தொடர்​கிறது!’ என அறிவிக்கிறது அதே காங்கிரஸ் கட்சி. நாடகம் இயற்றுவதில் கலைஞர் பெருமகனார் கை தேர்ந்தவர். அவருக்கே நாடகம் நடத்திக் காட்டுகிறது காங்கிரஸ் கட்சி. இறுகிய பிடிக்குள் ராசாவை வைத்துக்​கொண்டு, 'எத்தனை ஸீட்?’ எனக் கேட்கும் காங்கிரஸின் தந்திரம், கலைஞர் பெருமகனாரைத் தத்தளிக்கவைத்து இருக்கிறது. காலம் திரும்புகிறது எனச் சொன்னேனே தம்பிகளே... அது இதுதான்!
ஈழத்துப் படுகொலைகள் இரக்கமற்று நடத்தப்பட்டபோது, 'கலைஞர் அய்யா காப்பாற்றுங்கள்... உங்கள் மந்திரிகளின் பதவிகளை உதறச் சொல்லியாவது, நம் உறவுகளைக் காப்பாற்றுங்கள்...’ எனக் கண்ணீரும் கம்பலையுமாக நாம் கதறிக்கிடந்ததை ஒருகணம் நினைவுக்குக் கொண்டுவாருங்கள் உறவுகளே... காங்கிரஸ் தலைமைக்குத் தவறியும் நெருக்கடியை உண்டாக்கிவிடக் கூடாது என நினைத்து - ஈழ ஆர்வப் போராட்டங்களின் வீரியத்தை அணைத்து, அத்தனையையும் முடக்கிப்போட்ட முதல்வர் பெருமகனார், இன்றைக்கு தலைநகர் நெருக்கடியால் தடுமாறிக்கிடக்கிறார். நம் குலையறுத்தபோது காங்கிரஸின் முகத்தைக் கண்டு​கொள்ளாமல் இருந்தவர், இன்றைக்கு நிலை வெறுத்துத் தவிக்கிறார்.
சுதந்திர இந்தியாவில் அரை நூற்றாண்டு காலத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சி என்றைக்குமே தமிழகத்துக்கு எதிராகத்தான் இருந்தது. காங்கிரஸை அடியோடு வீழ்த்தி அரசியல் புரட்சியை அரங்கேற்றிய தி.மு.க., இன்றைக்கு காங்கிரஸால் சிறுகச் சிறுக வீழ்த்தப்படுகிறது. இனத்துக்குத் துரோகம் செய்தவர்கள் தங்களின் குணத்துக்குக் குட்டு வாங்கும் நேரம் இது. ஆனாலும், நாடக முடிவில் நல்லதொரு தீர்வுக்கு இரு கட்சிகளும் தயாராகி தமிழகக் களத்தை நோக்கி வந்துவிடுவார்கள். கை கோத்துப் போட்டியிடுவார்கள். கை குலுக்கிப் பிரசாரம் செய்வார்கள். கபட நாடகங்களை அரங்கேற்றுவதில் காங்கிரஸ் கட்சி எந்த அளவுக்கு முன்னேறிவிட்டது என்பதற்கு ராசா கைது ஓர் உதாரணம்தான்!
அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலில் ஆ.ராசாவை வளைத்தவர்கள் ஆதர்ஷ் ஊழல் செய்த அசோக் சவானை அப்படியே விட்டுவிட்டார்களே... காமன் வெல்த் ஊழல்வாதிகளின் மேல் கைது நடவடிக்கைகள் பாயவில்லையே... அது என்ன, ஆ.ராசாவுக்கு ஒரு நியாயம்... அசோக் சவானுக்கும் கல்​மாடிக்கும் ஒரு நியாயம்? கேழ்வரகில் நெய் வடியும் கேலிக் கூத்துகளை எல்லாம் நாங்கள் ஏற்கெனவே கண்டிருக்கிறோம் காங்கிரஸ்காரர்களே...
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பெரியவர் மொரார்ஜி தேசாயும் இந்திரா காந்தி அம்மையாரும் போட்டியிட்ட நேரம். இருவரில் பெருந்தலைவர் காமராஜர் யாரைக் கை காட்டுகிறாரோ... அவருக்கே தலைவராகும் தகுதி என்கிற நிலை. 'இருவரில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதில் நீங்களே தலைவராகிவிடலாமே...’ என சிலர் அக்கறையோடு காமராஜரிடம் சொல்லி இருக்கிறார்கள். அதற்கு அவர் சொன்ன பதில்... 'நான் சொன்னா ஜெயிக்கவைப்பாங்க... நின்னா ஜெயிக்கவைக்க மாட்டாங்க...!’ இந்தியத் தேசியம், தமிழன் என்றால் தள்ளிவைத்துத்தான் பார்க்கும் என்பதை அப்போதே பெருந்தலைவர் சூசகமாக சுட்டிக்காட்டியதை இன்றைய காங்கிரஸ்காரர்கள் மறுக்க முடியுமா?
காவிரியில் நமக்கு இருக்கும் உரிமைகளை வலியுறுத்தி, கர்நாடகாவை எதிர்க்கிற தகுதி தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் எவருக்காவது இருக்கிறதா? முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரள அரசின் அட்டூழியங்களைச் சுட்டிக்காட்டி மத்திய அரசின் உச்சியை உலுக்கும் சக்தி தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு இல்லாமல் போனது ஏன்? காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் நியாயத்துக்குத் தலை வணங்கினால் அடுத்த முறையும் கர்நாடகத்தில் வெற்றிபெற முடியாது என்கிற அச்சம்தானே காங்கிரஸை வாய் மூடவைக்கிறது. முல்லை பெரியாறு விவகாரத்தில் மூச்சுவிட்டால், கேரளத்தின் காங்கிரஸ் தலைவர்களே கைகோத்து அந்தக் கட்சிக்கு எதிராகத் திரளுவார்கள் என்பதால்தானே, தமிழகம் திட்டமிட்டுத் தட்டிவைக்கப்படுகிறது?
பக்கத்து மாநிலங்​களுக்குப் பயந்து நீர் ஆதார விவகாரங்களில் அமைதியாக இருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள், சிங்கள ராணுவத்தால் சுடப்பட்ட மீனவர்களின் வீட்டுக்குக்கூடப் போகாதது ஏன்? சுடப்பட்டும், சுருக்குக் கயிறு வீசப்பட்டும் எங்கள் மீனவர்கள் கொல்லப்படுவதற்கு நியாயம் கேட்டால், நிரூபமா ராவை அனுப்பி ராஜபக்ஷேவிடம் கோரிக்கைவைக்கிறது காங்கிரஸ் கட்சி. கொலைகாரர்களிடம் கோரிக்கைவைக்கிற அளவுக்குப் பலகீனமாக இருக்கிறதா இந்தப் பாரதத் திருநாடு?
நிர்வாக ரீதியிலும் இந்தியாவை ஏழை நாடாகவே நீடிக்கவைத்திருக்கும் புண்ணியமும் காங்கிரஸ் கட்சியையே சாரும். விவசாயிகளின் தற்கொலைகள் இந்த தேசத்தையே உலுக்குகின்றன. பட்டினிக்குப் பயந்து தற்கொலை செய்துகொள்ளும் ஒரு விவசாயியைப் பற்றி நடிகர் அமீர்கான் 'பீப்ளி லைவ்’ என்கிற படத்தை எடுக்கிறார். பாரதப் பிரதமர் மன்மோகன் அவர்கள் அந்தப் படத்தைப் பார்த்துவிட்டுச் சொல்கிறார்... 'நைஸ் ஃபிலிம்!’ தன் ஆட்சியில் நடக்கும் தாங்க முடியா வேதனையைப் பொட்டில் அடித்தாற்போல் புரியவைத்த அந்தக் கலைஞனிடம் கண்ணீரை உகுத்து இருக்கவேண்டிய பிரதம மந்திரியின் பேச்சைப் பார்த்தீர்களா?
இந்த ஆட்சியில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலைக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்கிற வேதனை காங்கிரஸ் அரசை வெட்கப்படுத்தவில்லையா? '40 சதவிகிதத்துக்கும் மேலானவர்கள் ஒருவேளை உணவுக்குக்கூட வழி இல்லாமல் தவிக்கிறார்கள்’ என்பதை இந்த அரசாங்கமே அறிக்கையாக வெளியிடுகிறதே... நாளைய வல்லரசின் இன்றைய லட்சணமா இது? அதே நேரம் பல்லாயிரம் டன் எடையிலான உணவுப் பொருட்கள் சேமிப்புக் கிடங்கில் மண்ணோடு மண்ணாக மட்கிக்கிடக்கிற கோலத்தை எங்கே போய்ச் சொல்வது?
அது குறித்த ஆதங்கத்தை நீதிமன்றம் எழுப்பியபோது, 'அரசு நிர்வாகத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது!’ என அறிவிக்கிறார்கள். அய்யா அறிவார்ந்த பெருமக்களே... எலிகளுக்குக் கொடுக்கும் உணவை ஏழைகளுக்குக் கொடுக்கக் கூடாது என்பதுதானே உங்களின் மக்கள் நல மகத்துவம்?
பாபர் மசூதி இடிப்புக்கு பாரதிய ஜனதா கட்சிதான் காரணம் என இன்று வரை இடித்துரைக்கிறது காங்​கிரஸ் கட்சி. பாரதிய ஜனதா கட்சியினர் அதனை இடிக்கும்வரை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தது இதே காங்கிரஸ் கட்சிதானே... கடப்பாறையும் கம்பியுமாய் வந்தவர்​களைத் தடுக்க சக்தியற்றுப்​போய், டிசம்பர் - 6-ம் தேதியை இந்தியாவின் கறுப்பு தினமாக அறிவிக்கவைத்த அவலத்துக்கு இதே காங்கிரஸ்தானே காரணம்.
மகாத்மா காந்தியடிகளைக் காணச் சென்ற தந்தை பெரியார், 'அய்யா, நம் தேசியக் கொடியும் காங்கிரஸ் கட்சிக் கொடியும் ஒரே மாதிரி இருக்கிறது. இதனால், காங்கிரஸ் கட்சிதான் நாட்டுக்குச் சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்தது என்கிற குழப்பம் உண்டாகி, மக்கள் அதற்கே வாக்களிப்பார்கள். இது சர்வாதிகார நிலையை உண்டாக்கிவிடும்!’ எனச் சொல்லி இருக்கிறார். அத்தகைய அபாயம் புரிந்து மகாத்மாவும் காங்கிரஸை உடனடியாகக் கலைக்கச் சொல்லி இருக்கிறார். ஆனால், நேரு அதை மறுக்க... பெரியார் உரைத்தபடியே உச்சபட்ச சர்வாதிகார சக்தியாய் இன்றைக்கு காங்கிரஸ் பெருத்து நிற்கிறது.
கைராட்டையைச் சுமந்த காங்கிரஸ் கொடி இன்றைக்கு 'கை’யையும் சோனியாவின் முகத்தையும் சுமந்து பறக்கிறது. இந்திரா காங்கிரஸை உருவாக்கிய இந்திரா காந்தியின் படம்கூட அந்தக் கட்சியின் கொடியில் இல்லை. அப்பனை மறந்த அற்பர் கூட்டம்தான் இன்றைய காங்கிரஸை வளர்த்து வருகிறது. இந்திரா நேருவாக இருந்தவர் பெரோஸ் காந்தியை மணந்ததால்தான் இந்திரா காந்தி என்றானார். இன்றைக்கு நேரு, இந்திரா, ராஜீவ் உள்ளிட்டவர்களின் நினைவு தினங்களை மறக்காமல் அனுசரிப்பவர்கள் பெரோஸ் காந்தியைப் பற்றி மறந்தும் பேசுவதில்லையே... அது ஏன்?
இன்றைக்கு ராகுல் காந்தியைக்கூட மகாத்மா காந்தியின் பாரம்பரிய வாரிசாக கடைக்கோடி மக்கள் நினைக்கிறார்களே... அந்த நினைப்பை விதைப்பதற்காகவே பெயர் முழுக்க காந்தியை சுமந்து வலம் வருபவர்கள், பெரோஸ் காந்தியின் நினைவிடத்துக்கு செல்லாமல் புறக்கணிப்பது ஏனய்யா?
சில உள்ளீடான கேள்விகளுக்கு காங்கிரஸ் தலைவர்​களிடம் உரிய பதில் இருக்கிறதா? அதெல்லாம் ஏன்... இந்திரா காந்தியின் படத்தையும் சோனியா காந்தியின் படத்தையும் சரிக்குச் சமமாக அச்சிட காங்கிரஸ் தலைவர்களுக்குத் தைரியம் இருக்கிறதா? அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பெரிய அளவு தொகை சோனியா காந்தியின் சகோதரிக்கு வழங்கப்பட்டதாக சுப்பிரமணியன் சுவாமி பகிரங்கமாகக் குற்றம் சாட்டினாரே... அதற்கு இதுவரை மறுப்போ விளக்கமோ வெளிவராதது ஏன்?
நாளைய பிரதமராக தூக்கிவைத்துக் கொண்டாடப்படும் ராகுல் காந்தியிடம் காவிரி விவகாரம் குறித்துக் கேள்வி எழுப்பப்பட... 'நோ காவிரி... நோ இஷ்யூ...’ எனப் பதில் சொல்லி இருக்கிறார். அதைக் கேட்கிறபோது எங்களுக்கும் இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது. 'நோ காங்கிரஸ்... நோ ஓட்ஸ்!’
இன்றைக்கு இந்த அளவுக்கு காங்கிரஸை கருவறுக்கத் துடிக்கிறேன் என்றால், அதற்குக் காரணமே தமிழனின் கோபம் எப்படி இருக்கும் என்பதைப் புரிய வைக்கத்தான்! இந்திரா காந்தி இறந்தபோது மூன்று நாட்கள் முழுப் பட்டினியாய் கிடந்து அழுதவன் நான். என் தாத்தா பாட்டியின் சோகம்கூட என்னை அந்த அளவுக்குத் தாக்கியது இல்லை. அத்தகையப் பற்றாளன்தான் இன்றைக்கு அடிபட்ட புலியாகக் கிளம்புகிறேன். என்னை எதிர்கொள்ளும் சக்தி அந்த இறுமாப்புக்காரர்களுக்கு இருக்கிறதா என்பதைத் தேர்தல் களத்தில் பார்ப்போம்!
இன்றைய நெருக்கடிக்காக நிலைகுலைந்​திருக்கும் அய்யா முதல்​வரே... காஞ்சிபுரத்தில் தோற்றுப்​போன​போது அறிஞர் அண்ணா வார்த்தைகளையே உங்களிடம் சொல்கிறேன்...
'ஒரு நெசவாளியைக் கண்டேன்.அவர், 'நான் நீண்ட காலம் காங்கிரஸில் இருப்பவன். அதனால், நான் எப்படி உங்களுக்கு மாற்றிப் போட முடியும்?’ எனக் கேட்டார். 'காங்கிரஸே மாறிவிட்டதே... கொள்கையில், குணத்தில், கண்டவர்களும் சேர்ந்து காங்கிரஸைக் கெடுத்துவிட்டார்களே... கெட்டுப்போன பிறகும் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க முடியும் என்கிறீர்களே... அது நியாயமா?’ எனக் கேட்டேன்!’

அதே வார்த்தைகளை நானும் கேட்கிறேன் அய்யா... கெட்டுப்போன பின்பும் ஏனய்யா காங்கிரஸைக் கெட்டியாகப் பிடித்து இருக்கிறீர்கள். கை தூக்கிவிட்ட பெருந்தலைவர் காமராஜரையே கைது செய்யச்சொல்லி ஆணையிட்டார் இந்திரா காந்தி. 'முடிந்தால், காமராஜர் மீது கை வைத்துப்பார்’ என சபதம் போட்டீர்கள் அன்றைய தமிழக முதல்வராக இருந்த நீங்கள். இந்திரா காந்தியையே இடியாய் குலுக்கிய நீங்கள், சோனியா காந்தியிடம் சுருண்டுபோனது ஏனய்யா?
உங்களின் தலைகீழ் மாற்றத்தைக் காணச்சகிக்​காதவனாகச் சொல்கிறேன்... எதிர்த்தவர்களையே வரலாறு வணங்கும்... உதிர்த்தவர்களை உதிர்த்துவிடும்!


திருப்பி அடிப்பேன் தொடரும்


பாகம் 15
பாகம் 14
பாகம் 13
பாகம் 12
பாகம் 11
பாகம் 10
பாகம் 9
பாகம் 8
பாகம் 7
பாகம் 6
பாகம் 5
பாகம் 4
பாகம் 3
பாகம் 2
பாகம் 1

Wednesday, January 12, 2011

பொங்கலும் இன்றைய தமிழகமும்..............

பொங்கல் ஒ பொங்கல் ...........


தை பொங்கல், தமிழர்களின் திருநாளாம்,
செம்மொழி மாநாடு கண்ட தமிழ்க்கும் அதன் இனத்துக்கும் ஒரு முக்கியமான பண்டிகைதான் பொங்கல்.......

உலகத்துக்கு நன்றி சொல்லுவதும், நாமெல்லாம் வாழ்வதற்கும் வாழ்வாதாரம் மாகா இருபவருக்கு நன்றி தேர்விக்கும் நாள்ல பொங்கல் திருநாள்
முதல் வாழ்வதற சக்தி அனா சூரியனே இந்த பொங்கலின் கதாநாயகன், அதன்பிறகே பிற பூதம்கலுகு நன்றி தெரிவிக்கிறோம் (பஞ்ச பூதம்)

அதற்கு அடுத்த நாள், மாட்டு பொங்கல், மாட்டு பொங்கல் என்றால் மாட்டிற்கு மட்டும் எடுக்கும் விழா அல்ல, அன்றைய காலங்களில் ட்ரக்டர், ஹர்வேச்டோர் மிசின் இல்லாத காலத்தில் மனிதனக்கு உளவு வேலை செய்யும் மாடு, வீட்டிற்கு காவல் இருக்கும் நாய், நெல்குவியல்களை எலிகளிடம் இருந்து காபாற்றும் பூனை, இவராக நம்மக்கு உதவி செய்யும் எல்லா வகையான விலங்கிற்கும் நன்றி தெரிவிக்கும் நாளே மாட்டு பொங்கல், நீங்கள் கேக்கலாம் ஏன் மாடிருக்கு மட்டும் தனி இடம், இந்த விழாவே மாட்டின் பெயரால் என்று.........மற்ற மிருகங்களை காட்டிலும் மாடு தான் மனிதனகு பல வழிகளில் உதவிகிறது.......

உதாரணம், காளை மாடுகள் வயலில் உழுவதற்கு, பசு மாடு வீட்டிக்கு பால் குடுகிறது, அதன் சாணம் ஒரு சிறந்த கிரிமி நாசனி....... இதனால் தான் பசு மாட்டிற்கு முதல் உரிமை.............

இன்றைய இளைய தலைமுறைக்கு இப்படி சொன்னால் புரியுமா?????....... இல்லை கண்டிப்பாக புரியாது........ ஆனால் அமெரிக்காவில் கொண்டாடப்படும் THANKS GIVING DAY ......... என்று இருக்கிறது அல்லவா....... அதான் தமிழகதில் கொண்டபடும் பொங்கல் என்று கூறுங்கள்............ ஓஒ அப்படியா என்று கேட்டு விட்டு செல்லுவார்கள்...........
பாவம் அவர்களுக்கு நமது தமிழும், தமிழகதின் பெருமையும் தெரியாது, தெரியாமல் வளர்த்து விட்டோம், அல்லது ஆங்கிலம் படித்தால் தான் நாலு பேர் நம்மளை மதிப்பார்கள் என்று......... சொல்லி சொல்லி வளர்த்து விட்டோம்........... அவர்களை குறை சொல்லி என்ன செய்ய..........

முதலில் நம்மக்கு தெரிந்தால் தானே நாம் பிறர்க்கு சொல்லி குடுக்க????? நாமெல்லாம் பிறரை குற்றம் சொல்லி, அல்லது பிறர் செய்யும் தவறில், நாம் ஒட்டி தப்பித்து கொளுகிறோம், நாம், நமது வாழ்கை, நமது குடும்பம் என்று மட்டும் வாழ்ந்து கொண்டு, குண்டு சட்யில் ஓட்டும் குதிரை போல் ஆகி உள்ளோம், வெளி உலகம் தெரியாமல்....... வேல்லியர்கள் கொண்டு வந்த மெக்கலே கல்வி முறை தான் நாம் இன்றும் கற்று கொண்டு உள்ளோம்......

உலகம் வேகமாக முன்னறி கொண்டு உள்ளது, அரசியல் சாசனம், அரசியல்வாதிகளுக்கு ஏற்றது போல் மாறி வருகின்றது......... ஆனால் இந்தியர்களின் கல்வி முறை மட்டும் மாறுவதே இல்லை, எல்லோரும் குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்ட்வடற்கு இந்த அரசு மட்டும் அல்ல......... யார் வந்தாலும் இதைதான் செய்யவர்கள்......... நாமும் கண்ணை கட்டி கொண்டு.... ஆடு மந்தைகள் போல..... அரசியல்வாதிகள் போடும தாளத்திற்கு தவறாமல் நடனம் ஆடுகிறோம்......

எங்க இன்றைய சமுகம் முழித்து விடுவோமோ என்று அவர்களுக்கு கனவு உலகத்தில் மிதக்க.......... இலவச வண்ண தொலைகாட்சி பெட்டி.....ஒவ்வொரு குடும்பதிற்கும்......

சரி தொலைகாட்சி பெட்டில் அவர்கள் அறிவு சார்ந்த எதுவும் பார்த்து விடுவார்களோ என்று.........காலை 11 மணிக்கு ஆரம்பிக்கும் தொலைகாட்சி தொடர்கள், இரவு 11 மணி ஆனாலும் முடிவது இல்லை...........

இடை இடைய பாச தலைவனுக்கு பாராட்டு விழா....... தானே உக்காந்த தங்க தலைவனுக்கு பாராட்டு விழா.. என்று எதற்கு பார்தாலும் ஒரு பாராட்டு விழா......... அதையும் அவர்கள் தொலைகாட்சி களில் அடிக்கடி போட்டு மக்களை.. தலைவன் என்று ஒத்து கொள்ள வைக்கும் ஒரு முயற்சி...........

எனக்கு பயமாக இருக்கிறது இன்னும் சிறிது காலம் போனால்... வள்ளுவருக்கு அடுத்த படியாக முத்தமிழ் வளர்த்த..... முத்தமிழ் கலைஞர் என்று கூறி விடுவார்களோ என்று...........

sun tv, kalainger tv, k tv, jeya tv, jeya plus, raj tv, தினகரன், மாலைமுரசு, ஹிந்து, தினமலர் , இது போன்ற ஒரு குடும்ப கதைகளை மற்றும் தரும் ஊடகங்களை ஒதுக்கி விட்டு.... உண்மையான செய்திகளை அறிந்து தெரிந்து கொள்ளும் மனபக்குவம் வரும் வரை..............

இந்த தமிழர்கள் உருப்பட போவது இல்லை....................

Saturday, October 23, 2010

அடுத்தமாதம் எப்படியும் சிங்கள ராணுவத்தால் சாக போகும் இந்திய(தமிழக) மீனவனுக்கு ஒரு கடிதம்



அன்புள்ள இந்திய (தமிழக) மீனவனுக்கு வணக்கம் வாழிய நலம்...
எங்க வாழிய நலம் என்று முனு முனுக்க வேண்டாம்...

உங்கள் சமுக மீனவர்களை சிங்களவர்கள் நிர்வாணபடுத்தி,உதை கொடுத்து, குண்டு அடிபட்டு சீறும் சிறப்புமாக இருப்பதாய் பத்திரிக்கைகளில் படித்துக்கொண்டு இருக்கின்றேன்...

உலகின் 5வது வல்லரசாக வளர்ந்து கொண்டு இருக்கும் நாட்டின் குடிமகன்... குண்டடி பட்டு இறப்பது வாடிக்கையாகிவிட்டது...ஆனால் அவர்களுக்கு உங்களை நம் நாட்டின் குடிமகன் என்ற நினைப்பு கிஞ்சித்தும் அவர்களுக்கு இல்லை என்றே தோன்றுகின்றது...

இந்தியாவில் பிறந்த அத்தனை குடிமகன்களுக்கும் பாதுகாப்பான வாழ்க்கை கொடுக்கவேண்டும் என்று அரசியல் சட்டம் கூறுகின்றது... அப்படி கொடுப்போம் என்று சொல்லிதான் ஆட்சியாளர்கள் அறியனை ஏறுகின்றார்கள்...

தமிழ்நாட்டை விட சிறியதாய் இருக்கும் தேசம்...இந்தியாவில் இருப்பவனை அடித்துக்கொண்டு இருக்கின்றது.. ஒரு கேள்வி இல்லை ஒரு கண்டனம் இல்லை...பிரதமர் ஒரு எச்சரிக்கை விடுத்தால் கூட அது உலக நாடுகளின் கவனம் பெரும்... அதை கூட செய்வதில் அவருக்கு தயக்கம் இருக்கின்றது...

ஒருவேளை நீங்கள் தலையில் டர்பன் கட்டி இருந்தால் தான் ஆடவிட்டாலும் தன் கால் சதையாவது அவருக்கு ஆடி இருக்கும்...ஒரு வேளை இந்திய இறையாண்மை பாராளுமன்றத்தில் மட்டும் இருப்பதாக எண்ணிவிட்டதன் விளைவே இந்த அமைதி என்று என்ன தோன்றுகின்றது....

பாரளுமன்றத்தில் துப்பாக்கியோடு உள்ளே நுழைந்தால்தான் இந்திய இறையாண்மை கேள்விகுறியாக்கபடுகின்றது... ஆனால் உங்கள் மீது துப்பாக்கி குண்டு பாயும் போது அது பற்றி எந்த கேள்வியும் இல்லை... வாழ்க்கை போராட்டத்தில் தினமும் உயிரை பணயம் வைப்பவன் விஷயத்தில் இந்திய இறையாண்மை எந்த கேள்வியும்ம இல்லாமல் தூங்குகின்றது...


நம்ம ஊரில் ஆயுதபூஜைக்கு இரும்பு சாமான்களை துடைத்து பட்டை போட்டு படையல் வைப்பது போல் ஒவ்வொரு வருடமும் குடியரசு தினத்துக்கு நம் ராணுவ தளவாடங்கள் அணிவகுத்து காட்சி நடத்துவோம்....அது ஒரு நாளும் இந்திய பெருங்கடலில் சிங்கள ராணுவத்தையோ அல்லது சிங்கள மீனவனையோ இது போல் செய்தது இல்லை அல்லது பயமுறுத்துவது போல ஒரு சின்ன லுலுலாயி வேலையை கூட செய்தது இல்லை...


எல்லைதாண்டி வந்த எத்தனையோ சிங்கள மீனவனையும்,பங்களாதேஷ் மீனவனையும் கைது செய்து முறைபடி அவர்கள் அரசிடம் அல்லது அவர்கள் நாட்டின் தூதரகத்தில் விட்டு விடுவோம்... யாரையும் நிர்வாணபடுத்தி துப்பாக்கியால் சுட்டது இல்லை....



உலகின் மிக பழைமையான தொழில் உங்களுடையதுதான்...அதே வேளையில் உலகில் ஆறு மொழிகள் மட்டுமே மிக தொன்மையானவையாம்.....அதில் நீ பேசும் தமிழ் மொழியும் ஒன்று...




ஆம் எவ்வளவு பெருமையான விசயம் அல்லவா? இப்போது கூட நீ பேசி சிலாகிக்கும் நம் தமிழ் செம்மொழிக்கு450 கோடியில் விழா எடுத்தார்கள்...நம் பரப்பரை வீரம் பற்றி சீலாகித்தார்கள்.. யாரும் நம் வீரம் பற்றி மறந்து விடக்கூடாது அல்லவா? அதனால்தான்

அது எல்லாம் பழம் கதை இப்போது எல்லாம் அது பேசி புரயோஜனம் இல்லை....நீ கூட தெருமுக்கில் டீ குடித்து கொண்டே தினத்தந்தி படித்து விட்டு இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை கூட தமிழர் வீரம் பற்றி பெருமை பேசி இருக்கலாம்...ஆனால் அந்த வீரத்துக்கும் ஆதீத துரோகத்தால் முள்ளிவாய்காலில் முடிவு கட்டபட்டது..

முள்ளிவாய்காலில் மவுனம் காத்தோம் காரணம்....மாநில அரசு எல்லை இந்யிவில் வறையறுக்கபட்ட விசயம் அனைவருக்கும் தெரிந்ததுதான்...இறந்து போனது நம் இந்திய நாட்டு அதுவும் நம் தமிழ் நாட்டு செம்மொழியான தமிழ் மொழி பேசும் மீனவன்...


மாநிலத்தில் ஆட்சி செய்த எல்லா அரசுக்குமே இது போலான கையாகளாத தனம் இருக்கினறது...இதில் குறிப்பிட்ட யாரையும் குற்றம் சொல்ல முடியாது...இதில் மாநிலத்தில் ஆட்சி செய்த அனைவருக்கும் இதில் பொறுப்பு உள்ளது...

ஒரு 50 பேர் சாகும் போதுதான் ஒரு அரசு விழிக்கும்... ஏனெனில் அரசுக்கு எத்தனையோ தலைக்கு மேல் வேலை இருக்கின்றது....சரி மாநில அரசு விழிக்க வேண்டும்... அதுவும் விழிக்கவில்லை....100 பேர் செத்தார்கள்.. மத்திய மாநில அரசுகள் விழித்து இருக்க வேண்டும்...அவர்கள் விழிக்கவில்லை...200 ஆயிற்று,300 ஆயிற்று,400 ஆயிற்று,500 ஆயிற்று அதுக்கு மேலும் இறந்து கொண்டு இருக்கின்றார்கள்...எந்த கேள்வியும் கேட்கவில்லை என்றால் ஏதோ தப்பு இருப்பதாக உங்கள் மர மண்டைக்கு எட்டவில்லை...உங்களுக்குள் ஒற்றுமை இல்லை.. அல்லது மாநிலத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லை....

எனக்கு தெரிந்து நீங்கள் தொழிலை மாற்றி விடுவது நல்லது... உயிர் பயம் இருந்தால் நீங்கள் தொழிலை மாற்றியே ஆக வேண்டும்.... ஆம் நண்பர்களே உங்களுக்கு இதே நிலைதான் நீடிக்கும்..

அடுத்த மாதம் இதே போல் இந்திய பெருங்கடலில் வலையறுப்பு சம்பவம் மற்றும் சிங்களவர்கள் நிர்வாண மீனவ பேஷன் ஷோ நடத்துவார்கள்...யாராவது ஒரு மூளை சூடுள்ள சிங்களவன் துப்பாக்கியால் சூட்டு வைப்பான்... நீங்கள் எப்படியும் நிச்சயம் இறந்து போவீர்கள்...அப்படி நீங்கள் இறந்து போய்விட்டால் என்ன நடக்கும் என்பதை தீர்க்க தரிசனம் போல் சொல்கின்றேன் கேளுங்கள்...

இங்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கும் தெரியுமா?

தினத்தந்தியில் மீண்டும் சிங்கள இராணுவம் அட்டுழியம் என்ற தலைப்பிட்டு செய்தி வரும்...

தமிழகத்தில் எந்த முதல்வர் ஆட்சிக்கு இருந்தாலும் ஒரு கண்டன்ம் தெரிவிப்பார்... இப்போதைய முதல்வர் கடிதம் எழுதுவார்... மாட்டுகாரன் செனைக்கு மாடு அழைத்து வருவதை கூட செல்போனில் பேசி முடிக்கும் போது... இப்போதும் கடிதம்தான்.....

உள்துறை அமைச்சகத்தில் இருந்து இலங்கையிடம் விளக்கம் கேட்கபோவதாக கடிதம் வரும்...

ஒரு வாரத்துக்கு பிறகு அந்த கடிதம் மற்றும் விஷயம் டிவி சீரியல்களால் மறக்கடிக்கபடும்....

ரொம்ப தீவிரமான தமிழர் அமைப்புகள் இலங்கை தூதரம் முன் ஆர்பாட்டம் நடத்தும்...

தேர்தல் வந்தால் தமிழனாய் இருந்து கொண்டு மீனவ்ர்கள் மீதான தூப்பாக்கி சூட்டை கண்டிக்காத ஆளும்கட்சியே ஒழிக என்பதாய் கோஷம் எழுப்பபடும்...

எதிர்கட்சி இறந்த மீனவனின் போட்டோவை பெரிதாக வால் போஸ்ட் அடித்து தேர்தல் நேரத்தில் ஓட்டி போஸ்டரில் சக்கரை கரைசலை ஊற்றி ஈக்களை மொய்க்க வைத்து பரிதாபம் தேடி....தேர்தலில் ஜெயிக்க வழிபார்பபார்கள்...

இறந்த மீனவன் குடும்பத்துக்கு பிரச்சனையின் சமயத்துக்கு ஏற்ப... ஒரு லட்சம் இரண்டு லட்சம் வழங்கபடும்... எலெக்ஷன் நேரம் என்றால் 3லட்சத்தில் இருந்து 5 லட்சம் கொடுக்கபடும்... போராட்டம் ரொம்ப தீவிரமானால் இறந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்கபடும்...




இதுதான் நடக்கும் நீங்களும் மணலில் புதைத்து வைத்த டப்பா கஞ்சியை குடித்துக்கொண்டே அரசு கொடுத்த தொலைகாட்சியில் பார்த்து வைப்பீர்கள்...ரொம்பவும் போதை ஏறிவிட்டால் செல்போனில்

ஹலோ ....மீயிசிக்கா?
சித்ரம் பேசுதடி படத்தில் இருந்து வலை மீனுக்கும் விலங்கு மீனுக்கும் பாட்டை போட சொல்லி நேயர் விருப்பம் கேட்பீர்கள்...

யாராவது எல்லைதாண்டும் சிங்கள மீனவர்களை தமிழ எல்லையில் வந்தால் அவர்களை கைது செய்து புது உடை கொடுத்து...உணவு கொடுத்து தூதரகம் மூலம் இலங்கைக்கு கப்பல் மூலமோ அல்லது விமானம் மூலமோ வந்தாரை வாழவைக்கும் தமிழனால் அனுப்பி வைக்கபடுவான்...


தமிழக மீனவர்களே உங்களுக்கு உயிர் தப்பிக்க ஒரு உபாயம் சொல்கின்றேன் கவனமாக கேளுங்கள்...
உயிர்தப்ப வேண்டும் என்றால் ஒரே வழி... இருக்கின்றது... இல்லை எங்கள் தொழிலைதான் நாங்கள் செய்வோம் என்றால் எந்த பிரச்சனையும் இல்லை....ஊரில் இருக்கும் சொத்தை வந்த விலைக்கு விற்றுவிடுங்கள்... தர்பூசனி மொத்தமாக பயிரிடும் இடத்தில் போய், ஒரு காய் 10 ரூபாய் மேனிக்கு பேசி ஒரு 500 தர்பூசனி வாங்கி லாரி பிடித்து சென்னையில் ஏதாவது ஒரு நடையோரத்தில் கடை போடுங்கள்...

போலிசுக்கு லஞ்சம் என்றும், அந்த பகுதி தாதாக்களை கவர் செய்ய என கொஞ்சம் அமவுன்ட் எடுத்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள்...நோச்சிகுப்பம் அல்லது அயோத்திக்குப்பம் பக்கம் வாடைகைக்கு வீடுபிடித்துக்கொள்ளுங்கள்....சப்போஸ் தொழிலில் தோர்தாலும் சென்னையில் உள்ள கடலில் வலை போட்டு மீன் பிடிக்கலாம்...

போர்குற்றத்தை விசாரிக்கவந்த பான்கீ மூனை மாமா என்று அழைத்தவர்கள்...சிங்களவர்கள்...இந்தியாவின் பாதுகாப்புக்கு பிரச்சனை செய்யாதவரை இந்திய அரசு எந்த கேள்வியும் கேட்க போவதில்லை../


வட இந்திய சேனல்களை பொறுத்தவரை பஞ்சாப்பீல் இறந்தால்தான் அது செய்தி... அதைவிட பாகிஸ்தானில் நடக்கும் விசயத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நம் நாட்டின் தென் கோடி இந்தியனுக்கு கொடுப்பதில் பெரும் தயக்கம்....அவர்கள் அப்படித்தான்...தமிழக சேனல்கள் பேசி புரயோஜனம் இல்லை..

தினமலரும், இந்துவும் எப்போதும் சிங்களவர் பக்கம்தான்...அவர்கள் செய்வது நியாயம் என்று எழுதுவார்கள்...இவர்கள் எல்லைதாண்டி மீன் பிடித்து இருக்க கூடாது என தரையில் இருந்து கொண்டு வாதம் செய்வார்கள்...அவர்களை பொறுத்தவரை மயிலாபூரில் தண்ணியும் கரண்டும் ஒழுங்காக தடையில்லாமல் வந்தால் போதும்....


ஆனால் சிங்களவர்கள் ஒரு போதும் இந்தியாவை ஒரு நேச நாடாக வைத்து பார்ப்தில்லை... விரைவில் நம் கண்ணை குத்த தொடங்கும் படலம் விரைவில் நடக்கும்...அப்போது எல்லோரும் ஒன்று சேர்ந்து கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல் குரல் கொடுப்போம்.... அப்போது எல்லாமே கடந்து போய் இருக்கும்..

ஒரு கோபத்தின் வெளிபாடாய் இந்த கடிதம்.... மீனவ மக்களை காயபடுத்த அல்ல....

அன்புடன்...

ஒரு தமிழனாக ஒரு இந்தியனாக சக தமிழனுக்கு சக மனிதனுக்கு நடக்கும் இன்னல்களை பார்த்து கொண்டு மட்டும் இருக்கும் ஒரு சாமானியன்.........