Showing posts with label vikatan. Show all posts
Showing posts with label vikatan. Show all posts

Monday, February 28, 2011

''சிங்களவருடன் எங்களை சமாதானமாக வாழச் சொல்​பவர்கள், இதற்குச் சரியான பதில் சொல்வார்களா?'' திருப்பி அடிப்பேன்!: 19

பார்வதி அம்மாளின் அஸ்தி மீது நாய்களை எரித்து.. இறந்த பின்பும் அவமதிப்பு'' இப்படியும் நடந்து​கொள்​ளுமா மனித ஜென்மங்கள்?'' எனும் அளவுக்கு, மீண்டும் ஒரு முறை கோர முகம் காட்டி இருக்கிறது சிங்களப் பேரின​வாதம்!

சொந்த ஊரான வல்வெட்டித்​துறையில் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தகனம் செய்யப்பட்ட இடத்தில், அதே இரவில்... சில நாய்களை அரைகுறையாக எரித்துப் போட்டுவிட்டு, அஸ்தியையும் சிதறடித்துச் சென்றுள்ளன, மனித உருவில் வந்த சில மிருகங்கள்!
பொதுமக்கள் அஞ்சலிக்காக, பார்வதி அம்மாளின் உடல் வைக்கப்பட்டு இருந்த இடமே சிங்கள ராணுவத்துக்குப் பிரச்னைதான். பிரபாகரனின் தந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை இறந்தபோதும், இந்த இடத்தில்தான் அவரது உடல் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டது. இந்த சதுக்கத்தில்தான் குமரப்பா, புலேந்திரன் உள்பட்ட 12 புலிப் போராளிகளுக்கும் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. அவர்களின் நினைவாக பன்னிரு போராளிகள் நினைவுத் தூண் அமைக்கப்பட்டது. போராளித் தளபதி கிட்டுவின் நினைவாக ஒரு கப்பல் நினைவுச் சின்னமும் இங்கு அமைக்கப்பட்டது. ஏராளமான மக்கள் கடந்த கால நினைவுகளை மனதில் போற்றிய அந்தச் சின்னங்களும் சிங்களப் படையால் இடிக்கப்பட்டன.





இப்படிப்பட்ட இடத்தில், 'பார்வதி அம்மா​ளுக்கு இறுதி மரியாதை செலுத்த, தமிழ் மக்கள் திரண்டுவிடக் கூடாது’ என்பதில் சிங்கள ராணுவம் மூர்க்கத்துடன் வல்வெட்டித்துறையில் குவிக்கப்பட்டது. தீருவில் சதுக்கத்தை நோக்கிய சாலைகளில் சென்ற அனைவரையும் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் திருப்பி அனுப்பினர். இரங்கல் தெரிவிக்கக் கட்டப்பட்ட கறுப்புக் கொடிகளை அகற்றுமாறு துப்பாக்கி முனையில் மிரட்டினர். அடைக்கப்பட்ட கடைகளை திறக்குமாறும் கட்டாயப்படுத்தினர். ஆனால், கொந்தளித்து நின்ற வல்வெட்டித்துறை மக்களிடம் அவர்களின் பாச்சா பலிக்கவில்லை. இளையவர்கள், முதியவர்கள், ஊனம் அடைந்தவர்​கள்கூட இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

அடுத்து, யாழ் பல்கலைக்​கழக மாணவர்களைப் பங்கேற்க​விடாமல் தடுக்க முயற்சித்தது சிங்கள அரசு. பல்கலைக்கழகம் உள்ள திருநெல்வேலியில் இருந்து 22 கி.மீ. தொலைவு கடந்து இறுதி நிகழ்வில் பங்கேற்பதற்காக, மாணவர்கள் பேருந்து​களில் புறப்பட இருந்தனர். அவர்களை உள்ளூர் போலீஸார் மிரட்டினர். தனியார் பேருந்து உரிமையாளர்​களையும் மிரட்டினர். ஆனாலும் தடைகளை மீறி 2,000 பேர் இந்த இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், புலிகள் ஆதரவு தமிழ்த் தேசிய மக்கள் முன்ன​ணியின் தலைவர்கள் எனப் பல தரப்பினரும் கலந்துகொண்டனர்.

முன்னதாக காலை 10.30 மணிக்கு தீருவில் சதுக்கத்தில், டாக்டர் மயிலேறும் பெருமாள் தலைமையில் அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் இருந்து பழ.நெடுமாறன், வைகோ, உணர்ச்சிக் கவிஞர் காசி​ஆனந்தன், சீமான், நார்வே நாட்டில் இருந்து ஈழத் தமிழர் அவையின் பிரதிநிதியான விஜய் அசோகன் ஆகியோர் தொலை​பேசி மூலம் அஞ்சலி உரை நிகழ்த்​தினர்.
உள்ளூர்த் தலைவர்கள் பேசிய பிறகு, ஆலடி ஒழுங்கை எனும் இடத்தில் உள்ள பிரபாகரனின் மூத்த அக்காள் ஜெகதீஸ்வரியின் வீட்டுக்கு பார்வதி அம்மாளின் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. பிற்பகல் 2.45 மணி முதல் மாலை 4.30 மணிவரை சைவ முறைப்படி இறுதிச் சடங்கு செய்யப்பட்டது. யாழ்ப்பாண வழக்கபடி, வேலுப்பிள்ளையின் ஒன்றுவிட்ட தம்பியான சங்கரநாராயணன் இறுதிக் கிரியைகளைச் செய்தார்.

வல்வெட்டித்துறை கடற்கரையில் உள்ள ஊறணி மயானத்தில் பார்வதி அம்மாளின் உடல் தகனம் செய்யப்பட்டது. மறுநாள் காலை கடலில் கரைப்பதற்காக உறவினர்கள் அஸ்தியை எடுக்கச் சென்றனர். அப்போதுதான், அந்த அதிர்ச்சி! அங்கே, பார்வதி அம்மாளின் அஸ்தி எங்கும் சிதறடிக்கப்பட்டு இருந்தது. கூடவே, மூன்று நாய்களின் சடலங்களும் அரைகுறையாக எரிக்கப்பட்ட நிலையில் கிடந்திருக்கின்றன. வேறு வழியின்றி அவற்றை கடல் கரையில் புதைத்துவிட்டு, அஸ்தியை எடுத்து வந்துள்ளனர்.

வடக்கு இலங்கை மாகாணத்தின் ஓய்வுபெற்ற கல்வித் துறை அதிகாரியான வல்வை ஆனந்தராஜ் நம்மிடம், ''அம்மாவின் மோசமான கடைசிக் காலத்துக்கு நாங்களும் காரணமாக இருந்துவிட்டோமே என்பது வருத்தம் அளிக்கிறது. சொந்த ஊரில், நம்மவர்கள் சிறப்பான சிகிச்சை அளித்தும், மருத்துவமனையில் இருந்த அம்மாவை சிங்கள மக்கள் ஒரு காட்சிப் பொருளைப்​போலத்தானே பார்த்துச் சென்​றார்கள். தமிழ்நாட்டில் உரிய காலத்தில் சிகிச்சை அளிக்க அனுமதி அளித்திருந்தால், அவருக்கு இப்படி எல்லாம் நடந்திருக்குமா? தமிழக உறவுகள் அம்மாவை இப்படி விட்டிருப்பார்களா?'' என்றார் மனத்தாங்கலுடன்.

யாழ்ப்பாண முன்னாள் எம்.பி-யான சிவாஜிலிங்கம், ''அம்மாவின் உடலை விதைக்கலாம் என சிலர் என்னிடம் சொன்னார்கள். அதை வன்மையாக மறுத்தேன். அவர்களுக்குக் காரணம் புரியவில்லை. ஞாயிறு, திங்கள் இரு நாள்களும் இரவு முழுவதும் அம்மாவின் உடல் அருகிலேயே இருந்தோம். ஆனாலும் சிதையின் மீது ஒரு காட்டிமிராண்டித்தனத்தை செய்திருக்கிறார்கள். இப்படி இருக்கும்போது, இங்கே எப்படி இனங்களுக்கு இடையில் நல்லிணக்கம் வரும்?'' என்று கோபப்பட்டார்.

''சிங்களவருடன் எங்களை சமாதானமாக வாழச் சொல்​பவர்கள், இதற்குச் சரியான பதில் சொல்வார்களா?'' என்ற ஈழத் தமிழர்களின் கேள்வி நெஞ்சில் அறைகிறது!


ஜூனியர் விகடன்

Monday, January 31, 2011

ஈழத்துக்காகத் துடித்தவர்களே, இல்லத்துக்காக கண்ணீர் வடிப்பவர்களே நீங்கள் இந்த நேரத்தில் வாங்க வேண்டியது காசு அல்ல… காவு! - திருப்பி அடிப்பேன் 14

சிறகுவிரித்ததோ வானத்தில் ஏறியோர் சிட்டுக்குருவி பறக்குதே… அதுவிடுதலை.
உறவுகூடிச்சிற் றெறும்புகள் அணிவகுத்து
ஊருகின்றன வேயது விடுதலை.
இறைமையோடுநான் நானென இருந்திடும்
இருப்பு என்பதே விடுதலை எனப்படும்
வறுமை வந்துறும் போதுமின் னொருவனின்
வாசல்நின்றிடா வாழ்வதே விடுதலை!



- புதுவையாரின் கவிதை புலன்களை முறுக்குகிறது. வாழக் கதியற்ற ஏழைகளின் வறுமையையே வாழ்வாதாரமாகக் கொண்டு, தமிழக அரசியல் வாழ்ந்து வருகிறதே…



மின்சாரத் தட்டுப்பாடு, விலைவாசி ஏற்றம், சட்டம் ஒழுங்குச் சீர்கேடு, சாதியப் பிரச்னைகள், குழந்தைகள் கடத்தல், கல்விக் குளறுபடிகள், தற்கொலைகள் என என்னதான் ஆயிரம் பிரச்னைகள் நிலவினாலும், ஆயிரம் ரூபாய் நோட்டின் மூலம் அனைத்தையும் மறக்கடித்துவிட முடியும் என நினைக்கிறது ஆளும் கட்சி. வாக்குக்குப் பணம் வாங்குவது தவறு என்பது தெரிந்தும், வாழ்க்கையை ஓட்ட வக்கற்ற நிலையால் கையேந்தும் நிலையில்தான் கடைக்கோடி தமிழனும் இருக்கின்றான். வறுமையை தமிழக அரசியல்வாதிகள் வாழவைக்கும் பின்னணி வாக்குகளை விலைக்கு வாங்குவதற்குத்தான்!

ஒரு ரூபாய் அரிசித் திட்டத்தால் பலன் அடைபவர்கள் ஒரு கோடியே 88 லட்சம் பேர், கூட்டுறவு கடன் தள்ளுபடியால் பலன் பெற்றவர்கள் 23 லட்சம் பேர், இலவச தொலைக்காட்சிப் பெட்டி வாங்கியவர்கள் ஒரு கோடியே 50 லட்சம் பேர், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் நலம் பெற்றவர்கள் ஒரு கோடியே 34 லட்சம் பேர்… இன்னும் இன்னும் பல கணக்குகளைப் போட்டு மொத்தமாக பலன் பெற்றவர்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுக்கொண்டு இருக்கிறது ஆளும் தி.மு.க. அரசு. கவர்ச்சித் திட்டங்களாலேயே வாக்குகளைக் கவர முடியும் என்பதை உணர்த்துகின்ற கணக்கு இது. ‘இதை விதைத்தால் இதை அறுக்கலாம்’ என்கிற வணிக நோக்கம் மட்டுமே கொண்ட ஒரு வியாபாரியைப் போல் அரசியல்வாதிகள் இன்றைக்கு இயங்கத் தொடங்கிவிட்டார்கள்.

வயிற்றுக்கு மீன் வழங்க வேண்டியவர்கள் தொண்டை​யைக் குறிவைத்து புழுகோர்க்கப்பட்ட தூண்டிலை வீசுவது வாக்குகளை வளைக்க வேண்டும் என்பதால்தானே! அதற்காகவே, பணத்தை இறைக்கிறார்கள், கவர்ச்சித் திட்டங்களை குவிக்கிறார்கள், தேர்தல் நெருங்க நெருங்க தெருக்கள் தோறும் வலம் வருகிறார்கள். ‘இப்படி ஒரு இடம் இருக்கிறதா’ என்பதைக்கூட இத்தனைகாலம் அறியாமல் இருந்தவர்கள் குக்கிராமப் பகுதியிலும் குனிந்து நுழைகிறார்கள்.

பதவிப் பகட்டுகளில் மிதந்தவர்கள், திடீரென நம்மைத் திரும்பிப் பார்ப்பது ஏன்? கடன் கேட்டாலும் கொடுக்க மறுத்தவர்கள் வலிய வந்து கவர் போட்டு பணத்தை திணிப்பது ஏன்? அலுவலகம் தேடிப்போய் அலைந்து திரிந்தாலும் காண மறுத்தவர்கள் வீடு தேடி வந்து விசனம் விசாரிப்பது ஏன்? வாக்கு என்ற ஒற்றை வார்த்தையை வளைக்கத்தானே இத்தனை கூத்துகளும். பணத்துக்கு உரிமைகளை விற்கும் இந்த இனத்துக்கு என்றைக்கடா தம்பி விழிப்பு வரும்? பாலில் சத்தியம் வாங்கி, தலைப்பிள்ளை உச்சியில் அடித்து, சாமியின் சந்நிதியில் முன்னிறுத்தி பணத்தைக் கொடுத்து, வாக்குக்கு பேரம் பேசும் ஈனத்தனங்களை தமிழன் எப்படியடா தாங்கிக் கொள்கிறான்?

‘யப்பா சாமி உனக்கு ஏதப்பா இவ்வளவு பணம், நாத்து பறிச்சியா? சேத்துல உருண்டியா? எங்கிருந்தப்பா சேத்த இவ்வளவு பணத்த? தேடிவந்து பணம் கொடுக்க நீ என் பங்காளியா… அங்காளியா?’ எனக் கொடுக்க வந்தவர்களை உன் கொடுக்கால் கொட்டாதது ஏனடா தமிழா?

அவனிடம் கொடுத்த வாக்கைக் காப்பதாக சொல்லி உன்னிடம் உள்ள வாக்கை ஊனமாக்குவது தவறில்​லையா தமிழா? கவர்ச்சித் திட்டங்களால் உன்னை மட்டமாக்கியவர்கள் கடைசி நேரப் பணத்தால் உன் சினத்தையும் சிதைக்கிறார்களே… இந்த தேசத்தின் அழுக்கை பொடி பொடியாக்கத்தானடா உன் விரலில் மை வைக்கிறார்கள். ஒரு துளி மையால் மொத்தத்தையும் சுத்தமாக்கும் வாய்ப்பு எப்போதடா வாய்க்கும். பிரியாணி பொட்டலத்தால் உன் வாக்கை பிரிக்கப்பார்ப்பதும், மது புட்டியால் உன்னை மயக்கப் பார்ப்பதும் இன்னும் எத்தனைக் காலத்துக்கு தமிழா தொடரும்

சமீபத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தின் கடலோரப் பகுதியான பேராவூரணியில் நடந்த பொதுக்கூட்டத்தில் நான் பேசினேன். இன்றைய போக்கின் சக்தியையும் நம் வாக்கின் சக்தியையும் உரக்கச் சொன்னேன். கட்டுக்கடங்காத கூட்டம் கொட்டக்கொட்ட கேட்டது. கூட்டம் முடிந்து திரும்புகையில் கிராமத்துச் சுவடு சுமந்த பெரியவர் ஒருவர் என் கைகளைப் பற்றிக்கொண்டு பேசினார்.

‘நீங்க பேசுறதைக் கேட்கிறப்ப ரத்தமே முறுக்கேறுது தம்பி. நீங்க சொல்ற மாதிரி அஞ்சுக்கும் பத்துக்கும் ஆசைப்பட்டு ஓட்டுப்போடுற கூட்டம்தான் நாங்க. ஆனா, இந்த தடவை நிச்சயம் பணம் வாங்க மாட்டோம். இருந்தாலும் நாங்க யாருக்குத் தம்பி ஓட்டுப் போடுறது?’ எனக் கேட்டார். பணம் வாங்கக் கூடாது என்று முடிவெடுத்ததே ஜனநாயகத்துக்கு கிடைத்த பாதி வெற்றிதான். ‘யார் வரவேண்டும் என்பதை தீர்மானிக்க முடியாவிட்டாலும் யார் வரக்​கூடாது என்பதை நிச்சயமாக நீங்கள் புரிந்திருப்பீர்கள். அதுவே உங்கள் வாக்கு யாருக்கு என்பதை உங்களுக்கு உணர்த்திவிடும்’ என்று சொன்னேன். அந்தக் கடலோரத் தமிழனிடம் ஏற்பட்ட விழிப்பும் முழிப்பும் கடைக்கோடித் தமிழனுக்கும் ஏற்படும் நாளில் நிச்சயம் இந்த தேசத்துக்கு நிம்மதி பிறக்கும்.

இதில் கொஞ்சமும் சகிக்க முடியாத கொடுமை என்னவென்றால், வாக்குப் போடுவதை தேவையற்ற வேலை என்று எண்ணி அதைப் புறக்கணிப்பது. வாங்கிக்கொண்டு வாக்கு போடுவது எவ்வளவு மோசமான காரியமோ, அதற்குச் சற்றும் குறையாததுதான், வாக்கு போடாமல் புறக்கணிப்பதும். புறக்கணிக்கவோ, பொழுதைக் கழிக்கவோ நீங்கள் தவறவிட்ட நல்ல வாக்கு எங்கோ ஒரு மூலையில் கள்ளவாக்காக பதிவாகிறதே, அதை ஏன் உணர மறுக்கிறீர்கள்? ஒரு தொகுதியில் வெறும் நாலு ஓட்டு மட்டுமே விழுந்தாலும் அதில் மூன்று ஓட்டு வாங்கியவனுக்கு வெற்றி என்று அறிவிப்பதுதான் நம் விசித்திர ஜனநாயகத்தின் வழக்கம். இலங்கையில், வெறும் எட்டு ஓட்டுகள் மட்டுமே வாங்கிய டக்ளஸ் தேவானந்தா அங்கு அமைச்சராக பொறுப்பேற்றது புறக்கணிப்பு காட்டும் மேதாவிகளுக்குப் புரியாதா?

வறுமை தீரவில்லை என்று சொல்லி பணம் வாங்குபவனுக்கும், பொறுமை இல்லை என்று சொல்லி புறக்கணிப்​பவனுக்கும் என்ன வித்தியாசம்?

இதற்கிடையில், இன்னும் சிலரோ தங்களின் புறக்கணிப்பை பதிவு செய்யும் விதமாக 49ஓ-வுக்கு வாக்களிக்கிறார்கள். அதனால் என்ன பயன் என்பது அந்த அறிவாளிகளுக்கே வெளிச்சம். ஓ போட்டால் எதிரிகள் நமக்கு ஓ போட்டுவிட மாட்டார்களா? ஒரு வாக்கால் ஒரு நாட்டின் போக்கையே மாற்ற முடியும் என்கிற உண்மை புரியாமல் வாக்காளன் இப்படி வாடிக் கிடக்கிறான் என்றால் தேர்தல் ஆணையத்தின் பாராமுகம் அதைவிடப் பரிதாபம்.

கண்ணுக்கு முன்னே காசுகள் வீசப்படுவது தெரிந்தும் கைகட்டப்பட்ட நிலையில்தான் அதிகாரிகள் அல்லாடுகிறார்கள். வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணிக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதாலேயே அவர்களுக்கு ஆயிரம் விதமான சலுகைகளை வழங்கி ஆதாயம் தேடப்பார்க்கிறது ஆளும்கட்சி. மாற்று மாநில ஆசிரியர் பெருமக்களை தேர்தல் பணிக்குப் பயன்படுத்தினால் ஆளும்கட்சியின் ஆதாய நோக்கை நிச்சயமாக தடுக்க முடியும். உடனே, ‘மாற்று மாநிலத்தவர்களால் மொழி புரியாமல் எப்படி பணியாற்ற முடியும்?’ என்ற கேள்வி பாயக்கூடும். மாற்று மாநிலத்தைச் சேர்ந்த எத்தனையோ பேர் நம் மாநில தேர்தல் ஆணையாளர்களாக பணியாற்றி இருக்கிறார்களே அடையாள அட்டை வைத்து பெயரையும் முகத்தையும் சரிபார்க்க மொழி அறிவு முக்கியமா என்ன?

தேர்தல் ஆணையம் பெரும் கவனம் எடுத்து பரிசீலிக்க வேண்டியது, அடையாள மை குறித்த ஆதங்கத்தைத்தான். அஞ்சு ரூபாய்க்கு பொருள் வாங்கினால் கூட பணம் கொடுத்ததற்கு சாட்சியாக ரசீது தருகிறார்கள். ஆனால், விலைமதிக்க முடியாத வாக்கை செலுத்தும் வாக்காளனுக்கு ஒரு துளி மைதான் ரசீதா? வாக்காளர் அடையாள அட்டை போலவே வாக்கை செலுத்தியதற்கு ஆதாயமாக ஒரு அட்டை வழங்கலாமே. மையை அழிக்கக்கூடிய வழிமுறைகளை எல்லாம் கள்ள ஓட்டுக்காரர்கள் இதுவரை கண்டுபிடிக்காமல் இருப்பார்களா என்ன?

முறைகேடுகளை தவிர்க்க வேண்டிய தேர்தல் ஆணையம் முடங்கிக் கிடப்பதால்தானே தேர்தல் என்றாலே நமக்கு திருமங்கலம் நினைவு வருகிறது. ‘நம் எம்.எல்.ஏ. ஜெயிச்சு நல்லது செய்வாரு’ என நம்பிய காலம் போய், ‘நம் எம்.எல்.ஏ. மண்டைய போட்டார்னா தேவலாம்’ என எதிர்பார்க்கிற காலம் உருவாகியது எதனால்? அள்ளி இறைக்கிற கூத்துகளை அதிகாரிகள் தடுக்காததால்!

தேர்தலுக்கு மிகக்குறுகிய காலமே இருக்கிறது தமிழா, உன் கையில் இருக்கிற வாக்கு மிகப்பெரிய கருவி.

வாக்காளப் பெருங்குடி மக்களே என வாய் பூரிக்க சொன்னபடி குனிந்த தலையும், கும்பிட்ட கைகளுமாய் உன் வீடு தேடி வருவார்கள். விலை பேசுவார்கள், ஆதரிப்பீர்… வாக்களிப்பீர் என வாக்கு கேட்கும் வார்த்தைகளில் கூட பீர் விற்பார்கள். ஈழத்துக்காகத் துடித்தவர்களே, இல்லத்துக்காக கண்ணீர் வடிப்பவர்களே நீங்கள் இந்த நேரத்தில் வாங்க வேண்டியது காசு அல்ல… காவு!

Friday, November 19, 2010

சிறை மட்டும் தான் தமிழனுக்கு மிச்சம் - நன்றி ஆனந்தவிகடன்

சீமானுக்கு முன்னால் எப்போதும் நான்கைந்து செல்போன்கள் கிடக்கும். 'என் தேசத்தில்


முளைத்த சூரியனே... பிரபாகரா', 'தாயகக் கனவினில் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே...' என்று அழைப்பு மணியோசை அடித்தபடியே இருக்க, "கொஞ்சம் தடத்தில் இருங்க தம்பி" என்று அடுத்தடுத்த செல்போன்களில் பேசியபடியே இருப்பார். இப்போது எதுவும் இல்லை. வேலூர் சிறைச்சாலையில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் நான்கு மாதங்களுக்கும் மேலாக அடைபட்டுக்கிடக்கிறார். 'எங்கள் மீனவனை அடித்தால், உங்கள் மாணவனை அடிப்போம்' என்ற சீமானின் பேச்சு, அவரை சிறைப் படுத்திவிட்டது. சிறைக்குள் எப்படி இருக்கிறார் சீமான்? அவரது வழக்கு நிலவரம் என்ன? சமீபத்தில் சீமானை வேலூர் சிறையில் சந்தித்துத் திரும்பிய வழக்கறிஞர்கள் சிலரிடம் பேசினோம்.

"கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது இதேபோன்று தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சீமான் கைது செய்யப்பட்டார். சீமான் மட்டும் இன்றி, கொளத்தூர் மணி,

நாஞ்சில் சம்பத் போன்றவர்களும் இதே சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சிறிது காலத்துக்குப் பிறகு, தே.பா சட்டம் பாய்ச்சப்பட்டது தவறு என மூவரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது. இப்போதும்கூட வழக்கு விசாரணைக்கு வந்தால், மிக எளிதாக சீமானை விடுவித்துவிட முடியும். ஆனால், அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ததோடு விட்டுவிட்டார்கள். இதனால், சீமானின் வழக்கு விசாரணைக்கு வருவது தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. நான்கு மாதங்களாக இதுதான் நடக்கிறது. நாங்கள் சீமானைச் சந்தித்தபோது, இதைப்பற்றி மிகுந்த வேதனையுடன் பேசினார்



'ராமேஸ்வரத்தில் தாக்கப்படும் மீனவத் தமிழனுக்காகத்தான் நான் பேசினேன். நான் பேசியதில் என்ன பிழை? இரண்டு நாட்களுக்கு முன்புகூட ராமேஸ்வரத்து மீனவர்களை நடுக் கடலில் வழி மறித்து, வலைகளை அறுத்து, பிடித்த மீன்களைக் கடலில் கொட்டி, அடித்துத் துரத்தி உள்ளனர் இலங்கைக் கடற்படையினர். இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்டு உள்ளனர். ஒரே ஒரு முறைகூட நமது மீனவர்களைக் காப்பாற்ற இந்திய ராணுவம் முயற்சி செய்தது இல்லை. அப்படியானால், நீங்கள் பாதுகாப்புப் பணி செய்யப் போனீர்களா? இல்லை, பல்லாங்குழி ஆடப்போனீர்களா? இதைப் பேசினால் இறையாண்மை கெட்டுவிடுமா?

இங்கு தமிழனுக்கு என்று எதுவும் இல்லை. நாங்கள் ஓணம் பண்டிகைக்கு விடுமுறை விடுகிறோம்.

உகாதிக்கு விடுமுறை விடுகிறோம். எங்களுடைய தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாளன்று, ஏன் கேரளாவிலும் ஆந்திராவிலும் விடுமுறை விடுவது இல்லை? இதைக் கேட்பது தமிழ்த் தீவிரவாதமா? எவன் எல்லாம் தமிழர்களுக்கு எதிராக இருக்கிறானோ, அவன் எல்லாம் இந்திய தேசியத்துக்கு உண்மையானவன், இந்தியாவை மதிப்பவன். எவன் எல்லாம் தமிழைப் போற்றுகிறானோ, அவன் எல்லாம் தமிழ்த் தீவிரவாதியா? நான் காவிரி நதி நீரில் பங்கு கேட்பது தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரானதாம். அவன் நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி 'காவிரி நீரைத் தர மாட்டோம்' எனச் சொல்வது மட்டும் தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஆதரவானதா? 'முல்லைப் பெரியாறு அணையை உயர்த்த வேண்டும்' எனச் சொல்வது

இறையாண்மைக்கு எதிரானதாம். ஆனால், 'முடியாது. இன்னொரு அணையைக் கட்டுவோம்' எனச் சொல்வது இறையாண்மைக்குப் பாதுகாப்பானதா? அப்படியானால், எப்போதுமே இறையாண்மை என்பதும், தேசியம் என்பதும் தமிழர்களுக்கு மட்டும் எதிரானது தானா?

ஆந்திராவை காங்கிரஸ் ஆள்கிறது. மகாராஷ்டிராவையும் காங்கிரஸ் ஆள்கி றது. உண்மையிலேயே இந்த நாட்டில் தேசியம் இருப்பது உண்மையானால், மகாராஷ் டிராவின் முதல்வரை ஆந்தி ராவுக்கும், ஆந்திராவின் முதல்வரை மகாராஷ்டிரா வுக்கும் மாற்றி ஆள வைக்க முடியுமா? ஒரே கட்சி... ஒரே தேசம். முடியுமா? முடியாது! ஏனென்றால், இந்த தேசம் அடிப்படை யில் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டு இருக் கிறது. எல்லா மொழி வாரித் தேசிய இனங்களையும் அந்தந்த மண்ணைச் சேர்ந்த மக்கள் மட்டுமே ஆண்டு இருக்கிறார்கள், தமிழ்நாட்டைத் தவிர!

அன்று திராவிடக் கட்சிகளை, தேசியக் கட்சியான காங்கிரஸ் எப்படி வளரவிடாமல் அடக்கி ஒடுக்கியதோ, அப்படி இன்று தேசியக் கட்சிகளும், திராவிடக் கட்சிகளும் சேர்ந்து எங்களை நசுக்குகின்றன. தமிழன் ஒரு தனித்த தேசிய இனம், அவனுக்கு என்று ஓர் இறையாண்மை இருக்கிறது என்பதைத் தமிழனே இன்னும் உணரவில்லை. இவன் சாதிகளாகப் பிரிந்துகிடக்கிறான். சிறைச்சாலை மட்டும்தான் தமிழனுக்கு விதிக்கப்பட்ட இடமாக, வேறு யாராலும் பறிக்கப்படாத இடமாக மிஞ்சி இருக்கிறது!' என்று கோபம் வெடிக்கப் பேசிய சீமானைப் பார்க்கும்போது, அவர் இருக்கும் இடம்தான் சிறையே தவிர,

சிந்தனையில் எந்த மாற்றமும் இல்லை என்பது புரிந்தது.அரசியல் கைதிகளுக்கான அறை சீமானுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது. தினமும் அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்கிறார். உள்ளுக்குள் இருக்கும் கைதிகளுடன் அரசியல் பேசுகிறார். சிறைக்குள் செய்தித்தாள்கள், வார இதழ்கள் அனைத்தும் வந்துவிடுவதால், அனைத்தையும் படித்துவிடுகிறார். எங்களிடம் இயக்குநர் தங்கர்பச்சான் குறித்து மிகுந்த கடுப்போடு பேசிய சீமான், 'தன்னுடைய சொந்த வேலையாக முதலமைச்சரைப் பார்த்து விட்டு, நான் ஏதோ விடுதலைக்குப் பிச்சை கேட்பதுபோன்ற தோற்றத்தை வெளியில் உண்டாக்கிவிட்டார்' என்று ரொம்பவும் கோபப்பட்டார்!" என்ற வழக்கறிஞர்களிடம், 'வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் சீமானின் நிலைப்பாடு என்ன? அதைப்பற்றி எதுவும் சொன்னாரா?' என்று கேட்டோம்.

"கேட்டோம். தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை. பொது எதிரி காங்கிரஸ் என்பதில் உறுதியாக இருக்கிறார். காங்கிரஸை வீழ்த்துவது மானமும், சுய மரியாதையும் உள்ள தமிழர்களின் கடமை என்ற சீமான், நாம் தமிழர் இயக்கத்தினரை இப்போது காங்கிரஸுக்கு எதிரான தேர்தல் வேலைகளுக்கு முடுக்கிவிட்டு இருக்கிறார்!" என்றார்கள்.