Thursday, August 16, 2012

டெசோ வின் பின்னணி... ஒரு பார்வை

Tamil Ealem Supportes Organinsation (TESO - டெசோ) இப்பொழுது எங்கு பார்க்கினும் இதை பற்றி தான் பேச்சு.... சன் டிவி மற்றும் அதன் குழும தொலைகாட்சிகள்அனைத்திலும் எதோ பெரிய வெற்றி கிடைத்தது போல இந்த மாநாடு நடத்த கிடைத்த தீர்ப்பு எதோ அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றது போல கூறி கொண்டு இருக்கிறார்கள்....

2009 இல விடுதலை புலிகள் தோற்கடிக்க பட்ட பொது... தமிழகத்தில் பல பேர் புர்ரீசல்கள் போல தமிழ் ஈழம், விடுதலை புலிகள், பிரபாகரன், போராட்டம். என பல பேர்கள் இதை பற்றி பேசினார்கள்... நமது சமுதயாடிற்கே உரியதான நியாபக மறதி வியாதியால் அதை மறந்தும் விட்டோம்.... அனால் தற்பொழுது திரும்பவும் வந்து இருக்கிறது டெசோ என்ற பெயரில்...

இலங்கையில் என் தமிழ் இன மக்கள் அழிக்கப்பட்டு சரியாக முன்று ஆண்டுகளுக்கு பிறக்கு இப்பொழுது மிண்டும் தலையெடுத்து இருக்கிறது இந்த டெசோ.. டேசொவுக்கு தலைமை தாங்கும் இன் இந்த கருணாநிதி யார்??

தமிழ் இன மக்களின் காவல் தெய்வம், அபத்தந்தாண்டவன், என்று தன்னை தானா கூறி கொள்ளும் ஒருவன்.... இவன் உண்மையுள் 2009 க்கு முன் இறந்து இருந்தால் உண்மையுள் இந்த உலகம் மட்டும் அல்ல நானும் அப்படி தான் சொல்லி இருப்பேன்..... ஆனால் இப்பொழுது தமிழ் இனத்தின் துரோகியாக மட்டுமே என்னக்கு தெரிகிறான்... என்னது தமிழ் இன மக்கள் அங்கு கொத்து கொத்தாக கொல்ல பட்ட பொது இங்கு காலை சிற்றுண்டி பின் மதிய உணவுக்கு முன் தனது உண்ணாவிரத்த போராட்டத்தை முடித்த கொண்ட உத்தமன் தான் இந்த கருணாநிதி....


இந்த கருணாநிதி இன் அரசியல் வரலாற்றை கொஞ்சம் திரும்பி பார்போம்.... எப்பொழுது எல்லாம் திமுக சரிவை நோக்கி போனதோ அப்பொழுது எல்லாம் இந்தி எதிர்ப்பு என்ற தந்தை பெரியாரின் வாதத்தை முன் வைத்து அரசியல் பண்ணினார்.... இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழக வரலாற்றை மற்றும் அல்ல இந்திய வரலாறை கூட திரும்பி பார்க்க வைத்தது.... இது போன்ற பல போராட்டங்கள் திமுகவுக்கு வெற்றியை பெற்று தந்தாலும் இந்த TESO போராட்டம் பெயரளவில் வேணும் என்றால் வெற்றி பெறலாம்.... ஆனால் மக்கள் மத்தியுள் கண்டிப்பாக வெற்றி பெறாது.....


டெசோ உருவான விதம்:

1984 & 1985 தொடக்கத்தில் LTTE பிரபாகரன் தமிழ் ஈழ போராட்டத்துக்கு நிதி சேகரிக்க தமிழ் நாட்டுக்கு வந்து இருந்த சமயம், அப்பொழுது தமிழக முதல் அமைச்சராக இருந்த MGR தமிழக மக்களிடம் இருந்து ஒரு கோடி பணம் வசூலித்து குடுக்க இருந்தார், ஆனால் அப்பொழுதும் மத்திய அரசு நெருக்கடி காரணமாக்க எம்ஜிஅர் பழ. நெடுமாறன் இடம் குடுத்த மக்கள் பணத்தை வாங்கி விட்டு.. தனது சொந்த பணம் ஒரு கொடியை குடுத்து தனது சொந்த காரிலிய அனுப்பியும் வைத்தார் அது தனி கதை..

.

ஆனால் அதே நேரம் எதிர்கட்சி தலைவராக இருந்து கருணாநிதியும் LTTE மற்றும் இதர போரட்ட குழுக்கள் அனைத்தையும் கூட்டி ஒரு meating க்கு ஏற்பாடு செய்தார்.... ஆனால் LTTE ஏற்கனவே எம்ஜிஅர் இடம் வருவதாக ஒப்புக்கொண்டு உள்ளதால் பிரபாகரன் செல்ல வில்லை.. அவரின் சார்பாக இருவரை அனுப்பி வைத்தார்.... அவர்களுக்கு கருணாநிதி ரூபாய் 15,000/- கூடுக்கிறேன் என்று கூறினர்.. ஆனால் அதை LTTE ஏற்கவில்லை...

இதனால் மனகசப்பு அடைந்த கருணாநிதி LTTE க்கு எதிராக ஒரு இயக்கத்தை தமிழகத்தில் உருவாக்க நினைத்து Tamil Eelam Liberation Organization (TELO - டெலோ) இந்த இயக்கமும் முதலில் LTTE போல ஒரு ஆயுதம் தாங்கிய போரட்ட குழு வாகத்தான் இருந்தது... அதன் பிறக்கு விடுதலை போராட்டத்தை முன் எடுத்த செல்ல LTTE தனது சிந்தனை உடன் ஒத்த கருத்து உடைய பிற போராட்ட குழுக்களை அளித்து தான் மட்டும் விடுதலை போரட்டத்தை முன் எடுத்து சென்றது.... அந்த நேரத்தில் டெலோ உன் அளிக்க பட்டது, டெசோ உம் தான்.. மிஞ்சி இருந்த டெலோ உறுப்பினர்கள் அரசியலில் இறங்கி விட்டார்கள். கடந்த 2010 இலங்கை பார்லிமென்ட் தேர்தலில் டெலோ உறுபினர்கள் இரண்டு பேர் தேர்ந்து எடுக்க பட்டு இருக்கிறார்கள்....


இப்பொழுது திரும்பவும் டெசோ வை கையில் எடுத்து இருக்கிறார் கருணாநிதி இது கண்டிப்பாக தமிழ் ஈழ மக்களின் நலனுக்காக எடுக்க பட வில்லை.. இது அவரின் சொந்த அரசியல் நலனுக்காக மட்டுமே திரும்பவும் உருவாக்கி இருக்கிறார் இவர்.

நமது சமுதாயத்திற்கு உரியதான நியாபக மறதி, நமது முதலமைச்சர் ஜே வின் பாணியில் சொன்னால் Selective Amnesia. அவரின் பழைய கபட நாடகங்களை எல்லாம் மறந்து தமிழ் ஈழடிற்காக யாரு போராடினாலும் நாம் ஆதரவு தெரிவிப்பது வழக்கமாக்கி விட்டது..... சனியன்னால நல்லது நடத்த சரி தான்.... இந்த மாநாட்டை ஈழ ஆதாரவாளர்கள் சீமான், பழ. நெடுமாறன், வைகோ என யாரும் ஆதரவு தெரிவிக்க வில்லை. என்பது குடுதல் செய்தி...


எது எப்படியோ இந்த போராட்டத்தில தமிழ் ஈழ மக்களுக்கு நல்லது நடக்குமாயின் எல்லாம் நன்மைக்கே....

இப்படி க்கு.... ஈழ போராட்டத்தில் அண்ணன் பிரபாகரன் லட்சிய கனவோடு.... நான் உங்களுள் ஒருவன்

Wednesday, June 20, 2012

ஒரு குடிமகனின் புலம்பல்......


என் அருமை இந்திய குடிமகன்களே..... கோட்டர் க்கு வழி இல்லாமல் கட்டிங் காக கூட்டனி வைத்து இருக்கும் இந்திய குடிமகன்களே, மழையை காரணம் காட்டி ரம் அடிக்கும் நண்பர்களே.... வெயிலை காரணம் காட்டி பீர் அடிக்கும் தோழர்கேளே ஒரு வாட்டர் பாக்கெட்டில் கோட்டர் அடித்து தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் வாராமல் தடுக்கும் தமிழ்நாட்டு இன் தன்மான சிங்கங்களே.......
உங்களுக்கெல்லாம் ஒரு கெட்ட செய்தி...... ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு.... கடைசில பீர் விலையும், கோட்டர் விலையும் ஏத்திடாங்க..... இதுவரை பொறுமையாய் இருந்தது போதும்.. பீர் போல பொங்கி எழுவோம்....

பொங்கி எழுந்து என்ன பண்ணனும்னு கேட்கரீங்களா????? போறோம் மச்சி போறோம் ..... பாண்டிச்சேரி போறோம்...... நாலு பீர் அடிக்கிறோம்..... நாற்பது தடவே உச்சா போறோம்..... தலைலே துண்ட போட்டுகிட்டு பாடி பறந்த கிளின்னு பாட்டு பாடுறோம்.... அப்படியே final touch ஆளுக்கு ரெண்டு பீர் போடுறோம்.... அப்படியே கிளம்பி சென்னை வரோம்........
மொதல்ல பால் விலையை கூட்டுனிங்க சரி இது எல்லாம் வீட்ல சமையல் செய்து சாப்பிடரவங்க பிரச்ன்னை.... நாம்தான் கடைல account வச்சு குடிகிறவங்க தானே நமக்கு என்னனு விட்டாச்சு...... அப்புறமா பஸ் ல டிக்கெட் விலையே கூட்டுனிங்க சரி அது பஸ்ல டிக்கெட் எடுத்து போறவங்க பிரச்ன்னை நாம்தான் பஸ்ல டிக்கெட் எடுக்க போறது இல்லைய பிறகு என்னனு விட்டாச்சு.....பெட்ரோல் விலைய கூட்டுனிங்க அதுல்லாம் பைக்ல கார்ல போறன்வங்க பிரச்ன்னை நம்மதான் லிப்ட் கேட்டு போறவங்க தானா so நமக்கு எந்த problem ம்மு இல்லன்னு நினைச்சா வச்சான்ல ஆப்பு .......

இப்படி புலம்பும் பொது ஒரு புகழ் பெற்ற வரிகள் நியாபகத்துக்கு வருகிறது..... ஹிட்லரின் நாஜி காலத்து மார்ட்டின் நிமொல்லரின் கவிதையை நினைவுகூருங்கள். “முதலில் அவர்கள் கம்யூனிஸ்ட்களை ஒடுக்க வந்தார்கள். நான் எதுவும் சொல்லவில்லை ஏனென்றால் நான் கம்யூனிஸ்ட் இல்லை. அடுத்து அவர்கள் தொழிற்சங்கக்காரர்களை ஒடுக்க வந்தார்கள். நான் எதுவும் சொல்லவில்லை ஏனென்றால் நான் தொழிற்சங்கக்காரர் இல்லை. அடுத்து அவர்கள் யூதர்களை ஒடுக்க வந்தார்கள். நான் எதுவும் சொல்லவில்லை ஏனென்றால் நான் யூதர் இல்லை. அப்புறம் அவர்கள் என்னிடம் வந்தார்கள். எனக்காகப் பேச யாரும் மீதி இல்லை.”.
என்ன வாழ்கை டா இது???? எங்கல குடிகரானு சொல்லுற இந்த உலகம்..... இந்த உலகம் எல்லாம் சேர்ந்து இந்த குடிகரானுகளே ஏமாத்துரானுங்க ஒரு கோட்டர் நா ஒரு லிட்டர் ல நாலுல ஒரு பங்கு.. அப்படினா 250 ml இருக்கனும்... அனா ஒரு கோட்டர் ல 180ml தான் இருக்கு.... சொல்லுங்க ‍‌மக்கேளே யாரு யார ஏமாத்துற?????

மாண்புமிகு அம்மா அவர்கள...... பால் விலை, மின்சாரம், பஸ் கட்டணம் உயர்த்தும் பொது தொலைகட்சியுள் வந்த சோகமாய் முகத்தை வைத்து கொண்டு.... நான் யாரிடம் போவேன்.... தமிழ்நாட்டு மக்களாகிய உங்களிடம் தான் நான் வர முடியும்... பொதுத்துறை நிறுவனகள் அனைத்தும் நஷ்டத்தில் இயங்கும் பொது விலைவாசி உயர்வு தவிர்க்க முடியாத ஒன்று என்று கூரினர்கள்..... இப்பொழுது நான் ஒன்று கேட்கிறேன்... எந்த டாஸ்மாக் நஷ்டத்தில் போகுதுங்கோ??? கொஞ்சம் சொல்லுங்க.... எங்கள் சக குடிமகன்களை அந்த டாஸ்மாக்கு அனுப்பி வைத்து.... நஷ்டம் ஏற்படாமல் பார்த்து கொள்ளுர்கிறோம்......
தமிழ்நாட்டு ஏன் இந்தியாவில அதிகாமாக லாபம் சம்பாதிக்கும் ஒரே தொழில் நம்ம டாஸ்மாக் தான்.... இங்கயும் விலையேற்றம் தாங்க முடியலைங்க............ இப்படி உங்களிடம் புலம்பி கொண்டு இருப்பவன் ஒரு சாதாரண உங்களில் ஒரு குடிமகன்......
பீர் அருந்துவதில் உள்ள 10 நன்மைகள்.

Sunday, May 27, 2012

பார்ப்பனியத்தால் மறைக்க படும் உண்மைகள்......


பார்ப்பனியத்தால் அப்படி என்ன உண்மைகள் மறைக்க படுகின்றேன.. என்று கேட்டால்???? இந்த பதிவு முழுமையும் படித்து கொள்ளவும்.... சில விசயங்கள் நாம் நாட்டின் வரலாற்று உண்மைகள், குழந்தைகள் மற்றும் பெரியவர்களை கடவுள் என்ற மாயைக்குள் மயக்கும் திறன்.....

சிறுது நாட்களக்கு முன்பு என்னது விட்டிருக்கு சென்று இருந்தேன்..... மாமா பையன், பொண்ணு, சித்தி பசங்க, என்று ஒரு சிறு குழந்தைகள் பட்டாளமே எனது விட்டில் எனது வருகைக்காக வந்து இருந்தார்கள், அனைவருக்கும் முழு வருட பள்ளி விடுமுறை நாட்கள், நானும் ஊருக்கு வருவேன் என்பதால் அனைவரும் எனது விட்டிருக்கு வந்து விட்டார்கள்...... அனைவருடனும் நன்றாக கலந்து பேசி, உரையாடி மகிழ்ந்தேன், அதன் பிறக்கு சிறிது நேரம் தொலைகாட்சி பார்க்கலாம் என்று நினத்தால்.... விட்டிருக்கு வந்து இருக்கும் பொடிசுகள் எல்லாம் கார்ட்டூன் நெட்வொர்க், போகோ, தமிழ் கார்ட்டூன் என்று வைத்து கொண்டு மற்றவர்களை பார்க்க விடாமல் அட்டுழியம் பண்ணி கொண்து இருந்தார்கள், சரி சிறுவர்கள் தானே, நாமும் சிறு வயதில் இருக்கும் பொழுது இப்படி தானே கார்ட்டூன் சேனல் வைத்து கொண்டு அட்டுழியம் பண்ணினோம்..... இப்பொழுது இது அவர்கள் முறை போலும் என்று நினைத்து கொண்டு அவர்கள் பார்த்து கொண்டு இருந்த கார்டூனையே நானும் சிறிது நேரம் பார்த்தேன்..... அன்று முழுவதும் ஹனுமான் வீர தீர செயல்கள் அடங்கிய தொடர் மட்டுமே ஒளிபரப்பி கொண்டு இருந்தார்கள்.... அதையும் இந்த சிறுவர் பட்டாளம், சிரித்து சிரித்து பார்த்து கொண்து இருந்தார்கள்..... அதை போல் செய்து கொண்டு நான் தான் ஹனுமான் என்று கூறி கொண்டும் இருந்தார்கள்.

முதலில் பார்க்கும் பொழுது பரவா இல்லை..... எத்தனை காலம் தான் நாமமும் ஆங்கில படமும் Christianity எகிப்த pyramids பார்த்து கொண்டு இருக்க வேண்டும்....... தமிழில் சில வருடங்கள் முன்பு வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் முழுக்க தமிழ் நாட்டின் கலாசாரம், பாரம்பரியம், சிவன் சிலை என்று தமிழ் பாரம்பரியம் தொட்டு வந்த பொது பார்த்து வியந்தேன்..... அதை போல் இப்பொழுது குழந்தைகளை கவரும் இந்த சொட்ட பீம் நமது இந்திய பாரம்பரியம் மட்டும் இந்தியாவில் உள்ள ஒரு புராண கதையை இந்த குழந்தைகளுக்கு அளிக்கும் பொது அவர்களுக்கு நமது இந்தியாவின் பாரம்பரியம் நன்றாக தெரியுமே என்று பெருமை பட்டு கொண்டு இருக்கும் பொழுது தான் என்னது உச்சன் தலையில் யாரோ அடிப்பது போல் உன்னேர்ந்தேன்........

உண்மையில் இது மட்டும் தான் இந்தியாவின் கலாச்சாரமா ????? இன்னும் எவ்ளோ இருகின்றேன.... அதை எல்லாம் இந்த நாட்டில் இதை பற்றி எவரும் பேசுவது கூட இல்லை..... இப்பொழுது தான் என்னக்கு ஒரு விசியம் புரிகிறது...... ஏன் தமிழ் நாட்டில் பெரியார் காலத்தில் இருந்து இந்த பார்பனியத்தை எதிர்கிறார்கள் என்று..... அவர்கள் அனைவரும் படித்தவர்கள், மற்றவர்கள் படிக்காதவர்கள், அவர்கள் பணக்காரர்கள், மற்றவர்கள் ஏழைகள் என்பதால் மட்டும் அல்ல..... இந்த ஏற்ற தாழ்வு மற்றும் அவர்கள் காரணம் காட்டி போரடி இருந்தால் அவர்களுக்கு கண்டிப்பாக இந்த அளவுக்கு பெரும்பான்மை, ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு அதிகாரம் கிடைத்து இருக்காது.......

பார்ப்பனியர்கள் மட்டும் படிதவர்கள், அவர்கள் மட்டுமே படிதவர்கள் என்னவே அவர்கள் எதோ சொன்னார்களோ அதுவே வரலாறு, பாரம்பரியம் என்று ஆனது, அவர்கள் சொல்லுவதே உண்மை என்றும் ஆனது... உங்களிடம் ஒன்று கேட்கிறேன்... உங்களுக்கு தெரிந்த விடுதலை போராட்ட வீரர்கள் பற்றி கூறுங்கள்....

காந்தி, நேரு, பாரதி, சுபாஸ், சுப்பிரமணியபுரம் சிவா, கட்டபொம்மன், வாஞ்சிநாதன், பகத் சிங்க், அப்பப்பா... இதன் பிறக்கு நமக்கு தெரிந்தது எல்லாம் இது வரை தான்..... என் என்றால் இவர்கள் அனைவரிர்ன் பெயரும் நமது பாட புத்தகத்தில் வந்த பெயர்கள்... இவர்களை தவிர நமக்கு எத்தனை பேரை தெரியும், இது போக நமது வட்டாரம், நமது ஊரில் பெயர் பெற்ற சில பேர் தவிர மற்றவர்கள் நமக்கு தெரியாது..... பேராண்மை என்ற படத்தில் ஒரு கட்டத்தில் ஜெயம் ரவி, மலை வாழ குழந்தைகளுக்கு பாடம் சொல்லி குடுப்பது போல் ஒரு காட்சி வரும் அதில் ரவி கூறுவர் சுதந்திர போராட்டத்தில் மலை வாழ் மக்களின் பங்களிப்பு.... அப்பொழுது நான் எண்ணியது.. என்ன டா இவன் அவன் அவன் பெருமையை பற்றி மற்றும் பேசுகிறேனா என்று,, ஏனென்றால் அவர்கள் பெருமை இந்த பற்பனியாதல் மறைக்க பட்டு இருக்கிறது.... என்னவே தான் அவர்கள் பெருமை அவர்கள் மட்டுமே பேசி வருகிறார்கள்... அவர்களை பற்றி நம்மக்கு தெரிய வில்லை... இன்னுமும் சுதந்திர போராட்டம் என்றால் மெட்டு குடி மக்கள் அவர்கள் தான் பிரிட்டிஷ் காரனுக்கு சலாம் போட்டு அரியணை ஏற்றி வைத்ததும் இவர்கள் தான், அதே பிரிட்டிஷ் காரானை எதிர்த்து நமக்கு சுதந்திரம் பெற்று தந்தாக நம்மக்கு தெரிபவர் கள்ளும் இந்த மெட்டு குடி மக்கள் தான் என்ன கொடுமை சார் இது........????

அவர்களை தவிர வேறு யாரும் இந்த சுதந்திர போராட்டில் பங்கு பெற வில்லையா????

சரி அடுத்தது... நமது தமிழ் மன்னர்கள் எப்படி இருப்பார்கள் ????? இது சிறது மாதங்களுக்கு முன் புதிய தலைமுறை தொலைகாட்சி வந்த ஒரு நிகழ்ச்சி.. தமிழ் மன்னர்கள் மட்டும் அல்ல இந்திய திரைபடத்தில் காட்ட படும் அரசர்கள் பற்றியது... இப்பொழுது நமக்கு தமிழ் அரசன் என்றால் எப்படி ஒரு பிம்பம் நமது கண் முன்னால் வரும்... சரிக பட்டு, வைர வைடுரியம் அணித்து, பகட்டாக முழு உடை அணிந்த ஒருவன் தான் நமது கண் முனால் வருவான்.... ஆனால் உண்மையுள் அப்படி தான் இருதர்களா ???? இந்தியாவில் முதலில் எடுக்கப்பட்ட படம் எடுக்க பட்ட காலகட்டதில் ரவி வர்மாவின் ஓவியங்கள் மிகவும் பிரபலம், அதில் ராஜாக்கள் பற்றி திட்ட பட்ட ஓவியம் தான் அந்த கால படங்களில் ராஜாக்களின் உடை அலங்காரம் செய்ய பெரிதும் உதவின.... அதன் பிறகு இந்திய மக்களுக்கு அரசன் என்றால் அப்படி தான் என்ற ஒரு மாயா பிம்பம் மனதில் தோன்றி விட்டது... அதன் பிறகு பிற மொழிகளில் எடுக்க பட்ட பிற படங்களும் அதைய பின் பற்றின. ஆனால் உண்மையுள் நமது தமிழ் நாட்டு மன்னர்கள் இப்படி பட்ட உடைகள் தான் உடுத்தி வந்து இருபார்களா என்று கேட்டால் கண்டிப்பாக சந்தேகமே??? நமது தமிழ் நாட்டின் சிதொசனம், கலாச்சாரம் என்று பார்த்தல் ஐவகை நிலங்கள் தான்.

இந்த இவகை நிலைத்திருக்கு ஏற்றார் போல் தான் அவர்கள் வாழ்வு ஆதாரம், உடைகள்,நடைமுறைகள் இருந்து இருக்கும், அது மட்டும் இன்றி பாரம்பரிய உடை அன வேஷ்டி மற்றும் துண்டு தான் அணித்து இருப்பார்கள், மேலும் ஒரு வசதியை காட்டுவதற்க வேண்டுமெனில் சில தங்க சங்கலிகள் அணித்து இருக்கலாம், பெண்கள் அதாவது மகாராணிகள் வேண்டும் என்றால் நகை கடையுள் இருக்கும் பொம்மைகள் போல் நகைகள் அணித்து கொண்து இருந்து இருகலாம்.... ஆனால் கண்டிப்பாக வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் வரும் சிவாஜி கணேசன் போல தான் உடை உடுத்தி தூய தமிழ் இல் தான் பேசி இருப்பர் என்றால் கண்டிப்பாக இல்லை.... அவரது வட்டார வழக்க படி... ஏல, வலே, போலே என்று தான் பேசி இருபார்......

இன்னும் ஒரு உதாரணம்.... சில மாதங்களுக்கு முன்பு paypal மற்றும் e -bay இணைந்து நடத்திய அவர்களுது employee 's காண ஒரு போட்டில் unity in diversity என்ற கொள்கைகளை காட்டுவதற்காக மாநிலம் வாரியாக அணைத்து அணிகளுக்கும் பெயர் வைகலாம் என்று அமெரிக்க நிறுவனம் முடிவு செய்தது. ஆனால் இங்கு இருக்கும் உயர் மட்ட மேலாண்மை இயகுனர் அனைத்தும் கிராஸ் பெல்ட் தான்.... அவர்கள் அந்த அந்த மாநிலத்தில் உயர் குடி மக்களின் சாதி பெயரை அந்த மாநிலத்தின் பெயரோடு இணைந்து விட்டார்கள், இதை பார்த்த பின்பு நமது தமிழ் இயகங்கள் சும்மா விடுமா save tamil groups இந்த போராட்டில் குதித்து அமெரிக்க நிறுவனம் மணிப்பும் கேட்ட பின்பு தான் நமது தமிழ் இன உணர்வாளர்கள் இந்த போராட்டத்தை நிறுத்தி கொண்டார்கள்..... இந்த போரட்டத்தின் முக்கிய சரமசம் என்ன வென்றால்.... Iyers of Tamil nadu என்றால் தமிழகத்தில் ஐயர் கல் மாதும் தான் இருகிரர்கல்லா???? மற்றவர்கள் அனைவரும் என்ன ________??????

இப்படி தான் நான் முதலில் சொன்ன முன்று தகவல்களும் நமது நாட்டின் கலாச்சாரத்தை மறைத்து எதோ இவர்கள் மட்டுமே இருப்பது போல தான் வெளியுள் இருந்து பார்பவர்களுக்கு தெரியும்.... அரசர்கள் காலத்து வரலாறு நமக்கு கல்வெட்டு முலம் தான் தெரிந்தது.... நமது நிகழ கால வரலாறு எதிர் காலதிருக்கு எவ்வாறு சென்று சேரும்.... இவ்வாறாக தான்... ஆனால் இந்த பார்பனர்கள் அதை திட்ட மிட்டு முடி மறைத்து எதோ இவர்கள் மட்டுமே இருப்பது போல் ஒரு மாயை உருவாகி விடுகிறார்கள்..... இதை விட குடாது...... நமது பாரம்பரியம் நம்மக்கு முக்கியம் இல்லை என்றால், வரும் காலத்தில் இவர்கள் உருவாகி வைத்த இந்த மாயை மட்டுமே மிஞ்சி இருக்கும்......

இந்த ப்ரசென்னை இப்பொழுது இல்லை இப்பொழுது அனைவரும் படித்தவர்கள், அனைத்து மக்களும் எல்லா இடதிலும் இருக்கிறார்கள், இனிமேல இப்படிபட்ட வரலாற்று பிழைகள் நடக்காது என்பவர்கள் கவனிக்க.... இதுவரை நான் பட்டியல் இட்ட வரலாற்று பிழைகள் மிகவும் குறைவு, இது போல் ஆயிரம் இருக்கிறது.... இவைகள் எப்பொழுது களைய பட போகின்றேன??? முதலில் சாதிகள் ஒழிக பட்ட வேண்டும், எல்லாம் எல்லாருக்கும் சென்று அடைய வேண்டும், அனைத்தும் அனைவருக்கும் தெரிய வேண்டும் அது வரை நான் தொடர்ந்து எழுதி கொண்டே தான் இருப்பேன்.... நான் வேறு யாரும் அல்ல.... உங்களுள் ஒருவன் தான்......

Thursday, March 22, 2012

இன்னொரு முள்ளிவாய்க்கால்

இலங்கையில் தான் தமிழர்கள் படுகொலைகள் செய்ய பட்டார்கள் நாம் என்ன செய்து கிழித்து விட்டோம், சும்மா வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டு இருந்தவர்கள் தானே நாம்..... இப்பொழுது தமிழகத்தில் ஒரு முள்ளிவாய்க்கால் உருவாக்கும் ஆபாயம் ஏற்பட்டு உள்ளது..... அதுதான் இடிந்தகரை.....
இடிந்தகரை இல் அணுஉலை அமைத்து தான் அந்த மக்களை கொல்ல பட வேண்டும் என்பது அல்ல..... அங்கு அணுஉலை அமைப்பதற்கு கூட இந்த மக்கள் கொல்லபடலாம் என்பது தான் இந்த மக்கள் விரோத ஆட்சி இல் செய்கிறார்கள்...... சங்கரன்கோவில் இடை தேர்தல் முடியும் வரை இந்த போரட்டத்துக்கு அதரவு தெரிவிப்பது போல செயல் பட்டு விட்டு இப்பொழுது எதிர்கிறார்கள்.... எப்படி காங்கிரஸ், திமுக 2009 இல் தேர்தல் வரை அமைதியாக இருந்து விட்டு தேர்தல் முடிந்த உடன்.. அங்கு தமிழர்கள் கொத்து கொத்தாக கொன்றார்களோ அதை போல் இப்பொழுது அம்மையாரும் அதற்க்கு சளைத்தவர் அல்ல என்பது போல இங்கயும் தமிழர்களை கொல்ல எத்தனித்து விட்டார்.... என் அவர் உண்மைல்ய்ல் வீர மங்கை, தங்க தாரகை என்றால் தேர்தலுக்கு முன்பு இதை செய்து இருக்கலாமே...

அவர்களின் போராட்டம் நியாயம் இல்லாமல் கூட இருக்கட்டும்... அதற்கு இப்படி தான் ஒரு அரசு தனது மக்கள் மீது போர் தொடுப்பது போல இராணவத்தை வரவழைத்து அந்த மக்களை திறந்த வழி சிறை சாலையில் அடைப்பது போல் அடைபதா????? ...... கூடங்குளம், இடிந்தகரை சுற்றி 144 தடை உதரவு போட்டு அந்த மக்களை தனிமை படுத்தி, அவர்களக்கு பால், தண்ணிர், மின்சாரம், உணவு பொருட்கள் அனைத்தும் தடை செய்ய பட்டு உள்ளது......

எப்படி முள்ளிவாய்க்கால் இல் தமிழர்கள் அன்னைவர்ரையும் ஒரு குறிபிட்ட இடதிருக்கு கட்டயமாக வரவழைத்து அவர்கள் அனைவரயும் கொத்து கொத்தோக கொன்றார்களோ... இப்பொழுதும் இடிந்தகரைஇல் அப்படிதான் இருக்கிறது..... இடிந்தகரை இல் இருக்கும் சில ஆயிரம் மக்களை பணிய வைக்க ஆயுதம் ஏந்திய ராணுவமும், காவல்துறையும் அங்கு முகாம் இட்டு இருக்கிறார்கள். அந்த மக்களின் இயல்ப்பு வாழ்கையை தடுகுகிரர்கள்.... இது எந்த வகையுள் நியாயம்?????

சில நண்பர்கள் கேட்கிறார்கள் இவொலோ நாளாக இல்லாமல் இப்பொழுது என் இந்த போராட்டம் இவொலோ முக்கியம் பெற வேண்டும் என்பது..... நான் ஒன்று கூறி கொள்ளுகிறேன்..... அவர்கள் கூடங்குளம் அனு உலை திட்டம் ஆரம்பம் பொழுது இருந்து போரரட்டம் நடத்தி தான் வருகிறார்கள்.... முதலில் இந்த அனு உலை திட்டம் நேரடியாக தமிழகதிருக்கு வரவில்லை, நமக்கு பக்கத்தில் இருக்கும் இரண்டு மாநிலத்திற்கும் சென்று அங்கு அவர்கள் வேண்டாம் என்று தூக்கி போட்ட திட்டம் தான் இந்த அனு உலை திட்டம், அதை அப்பொழுது இருந்த அரசுகள், நமக்கு இதில் எவ்ளோ பணம் அடிக்கலாம் என்று மட்டும் பார்த்து விட்டு இந்த திட்டதை சரி என்று ஏற்று கொன்றார்கள்..... அப்பொழுது ஆரம்பித்த இந்த போரரட்டம் இன்றும் ஓய்ந்த பாடில்லை.......

நான் ஒன்று கேட்கிறேன்.... ஐயா என்னிடம் ஒரு நல்ல பாம்பு இருக்கிறது.... அதற்கு பல்லும் பிடிங்கி விட்டேன்... அதை சிறிது காலம் உங்களுது விட்டில் வைத்து கொள்ளலாமா என்று யாராவது உங்களிடம் கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்லுவிர்கள்????? சரி வைத்து கொளுகிறேன் என்று சொல்லுவிர்களா ??????? அதை தான் இந்த இடிந்தகரை மக்களும் கூறுகிறார்கள்..... அவர்களுது பயத்தை போக்காமல் இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல் படுவது முட்டாள் தனம்.....

அணு உலை எதிர்ப்பு கூட்டத்தின் தலைவர் உதயகுமார் கேட்கும் கேள்விகளுக்கு யாரும் சரியாக பதில் சொல்லுவத இல்லை, புதிய தலைமுறை தொலைகாட்சி இல் அவர் ஒரு கேள்வி கேட்டால் அரசாங்கம் அதற்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல் அணு உலை மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்று மட்டும் கூறுகிறார்கள்.... இதற்கு காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் நாராயணசாமி.... விமானமே வந்து மோதினாலும் அணு உலை க்கு பாதிப்பு இல்லை என்கிறார் முதலில் இவனை தூக்கி விட்டால் போதும் எல்லாம் சரியாகி விடும்... முதலில் மக்களுக்கு ஒரு படிப்பினை குடுக்கவேண்டும்.... அவர்களின் பயத்தை போக்க வேண்டும்..... அவர்களுக்கு புரிகின்ற மாதிரி சொல்ல வேண்டும்.... அவர்கள் எதற்கும் சரி வரா விட்டால் அந்த திட்டதை வேறு ஒரு இடதிற்கோ அல்லது கை விட வேண்டும் இது தான் ஒரு நல்ல அரசாங்கத்தின் செயல்.... மக்கள் மதிக்காத அரசாங்கம் எதற்கு ????? முதலிலைய அவர்களின் அதரவை பெற்று விட்டு அல்லவா அந்த இடதில் அணு உலை கட்ட பட்டு இருக்க வேண்டும்... அதை விட்டு விட்டு தான் புடித்த முயலுக்கு முன்று கால் என்று ஆணவத்தில் ஆடுவது சரி அல்ல.....

தமிழகத்தில் இப்பொழுது மின்சார தட்டுப்பாடு என்று ஒரு மாய தோற்றதை உருவாக்கி, தமிழகம் முழுவதும் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் மின் வெட்டு என்று மக்கள் அனைவரயும் நம்ப வைத்து, அதற்கு ஒரு வழி கூடங்குளம் அணு மின் நிலையத்தை தொடுங்கவது தான் என்று மக்கள் அனைவரையும் நம்ப வைக்கே சில கட்சி சார்ந்த தொலைகாட்சிகள், செய்தி தாள்கள் முலம் ஒரு மறைவு பிரசாரம் செய்து... உடையகுமர்க்கு எதிராக அனைவரயும் திருப்ப பார்கிறது .நான் ஒன்று கேட்கிறேன்.. இந்த கூடங்குளம் அணு மின் நிலையம் செயல் பாட்டுக்கு வந்தால் அதில் இருந்து கிடைக்கும் மின்சாரம் எத்தனை சதவிதம் நமது தமிழகத்திற்கு கிடைக்கும்.... அதிலும் எத்தனை சதவிதம் பொது மக்களின் உபயோகத்திற்கு கிடைக்கும்... பெரும்பாலும் factories and industries க்கு தான் போகும் மிச்சம் மிதி இருப்பது மட்டுமே பொது மக்களில் உபயோகைதிர்க்கு வரும்.. அப்பொழுதும் தமிழகத்தில் மின்சார தட்டுப்பட்டு இருக்க தான் செய்யும். அதற்கு பதில் மற்று ஏற்பாடு செய்யலாம்.... சூரிய ஒழி வழி கற்று வழியாக மின்சாரம் எடுக்க மக்களுக்கு மானியம் குடுக்கலாம், அதை விட்டு விட்டு.... அந்த மக்கள் மிது பொய் வளைகு போதுவது. பொய்யாக விமர்சனம் செய்யது நல்லவ இருக்கு..... எதோ ஒரு ஜேர்மன் கரனை பிடித்த இவன் தான் அவர்களுக்கு பணம் உதவி செய்தான் என்று கூறி அவனை நாடு கடதுனிர்கள்.... அப்படி அவன் உண்மையுள் பணம் உதவி செய்து இருந்தால் அவனை கைது செய்து விசாரணை அல்லவா செய்து இருக்கே வேண்டும்..... இந்த போரடடிருக்கு எங்கு இருந்து பணம் வருகிறது என்று இந்த போராட்டத்தை கொச்ச படுத்துவது போல் வெளி நாட்டில் இருந்து பணம் வருகிறது என்று கூறுபவர்கள்... அரசாங்கமே இவர்கள் தானே இவர்களுக்கு தெரியாமல் வெளி நாட்டில் இருந்து பணம் எப்படி இந்தியவிற்கு வரும்... அப்படியே வந்தாலும் அதை கண்டு பிடிக்க குட முடியாத இந்த அரசாங்கம் என்ன ______ பண்ணுகிறார்கள்?????? இப்படி இவர்கள் போராட்டத்தை கொச்சை செய்யாமல் இருந்தால் போதும்.....

இவர்கள் அனைவரயும் கொன்று தான் இந்த இடத்தில அணு உலை கடுவிர்கள் என்றால் நீங்கள் உண்மையான மக்கள் நலனில் அக்கறை கொந்த அரசாங்கம் தானே என்று சந்தேகம் வருகிறது....... இந்த போராடத் குழு மீது மீது நடக்கும் அவலங்களை பார்த்து கொண்து சும்மா இருக்க முடியாமல் உங்களிதம் புலம்பி தவிக்கும் உங்களுள் ஒருவன்...........

Tuesday, March 13, 2012

தமிழனுக்கு மானம் இருகிறதா??????

ஐ நா வின் கூட்டத்தில் நடக்க இருக்கும் இலங்கை க்கு எதிரான வாக்கு எடுப்பில் இந்தியா என்ன செய்ய போகிறது?????? தமிழர்களை கண்டால் பிடிக்காத இந்த கேடு கேட்ட காங்கிரஸ் செய்யும் பெரிய காரியம் இந்த வாக்கு எடுப்பில் கலந்து கொள்ளாமல் இருப்பது மட்டுமே......

என் என்றால் இப்பொழுது இந்தியாவிற்கு தேள் கொட்டினது போல் தான்...... கத்தவும் முடியாது கத்தாமல் இருக்கவும் முடியாது..........

இந்தியா இலங்கைக்கு அதரவாக செயல் பட்டாள் அவர்களும் இந்த தமிழ் மக்களின் படுகொலையில் பங்கு இருக்கிறது என்று..... அப்படி இல்லாமல் இலங்கைக்கு எதிராக செயல் பட்டாள் இலங்கை இந்தியா வை காட்டி குடுத்து விடும் ..... என்னவே இப்பொழுது இந்தியா இரு தலை கொல்லி எறும்பாக தவித்து கொண்து இருக்கிறது..... இன்னொரு பக்கம் காங்கிரஸின் செல்வாக்கு இந்தியா முழவதும் குறைந்து கொண்டு இருக்கிறது சமிபத்திய தேர்தல் இதற்க்கு எடுத்து காட்டு....

இந்த நேரத்தில் தமிழ் நாட்டில் உண்மையுள் நாம் என்ன செய்ய வேண்டும்... ஐ நா வில் நடக்க இருக்கும் வாக்கு எடுப்பில் இந்தியா இலங்கைக்கு அதரவாக செயல் பட கூடாது என்று போரட்ட வேண்டும்........இந்தியாவிற்கு அழுத்தம் குடுக்க வேண்டும், நான் எதோ இந்தியாவை முன்றாம் நபராக பார்பதாக நீங்கள் என்ன வேண்டாம்.... நான் இந்தியவை எதிர்ப்பவன் அல்ல.... தமிழர்களை திரோகியாய் பார்க்கும் இந்த காங்கிரேசை தான் எதிர்கிறேன்.... இலங்கையுள் தமிழர்களை படுகொலை செய்யும் பொது அவர்களுக்கு ஆயுத உதவி செய்தது இந்த காங்கிரஸ் தான்..... தமிழ் மீனவர்களை இலங்கை ராணுவம் கொல்லும் போதும் சரி வாய் முடி இருந்தவர்கள் தானே இவர்கள், எங்கோ இருக்கும் சோமாலிய கடல் கொள்ளைகரர்களை பிடிக்கும் நமது கடலோர காவல் படை என்னோ தமிழ் மீனவர்கள் தாக்க படும் போதும் எங்கு போனார்கள் என்று தெரிய வில்லை.....

இன்னும் கூட தமிழகத்தில் இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் மற்றும் தமிழ் இன கொலைகளை பற்றி தமிழகத்தில் பேச எந்த அரசியல் கட்சியும் முன் வரவில்லை.... எதோ சில அரசியல் சாராத இயகங்கள் அப்பொழுதில் இருந்து போராடி கொண்டு தான் இருக்கிறது.... அனால் தமிழகத்தில் பெரிய அரசியல் கட்சிகள் அனைத்தும் அரசியல் நோக்கதிருக்கு மட்டுமே இதை பயன் படுத்தி கொண்டு இருக்கிறார்கள்...... திமுகவோ காங்கிரஸின் அடி வருடியாக இருந்ததது.... ஆதிமுகவோ அவர்கள் அப்பொழுது ஆட்சியுள் தான் இல்லை என்று பார்த்தல்.... அவர்கள் தமிழகத்தில் கூட இருந்தாக தெரிய வில்லை..... அனால் தேர்தலுக்கு முன்னால் ஒரு நான்கு மாசம் மட்டும் பிரசாரம் செய்து வென்று விட்டார்கள்..... இப்பொழுது அவர்களும் இவர்களை போல கடிதம் மட்டுமே எழுதி வருகிறார்கள்.

இப்பொழுது காங்கிரஸ் எல்லா மட்டத்திலும் அடி பட ஆரம்பித்தவுடன் அதன் அடிவருடியாக இருந்த திமுகா இப்பொழுது முழித்து கொண்டு இலங்கையுள் நடந்த போர் குற்றம் குறித்த சேனல் 4 ஆவன படத்தை கலைங்கர் தொலைகாட்சி யுள் ஒலிபரப்புகிறார்கள். அவர்கள்ளிடம் கேட்க நினைப்பது ஒன்று தான்.... 2009 இல் என்ன ______ பண்ணிக்கிட்டு இருதிங்க??????? அப்பொழுது நடந்த நாடகங்கள் நாம் கண்டிப்பாக மறக்க கூடாது.

நாம் பழைய கதைகள் பேசி கொண்டு இருப்பது பயன் அல்ல.... இனிமேல் என்ன செய்ய வேண்டும் என்று பார்போம்..... இப்பொழுது ஒரு முக்கியமான தருணத்தில் இருக்கிறோம். இப்பொழுதாவது என் தமிழ் இன சொந்தங்களுக்கு நடந்த கொடுமைகளை அனைவர்க்கும் கொண்டு சேர்க்க வேண்டும்... இந்தியா இலங்கைக்கு அதரவாக ஐ நா சபையில் வாக்கு அளிக்க கூடாது.. channel 4 இல் வெளியான கொலை களம் புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களை அன்னைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.... தமிழ் ஈழத்தில் நடந்த வன் கொடுமைகளை பற்றிய தெரிதல், அது பற்றிய புரிதல்கள் அனைவரும் பெற வேண்டும்... அதற்கு நாம் அனைவரும் கண்டிப்பாக பாடுபட வேண்டும்... முத்துகுமரன் மரண வாக்குமுலம் அனைவரும் படிக்கச் வேண்டும்.....

இப்பொழுதாவது என்னது மானம் உள்ள தமிழ் இனம் முழித்து கொள்ளுமா என்ற நப்பாசை இல் உங்களிடம் புலம்பும் உங்களில் ஒருவன்........

Thursday, February 23, 2012

ENCOUNTER க்கு பிறக்கு வேளச்சேரி.......

நேற்று இரவு தான் வங்கியை கொள்ளை அடிப்பது எப்படி ??? என்ற ஒரு பதிவு போட்டு விட்டு... கொஞ்ச நேரம் தொலைக்காட்சி பார்த்து விட்டு இரவு 12 மணிக்கு தூங்க சென்று விட்டேன்... காலையில் எழுந்த உடன் ஒரே சோம்பல்.... என்று அலுவலகம் செல்ல வேண்டுமே என்று கடுப்பு ஒரு பக்கம்...... இன்று ஒரு நாள் விடுப்பு போட்டால் என்ன வென்று ஒரு சோம்பல்....... கடைசியுள் சோம்பல் ஜெவித்து அலுவகத்திற்கு விடுப்பு தெரிவிக்கலாம் என்று எண்ணி கொண்டு ..... எழுந்து தொலைகாட்சி ஐ அன் செய்தல்.... வங்கி கொள்ளையர்களை காவல் துறை என்கௌன்ட்டர் செய்த தகவல் அணைத்து சேனல் இல்லும் இந்த செய்தி தான்......

பரவா இல்லையா நமது காவல் துறை இப்பொழுது முழித்து கொண்து விட்டார்களே என்று எண்ணி கொண்து செய்தியை உற்று நோக்கினாள் அந்த இடங்கள் யாவும் எங்கோ பார்தது போல இருந்தது..... சரி எந்த ஏரியா என்று பார்த்தல், வேளச்சேரி, அடே நம்ம ஏரியா.... நேரு நகர், சரியாய் போச்சு எங்க என்று பார்த்தல் எனது தெரிவிருக்கு அடுத்த தெரு தான்...... அட பாவிகளா இங்க தான் இருந்திர்கள என்று எண்ணி கொண்து வெளிய வந்தால் பகத்து பெட்டி கடை காரரிடம் என்ன நா நம்ம ஏரியா வ இப்படி என்று கேட்டேன்.... அப்போதான் கொஞ்சம் கொஞ்சமாக தகவல் கசிந்து தெரிவில் மக்கள் சிறு சிறு குட்டமாக நின்று இதை பற்றி பேசி கொண்டு இருந்தார்கள்.......


சரி எனது அறைக்கு வந்து... நன்றாக குறைட்டை விட்டு தொங்கி கொண்டு இருந்த நண்பர்களை எழுப்பி விசயத்தை சொனேன்...... அவர்களும் ஒன்றும் தெரிய வில்லை..... கிட்டதிட்ட 200 அடி தான் இருக்கும் என்கௌன்ட்டர் நடந்தே இடத்திற்கும், என்னது ரூமிற்கும்.... இரவில் ஒரு சின்ன சத்தம் கூட கேட்க வில்லை..... ஆனால் போலீஸ் ஒரு மணி நேரம் கடும் துப்பாக்கி சண்டை நடந்ததாக கூறுகிறார்கள்...... சரி போலீஸ் சிலேன்செர் பயன் படுத்தி இருக்கலாம்..... ஆனால் கொள்ளையர்கள் ???????

என்னது நண்பர் ஒருவரின் facebook பதிவு....

இவங்க அவங்கள பிடிக்க போனாங்களாம்... அவங்க ஷூ எல்லாம் போட்டுக்கிட்டு ரெடியா இருந்தாங்களாம்......

என்னையா கலர் கலரா ரீல் சுத்துறீங்க ?!?!

இதை எல்லாம் பார்க்கும் பொழுது எங்களுக்கு சந்தேகம் வருகிறது உண்மையுள் இது என்கௌன்ட்டர் தானா என்று.....

காலையில் டீ குடிக்க வழக்கமாக செல்லும் பாய் கடைக்கு சென்றோம்..... அங்கு சென்று பாய் ஐ வம்புக்கு இல்லுக்கலாம்.. என்று பார்தால்... உள்ள இரண்டு காவல் துறை ஆணையாளர்கள்.... டீ, வடை என்று ஒரு வெட்டு வெட்டி கொண்டு இருந்தார்கள்...... சரி அவர்கள் போகட்டும் என்று பொறுமையாக இருந்தோம்..... அப்பொழுது அவர்களுள் ஒருவர்க்கு தொலைபெசியுள் அழைப்பு வர... இருவரும் மாமனார் விட்டில் சாபிட்டு விட்டு செல்வது போல் சென்றார்கள்..... அதன் பிறர்க்கு பாய் இடம்.... என்ன அண்ணே.... உங்களுக்கும் அந்த பசங்களுக்கும் ஒரு link இருக்குனு வெளிய சொல்லுறாங்க அப்படியா என்று கேட்டேன்... உடனே அவர் ஏப்பா சும்மா இருங்க பா... இப்போ தான் போலீஸ் போகுது.... என்னே அண்ணே உங்கள் தொகிடுவன்களா என்று கேட்டேன்... எப்படி தொகுவங்கே???? அதான் ஓசி டீ, வடை எல்லாம் குடுத்து இருக்கேனே என்று கூறினர்...... இனிமேல இந்த ஏரியா ல north indians ah பார்க்க முடியாது போல என்று கேட்டேன்.... அதற்க்கு அவர்.... இவங்க எங்களை (முஸ்லிம்) தான் சந்தேகம் படுவாங்க.... north indians வந்தா விட்டு விடவார்கள் என்று கூறினர்... இதும் உண்மை தானே.....

எதோ ஒன்று, இரண்டு, முஸ்லிம் இன் தவரான அணுகு முறையால் ..... எல்லா முஸ்லிமையும் கூறை கூருவது, சந்தேகம் படுவது ஏற்புடையது அன்று...... அவர்களும் நம்மை போல் ஒரு சாதாரண வாழ்கை நடத்தும் மக்கள் தானே...... இவர்களை மட்டும் ஒரு சந்தேக பார்வை பார்ப்பது நல்லவா இருக்கு....

corparation bank atm பக்கத்தில் தான் இந்த encounter நடந்து இருந்தது. சரி அந்த பக்கம் சென்று நிலைமை எப்படி என்று தெரிந்து வரலாம் என்று அந்த பக்கம் சென்றேன்...... அங்கு ஒரு போலீஸ் பேருந்து நிறைய காவலர்கள் ஒவொருவராக வந்து கொண்டு இருந்தார்கள்..... அப்போதுதான் majistrate விசாரணை முடித்து கிளம்பினர், அல்லது வேறு முக்கியமான நபர் வந்து பார்த்து விட்டு சென்று இருக்கலாம்..... அந்த இடம் முழுவதும் மீடியா, போலீஸ் என்று அந்த இடம் முழவதும் ஆட்கள் நிரம்பி இருந்தனர்.... அந்த தெரிவிற்குள் பொது மக்கள் யாரையும் அனுமதிக்க வில்லை...... என்னவே என்னால் சென்று பார்க்க முடிய வில்லை.......

அந்த இடதில் இருந்த பொது மக்கள் தங்களுடைய தொலைபெசியுள் பேசி கொண்டு இருந்தார்கள்..... அவற்றை ஒட்டு கேட்கும் போது கேட்ட சில வரிகள்.....

  1. மச்சி நா அப்போ அங்க தண்டா இருந்தேன்..... நைட் ஒரு சத்தமா இருந்துச்சு வெளிய வந்தா போலீஸ் துப்பாக்கி ல சுட்டு கிட்டு இருந்தாங்க
  2. போலீஸ் என்னிடம் தான் வழி கேட்டார்கள்.....
  3. போலீஸ் வருவதை முதலில் பார்த்ததே நான் தான்....
  4. போலீஸ் அந்த பசங்களை பற்றி என்னிடம் தான் கேட்டார்கள்
  5. அந்த பசங்கள என்னக்கு நல்லாவே தெரியும்... அவனுக்கே யார்கிட்டையும் அதிகமா பேச கூட மாட்டார்கள்.....
  6. நம்ம தேருக்கு பக்கத்துல தான் அவனுக இருந்தானுக.....

என்று விதம் விதமாக தொலைபெசியுள் கூறி கொண்டு இருந்தார்கள்...... இதை எல்லாம் என்னக்கு கேட்க்கும் பொழுது சிரிப்பு தான் வந்தது...... வதந்திகள் இப்படி தான் கிளம்பு கிறார்கள்.... ஒரு விசயம் நடந்தால்.... தனக்கு எதுவம் அதை பற்றி தெரியாது என்று கூறினால் நம்மை சுற்றி இருபவர்கள் நம்மை மதிக்க மாட்டார்களோ என்ற ஒரு சின்ன காரணத்திற்கு இப்படி வதந்திகள் கிளும்புகின்றன........ இதற்கு மேலாக எனது நண்பன்... அவனது அலுவலகதிற்கு தொலைபசியுள் அழைத்து ஒரு மணி நேரம் permission காரணம், போலீஸ் யாரையும் தெருவை விட்டு வெளிய வர கூடாது என்று கூறி இருக்கிறார்கள்..... என்று கூறி பெர்மிச்சியன் வாங்கி விட்டான்.... என்ன கொடுமை சார் இது..........

காலை 11 மணிக்கு வேலைக்கு செல்பவர்கள், மாணவர்கள் அனைவரும் சென்று விட.... இல்லத்து அரசிகள்... கூட்டம் கூட்டமாக அந்த தெருவிற்கு சென்று வந்து கொண்டு இருந்தார்கள், எக்கா உன்னக்கு விசயம் தெரியுமா இவனுக அங்க வழிப்பறி பண்ணினன்களா அவனுகளா.... பேங்க் ல கொள்ளை அடிச்சா பணத்தை அந்த விடல தான் இன்னும் இருக்கமே... உனக்கு தெரயும்மா????? எங்க விட்டுக்காரர் தான் சொன்னாரு..... என்று பெண்கள் ஒரு பக்கம் வதந்தியை கிலோ கணக்கா பரப்பி கொண்டு இருக்க..... நான் எனது விட்டிருக்கு பகத்தில் இருக்கும் பெட்டி கடை காரரிடம் சும்மா ஒரு மொக்கையை போட அப்பொழுது அங்கு வந்தே பெரியவர்..... இந்த பொம்பளைங்க எங்க கூட்டமா பொய்த்து வரலுங்க... என்ன திருவிழவா என்று கேட்டார்.... நான் கூறினேன்... அதான் நேற்று திபாவளி கொண்டடி இருகண்களா அதான் என்று கூறினேன்... அந்த பெண்களை திட்டி கொண்டு பெரியவர் புலம்ப ஆரம்பித்தார்..... நான் கேட்டேன் பெரியவரே இந்த பசங்களுக்கு விடு பார்த்து குடுத்த புரோக்கர் யாருன்னு கேட்டேன்.... இதுல்லாம் இப்படி நடக்கும்னு யாருக்கு பா தெரியும்..... வரும் பொது எல்லாம் நல்ல பசங்கள தான் இருகாங்க..... ஆனா இப்போ.... என் நானே அவர்களுக்கு அந்தே விட்டை முடித்து குடுத்து இருக்கலாமான்னு சொல்லுறார்.....

அவரிடம் அண்ணே அந்த வீடு விலைக்கு வந்தால் சொல்லுங்கள் கம்மியான விலைக்கு வாங்கி விடலாம்.... என்ன ஐந்து நபர்கள் செத்த வீடு... ஒருத்தன் வர மாட்டன்.... நாமா அத வாங்கிடலாம்......

எங்களுக்கு உள்ள வருத்தம் என்ன வென்றால் பக்கத்துக்கு தெரிவில் தான் இருந்து இருந்தான் .... ஒரு ஷேர் குடுத்து இருக்கலாம், பாவிபய... கூடவே சுத்துறிய செவாலை நீயாவது இத கேட்க மாட்டிய..... எங்கங்க கேட்கிறான் கண்ட கண்ட போலீஸ் எல்லாம் வந்து என்கௌன்ட்டர் பண்ணும் சொன்னா கேட்கிரேன..... இப்போ என்கௌன்ட்டர் அச்சுல........


இனிமேல எங்களுக்கு எங்க ஏரியா வில் உள்ள problems.......

  1. இரவு பத்து மணிக்கு மேல் வெளிய வரே முடியாது.....
  2. எப்பொழுதும் போலீஸ் ரவுண்டு ஆப் இருக்கும்......
  3. இந்த ஏரியா வில் இருக்கும் பெச்லோர்ஸ் பசங்க எல்லாரயும் ஒரே சந்தேக பார்வை உடன் தான் பார்ப்பார்கள்....
  4. சும்மாவே பெச்லோர்ஸ் க்கு வீடு குடுக்க மட்டங்க... இப்போ இது வேரயா.......
  5. இந்த ஏரியா வில் இருக்கும் நோர்த் இந்தியன்ஸ் எல்லோரும் மீதும் போலீஸ் பார்வை பயங்கரமா இருக்கும்........ (நம்ம ஆளுங்க ஒரு விசயம் நடந்த பிறர்க்கு தான் அந்த விசயம் பத்தி கவனம் செல்துவார்கள்.... உன்னை போல் ஒருவன் படத்தில் கமல் சொல்லுவது போல்..... ஒரு தீவிரவாதி வயதில் குண்டு வைத்து வந்தால்..... வருபவர்கள் அனைவரையும் வயதில் மட்டும் தேடி பார்ப்பார்கள்..... ஒருவன் காலில் குண்டு வைத்து வந்தால் அவனை விட்டு விடுவார்கள் )
  6. பெச்லோர்ஸ் பசங்க அனைவரின் அட்ரஸ் உம் வாங்க படும்

இந்த என்கௌன்ட்டர் பற்றி இணையத்தில் வரும் தகவல்கள் பார்க்கும் பொது உண்மையுள் இந்த என்கௌன்ட்டர் தேவை தானே என்று யோசிக்க தோன்றுகிறது....... இவர்கள் அப்படி என்ன தப்பு செய்து விட்டார்கள்..... வங்கியுள் பணத்தை கொள்ளை அடித்தார்கள் அவோலோதனே ..... இவர்கள் என்ன கொலை, கற்பழிப்பு என்று தேச துரோக செயல்களா செய்தார்கள்...... இவர்கள் பணம் கொள்ளை அடித்து தவறு என்று நீங்கள் கூறினால் அப்படி என்ன்றால் ஜெயா, கருணா, ராஜா, இவர்களை என்ன செய்யலாம் ??? நீங்களே கூறுங்கள், சிறிதாக வழிப்பறி, செயின் பறிப்பு, பிக் பாக்கெட் என்று செய்தல் பொது மக்கள் தரும அடி, போலீஸ் லாக் அப்..... பெரிய spectrum கொள்ளை நில அபகரிப்பு என்று போனால் ஜெயில் தண்டனை, உச்ச நிதிமன்றம், வைத்தா... என்று இழுத்து அடிபர்கள்.....

ஆனால் இவர்களை போல வங்கி கொளையர்களை மட்டும் என்கௌன்ட்டர் என்றால் என்ன நியாயம் மக்களே ..... நீங்கேள கூறுங்கள்.... இந்த என்கௌன்டர் போலீஸ்இன் மரியாதையை, காப்பறு வதற்காக செய்ய பட்டது என்றே நான் கூருவேன்.... கடந்த ஒரு மாதமாக போலீஸ் ஐ எல்லோரும் திட்டி தான் வருகிறார்கள்... ஒரு வங்கி கொள்ளை அடிக்க பட்டு உள்ளது... இவர்கள் என்னதான் செய்யது கொண்டு இருக்கிறார்கள் ....... இவர்கள் இந்த கொள்ளைகரர்களை பிடிக்க ஒரு துப்பு இல்லை என்று அனைவரும் கூறி கொண்டு தான் இருக்கிறார்கள்,.... அந்த நேரத்தில் இரண்டாவது வங்கியும் கொள்ளை அடிக்க பட்டு விட கொதித்து பொய் விட்டது இந்த மானம்கெட்ட காவல் துறை...... அவர்களை பற்றி ஒரு தொலைபேசி அழைப்பு வந்த உடன் ஒரு பட்டலியன் உடன் போலீஸ் வந்து அனைவரையும் கொன்று விட்டது .... எது என்ன என்று விசாரிக்க கூட வில்லை...... ஒருவனை யாவது உயிரோடு பிடித்து இருந்தால் இவர்களை பாராட்டி இருக்கலாம்...... ஆனால் இவர்கள் செய்தது பேர், பெருமைக்க செய்த என்கௌன்ட்டர் இதில் பெருமை வேறு...... தமிழகத்தில் நடந்த மிக பெரிய என்கௌன்ட்டர் இது தான் என்று.......


நாம் கசாபைய உயிரோடு கறியும் சோறும் போட்டு தான் பார்த்து கொண்து இருக்கிறோம்...... பணத்தை கொள்ளை அடித்து தவறு தான்.... நாங்கள் இதை தவறு இல்லை என்று கூறவில்லை..... ஆனால் அதற்க்கு என்கௌன்ட்டர் ரொம்ப அதிகம்..... அட்லீஸ்ட் ஒருவன் வது உயிரோடு பிடித்து இருக்கலாம்...... மனித உயிர் என்றால் இவர்களுக்கு அவொலோ கேவலமா...... இவர்கள் north indians ...... இவர்களை போட்டாள் கேட்க ஆல் கிடையாது என்று கையாலகாத காவல் துறை தனது கை வரிசை காட்டி இருக்கிறது... இது உண்மையுள் பெருமை படவேண்டிய விசயம் அல்ல....... வருத்த பட வேண்டிய விசயம்........ நான் வேறு யாரும் அல்ல உங்களுள் ஒருவனாக இந்த சமுக அவலங்களை பார்த்து கொண்டு இங்கு புலம்பி கொண்டு இருக்கும் ஒரு சாதரனே சாமானியன்..... நான் உங்களுள் ஒருவன்.........

Wednesday, February 22, 2012

வங்கியை கொள்ளை அடிப்பது எப்படி ???

என்னடா இவன் வங்கியை கொள்ளை அடிப்பது எப்படி ன்னு சொல்ல போறனு நினைதிர்கள் என்றால் அது சரி தான்... நான் ஒரு வங்கியை கொள்ளை அடிக்க நினத்தால் நா என்ன என்ன செய்வேன் என்று தான் இதில் கூற போகிறேன்.

என்னன்னா இப்ப சென்னை ல வங்கியை கொள்ளை அடிப்பது எளிது என்று இரண்டு முறை north indians நமக்கு காட்டி விட்டார்கள் அதவும் ஓர மாததில்.

இதற்கு காரணம் உடனே சினிமா தான் என்று ஒரு கூட்டம் என்று கூரினாலும் அது ஒரு levelku உண்மை தான். என்னன்னா ஒரு வங்கியை கொள்ளை அடிப்பது போல் ஒரு 10 ஹாலிவுட் படம் பார்த்தல் நீங்கள் ஒரு கொள்ளைக்காரன் ஆகிவிடலாம். என்ன என்றால் சினிமாவில் நாம் நினைப்பதை விட, நம்மால் செய்ய முடியாததை கூட செய்ய முடியும் என்று காட்டுபவர்கள்...... நான் இங்கு சினிமா காரர்களை குறை கூற வில்லை...... அவர்கள் நம்மக்கு ஒரு விழிப்புணர்வு குடுக்கவே இவ்வாறு படம் எடுத்து நாம் ஜாக்கிரதை யாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்..... ஆனால் நாமோ அந்த படத்தை பார்த்து ரசித்து விட்டு, அல்லது படமா எடுத்து இருக்கிறான் படம் என்று திட்டி விட்டு வந்து விடுகிறோம்..... அத்துடன் அனைத்தையும் மறந்தும் விடுகிறோம்..... அதன் பிறகு எங்காவது அதை போல் ஒரு சம்பவம் நடந்தால் இந்த சினிமாவை பார்த்து விட்டுத்தான் இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றேன என்று சினிமாவை எதிர்த்து பட்டிமன்றம் வைத்து விட்டு... அதன் பிறக்கு நமது சாதாரண வாழ்கைக்கு திரும்பி விடுகிறோம்......

சரி இந்த சினிமா நமக்கு குடுக்கும் படிபின்னை என்னவென்றால் நம்மை சுற்றி எவ்வாறு எல்லாம் பிராட், பிட்டலாட்டம், மொள்ளமாரித்தனம், நடகின்றேன என்று நம்மக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறார்கள், நாம் அதை பார்த்து விட்டு, திரும்பவும் நமது ஆஜாக்கிரதை தனமாகவே இருந்தால், நம்மை அவர்கள் ஏமாற்றுவது எளிது, என்ன என்றால் real life இல்... நமது திருடர்கள் மிகவும் புத்திசாலிகள்..... நாம் தான் ஜாக்கிரதை யாக இருக்க வேண்டும்.... திருடுபவர்கள் திருட வேண்டும் என்று நினைத்து விட்டால் எப்படியும் திருடுபார்கள்..... அவர்கள் இந்த சினிமாவை பார்த்து தான் திருட வேண்டும் என்பது அல்ல... சினிமாவில் காட்டுவது ஒரு சந்தர்பத்தை மட்டும் வைத்து.... ஆனால் உண்மையான திருடர்கள் அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது... என்னவே அவர்கள் பல வழிகளில் முயற்சி செய்து பார்ப்பார்கள் .

சரி, இப்பொழுது நான் ஒரு வங்கியை கொள்ளை அடிக்க போவது போல் நினைத்து கொள்ளுங்கள், அல்லது சினிமாவிருக்கு ஒரு வங்கியை கொள்ளை அடிப்பது போல் ஒரு கதை தயாரிப்பது போல் நினைத்து கொள்ளுங்கள்.....

அந்த north indians இடம் இருந்து யோசிப்போம்..... அவர்கள் முதலில் சென்னைக்கு வந்தற்கு காரணம், என்ன வென்றால் நாம் இப்பொழுது நமது சொந்த ஊரில் இருந்தால், அனைவர்க்கும் நம்மை தெரியும், ஊரின் எல்லையுள் இருந்து தம் அடித்தால் கூட நமது விட்டிருக்கு செய்தி பொய் சேர்ந்து விடும், அதனால் தான் உடைய ஊரில் பல பேர் யோகியர்கள் அகவே இருப்பார்கள், ஆனால் வெளி ஊருக்கு வந்தால் அவர்கள் தம், தண்ணி, என்று சகல கெட்ட விசயங்களும் இருக்கும்... யாரை பற்றியும் சிந்திக்காமல் தான் விருப்ப படி நடந்து கொள்ள முடியும். என்னவே தான் இவர்கள் தங்களுடைய ஊரை விட்டு இங்கு சென்னை க்கு வந்து தங்கள் கை வரிசையை காட்டுகிறார்கள்......

அதன் பிறர்க்கு சென்னையுள் ஒரு நல்ல apartment ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி விடுகிறார்கள், மாணவர்கள் போல, Software Company Workers போல தங்கி விடுகிறார்கள், இவர்களை சுற்றி இருபவர்கள், இவர்கள் மீது சந்தேகம் வராமல் நடந்து கொள்ளுகிறார்கள்.

இவர்கள் மொத்தம் இரண்டு குழுக்களாக இருப்பார்கள்..... ஒரு குழு உளவு பார்க்க.... அவர்கள் வங்கியை கொள்ளை அடித்த பின்பும் அவர்கள் அங்கைய தான் சுற்றி சுற்றி வருவார்கள்..... என்ன என்றால் இவர்கள் மிது சந்தேகம் வராமல் இருக்க..... இன்னொரு குழு வங்கியை கொள்ளை அடிக்க அவர்கள் உளவு பார்க்க வந்த குழுவிடம் இருந்து தகவல் வந்த பிறகே இவர்கள் ஊருக்கு வருவார்கள்.... பெரிய ஹோட்டல் அல்லது லொட்ஜ் இல் ரூம் எடுத்து தங்கி விட்டு... காரியம் முடிந்த உடன் தங்கள் ஊருக்கு சென்று விடுவார்கள்......


உங்களுக்கு இப்பொழுது சந்தேகம் வரலாம், இவர்கள் கொள்ளை அடித்த பணத்தை என்ன செய்யார்கள் என்று..... அதற்க்கு பல வழிகள் இருகின்றேன......

  1. பணத்துடன் ரயில் அல்லது பேருந்தில் அழுக்கு துணிமணி கொண்டு செல்வது போல... செல்வது....
  2. பணத்தை எதாவது ஒரு இடத்தில மறைத்து வைப்பது

இவை எல்லாம் பழைய டெக்னிக் என்று நீங்கள் நினைதால், அதை இரண்டு குழுக்களும்... குறைந்தது பத்து பேராவது இருப்பார்கள்.... அவர்கள் அனைவரும் சமமாக பங்கு பிரித்து..... ஒவோருவர் பெயரில்லும் இரண்டு வங்கி கணக்குகள் தொடங்கி வைத்து இருப்பார்கள்.... அதில் சமமாக deposit பண்ணி வைத்தால் யாருக்கும் சந்தேகம் வராது.......

இவை அனைத்தும் சினிமா பார்க்கும் சராசரி மனிதன் கூட யோசிக்கும் விசயம் தான்...... இப்படி பட்ட மக்கள் நமக்கு மத்தியுள் தான் இருக்கிறார்கள்...... நாம் தான் அவர்கள் யார் என்று கண்டு பிடித்து காவல் துறை இடம் ஒப்படிக்க வேண்டும். என்ன என்றால் காவல் துறை நமது நண்பர்கள் அல்லவா......... :-)

பிறக்கு இவர்களால் கண்டிப்பாக கண்டு பிடிக்க முடியாது.....நாம் தான் இந்த காவல் துறைக்கு கண்டு பிடித்து குடக்க வேண்டும்..... இது அவர்கள் சம்பந்த பட்ட விசயம் மட்டும் அல்ல...... நமது உயிர் மற்றும் உடமை சம்பந்த பட்ட விசயம்........ என்னவே தான் நாம் நம்மை சுற்றி நடப்பவரை வைத்து, யார் நல்லவன் யார் கேட்டவன் என்று முடிவு நாம் தான் எடுக்க வேண்டும்.... இந்த குற்றவாளிகள் ஒன்றும் வெளியுள் இருந்து வரவில்லை..... நமக்குள் நம்முள் ஒருவனாக நம்மை சுற்றி தான் இருக்கிறார்கள்..... நாம் தான் சுதாரித்து நடந்து கொளவேண்டும்..... நானும் உங்களோடு ஒருவனாக இருக்கும் உங்களுள் ஒருவன் தான்.........