Friday, September 17, 2010

தமிழராய் வாழவோம் !!!!........

வணக்கம் நண்பர்களே,


இன்று ஒரு அதிர்ச்சியான செய்தியை அறிந்தேன். நெருப்புநரி (FireFox) எனும் இணைய உலாவியை என் கணிணியில் நிறுவலாம் எனக்கருதி பதிவிறக்கம் செய்யச் சென்றேன். இந்த உலாவி பல மொழிகளில் (மொத்தம் 70) கிடைக்கிறது. அதிலே வங்காளம், இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, சிங்களம், தெலுங்கு போன்ற மொழிகளும் உள்ளன. தமிழ் மொழியைவிட பல கோணங்களில் பின்தங்கிய மொழிகளெல்லாம் உள்ள போதும் தமிழில் மட்டும் இல்லை.
http://www.mozilla.com/en-US/firefox/all.html


இதெல்லாம் ஒரு பெரிய விடயம் இல்லை என்றாலும், இது தமிழை எந்தவிதத்திலும் பாதிக்காது என்று உங்களைப் போலவே நானும் கருதினாலும், ஏன் இப்படி என்று கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்பதில் தவறேதும் இல்லை.

நான் இந்த நிறுவனத்தை குறைகூறும் நோக்கில் கூறவில்லை. வேறு எங்கோ தவறு நடக்கிறது. அதன் மூலம் நாமாகவே இருப்போம் எனக்கருதுகிறேன். எங்கே தவறு நக்கிறது என்று நாம் முதலில் உணர வேண்டும்.


இதேபோல் சில நாட்களுக்கு முன்பும் நண்பர் ஒருவர் மூலம் கீழுள்ள இணைய தளத்தைக் காண நேர்ந்தது.
இந்த கூகிள் பக்கம் மொழிபெர்யப்பு செய்ய உதவும் என்றாலும், தமிழை பயன்படுத்த இயலாது. இங்கும் பல சிறிய மொழிகள் உள்ள போதும் தமிழில்லை.
http://translate.google.com/#auto|hi|Hello%2C%20How%20are%20you%20%3F


தமிழ் மொழியைப்பற்றியும், தமிழர்கள் 12 கோடிபேர் உள்ளதையும் இந்நிறுவனத்தார் அறிந்திருக்கவில்லையா? இல்லை அறிந்திருந்தும் ஒரு பொருட்டாகவே கருதவில்லையா?
அல்லது தமிழர்கள் தமிழில் இந்த தளங்கள் வெளிவரத் தேவையான மொழி உதவியை நல்காததா? இல்லை உதவ முன்வந்தும் ஏற்றுக்கொள்ளவில்லையா?
அல்லது தமிழர்கள் அதிகம் இதை (தமிழில் உலாவி, மொழிபெயப்புத் தளம்) விரும்ப மாட்டார்கள் என்று அந்த நிறுவனங்கள் கருதியதாலா? இல்லை பயன்படுத்துவார்கள் என்று அறிந்தும் வென்றும் என்றே புறக்கணித்துள்ளனவா?


இப்படிப்பல வினாக்கள் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. சரி இனி இது போல் ஏதும் தவறு நிகழாமல் இருக்க, இதை நிவர்த்திசெய்ய, தமிழ்மொழி அறிவியல் தளங்களில் அந்நியப்பட்டுப் போகலாம் இருக்க என்ன செய்யாலாம்.


இந்த நிறுவனங்களிடம் சென்று பேசலாம், தமிழில் வராததன் கரணியம் கேட்டறிந்து வெளிவர வகை செய்யாலாம் என்றாலும், அதுவல்ல தீர்வு. அது நோயைத் தீர்க்காது, அந்த நோயின் அறிகுறியை மட்டும் மூடி மறைப்பதற்கு இணையானது.


நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.


மேற்கூறிய வள்ளுவனின் கூற்றுக்கிணங்க, இந்த நோயின் மூலத்தை அறிந்து அதை நீக்க வேண்டும். என் அறிவுக்கு எட்டிய வரையில், இந்த நோயின் மூலம், தமிழர்களாகிய நாமே. ஒவ்வொரு தமிழனும் தன் தாய் மொழியில் படிப்பதில் துவங்கி, தமிழில் எழுதுவது, தமிழிலேயே பேசுவது, சமூக-அரசியல்-வழிபாட்டுத்தலங்களில் தமிழைப் பயன்படுத்துவது, குழந்தைகளுக்குத் தமிழில் பெயரிடுதல், வீட்டு விழாக்களை தமிழ் மரபுப்படி நடத்துதல் என தமிழ் நாட்டை 'எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என பேச்சளவில் இல்லாமல், செயலில் காட்டுவது அவசிய அவசர தேவையாகிறது.


இங்கு கூறிய எதுவுவே சாத்தியமற்ற ஒன்றல்ல. நம்முடைய வாழ்வியல் முறையில் சிறிய மாற்றங்களை கொண்டுவந்தாலே, நெறிமுறையோடு சிந்தித்துச் செயல்படத் துவங்கினாலே போதும்.


பலர் நினைப்பதைப்போல - தமிழை நிலைநிறுத்த, அறிவியல்-உலகமய உலகோடு போட்டியிட, செர்மனியர்களைப் போல நாம் பொருளாதார விடுதலைப் பெற்றிருக்க வேண்டும், அறிவியலில் கலைச் சொற்களை உருவாக்க வேண்டும், இதெல்லாம் நடைபெற, முதலில் அரசியல் விடுதலை பெற்று, நமக்கான ஒரு அரசு அமைக்க வேண்டும்.
இந்த கூற்றையெல்லாம் நானும் ஆதரிக்கிறேன். இதெல்லாம் நிறைவடையும் நாள் தான் என்கனவு நாள். இது சாத்தியம் என உறுதியாக நம்புகிறேன். அதற்காக எங்கு-எந்நிலையில் இருந்தாலும்,என்வாழ்நாள் முழுதும் என்னாலானதை செய்யேன் என உறுதிபூண்டு இருந்தாலும், நான் முதலில் கூறிய, வாழ்வியல் முறையில் மாற்றங்களை கொண்டுவர எந்தத் தடையும் இல்லை, நம் மனதைத்தவிற.


தமிழர்கள் நாம், தமிழராய் வாழ முன்வருவோமா?
உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா !
மறத்தமிழன்
"வலுத்தவன் வாழ்வான் - வேலுப்பிள்ளை பிரபாகரன்"
அடுத்த ஆண்டு தமிழீழத்தில் சந்திப்போம்...

2 comments:

sathya said...

தமிழ் தமிழ்னு சொல்லிட்டு நீங்க ஏன் இந்தோனேசியா பொண்ண(அண்ணி) லவ் பண்ணுரிங்க ?

vijay said...

தமிழனுக்கு யாதும் உரே யாவரும் கேளிர் , எந்த ஊராக இருந்தாலும், எந்த மொழியாக இருந்தாலும், எனது மனைவி சுத்த தமிழச்சி யாக தான் இருப்பாள்

Post a Comment