Wednesday, October 27, 2010

ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க சில ஐடியாக்கள்


ஆண்கள் என்ன செய்தாலும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்க முடிவதில்லை. எப்போது பார்த்தாலும் சண்டைகள் மட்டுமே. இந்த பிரச்சனை தீர சில ஐடியாக்கள இங்கே உங்களுக்கு....

1.காலையில் எழுந்தவுடன் ஹாய்.. குட் மார்னிங்' ன்னு ஒரு SMS அனுப்பணும். உன் குரலை கேட்டாத்தான் இன்னைக்கு பொழுதே நல்லபடியா விடியுதுன்னு ஒரு அப்பட்டமான பொய்யை அவிழ்த்து விடணும் (ஒரு ரூபாய் செலவுதான். என்னங்க பண்றது? பண்ணித்தான் ஆகணும்.) இதே விஷயத்தை ராத்திரி தூங்குறதுக்கு முன்னாடியும் நீங்க செஞ்சாகணும்..

2. அவங்களைப் பார்க்க போறதுக்கு முன்னாடி உங்க செல் ஃபோனோட ஸ்கிரீன் சேவர்'ல அவங்களோட புகைப்படத்தை கண்டிப்பா வெச்சுக்கணும். (எப்பவும் உன் முகத்தையே பார்த்துகிட்டே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி வெச்சிருக்கேன்னு சொல்லுங்க. இதுலையே அவங்க க்ளீன் போல்ட் )

3. அவங்க பேரோட முதல் எழுத்தை பைக் கீ- செயின்'ல தொங்க விட்டுக்குங்க. எப்பவும் நீ என் கூடவே இருக்கணும்'ன்னுதான் இந்த மாதிரி செய்யுறேன்னு ஒரு பிட்டை விடுங்க. அப்புறம் பாருங்க...
4. சினிமாவுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா, படத்தை பார்க்கறீங்களோ இல்லையோ கண்டிப்பா ஐந்து நிமிஷத்துக்கு ஒரு வாட்டி அவங்களை திரும்பி திரும்பி பார்க்கணும். எதுக்கு என்னையே பார்க்குறீங்கன்னு கேட்பாங்க. உன்னைப் பார்க்கும் போது இருக்கிற சுவாரஸ்யம் படம் பார்க்கும் போது இல்லைன்னு நீங்க சொல்லணும். (வேற வழி இல்லைங்க. இந்த மாதிரி எல்லாம் நாம டயலாக் விடணும்'ன்னு அவங்க எதிர்பார்ப்பாங்க)
5. அவங்க பேர்ல நிச்சயம் ஏதாவது தமிழ் பாட்டு வந்திருக்கும். அந்த பாட்டை எப்படியாவது தேடி கண்டுபிடிச்சு ரிங்டோனா வெச்சுக்குங்க. அவங்க உங்ககிட்ட சண்டை போடும்போது, உங்க ஃபிரண்டைவிட்டு உங்க நம்பருக்கு கால் பண்ண சொல்லுங்க. அந்த பாட்டு வந்த உடனே அவங்களை பாருங்க. சண்டை எல்லாம் எங்கே போகுதுன்னே தெரியாது.
6. கவிதைங்கிற பேர்ல எதையாவது நீங்க கிரீட்டிங் கார்ட்ல கிறுக்கிக் கொடுத்தே ஆகணும். அந்த கவிதைகள்'ல வானம், கடல், குயில், தேவதை, மயில், போன்ற வார்த்தைகள் கண்டிப்பா இருந்தே ஆகணும்.
7. "நீ ரொம்ப அழகா இருக்கே"ங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும். (இதுக்கு நீங்க கடவுள்கிட்ட தனியா மன்னிப்பு கேட்டுக்குங்க)
8. ஹோட்டலுக்கு கூட்டிட்டு போனீங்கன்னா ஃபர்ஸ்ட் நீங்க ஆர்டர் பண்ணக்கூடாது. மெனு கார்டை அவங்க கையில கொடுத்து, அவங்களைத்தான் ஆர்டர் பண்ண சொல்லணும். புரியுதா? (பெண்களோட உணர்வுகளுக்கு நீங்க மதிப்பு கொடுக்குறவர்'ன்னு அவங்களுக்கு தெரியணும் இல்லை. அதுக்குத்தான்)
9. அவங்க எப்படித்தான் ட்ரஸ் பண்ணாலும், " இந்த ட்ரஸ்'ல நீ தேவதை மாதிரி இருக்கேன்னு மனசாட்சியை கழட்டி வெச்சிட்டு பொய் சொல்லணும்". (ராத்திரியில நீங்க தூங்கும் போது தேவதைங்க உங்க கண்ணை குத்தும். சமாளியுங்க)

10. ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். அவங்க தோழிங்ககிட்ட பேசும்போது ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அவங்க தோழிங்களை நீங்க கண்டுக்காத மாதிரியே இருக்கணும். ஏன்னா பல பிரச்சனைகளோட தொடக்கம் இங்கே இருந்துதான் ஆரம்பிக்குது.
இந்த விஷயங்களை எல்லாம் கடைபிடிச்சு பாருங்க. உங்க காதலி உங்களை தலையில தூக்கி வெச்சு கொண்டாடுவாங்க.

Saturday, October 23, 2010

அடுத்தமாதம் எப்படியும் சிங்கள ராணுவத்தால் சாக போகும் இந்திய(தமிழக) மீனவனுக்கு ஒரு கடிதம்அன்புள்ள இந்திய (தமிழக) மீனவனுக்கு வணக்கம் வாழிய நலம்...
எங்க வாழிய நலம் என்று முனு முனுக்க வேண்டாம்...

உங்கள் சமுக மீனவர்களை சிங்களவர்கள் நிர்வாணபடுத்தி,உதை கொடுத்து, குண்டு அடிபட்டு சீறும் சிறப்புமாக இருப்பதாய் பத்திரிக்கைகளில் படித்துக்கொண்டு இருக்கின்றேன்...

உலகின் 5வது வல்லரசாக வளர்ந்து கொண்டு இருக்கும் நாட்டின் குடிமகன்... குண்டடி பட்டு இறப்பது வாடிக்கையாகிவிட்டது...ஆனால் அவர்களுக்கு உங்களை நம் நாட்டின் குடிமகன் என்ற நினைப்பு கிஞ்சித்தும் அவர்களுக்கு இல்லை என்றே தோன்றுகின்றது...

இந்தியாவில் பிறந்த அத்தனை குடிமகன்களுக்கும் பாதுகாப்பான வாழ்க்கை கொடுக்கவேண்டும் என்று அரசியல் சட்டம் கூறுகின்றது... அப்படி கொடுப்போம் என்று சொல்லிதான் ஆட்சியாளர்கள் அறியனை ஏறுகின்றார்கள்...

தமிழ்நாட்டை விட சிறியதாய் இருக்கும் தேசம்...இந்தியாவில் இருப்பவனை அடித்துக்கொண்டு இருக்கின்றது.. ஒரு கேள்வி இல்லை ஒரு கண்டனம் இல்லை...பிரதமர் ஒரு எச்சரிக்கை விடுத்தால் கூட அது உலக நாடுகளின் கவனம் பெரும்... அதை கூட செய்வதில் அவருக்கு தயக்கம் இருக்கின்றது...

ஒருவேளை நீங்கள் தலையில் டர்பன் கட்டி இருந்தால் தான் ஆடவிட்டாலும் தன் கால் சதையாவது அவருக்கு ஆடி இருக்கும்...ஒரு வேளை இந்திய இறையாண்மை பாராளுமன்றத்தில் மட்டும் இருப்பதாக எண்ணிவிட்டதன் விளைவே இந்த அமைதி என்று என்ன தோன்றுகின்றது....

பாரளுமன்றத்தில் துப்பாக்கியோடு உள்ளே நுழைந்தால்தான் இந்திய இறையாண்மை கேள்விகுறியாக்கபடுகின்றது... ஆனால் உங்கள் மீது துப்பாக்கி குண்டு பாயும் போது அது பற்றி எந்த கேள்வியும் இல்லை... வாழ்க்கை போராட்டத்தில் தினமும் உயிரை பணயம் வைப்பவன் விஷயத்தில் இந்திய இறையாண்மை எந்த கேள்வியும்ம இல்லாமல் தூங்குகின்றது...


நம்ம ஊரில் ஆயுதபூஜைக்கு இரும்பு சாமான்களை துடைத்து பட்டை போட்டு படையல் வைப்பது போல் ஒவ்வொரு வருடமும் குடியரசு தினத்துக்கு நம் ராணுவ தளவாடங்கள் அணிவகுத்து காட்சி நடத்துவோம்....அது ஒரு நாளும் இந்திய பெருங்கடலில் சிங்கள ராணுவத்தையோ அல்லது சிங்கள மீனவனையோ இது போல் செய்தது இல்லை அல்லது பயமுறுத்துவது போல ஒரு சின்ன லுலுலாயி வேலையை கூட செய்தது இல்லை...


எல்லைதாண்டி வந்த எத்தனையோ சிங்கள மீனவனையும்,பங்களாதேஷ் மீனவனையும் கைது செய்து முறைபடி அவர்கள் அரசிடம் அல்லது அவர்கள் நாட்டின் தூதரகத்தில் விட்டு விடுவோம்... யாரையும் நிர்வாணபடுத்தி துப்பாக்கியால் சுட்டது இல்லை....உலகின் மிக பழைமையான தொழில் உங்களுடையதுதான்...அதே வேளையில் உலகில் ஆறு மொழிகள் மட்டுமே மிக தொன்மையானவையாம்.....அதில் நீ பேசும் தமிழ் மொழியும் ஒன்று...
ஆம் எவ்வளவு பெருமையான விசயம் அல்லவா? இப்போது கூட நீ பேசி சிலாகிக்கும் நம் தமிழ் செம்மொழிக்கு450 கோடியில் விழா எடுத்தார்கள்...நம் பரப்பரை வீரம் பற்றி சீலாகித்தார்கள்.. யாரும் நம் வீரம் பற்றி மறந்து விடக்கூடாது அல்லவா? அதனால்தான்

அது எல்லாம் பழம் கதை இப்போது எல்லாம் அது பேசி புரயோஜனம் இல்லை....நீ கூட தெருமுக்கில் டீ குடித்து கொண்டே தினத்தந்தி படித்து விட்டு இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை கூட தமிழர் வீரம் பற்றி பெருமை பேசி இருக்கலாம்...ஆனால் அந்த வீரத்துக்கும் ஆதீத துரோகத்தால் முள்ளிவாய்காலில் முடிவு கட்டபட்டது..

முள்ளிவாய்காலில் மவுனம் காத்தோம் காரணம்....மாநில அரசு எல்லை இந்யிவில் வறையறுக்கபட்ட விசயம் அனைவருக்கும் தெரிந்ததுதான்...இறந்து போனது நம் இந்திய நாட்டு அதுவும் நம் தமிழ் நாட்டு செம்மொழியான தமிழ் மொழி பேசும் மீனவன்...


மாநிலத்தில் ஆட்சி செய்த எல்லா அரசுக்குமே இது போலான கையாகளாத தனம் இருக்கினறது...இதில் குறிப்பிட்ட யாரையும் குற்றம் சொல்ல முடியாது...இதில் மாநிலத்தில் ஆட்சி செய்த அனைவருக்கும் இதில் பொறுப்பு உள்ளது...

ஒரு 50 பேர் சாகும் போதுதான் ஒரு அரசு விழிக்கும்... ஏனெனில் அரசுக்கு எத்தனையோ தலைக்கு மேல் வேலை இருக்கின்றது....சரி மாநில அரசு விழிக்க வேண்டும்... அதுவும் விழிக்கவில்லை....100 பேர் செத்தார்கள்.. மத்திய மாநில அரசுகள் விழித்து இருக்க வேண்டும்...அவர்கள் விழிக்கவில்லை...200 ஆயிற்று,300 ஆயிற்று,400 ஆயிற்று,500 ஆயிற்று அதுக்கு மேலும் இறந்து கொண்டு இருக்கின்றார்கள்...எந்த கேள்வியும் கேட்கவில்லை என்றால் ஏதோ தப்பு இருப்பதாக உங்கள் மர மண்டைக்கு எட்டவில்லை...உங்களுக்குள் ஒற்றுமை இல்லை.. அல்லது மாநிலத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லை....

எனக்கு தெரிந்து நீங்கள் தொழிலை மாற்றி விடுவது நல்லது... உயிர் பயம் இருந்தால் நீங்கள் தொழிலை மாற்றியே ஆக வேண்டும்.... ஆம் நண்பர்களே உங்களுக்கு இதே நிலைதான் நீடிக்கும்..

அடுத்த மாதம் இதே போல் இந்திய பெருங்கடலில் வலையறுப்பு சம்பவம் மற்றும் சிங்களவர்கள் நிர்வாண மீனவ பேஷன் ஷோ நடத்துவார்கள்...யாராவது ஒரு மூளை சூடுள்ள சிங்களவன் துப்பாக்கியால் சூட்டு வைப்பான்... நீங்கள் எப்படியும் நிச்சயம் இறந்து போவீர்கள்...அப்படி நீங்கள் இறந்து போய்விட்டால் என்ன நடக்கும் என்பதை தீர்க்க தரிசனம் போல் சொல்கின்றேன் கேளுங்கள்...

இங்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கும் தெரியுமா?

தினத்தந்தியில் மீண்டும் சிங்கள இராணுவம் அட்டுழியம் என்ற தலைப்பிட்டு செய்தி வரும்...

தமிழகத்தில் எந்த முதல்வர் ஆட்சிக்கு இருந்தாலும் ஒரு கண்டன்ம் தெரிவிப்பார்... இப்போதைய முதல்வர் கடிதம் எழுதுவார்... மாட்டுகாரன் செனைக்கு மாடு அழைத்து வருவதை கூட செல்போனில் பேசி முடிக்கும் போது... இப்போதும் கடிதம்தான்.....

உள்துறை அமைச்சகத்தில் இருந்து இலங்கையிடம் விளக்கம் கேட்கபோவதாக கடிதம் வரும்...

ஒரு வாரத்துக்கு பிறகு அந்த கடிதம் மற்றும் விஷயம் டிவி சீரியல்களால் மறக்கடிக்கபடும்....

ரொம்ப தீவிரமான தமிழர் அமைப்புகள் இலங்கை தூதரம் முன் ஆர்பாட்டம் நடத்தும்...

தேர்தல் வந்தால் தமிழனாய் இருந்து கொண்டு மீனவ்ர்கள் மீதான தூப்பாக்கி சூட்டை கண்டிக்காத ஆளும்கட்சியே ஒழிக என்பதாய் கோஷம் எழுப்பபடும்...

எதிர்கட்சி இறந்த மீனவனின் போட்டோவை பெரிதாக வால் போஸ்ட் அடித்து தேர்தல் நேரத்தில் ஓட்டி போஸ்டரில் சக்கரை கரைசலை ஊற்றி ஈக்களை மொய்க்க வைத்து பரிதாபம் தேடி....தேர்தலில் ஜெயிக்க வழிபார்பபார்கள்...

இறந்த மீனவன் குடும்பத்துக்கு பிரச்சனையின் சமயத்துக்கு ஏற்ப... ஒரு லட்சம் இரண்டு லட்சம் வழங்கபடும்... எலெக்ஷன் நேரம் என்றால் 3லட்சத்தில் இருந்து 5 லட்சம் கொடுக்கபடும்... போராட்டம் ரொம்ப தீவிரமானால் இறந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்கபடும்...
இதுதான் நடக்கும் நீங்களும் மணலில் புதைத்து வைத்த டப்பா கஞ்சியை குடித்துக்கொண்டே அரசு கொடுத்த தொலைகாட்சியில் பார்த்து வைப்பீர்கள்...ரொம்பவும் போதை ஏறிவிட்டால் செல்போனில்

ஹலோ ....மீயிசிக்கா?
சித்ரம் பேசுதடி படத்தில் இருந்து வலை மீனுக்கும் விலங்கு மீனுக்கும் பாட்டை போட சொல்லி நேயர் விருப்பம் கேட்பீர்கள்...

யாராவது எல்லைதாண்டும் சிங்கள மீனவர்களை தமிழ எல்லையில் வந்தால் அவர்களை கைது செய்து புது உடை கொடுத்து...உணவு கொடுத்து தூதரகம் மூலம் இலங்கைக்கு கப்பல் மூலமோ அல்லது விமானம் மூலமோ வந்தாரை வாழவைக்கும் தமிழனால் அனுப்பி வைக்கபடுவான்...


தமிழக மீனவர்களே உங்களுக்கு உயிர் தப்பிக்க ஒரு உபாயம் சொல்கின்றேன் கவனமாக கேளுங்கள்...
உயிர்தப்ப வேண்டும் என்றால் ஒரே வழி... இருக்கின்றது... இல்லை எங்கள் தொழிலைதான் நாங்கள் செய்வோம் என்றால் எந்த பிரச்சனையும் இல்லை....ஊரில் இருக்கும் சொத்தை வந்த விலைக்கு விற்றுவிடுங்கள்... தர்பூசனி மொத்தமாக பயிரிடும் இடத்தில் போய், ஒரு காய் 10 ரூபாய் மேனிக்கு பேசி ஒரு 500 தர்பூசனி வாங்கி லாரி பிடித்து சென்னையில் ஏதாவது ஒரு நடையோரத்தில் கடை போடுங்கள்...

போலிசுக்கு லஞ்சம் என்றும், அந்த பகுதி தாதாக்களை கவர் செய்ய என கொஞ்சம் அமவுன்ட் எடுத்து தனியாக வைத்துக்கொள்ளுங்கள்...நோச்சிகுப்பம் அல்லது அயோத்திக்குப்பம் பக்கம் வாடைகைக்கு வீடுபிடித்துக்கொள்ளுங்கள்....சப்போஸ் தொழிலில் தோர்தாலும் சென்னையில் உள்ள கடலில் வலை போட்டு மீன் பிடிக்கலாம்...

போர்குற்றத்தை விசாரிக்கவந்த பான்கீ மூனை மாமா என்று அழைத்தவர்கள்...சிங்களவர்கள்...இந்தியாவின் பாதுகாப்புக்கு பிரச்சனை செய்யாதவரை இந்திய அரசு எந்த கேள்வியும் கேட்க போவதில்லை../


வட இந்திய சேனல்களை பொறுத்தவரை பஞ்சாப்பீல் இறந்தால்தான் அது செய்தி... அதைவிட பாகிஸ்தானில் நடக்கும் விசயத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நம் நாட்டின் தென் கோடி இந்தியனுக்கு கொடுப்பதில் பெரும் தயக்கம்....அவர்கள் அப்படித்தான்...தமிழக சேனல்கள் பேசி புரயோஜனம் இல்லை..

தினமலரும், இந்துவும் எப்போதும் சிங்களவர் பக்கம்தான்...அவர்கள் செய்வது நியாயம் என்று எழுதுவார்கள்...இவர்கள் எல்லைதாண்டி மீன் பிடித்து இருக்க கூடாது என தரையில் இருந்து கொண்டு வாதம் செய்வார்கள்...அவர்களை பொறுத்தவரை மயிலாபூரில் தண்ணியும் கரண்டும் ஒழுங்காக தடையில்லாமல் வந்தால் போதும்....


ஆனால் சிங்களவர்கள் ஒரு போதும் இந்தியாவை ஒரு நேச நாடாக வைத்து பார்ப்தில்லை... விரைவில் நம் கண்ணை குத்த தொடங்கும் படலம் விரைவில் நடக்கும்...அப்போது எல்லோரும் ஒன்று சேர்ந்து கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போல் குரல் கொடுப்போம்.... அப்போது எல்லாமே கடந்து போய் இருக்கும்..

ஒரு கோபத்தின் வெளிபாடாய் இந்த கடிதம்.... மீனவ மக்களை காயபடுத்த அல்ல....

அன்புடன்...

ஒரு தமிழனாக ஒரு இந்தியனாக சக தமிழனுக்கு சக மனிதனுக்கு நடக்கும் இன்னல்களை பார்த்து கொண்டு மட்டும் இருக்கும் ஒரு சாமானியன்.........

Wednesday, October 20, 2010

களமாடியவர்களும் கழகத்தில் ஆடியவர்களும்


ஈழ தமிழர்கள் பற்றிய நினைவுகள் எனக்கு அடிக்கடி வந்து தொல்லை செய்கின்றன.அது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் அதன் மூலம் தான் நான் ஒரு கேடுகெட்ட ஒரு ஜனநாயக நாட்டில் இருப்பதை பற்றிய புரிந்துணர்வுக்கு கொண்டு வந்தது.எனக்கு ஈழத்தில் நடந்த அந்த உக்கிர போரின் தீவிரம் 2008யின் முற்பகுதியில் தெரிய ஆரம்பித்தது. இங்கே அதனை பற்றி அப்போது பேசியவர்களும் இப்போதும் பேசிக்கொண்டு
இருப்பவர்களுமான பழ நெடுமாறனும் வை.கோவும் அப்போது இருந்த அரசுகளிடம் கெஞ்சித்து கொண்டு இருந்தார்கள்.நெடுமாறன் அவர்கள் அப்போது ஒரு கோடி ரூபாய் அளவுக்கு பணம் திரட்டி அங்கே ஈழத்தில் உள்ளவர்களுக்கு கொண்டு சேர்க்க முயற்சி செய்தார். விஷயம் கொஞ்சம் கொஞ்சம் தீவிரம் ஆனது.தா.பாண்டியன் இந்த விஷயத்தை கையில் எடுத்த பின்னர் சூடு பிடித்தது.நான் அதுவரை மீடியா பற்றி வேறு விதமாக யோசித்து வைத்து இருந்தேன். மீடியா என்பது ஒரு பொதுவான அமைப்பின் கொள்கையோடு நடுநிலைமையோடு இருக்கும் என்று. ஆனால் நடந்தது வேறு.

மக்களிடம் எதையும் கொண்டு சேர்க்க வேண்டிய மீடியா மற்றும் பத்திரிக்கை துறையினர் இதை அடக்கி வாசித்து பத்திரிக்கை தர்மத்தினை நிலை நாட்டினர். வேறு சிலர் தவறான கருத்துகளோடு தங்களின் சொந்த கருத்துக்களையும் ஊட்டி வளர்த்தனர். இந்த வளர்ச்சியில் இங்கே குளிர் காயும் ஆடுகளின் எண்ணிக்கைகள் அதிகம் ஆனது. நெடுமாறன் சேமித்த அந்த பொருட்கள் கடைசியில் குப்பைக்கு சென்றன. ஆனால் ஒரு சிலர் அனுப்பிய குப்பைகள் அங்கே மக்களுக்கு கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.
இவர்கள் அனுப்பிய அந்த பொருட்கள் மக்களிடம் தான் போய் சேர்ந்ததா என்று யாரும் சரி பார்க்கவில்லை. சரி பார்க்கவும் தேவை இல்லை.நாம் செய்யவேண்டியது என்ன? ஒரு பிரச்சினை கொழுந்துவிட்டு எரியும்போது செய்யும் காரியங்களினால் நமது கழகத்திற்கு என்ன நன்மை என்பதையே பார்க்கும் கட்சியினர் இங்கே அதிகம். ஒரு கழகம் பல நாடகங்களை நடத்தியது.

அனைத்து கட்சிகள் கூட்டம்(14.10.2008 மாலை 4.30):
எல்லா மாநிலங்களிலும் பொதுவான பிரச்சினைகளில் ஒன்று கூடி தேர் இழுக்கும் கட்சிகளை பார்க்கலாம். நம் தமிழ்நாட்டில் அது மட்டும் நடக்கவே நடக்காது. அப்படி ஒரு முயற்சி தான் இந்த அனைத்து கட்சி கூட்டம்.கூட்டத்தின் முடிவில் இப்போதைய முதல்வர் கருணாநிதி
தமிழ்நாட்டினை சேர்ந்த 40 எம்பிக்களும் ராஜினாமா செய்வார்கள் என்று அறிவித்து அறிக்கை விட்டார்.

MPகள் ராஜினாமா: இதன் பின்புலம் என்னவென்று பின்னர் தான் தெரிந்தது. ஒரு தமிழ்நாட்டினை சேர்ந்த மத்திய அமைச்சரை காப்பாற்ற இவர்கள் செய்த நாடகம் தான் இது என பின்னாளில் கூறப்பட்டது.இது உண்மையில் என்னை மிகவும் கவர்ந்த நாடகம். முதலில் இதை கேள்விப்பட்டு இப்படி ஒரு தலைவன் நமக்கு கிடைக்க நாம் என்ன புண்ணியம் செய்தோமோ என்று நினைத்தேன். அப்புறம் எல்லாம் பூச்சாண்டி காமிச்சாங்க என்பது தெரிந்தது.

மனித சங்கிலி(அக்டோபர் 24, 2008):
எல்லா கட்சிகளும் கலந்து கொண்ட இந்த மனித சங்கிலி உண்மையில் ஒரு வேடிக்கையான நிகழ்ச்சி. கார் லோன் வாங்க போன ஒருவன் அது கிடைக்காமல் அந்த காரின் சாவிக்கு லோன் கேட்ட வரலாறு அன்றைக்கு தான் நடந்தது. எல்லாருக்கும் தெரியும் இது எல்லாரையும் நம்பவைக்கும் ஒரு முயற்சி என்று. ஆனால் எதிர்த்து கேட்க தான் துணிவில்லை.
அதன் பின் நடந்த போராட்டங்கள் எல்லாம் மக்களை வாக்காளர்களாக மட்டுமே பார்த்தவர்கள் செய்த நாடகங்கள்.
திருமாவளவன் நடத்திய உண்ணாவிரத போராட்டமும் அதன் பின் நடந்த வன்முறைகளும் அரசியலில் அவரின் இருப்பினை உறுதி செய்தது. ஆனால் உயர் நீதி மன்றத்தினுள் நடந்த அந்த தாக்குதல்கள் அரசின் உண்மையான முகத்தினை உலகுக்கு காட்டிற்று. இங்கே எல்லாருமே போராட்டம் நடத்தினார்கள் ஆளும்கட்சி எதிர்க்கட்சி என்று தனித்தனியே . ஆனால் யாரை எதிர்த்து என்பது தான் இங்கே கேள்வியே?
திருமாவளவன் ஆளும்கட்சியில் இருந்து ஆளும்கட்சியினை எதிர்த்து போராட்டம் நடத்தினார். இதன் விளைவுகள் என்று பார்த்தால் இனிமேல் ஈழம் சம்பந்தமாக எந்த போராட்டமும் நடத்த கூடாது என்று அரசே உத்திரவிடும் அளவுக்கு போனது. இது தான் திருமாவளவன் எதிர்பார்த்தாரோ என்று யோசிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
எல்லாராலும் விமர்சிக்கப்பட்ட மணிநேர உண்ணாவிரதம் நடந்தது. இந்தியாவில் மட்டுமல்ல அகில உலகிற்கும் தமிழ்நாட்டின் அரசியல் வியாதிகள் அரசியல் கோமாளிகள் என்பதை மீண்டும் உலகிற்கு பறைசாற்றின. இதைவிடவெல்லாம் கொடுமை என்னவென்றால் அதே ஆளும்கட்சிகளே மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் ஜெயித்து வந்ததே. களின் ஆரம்பத்தில் காஷ்மீரில் நடந்த தேர்தலின் மூலம் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு அங்கே தீவிரவாதம் விதைக்கப்பட்டது. அதையே தமிழ்நாட்டில் இப்போது விதைத்து விட்டு உள்ளார்கள். இங்கே விதைத்தது தீவிரவாதம் அல்ல. ஆனால் பணம் இருந்தால் யாரும் ஜெயிக்கலாம் என்ற ஒரு பணநாயக கருத்தினை முன்மொழிந்து போயுள்ளார்கள்.
இனிமேல் நடக்கும் எந்த ஒரு தேர்தலும் இப்படி தான் இருக்கும் என்பதை நான் சொல்லி தெரிய போவதில்லை.
முதல்வன் படத்தில் ஒரு காட்சி வரும் அதில் பேருந்து ஒன்றில் பயணிக்கும் ஒருத்தருக்கும் அந்த பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களுக்கும் நடக்கும் அந்த தகராறு இப்படி பெரிதாகிறது என்பதை காட்டி இருப்பார்கள். கடைசியில் அந்த பயணியின் நிலைமை என்னவென்று பார்க்க ஆள் இல்லாமல் போயிருக்கும். நாம் எதற்க்காக போராடுகிறோம் என்றே தெரியாமல் இவர்கள் போராடியதன் விளைவுகள் பல மறைக்கப்பட்டுள்ளன.
போராளிகளின் குடும்பங்களை சேர்ந்த பலர் தப்பித்து இந்தியா வந்தவண்ணம் இருந்தனர். இங்கே அப்போது ஆளும்கட்சியில் இருந்த ஒரு கட்சியிடம் 3000 போராளிகளின் குடும்பங்களை காப்பாற்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அந்த கட்சியும் கூட்டணி தலைமையை கேட்டு சொல்லுவதாக கூறியது. இன்னும் அந்த வேண்டுகோள் அவர்களின் சீரிய பரிசீலனையில் இருப்பதாக தெரிகிறது. இப்போது அந்த போராளிகளின் குடும்பங்கள் என்னவானார்கள் என்பதை இவர்களுக்கு நாம் தான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு இவர்களின் ஞாபக மறதி நோய் வளர்ந்துள்ளது.மேலும் ஒரு நிகழ்ச்சியை சொல்வதென்றால் இங்கே வருகின்ற ஈழ தமிழர்களை சிங்கள ராணுவம் எந்த அளவுக்கு துன்புரித்தியதோ அதைவிட இங்கே அவர்கள் அனுபவித்த துன்பங்கள் ஏராளம். காட்டிகொடுக்கபட்ட பல போராளிகள் எப்படி என்று தெரியாமல் இருந்தனர். ஆனால் அவர்களை காட்டி கொடுத்தது இங்கே போராட்டம் நடத்திய ஒரு நல்ல கட்சியின் தலைமை தான்.

அங்கே களமாடியவர்கள் போதும் என்று இப்போதற்க்கு ஓய்ந்து போய்விட்டார்கள் ஆனால் அவர்களின் பெயரை சொல்லி இன்னும் இங்கே வசூலிக்கும் பணத்தில் வீடு வாங்கிய அன்பர்கள் இன்னும் இங்கே இருக்கிறார்கள். வியாபாரம் தான் நோக்கம் என்றால் வேறு எதாவது சொல்லி பிழைக்க வேண்டியது தானே. மக்களின் பிணங்களின் மேல் ஏறி இப்படி நரமாமிசம் தின்றவர்களை என்னவென்று சொல்லுவது. இவர்களின் ஒரே ஒரு நோக்கம் மக்களை காப்பாற்றுதல் இல்லை. இவர்களின் வியாபாரத்தினை விரிவுபடுத்தியதும்
மற்றவர்கள் நடத்தும் போராட்டங்களை கொச்சை படுத்தியதையும் தவிர இவர்கள் ஒன்றும் செய்யவில்லை.
ஜாக்கிரதையாக இருங்கள் ஈழ தமிழர்களே உங்களின் ரத்தத்தினை உறிஞ்சும் அட்டைகள் இலங்கையில் மட்டும் இல்லை. தமிழத்திலும் தான் இருக்கிறார்கள்.

Wednesday, October 13, 2010

மனைவியை மயக்க…!


என் பொண்டாடியை புரிஞ்சுக்கவே முடியல…’ என்று அலுத்துக்கொள்ளும் ஆண்கள் அனேகம். அது ஒன்றும் அலிபாபா மந்திரமல்ல. இன்றைய `நவீன யுக மனைவி’யின் அன்பை பெற 10 விதிகள்…


1. மதியுங்கள்

வீட்டு வேலை தவிர தங்களால் நிறைய விஷயங்கள்முடியும் என்று பெண்கள் நிரூபித்து நீண்டநாட்களாகி விட்டன. எனவே மனைவியை அவரது திறமைக்காக மதியுங்கள். புதிய விஷயங்களைச் சாதிப்பதற்கு ஊக்குயவியுங்கள்.

2. கனவுகளை பின்பற்றட்டும், உங்களை அல்ல

இன்றைய பெண்கள் இலக்கு சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு ஓர் இலட்சியம் இருக்கிறது, ஒரு கனவு இருக்கிறது. உங்களுக்காக அவர்கள் தங்கள் கனவுகளை விட்டுவிட வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள்.

3. எல்லை தாண்டிச் சிந்தியுங்கள்

மனைவியை சமாதானபடுத்துவதற்கான பழைய விதிகள் எல்லாம் காலாவதியாகிவிட்டன. புதிய யோசனைகளில், சோதனை முயற்சிகளில் ஈடுபடத் தயங்காதீர்கள். மனைவிக்குத் திடீர் ஆச்சரியம் கொடுக் கும் வழக்கத்தைக் கைவிடாதீர்கள்.

4. உணர்வுகளை வெளிபடுத்துங்கள்

`ஆண்கள் அழ மாட்டார்கள்’ என்பது சரிதான். உணர்வுகளை வெளிபடுத்தும் உணர்வுபூர்வமான ஆண்களையே பெண்கள் விரும்புகிறார்கள் என்பதே உண்மை. ஆனால் எதற்கெடுத்தாலும் கண்ணைக் கசக்காதீர்கள். அழுமூஞ்சி ஆண்களை பெண்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.

5. ஆலோசனை கேளுங்கள்

நீங்கள் ஒரு முடிவெடுக்கும்போது உங்கள் மனைவியின் ஆலோசனையையும் கேளுங்கள். அது பணத்தை பற்றியதாக இருக்கலாம், வேலை, தொழிலை பற்றியதாக இருக்கலாம். மனைவியின் கருத்தைக் கேளுங்கள், அதற்கு மதிப்புக் கொடுங்கள்.

6. சமைக்கத் தெரிந்து கொள்ளுங்கள்

நேசத்தில் மட்டுமல்ல, சமையலிலும் கெட்டிக்காரராக இருக்கும் கணவரை மனைவிக்கு பிடிக்கும். அப்படிபட்ட கணவர் தான் அவர்களை பொறுத்தவரை `முழுமையானவர்’.

7. பேசுங்கள்

பேசுவது பெண்களுக்கு பிடிக்கும் என்று தெரியும். மனைவியுடன் வழக்கமான விஷயங்களை மட்டுமல்லாமல், அரசியல், பொருளாதாரம், இலக்கியம் என்று பல விஷயங்களை பற்றியும் பேசுங்கள். உங்களின் எதிர்காலத் திட்டங்கள், கனவுகள், பயங்கள் என்று எல்லாவற்றை பற்றியுமே பகிர்ந்துகொள்ளுங்கள்.

8. மனைவியின் குடும்பத்தில் `பங்கு கொள்ளுங்கள்’

வீட்டுக்கு வருகிற மனைவி உங்கள் குடும்பத்தோடு ஒன்றிபோய்விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அப்படி நீங்களும் ஒரு அன்பான மருமகனாக மனைவியின் வீட்டில் அக்கறை காட்டுவது அவசியம்.

9. அழகில் கவனம் செலுத்துங்கள்

அழகு, பெண்கள் மட்டும் சம்பநதபட்ட விஷயம் என்று யார் சொன்னது? வெளியிடங்களுக்கு போகும்போது உங்கள் மனைவியை வியப்பாக நான்கு பேர் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். அப்படி அவரும் எதிர்பார்பது நியாயம்தானே?

10. அவ்வப்போது `வழக்கம்போல்’ இருங்கள்

எல்லாவற்றிலும் புதுமையாக இருக்க வேண்டும் என்பதில்லை. அவ்வபோது, `நீ தான் எனக்குக் கிடைத்த மாபெரும் பொக்கிஷம்’ என்று `பழைய டயலாக்’ பேசுவதில் தவறில்லை

Saturday, October 09, 2010

ஈழத் தமிழர்களை கொன்ற பொன்சேகா! சிறையில் கதறல்! விரைவில் ராஜபக்சே?


யுத்த நெறிகளை புறம் தள்ளிவிட்டு ஈழத் தமிழர்களை கொன்று குவித்த முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகா, தற்போது அலுமினிய தட்டுடன் சிறை கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார். உடலும் மனதும் களைப்படைந்து போய், கடந்த கால சம்பவங்களை நினைத்து விம்மிவிம்மி அழுது கொண்டிருக்கிறார்.
இலங்கையின் ராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, போரின் வெற்றி யாருக்கு சொந்தம் என்கிற பஞ்சாயத்தில் ராஜபக்சே சகோதரர்களிடம் மல்லு கட்டினார். இந்த மல்லுக்கட்டில் இருதரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினர். இதனால் ராஜபக்சேவும் பொன்சேகாவும் எதிரிகளானார் கள். போருக்கு பின்பு நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து களமிறங்கிய பொன் சேகா, தேர்தலில் தோல்வி அடைந்தார். வெற்றி பெற்று அதிபர் பொறுப்பை ஏற்றதும்… முதல் வேலையாக பொன்சேகாவை கைது செய்தார் ராஜ்பக்சே. ராணுவத்திற்கு ஆயுதங் களை கொள்முதல் செய்ததில் பொன்சேகா ஊழல் செய்தார் என்கிற குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டது. இந்த குற்றச்சாட்டின்படி ராணுவ சிறையில் அடைக்கப்பட்டார் பொன்சேகா. இந்த வழக்கை சுமார் 1 வருட மாக விசாரித்து வந்த ராணுவத் தின் இரண்டாம் நிலை நீதி மன்றம்,’”பொன்சேகா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டி ருப்பதால் அவருக்கு 3 வருட கடும் சிறை தண்டனை விதிக்கப் படுகிறது’’என்று சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.
“”ராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பதால் அதனை அதிபருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன்படி ராஜபக்சேவின் பார்வைக்கு தீர்ப்பினை அனுப்பி வைத்தது கோர்ட். அப்போது அமெரிக்காவில் ராஜபக்சே இருந்ததால் இந்த தீர்ப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அமெரிக் காவிலிருந்து கடந்த 30-ந்தேதி இலங்கை திரும்பியதும், பொன்சேகாவிற்கு கொடுக்கப்பட்ட தீர்ப்பு ஃபைலை அன்று இரவு ஆராய்ந்த ராஜபக்சே, ராணுவ கோர்ட் தந்துள்ள 3 வருட சிறை தண்டனையை இரண்டரை வருடமாக (30 மாதங்கள்) குறைத்து ஒப்புதல் அளித்தார். பொன்சேகாவிற்கு கோர்ட் தந்த சிறை தண்டனையை ராஜபக்சே ஏற்று ஒப்புதல் அளித்ததால் ராணுவ சிறை கொட்டடியிலிருந்து கொழும்பில் உள்ள வெலிக்கடை சிறைக்கு மாற்றப் பட்டார் பொன்சேகா”’’என்கிறது அதிபர் மாளிகை.
வெலிக்கடை சிறைக்கு பொன் சேகா கொண்டு செல்லப்பட்டதும் வெள்ளை நிறத்தில் அவர் அணிந் திருந்த தேசிய ஆடையை அகற்றி விட்டு கைதிகளுக்கான ஆடை கொடுக்கப்பட்டது. அந்த ஆடை மிகவும் லூசாக தொளதொள வென்று இருந்ததால் அதனை அணிய பொன்சேகா மறுக்க, “”இதனைத்தான் நீ போட்டுக்கொள்ள வேண்டும். மறுத்தால்… டெய்லர் வந்து அளவு எடுத்து சரியான ஆடையை தைத்து கொண்டு வரும்வரை அரை நிர்வாண மாகத்தான் இருக்க வேண்டும். தேசிய ஆடையுடன் சிறையில் இருக்க அனுமதிக்க முடியாது. இது அதிபரின் உத்தரவு”’’என்று ஒருமையில் அதட்டி னார் ஜெயில் வார்டன். தன் நிலையை நினைத்து நொந்தவாறு அந்த ஆடையை வாங்கிகொண்டார் பொன்சேகா. அவருக்கு 0/22032 எண் கொண்ட கைதி எண்ணை ஆடையில் குத்தி விட்டுப் போனார் ஜெயில் வார்டன்.
“சிறையில் எஸ் பிரிவில் அடைக்கப்பட்டுள்ளார் பொன்சேகா. இது ஒரு தனிமைச் சிறை. ஜெயவர்த்தனா அதிபராக இருந்தபோது, தீவிரவாதி களுடன் தொடர்பு இருந்ததாக கைது செய்யப்பட்ட விஜயதுங்கே அடைக்கப்பட்ட அதே அறைதான் பொன்சேகாவிற்கு தற்போது ஒதுக்கப்பட் டுள்ளது’’’என்று சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1-ந் தேதி இரவு அடைக்கப்பட்ட பொன்சேகா, தூக்கம் இன்றி தவித்தார். மின் விசிறிகள் எதுவும் அந்த அறையில் இல்லை. நூற்றுக்கணக்கான எறும்புகள் அந்த அறையில் குடியிருந்தன. காற்று வசதி இல்லாமலும் எறும்புகளின் கடியிலும் இரவு முழுக்க அவஸ்தைபட்டார். விடியற்காலை 5 மணிக்கு எல்லா கைதிகளையும் எழுப்புவது போல பொன்சேகாவையும் எழுப்ப வந்தார் சிறை பணியாளர். ஆனால் அவர் கொட்ட கொட்ட விழித்துக்கொண்டிருந்ததை பார்த்து “”எழுந்துட்டீங்களா?”’ என்று மட்டும் சொல்லிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்து போனார்.
அந்த அறையில் இருந்த கழிவறையை பயன்படுத்த அவர் நினைத்த போது அதில் தண்ணீர் வரவில்லை. அப்போது அங்கு வந்த வார்டனிடம் இதனை அவர் சொன்னபோது, ஒரு அலுமினிய ஜக்கை கொடுத்து ’’”"அதோ அங்கிருக்கிற தொட்டியில் தண்ணீ இருக்கு. அதிலிருந்து தண்ணீயை எடுத்து பொது கழி வறையை யூஸ் பண்ணிக்கோங்க”’’
என்று வார்டன் சொல்ல, அதே போல ஜக்கில் தண்ணீர் எடுத்துக் கொண்டு போனார் பொன்சேகா. பிறகு மற்ற கைதிகளைப் போலவே கியூவில் நின்று குளித்தார். குளித்து விட்டு வந்த பொன்சேகாவின் கையில் ஒரு அலுமினிய தட்டும் ஒரு டம்ளரும் கொடுக்கப்பட்டது. அந்த அலுமினிய தட்டை ஏந்தியவாறு கியூவில் நின்று சோறு வாங்கி சாப்பிட்டார். 10 மணிக்கு வந்த டெய்லர் அவருக்கு சரியான ஆடை தைக்க அளவு எடுத்துக்கொண்டு போனார்.
முதல் நாளில் அவருக்கு எந்த வேலையும் கொடுக்கவில் லை. காலை போலவே மதியமும் இரவும் கியூவில் நின்று சோறு வாங்கி சாப்பிட்டார். மாலை 6 மணிக்கெல்லாம் அறைக்குள் போகச் சொல்லி அவரை பூட்டினர். பகலில் மற்ற கைதிகள் யாரிடமும் பொன்சேகாவை பேச அனுமதிக்கவில்லை சிறை நிர்வாகம். முதல் நாளை போலவே இரண்டாவது இரவிலும் அவஸ்தைப்பட்டார் பொன்சேகா. சிறையில் சொகுசாக பொன்சேகா இருக்கக்கூடாது. அதனால் அச்சகத்தில் பணிபுரியும் வேலையைக் கொடுக்கலாமா அல்லது தோட்டத்தை பராமரிக்கும் வேலையை கொடுக்கலாமா என்று 4-ந்தேதி வரை சிறை நிர்வாகம் ஆலோசித்து கொண்டிருந்தது.வெலிக்கடை சிறைக்குள் வந்ததிலிருந்து யாரிடமும் பேசுவதற்கு அவர் முயற்சிக்கவில்லை. நிறைய நேரம் அழுது கொண்டே இருந்தார். ஒருமுறை தனது அறையின் கம்பிகளை பிடித்துக்கொண்டு கதறினார் பொன்சேகா. இவரை சிறைக்குள் கொண்டுவருவதற்கு முதல் நாள் வரை அந்த அறையில் இரண்டு மின்விசிறிகள் இருந்தன. திடீரென்று அதனை அகற்றி விட்டனர். ஏன் என்று வார்டனிடம் கைதிகள் சிலர் கேட்க,’”இந்த அறையில்தான் நாளை இரவு பொன்சேகா அடைக்கப்பட விருக்கிறார். மின் விசிறிகளை அகற்ற சொல்லி அரசாங்கம் உத்தரவிட்டிருக்கிறது’ன்னு சொன்னார் வார்டன்” என்கின்றன சிறையிலிருந்து கிடைக்கும் தகவல்கள்.
சிறையில் அடைக்கப்பட்ட பொன் சேகாவை அவரது மனைவி அனோமா சென்று சந்தித்தார். அவரிடம் தான் அணிந்திருந்த தேசிய ஆடையையும் இதுநாள்வரை பயன்படுத்தி கொண்டிருந்த கருப்பு பேக்கையும் கொடுத்தார் பொன்சேகா. கணவனின் நிலையை கண்டு கதறிய அனோமாவிடம் தனது அறையை பற்றியும் தூக்கமில்லா இரவுகளையும் தெரிவித் திருக்கிறார் நொந்து போய். பொன்சேகாவை சந்தித்து விட்டு வெளியே வந்த அனோமா,’’”"ஒரு போர் வீரனாக நின்று இந்த நாட்டை மீட்டுக் கொடுத்த என் கணவருக்கு கடைசியில் மிஞ்சியது ஒரு அலுமினிய தட்டும் ஒரு டம்ளரும்தான். அந்த நிலையை பார்க்க முடியவில்லை. காற்று வசதியில்லாமலும் எறும்பு கடியிலும் கொடுமையை அனுபவிக்கிறார் என் கணவர். அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள அறை சுகாதாரமின்றி அசுத்தமாக இருக்கிறது. இதற்கெல்லாம் இந்த அரசாங்கம் விரைவில் பதில் சொல்லியே ஆக வேண்டும்”’’என்றார்.
பொன்சேகாவை ஆதரிக்கும் சிங்கள கட்சியான ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி,’’”"பொன் சேகாவை பார்த்து அச்சம் கொண்டுள்ளது இந்த அரசு. அதனால்தான் கோர்ட் தீர்ப்பில் அவசரம் அவசரமாக ஒரு முடிவெடுத்து அவரை வெலிக்கடை சிறையில் அடைத்திருக்கிறார் அதிபர்”’’என்கிறார். ஆனால் மற்றொரு சிங்கள கட்சியான ஜாதிஹெல உறுமயவின் செய்தி தொடர்பாளர் நிசாந்தஸ்ரீவர்ண சிங்கே,’”"இந்த தண்டனை பொன்சேகாவிற்கு சரியான, நியாயமான தண்டைனைதான். இவர் ராணுவ தளபதியாக இருந்த போது ராணுவ அதிகாரிகள் பலருக்கும் இதே போல தணடனை கொடுத்திருக்கிறார். அதே சட்டத்தில்தான் இவருக்கும் தண்டனை கொடுக்கப்பட்டிருக் கிறது”’’என்கிறார்.
இதற்கிடையே,’”"குற்றங்களை ஒப்புக்கொண்டு பொன்சேகா மன்னிப்பு கேட்கட்டும். அவருக்கு பொது மன்னிப்பு கொடுக்க தயாராக இருக்கிறார் அதிபர் ராஜபக்சே”’’என்கிறார் பொன்சேகாவின் தண்டனை குறித்து கருத்து தெரிவிக்கும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சே. ஆனால் அனோமா பொன்சேகாவோ,’”"என் கணவர் குற்றம் செய்யவில்லை. குற்றம் செய்யாத அவர் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்? மன்னிப்பு கேட்க மாட்டார். அவரை கைது செய்து சிறையில் அடைத் ததற்காக இந்த அரசாங்கம் ஒரு நாள் வருந்த போகிறது”’’என்கிறார் ஆவேசமாக.
இந்நிலையில், பொன்சேகாவின் இன்றைய நிலை அறிந்து மகிழ்ச்சியை தெரிவிக்கும் ஈழத்த மிழர்கள்,’”"சர்வதேச நெறிகளுக்கு எதிராகவும் மனித நேயமின்றியும் கொடூரமான யுத்தம் நடத்தி பல லட்சக்கணக்கான மக்களை படுகொலை செய்ததில் முதல் குற்றவாளி ராஜபக்சே. இரண்டாவது குற்ற வாளி பொன்சேகா. இரண்டாவது குற்றவாளிக்கு தண்டனை கிடைத்திருக்கிறது. அதேபோல முதல் குற்றவாளிக்கும் தண்டனை கிடைக்கும். அதிலிருந்து ராஜபக்சே தப்பிக்க முடியாது. கொன்றவனுக்கு தண்டனை என்றால் கொல்ல ஏவியவனையும் (ராஜ பக்சே) நிச்சயம் காலம் தண்டிக்கும்” என்கிறார்கள்.
-கொழும்பிலிருந்து எழில்
Nakkheeran

Tuesday, October 05, 2010

அயோத்தியும், அயோக்கியர்களும் - சில உண்மைகள்!

அயோத்தியும், அயோக்கியர்களும் - சில உண்மைகள்!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்னும் வழக்கில், அலஹாபாத் நீதிமன்றம் கடந்த 30ம் தேதி புராணக் கதைகளை அடிப்படையாக வைத்து ஒரு தீர்ப்பினை வழங்கியுள்ளது. அதுமுதல், பார்ப்பன வெறியர்கள் பல்வேறு பொய்களை அள்ளி இறைத்து வரலாற்றைத் திரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தோழர்கள் மணி மற்றும் ஏழர ஆகியோர், அயோத்தி நிலம், ராமர், பாபர் மற்றும் பாபர் மசூதி தொடர்பான பல தகவல்களையும் தொகுத்துள்ளனர். இந்த உண்மைகள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதாலும், வரலாற்றைத் திரிக்கும் முயற்சிகளை அம்பலப்படுத்தவேண்டும் என்பதாலும், உண்மையான நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காகவும் அவற்றை இங்கே பதிவிடுகின்றோம்.

(மொத்தத் தகவல்களின் நீளம் கருதி, மிக முக்கியமானவை bold செய்யப்பட்டுள்ளன)

#சுயசரிதை எழுதுவோரின் இளவரசன் என்பதுதான் ஜஹருத்தீன் ஷா பாபருக்கு வழங்கிய பட்டப்பெயர்.

#உலக தன்வரலாற்று ஆவணத்தின் உண்மைத்தன்மையில் இலக்கிய தரத்தில் ரூசோவுக்கும் செய்ண்ட அகஸ்டசுக்கும் அடுத்த இடம் பாபருக்குதான்

#த‌னது பலவீனத்தை தோலவியை தடுமாற்றத்தை வேறு எந்த அரசனும் பதிவு செய்யவில்லை பாபர் நமா வைப் போல

#டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் இன்றும் தனது மகனுக்கு அவர் எழுதிய உயில் காட்சிக்கு உள்ளது

#இந்துக்களின் மனம் புண்படாமல் இருக்க பசு மாமிசம் சாப்பிடுவதை தன் மகனை கைவிடச் சொல்கிறார் பாபர்

#மாற்று மத வழிபாட்டுத் தலங்களை அவமதித்து விடாதே என்றும் ஹிமாயூனுக்கு எழுதிய உயில்ல் பாபர் கூறுகிறார்

#திரேதா யுகம் முடிவுக்கு வந்த்து கிமு 3102 இல். திரேதா யுகத்தில் பிறந்தவன் ராமன் என்கிறது இந்து மதம்#ஆனால் கிமு 700 க்கு முன் அயோத்தியில் மனிதர்கள் வாழ்ந்த்த‍ற்கான சான்றே இல்லை என்கிறது அகழ்வாராய்ச்சி#


#பௌத்த இலக்கியமான தசரத ஜாதக கதையில் இருந்து இரவல் பெற்றுதான் கிமு 500 இல் வால்மீகி ராமாயணம் எழுதினான்

#ஒரு மனைவியை திருப்திபடுத்த மற்ற மனைவியின் மூத்த மகனான ராமனை காட்டுக்கு அனுப்புவான் தசரதன்

#அவனை அவனது சகோதர சகோதரிகளான் லட்சுமணனும் சீதையும் பின்தொடர்வர் என்கிறது அந்த சாதக கதை

#தந்தை இறந்த பிறகு வாரணாசிக்கே மீண்டும் வந்து சகோதரி சீதையை மணந்து ஆள்வான் ராமன். சமநிலை பிறழாதவன் என்பதுதான் அவனது சிறப்பு

#வால்மீகி இந்த கதையை சுட்டு இமயமலையை விந்தியமலையாக்கினான். ஆனால் விஷ்ணு அவதாரம் என மறந்தும் அவன் சொல்லவில்லை

#சீதை கடத்தப்பட்ட கதை இலியட் ம் ஓடிசியும் வாய்மொழியாக வணிகத்துடன் இந்தியா வந்த்து

#வால்மீகி இறந்து 700 ஆண்டுகளுக்கு பிறகுதான் ராமாயணத்தில் ராமன் விஷ்ணு அவதாரம் என சேர்க்கப்படுகிறது#நாகார்ஜூனா

# கோசல நாட்டின் முக்கிய நகரங்களாக சரஸவதியும் சாகித்தாவும் திகழ்ந்த்து. அன்றையஅயோத்தி கங்கைகரையில் இருந்த்து என்கிறது பௌத்த சமண இலக்கியங்கள்

# தற்போதைய அயோத்தி மேற்கிலிருந்து கிழக்காக பாயும் சரயூ ந்திக்கரையில் உள்ளது. வால்மீகி அந்த ஆறு கிழக்கிலிருந்து மேற்காக பாயும் என்கிறான்

# அப்படி ஒரு ஆறு இன்றும் நேபாளத்தில் உள்ளது

# மக்கள் நடமாட்டம் கிமு 700 ல் ஆரம்பிப்பதற்கு முன் ஆண்டுக்கு 50-60 அங்குல மழை பொழியும் பிரதேசம் அயோத்தி

#அந்தகாடுகளை திருத்தி நகரம்அமைக்க இரும்பு பயன்பட்டிருக்க வேண்டும். ஆனால் கிமு 700க்கு முந்திய ஒரு இரும்புதுண்டு கூட அயோத்தியில்சிக்கவில்லை

#இதனை ஆர்க்யாலஜிகல் சர்வே ஆப் இந்தியா வெளியிட்ட 1976-77 ரெவியூவில் பக்கம் 52, 53 இல் அறிவியல் சொல்லி உள்ளது #Indian Archeology - Areview 1979-80 page 76, 77 - cofirms the research-done by BB Lal, KN Thetchikth

#சரி ராமர் கோவில யார் கட்டுனா என்றால் விகரமாதித்தர் என்கிறார்கள். 1975 இந்திய தொல்பொருள் துறை இயக்குநர் பிபி லால் ஆயவு வேறு முடிவை தந்த்து

#விக்ரமாதித்தர் எனப்படும் இரண்டாம் சந்திரகுப்தன் காலம் கிபி 379-413. இன்னோரு விக்ராமாதித்த ஸ்கந்த குப்தன் காலம் கிபி 455-467.

#ஆனால் ஆய்வில் அயோத்தியில் குப்தர்கள் ஆண்டதற்கு ஆதாரமே கிடைக்கவில்லை. காரணம், கிபி 300-1100 ல் மனிதர்களே அயோத்தியில் வாழவில்லை

#12 ஆம் நூற்றாண்டுக்கு முன் அயோத்தியில் இன்று உள்ளது போல 18 என்ன ஒரு கோயில் கூட ராமனுக்கு இல்லை#ஏனெனில் ராமன் அன்று இந்துக் கடவுளாக கூட அங்கீகரிக்கப்படவில்லை.

#கிபி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த அமரசிம்ஹா எழுதிய அமர‌கோசா என்ற சமஸ்கிருத சொல்லகராதியில் கடவுளர்களின் பெயரில் தப்பித்தவறி கூட ராமன் இல்லை

#இந்துக்களின் புனித தலங்களை தனது தீராத் விவேகானி கலாப் இல் பட்டியலிட்ட 11 ஆம் நூற்றாண்டின் லட்சுமிதார் அதில் அயோத்தியை குறிப்பிடவில்லை

#எஸ்எஸ் ஐயர் என்ற ஹிந்து அறிஞர் எழிதிய ஆய்வுக்குறிப்போட்டு புத்தகத்தில் விக்ரமாதித்தன் எழுப்பிய திக்கவா எர்நாக் சான்சி பாம்ரா நாச்னா போன்ற‌

#இடங்களை பட்டியலிட்டார். ஏழு அடுக்கும் 84 கருப்பு கசவடி தூணையும் கொண்ட ராமர் கோவிலை அயோத்தியில் விட்டு விட்டார் இல்லையா

#பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை ராமனை யாரும் வணங்கவில்லை. பாபரின் சமகாலத்தில் வாழ்ந்த துளசிதாசரின் இந்தி ராமாயணத்திற்கு பிறகுதான்#அதுவும் மக்களது கதையாடல்களும் இணைக்கப்பட்டதால்தான் எந்திரன் ரஜினி போல ஜாக்கி வைத்து ராமன் தூக்கப்பட்டார்

#ராமர் கோவில் இடிக்தாக சொல்லப்படும் 1528ல் துளசிதாசருக்கு 30 வயது. சிரிராமசரித் மானஸ் என்றஅவரது காவியத்தில் இதுபற்றி ஏன் அவர்எழுதவில்லை
#இதனை சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் மகன் வரலாற்றாசிரிய்ர் கோபால் கேட்கிறார்

#பாபரின் வடிவில் மரண தேவனை அனுப்பியிருப்பதாகதனது கிரந்த சாகிபில் வெளிப்படையாக எழுதியவர் சீக்கிய மதத்தை நிறுவிய பாபரின் சமகாலத்தைய குருநானக்

#அவரும் அயோத்திக்கு வந்து பாபர் மஸ்ஜ௺த்தை பார்க்கிறார். ஆனால் எங்குமே பாபர் ராமர் கோவிலை இடித்த்தாக சொல்லவில்லை#பயந்திருப்பார் என்று கூட சொல்ல்லாம். ஆனால் பாபர் இறந்து 9 ஆண்டு கழித்துதான் இறந்தார் குருநானக். அப்போது ஹிமாயூன் ஒரு அகதியாக திரிந்தான்

#18 ஆம் நூற்றாண்டின் சிப்பாய் கலகம் துவங்கும் வரை அங்கு சைவ மத பைசாகி பிரிவுதான் செல்வாக்கில் இருந்த்து#இந்து அறிஞரான ஆர்எஸ் சுக்லா தனது சச்தித்தரர் பரமாணிக் இதிகாஸ் என்ற நூலில் 16 ஆம் பக்கத்தில் பாபர் 500 பிகாசு நிலத்தை அயோத்தி

#தாண்டதவான் குண்ட கோவிலுக்கு வழங்கியதை குறிப்பிடுகிறார். அதற்கான ஆவணம் அக்கோவிலில் இன்றும் உள்ளது#குவாலியரி கோவில் சிற்பங்களை ரசித்த்தை தனது சுயசரிதையான பாபர் நமாவில் குறிப்பிட்ட பாபர்

#ராமர் கோவில் இடிக்கப்பட்டதாக கருதப்படும் மார்ச் 1528 இல் அயோத்திக்கே வரவில்லை என்கிறார் அலகாபாத் பல்கலை வரலாற்றாசிரியர் சுசில் சிறீவத்சவா

#அப்போது ஆப்கானிய பட்டாணியர்களுடன் போரிட்டு கொண்டிருந்தார ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ஆக்ராவில் தங்கி கார்டனிங் வேலைகளில் ஈடுபட்டிருந்தார்.
அயோத்தியின் ஹனுமன் கோவில் மகாந்த் ரகுபர்தாஸ் என்பவர்தான் இன்றுள்ள கட்டுக்கதைக்கு மூலப்புள்ளி

#வ‌ரலாற்றை முழக்க வரவில்லை. துரோகத்தை சுட்டிக் காட்டப் போகிறேன்#பிஎன் பாண்டே வழிகாட்டலில் செர்சிங் என்பவரது அகழவாய்வில் மசூதி குறித்த தகராறு 1855க்கு முன் இருந்தாக எந்த ஆவணமோ கல்வெட்டோ நூலோ இல்லை

#1845ல் இங்கு வந்த ஆங்கில அதிகாரி சர் ஹென்ரி லாரன்சு இதுபோன்ற தகராறுகளை அவுத் குறித்த புத்தகத்தில் சொல்லவில்லை #மன்னிக்கவும் பைராகி என்ற சைவ வழிபாடு என்பது தவறாக முன்னர் குறிப்பிட்டு விட்டேன். சைவ மரபு என்று மட்டும் புரிந்து கொள்ளவும்

#1856 ஜ‌னவரியில் பைரகி என்ற வைணவ பிரிவினரால் முசுலீம்களின் அடக்கதலம் அனுமான் குன்றில் அழிக்கப்பட்டது

#இந்த தகராறு மதவழிபாட்டுதலம் மீதான தாக்குதலுக்கு முசுலீம்கள் வருவதாக தவறாக கணிக்கப்பட்டு ஆங்கிலேய ஜெனரல் அவ்ட்ராம் ஆல் தாக்கப்பட்டனர் #மௌலவி அமீர் அலி இத்தாக்குதலில் கொல்லப்பட்டார். பிறகுதான் பிரித்தாளும் சூழ்ச்சியை பிரிட்டிசார் புரிந்தனர்

#வாரிசிலா கொள்கையை அன்று இந்தியா முழுதும் அமல் ஆகி கொண்டிருந்த்து டல்ஹ௴சியால். அயோத்தியின் அவுத் மீதும் ஆங்கிலேயருக்கு ஒரு கண் இருந்த்து #பிப்ரவரியில் அவுத் கிழக்கிந்திய கம்பெனிக்கு வாரிசு இல்லாத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டது. மன்ன்ன் வாஜித் அலி ஷா கைது செய்யப்பட்டான்

#அவ‌னது நான்கு மனைவிகளில் மூவர் சரண்டைய நான்காவது ராணி மட்டும் ஆங்கிலேயரை எதிர்க்க துணிந்தாள்

#பீகாரின் எளிய தாழ்த்தப்பட்டகுடும்பத்தில் அழகாகபிறந்த ஒரே குற்றத்துக்காககட்டாத வரிக்கு பதிலாகபெண்ணையே மனைவியாக்கிகொண்டிருந்தான் அந்தமன்னன்

#அவளுடைய இழிபிறப்பு காரணமாக அவத் அவளை ராணிகளில் ஒருத்தியாக கூட ஏற்கவில்லை#ஆனால் அவத் இன் மானத்தை காப்பாற்றிய அவள்தான் ஹஸ்ரத் பேகம்

#ஜான்சியின் லட்சுமி பாயும் அவத் இன் ஹஸ்ரத் பேகமும் சிப்பாய் கலகத்தின் கதாநாயகிகள்#ஹஸ்ரத் தன் 10 வயது பாலகனோடு போர்க்களத்தில் நின்ற போது அவுத் இன் நிலபிரபுக்கள் நடுநிலை காத்தார்கள்

#அனுமன் கிரியின் பூசாரி ரகுபர் தாஸ் பிரிட்டிசாருக்கு சமையல் செய்ய ஆள் அனுப்பியும் உணவு அனுப்பியும் தைரியமூட்டியும் ஆதரவு அளித்தான்#அப்போது ஆற்காட்டில் இருந்து ஆங்கிலம் தெரிந்த ஒரு 70 வயது மௌலவி ஒருவர் அயோத்தி அமைந்திருக்கும் பைசாபாத் க்கு வந்தார்

#பாளையக்கார்ர்களின் கலகத்திற்கு ஒரு விருப்பாட்சி கோபால் நாயக்கர் என்றால் சிப்பாய் கலகத்திற்கு பைசாபாத் மௌலவி அகமது ஷா

#ஜிகாத் என்ற மதப்போர்வையில் பிரிட்டிசாருக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார். கைதாகி சிறையிலிடப்படுகிறார்.

#ஆயுதங்கள் பறிக்கப்படுகிறது. ஆனால் சிறையில் இருந்து மக்கள் ஆதரவுடன் உடைக்கப்ட்டு விடுவிக்கப்படுகிறார் மௌலவி#சிறையையும் தனது பிரச்சார மேடையாக மாற்றிய மௌலவி தனது உதவியாளருடன் கடைசியாக பிடிபட்டு தூக்கிலிடப்பட்டார். அப்போது வயது 71

#அக‌மது ஷாவும் ஹஸ்ரத் மஹலும் உள்ள அவுத் இன் சிப்பாய் கலகம் பற்றி மட்டுமே ஜி.ஹட்சின்சன் ஒரு தனி புத்தகமே எழுதி உள்ளார்

#அப்புத்தகத்தில் கேப்டன் ரீத் என்பவர் ஹனுமன் கிரி பூசாரிகளின் உதவிக்கு நன்றி பாராட்டுகிறார்#மெக்கால்டு இன்சும் அவுத் லக்னோ கலகம் பற்றிய குறிப்புகளில் இதனை குறிப்பிடுகிறார்‌

#ஹனுமன் கிரி பூசாரி மாத்திரம் உணவு தராமல் இருந்தால் தாங்கள் செத்திருப்போம் என்கிறார் வில்சன்தாமஸ் பொர்னஸ்Defence of Lucknow (1858 edition) #இந்த துரோகத்திற்கு எதாவது பரிசளிக்க விரும்பினார்கள் ஆங்கிலேயர்கள் ஹனுமன் கிரி பூசாரி ரகுபர் தாசுக்கு

#பாபர் மஸதிக்கு முன் உள்ள பொதுமனை அவர்களுக்கு வழங்கப்பட்டது. 1865ல் அங்கு ராம் சபூட்ரா என்ற ராமர் பிறந்த இடம் தோன்றியது

#முன்னர் கல்லறை வழிபாட்டு தகராறுக்கு நியாயம் கேட்க வந்த முசுலீம்களை பழிவாங்கும் நோக்கம் இருந்த்தை பூசாரியின் நடைமுறைகள் காட்டுகின்றன‌

#கட்டபொம்மனை காட்டிக்கொடுத்த தொண்டைமானுக்கு ஒரு வாளும் பட்டாடையும், சிப்பாய கலகத்தை காட்டிக் கொடுத்த ஹனுமன் கிரி பூசாரிக்கு ராமஜென்ம பூமி


#த‌னது செல்வாக்கை பயன்படுத்தி ஆங்கிலேயர் பி.கார்னேஜி என்பவர்1870 இல் எழுதிய Historical sketch of Fyzabad புத்தகத்தில் #முதன்முதலாக பாபர்மசூதி கட்ட ப‌யன்படுத்திய தூண்கள் ஜனமஸதான் கோவிலில்இருந்து எடுக்கப்பட்டதாக திரித்தனர
#இன்றுமட்டுமாவரலாற்றைதிரிக்கிறார்கள்

#ராம் சாபூட்ரா திண்ணைக்கும் மசூதிக்கும் இடையில் வேலியும் போட்டு வடக்கு வாசல் வழியாக மட்டுமே முசுலீம்கள் வரலாம் என நிபந்தனை விதித்தார்கள்

#1859 இலிருந்து இது நடைமுறைக்கு வந்த்து#ஆம் சுதந்திர போராட்டத்தை காட்டிக் கொடுத்த துரோகிகளுக்கு கிடைத்த இடம்தான் ராமஜன்ம பூமி#பிரிட்டிசாரின் தயவில் பிறந்த அவதார புருசன்

#1885ல் ரகுபர்தாஸ் இந்த திண்ணையில் கோவில்கட்ட அனுமதிக்குமாறு பண்டிட் ஹரிகிருஷ்ணசாஸ்திரியின் சிவில்கோர்ட்டில் வ.எண் 61/280 பதிவு செய்கிறார் #படுகொலைக்கு வழிவகுக்கும் என அந்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து ஆனால் இடத்தை ஊர்ஜிதம் செய்தார்

#அவுத்மாகாண நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடும் யங் என்பவரால் நவ 1 1886ல் தள்ளுபடி செய்யப்பட்டது. but பாபர்தான் இடித்தார் என ஏற்றுக்கொண்டது

#இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிதுறையின் இயக்குநர் ஏ.பூரேர் 1889 ல் நடத்திய ஆய்வில் மசூதியின் பாரசீக கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்படுகிறது

#ஹிஜ்ரி 930ல் அதாவது கிபி 1524ல் அதாவது இப்ராகிம் லோடியால் இப்பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது#கல்வெட்டில் உள்ள செய்தி

#ஏப் 25 1526 இல் முதல் பானிபட் போரில் இப்ராகிம் லோடி பாபரால் கொல்லப்படுகிறார். பாபர் இந்த பள்ளிவாசல் கட்டப்படுவதை தொடர்ந்தார்

#இந்த கல்வெட்டை கவனிக்காமல் திருட்டை உருப்படியாக செய்ய முடியாமல்மாட்டிக் கொள்ளவே கல்வெட்டுக்குகன்னம் வைக்க கலவரத்திற்கு தேதி குறித்தார்கள்

#1934 கலவரத்தில் வெற்றி பெற்றதாக ராக்த் ரஞ்சித் இதிகாஸ் நூலில் ராம ராக்ச திரிபாதி (பக்.60)குறிப்பிடுகிறார்

#அந்த கலவரத்தில் கல்வெட்டை மட்டும் அழித்தால் மாட்டி விடுவோம் என பயந்து வெளிச்சுவர் தூபி என பலவற்றை இடித்தனர் இந்துமத வெறியர்கள்

#க‌லவரத்தில் சேதமடைந்த பகுதிகளை அரசு செப்பனிட காண்டிராக்டு விட்டதற்கு ஃஆதாரம் உள்ளது

#1949 டிச22 இரவில்தான் பூமியை பிளந்துகொண்டு ராமரும் லட்சுமண சீதா பிராட்டியும் அயோத்தியில் முளைத்தனர்

#இதற்கு காரணமான கேகே ந்ய்யர் கூட இந்த அற்புத்த்தை ஏற்றுக்கொள்ளவில்லை.இந்த உதவிக்காக ஜனசங்கம் பின்னர் அவரை எம்பி ஆக்கியது

#மறுநாளே சிலைகளை அப்புறபடுத்த வாய்ப்பிருந்தும் அப்படி செய்தால் அப்பாவிகள் மடிவார்கள் என நய்யர் அகற்ற மறுத்துவிட்டார்

#அகற்ற வாய்பு இருந்த்தை அன்றைய காங்கிரசு மா செயலர் அக்சாய் பிரம்மச்சாரி சுட்டிக்காட்டுகிறார்

#சாஸ்திரிக்கு 1950ல் கடிதமும் எழுதி மசூதியை முசுலீம்களிடம் ஒப்படைக் கோரி உண்ணாவிரதமும் இருந்தார் அவர். ஏற்கெனவே 1949டிச23 மசூடிக்கு பூட்டு

#உண்ணாவிரதமிருந்த காந்தியவாதிகளை தாக்கி வீடுகளை சூறையாடினார்கள் இந்துமதவெறியர்கள். டிச291949ல் பைசாபாத்-அயோத்தி கூடுதல் முதல் மாஜிஸ்டிரேட் #சொத்தின் ரிசீவராக நகராட்சி தலைவர் பிரியாதர்ராமை நியமித்த்து. அவர் இந்துக்களுக்கு மாத்திரம் விகரக தரிசனத்திற்கு அனுமதித்தார்

#இந்திய கிரிமினல் சட்டம் 145 ன் கீழ் இந்நியமனம் நடந்த்து. இதன்படி சொத்தை பறிகொடுத்தவன் நீதிமன்ற இறுதிதீர்ப்பு வரை சொத்தை அனுபவிக்கலாம்
#ஆனால் முசுலீம்களை மசூதிக்கு அருகில் கூட அனுமதிக்கவில்லை

#ஜன61950ல் சூட் நம்ர் 2ல் கோபல்சிங் விசாரத் ஒரு வழக்கை சிவில்நீதிமன்றம் பைசாபாத் தாக்கல் செய்தார் தடையின்றி இந்துக்கள்வழிபாடு செய்வதற்ku

#அரசு முசுலீம் என 8பேர் பிரதிவாதிகள்.உபி அரசுசாப்பில் ஆசரான பைசாபாத் துணை ஆணையர் உக்ரா கள்ளத்தனமாக சிலை வைக்கப்பட்டதையும் #மசூதியின் நீண்ட கால அனுபவ பாத்யதையையும் ராமர் கோவிலின் ஆதாரமின்மையையும் அறிக்கையாக தந்தும் நீதிபதி என்என் சத்தர்

#சிலைகளை அகற்ற இடைக்கால தடை விதிக்கிறார். மார்ச் 51ல் ஒருமுறை தடை நீட்டிக்கப்பட்டது.பின் 1961அலகாபாத் உயர்நீதிமன்ற பெஞ்ச வ.எ.12கீழ் வந்தது

#ராமஜனம்பூமி மீட்பு ரதயாத்திரயை சீதை பிறந்தாக சொல்லப்படும் நேபாளின் ஜனக்பூரிலிருந்து 1984 செப் 25ல் விசுவிந்து பரிசத் துவங்கி

#அக்7,1984இல் அயோத்தி வ்ந்த்துமசூதி பூட்டை உடைத்து ராமர் கோவிலாக மாற்ற உறுதிமொழி எடுத்தனர்.தாலா கோலே(பூட்ட உடை)முழக்கம்ஆனது

#அக் 31 இந்திரா செத்ததால் கலவரத்தை ஓராண்டு தள்ளி போட்டார்கள். மார்ச்9,1986க்குள் கதவு தங்களுக்கு திறக்காவிடில் பூட்டுஉடைபடும் என்றனர்விஇப‌

#டிச18,1985ல் விஇபல் உள்ள முன்னாள நீதிபதிகள் கத்திவு அகர்வால் முன்னாள் போலிசு ஐஜி தீட்சித் ஆகியோர்

#பைசாபாத் மாவட்ட மாஜிஸ்டிரேட் இந்துகுமார் பாண்டே ஐ சந்தித்து கோவிலை பூட்டிவைப்பது சட்டவிரோதம் திறந்துவிட வேண்டும் என்றனர்

#உமேஷ் சந்தர் பாண்டே என்ற 28 வயது (உயர்நீதிமன்றத்திற்கு வழக்கு வந்தபோது 2 வயது)ஒருவர் முன்சீப் நீதிமன்றத்தில் பூஜிக்கதடையை நீக்ககோருகிறார்

#முன்சீப் ஹரிசங்கர் துபே ஜன28,1986ல் இம்மனுவை உயர்நீதிமன்ற வழக்கு நிலுவை காரனமாக நிராகரிக்கிறார். இம்மனு மேல்முறையீட்டுக்காக #மாவட்ட நீதிபதி கேஎம் பாண்டே முன் பிப் 1,1986 அன்று விசாரணைக்கு வருகிறது. அன்று மாலையே பூட்டை திறந்துவிடும்படி உத்தரவிட்டார்

#உயர்நீதிமன்றத்தில் வழக்கு இருக்கையில் மாவட்ட நீதிமன்றம் அவ்வழக்கிற்கு தீர்ப்பு அளித்த்து நீதித்துறை வரலாற்றில் விசித்திரம்தான்

#தீர்ப்பில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவோ விக்ரகத்தை பாதுகாக்கவோ பூட்டு தேவையில்லை35ஆண்டுகளாக இந்துக்களை கைதிகள் போல இருந்துள்ளனர் endrum

#பூட்டை திறப்பதால் வானம் இடிந்து விழாது. முசுலீம்கள் ஏற்கெனவே வருவது இல்லை. பூட்டை திறந்தால் மாத்திரம் எப்படி பிரச்சினை வரும் என்றும்

#தீர்ப்பளித்த பாண்டே பிரதிவாதியாக சேர்க்க கோரிய முகமது காசிம் என்பவரது மனுவை தள்ளுபடி செய்து பிப் 1,1986,4.40க்கு உத்தரவிட5.20க்கு அமல்னது

#பூட்டை திறந்தால் முசுலீமுக்கு பாதிப்பு என்பது கற்பனைக்கு கூட தகாது என பகடி செய்தார். சட்டம ஒழுங்கு பாதிக்கபடாது என்றார் அல்லவா #க‌லவரம் வட இந்தியா முழுவதும் பற்றிப் படர்ந்த்து

#1985 ஏப்ரல ஷாபானு வழக்கில் முசுலீம்களை திருப்தி செய்ய முசுலீம் பெண்களின் வாழ்க்கையை பறித்தெடுத்த நேருவின் குலக்கொழுந்து #1986சிவராத்ரி மார்ச்8க்குள் பூட்டை உடைக்க அனுமதி தருவதாக விஇப இடம் அனுமதி கொடுத்தார்.அருண்நேரு போன்ற கூட்டாளிகளிட்ம்

#முசுலீம் தனிநபர் சட்டத்திற்கான பழிக்குப்பழிதான் இது என சொன்னது அக்பரே நவ் இன் பேட்டி ஒன்றில் அருண்நேருவே ஒத்துக்கொண்டது #நவ9,1989இல் 25கோடியில் கோவில் கட்ட அலகாபாத் விராத் சாந்த சம்மேளன கூட்டத்தில் ஜனவரியில் 4 க்ட்ட‍ நடவடிக்கைக்கு திட்டமிடப்பட்டது

#எம்கே நாராயணன், பூட்டாசிங், தவாண் போன்றோர் விஇப உடன் இது சம்பந்தாக பேசி உள்ளனர். செங்கற்களுக்கு வரும்வழியில் பாதுகாப்பு வழங்க,

#அடிக்கல் நாட்டுக்கு பாதுகாப்பு வழங்க அரசு சம்மதித்த்து. ஆக 14 89ல் அலகாபாத் உயர்நீதிமற்ற ல்க்னோ பெஞ்ச் ஸ்டேட்டஸ் கோ வை உத்தரவிட்டது

#ஆனால் நீதிமன்ற தீர்ப்பை மீறி ஊர்வலம் நடந்த்து. பகல்பூரின் கார்லிபிளவர் செடிகளுக்கு உரமான முசுலீம் பிணங்களை பார்த்த பிறகும் ராஜிவ்

#அக் 26 1989ல் ராம்லீலா ஊர்வலங்களை தடைசெய்ய முடியாது என்றார் பாட்னா விமான நிலையத்தில் #தானே அடிக்கல் நாட்ட வரப்போவதாகவும் பூட்டாசிங் மூலம் தூது அனுப்பி சொன்னார் ராஜீவ். நவ 3 முதல் பிளாட் 586ல்

#முசுலீம்களின்அடக்கதலத்தின்மீது காவிகொடி பறக்கவிட்டு இடத்தை தேர்வு செய்தார்கள். அன்றுதான் ராஜீவ பைசாபாத்ல் தேர்தல்பிரச்சாரத்தை துவக்கினார்

#ராமராஜ்யம் அமைக்கபோவதாகவும் கூறினார். ஜிகாத் என்ற பெயரில் மக்களை திரட்டிய மௌலவிக்கும் இந்த பொறுக்கிக்கும்தான் எத்தனை வேறுபாடு #முசுலீம் ஓட்டுக்களை இழக்க விரும்பாமல் உபி அரசு மூலம் தடையும் கோரினார் ராஜிவ்.

----
மானஸாரா என்ற இந்துகட்ட்ட‍ கலை குறித்த சிற்ப சாஸ்திர நூலின் 3 வது அத்தியாயத்தில் மனித மண்டை ஓடுகள்-எலும்புக்ள-..பிணங்கள் நிறைந்து காணப்படும் இடத்தை கோவில் கட்ட தேர்வு செய்ய கூடாது என உள்ளது. ஆனால் தற்போது அடிக்கல் நாட்டிய இடம் முசுலீம்களின் கல்லறைதான். இது 2010 தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு தெரியாதா.

மினரா இல்லாமல் பள்ளிவாசல் இருக்க முடியாது என்பதும் ஒரு வாதம். செருசலத்தில் உள்ள பைத்துல் முகத்துஸஃ பள்ளிவாசல், மெக்காவின் க்பா, இந்தியாவின் முதல் பள்ளிவாசலான கேரளத்தின் கொடுங்களூர் பள்ளிவசலிலும் மினரா கிடையாது. எனவே அயோத்தியில் இல்லாத்து பிரச்சினை இல்லை.

அக்பர் தான் எழுதிய திவான் இ அக்பர் என்ற நூலில்
ததானே திண்ணை அமைத்து ராமர்கோவில் கட்ட உதவியதாகவும் விஇப தனது அதீத் கி அஹூத்யான் வர்த்தமன் கி சங்கல்ப் என்ற நூலில் சொல்கிறது.அபூல் பசல் தனது அய்னி அக்பரியின் ஜலாலுதீன் அக்பருக்கு எழுத படிக்க தெரியாத்தை பதிவு செய்கிறார்.
மற்றபடி அவர்கள் சொல்லும் நூற்கள் 18 ஆம் நூற்றாண்டின் சூபி மரபின் இலக்கிய பதிவுகளாக இரு புத்தகங்கள் உள்ளன சில வார்த்தை வித்தியாசங்களுடன்

பாப்ர் மசூதி கட்டப்பட்ட போது அதை எதிர்த்து 1,72,000 இந்துக்கள் போராடி மடிந்தனராம்.
அதாவது 1528ல். ஆஃனால் 1881 இல் அயோத்தியின் மக்கட்தொகை 11,643.

ராமர் கோவிலின் கருப்பு கசவ்டி தூண்களைத்தான் மஸதிற்கும் பயன்படுத்தினார் பாபர் என்கிறார்கள்.கார்பன் 14 பரிசோதனை மூலம் இந்த தூணின் வயதை கண்டறிந்த போது அது எதுவும் 450 (1989ல்) ஆண்டுகளை தாண்டவில்லை.(Radiance Views Weekly, 24-30 April 1988, 25 June-1 July 1989, 17-23 Dec 1989)

பாபர் நாமாவில் டிச 24,1528 ல் 26 தூண்களை வடிவமைத்த்தை பாபர் குறிப்பிடுகிறார் (பக்கம் 362)

பாபர்நாமா ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 1528ல் எழுதப்படவில்லை. இந்த கட்டத்தில்தான் பாபர் அயோத்தி வந்து இடித்தார் என்கிறார்கள். இக்குறிப்பிட்ட காலத்திற்கான குறிப்புகள் பலத்த சூறாவளி காற்றில் காணாமல் போனது பற்றி பாபர் நாமா பதிவு செய்துதான் உள்ளது. ஆனால் பாபரின் மகள் குல்பதன் எழுதிய ஹூமாயூன் நாமா வின் பக். 100-103ல் இதற்கு விளக்கம் உள்ளது1528 ஏப்ரல் 5-8ல் ஆக்ரா வருகிறார். ஜூலைக்கு பிறகு பதேபூஃர சிக்கரிக்கு செல்கின்றனர். அங்குள்ள பூந்தோட்டத்தில் பாபர் நாமா எழுத ஒரு இடம் பூங்காவில் அமைக்கப்பட்டதை பதிவு செய்கிறார்• ஃஆப்கானியர் மீதான வெற்றி மழையால் தள்ளிப் போனதை பற்றுயிம் குறிப்பு உள்ளது.

-----