Friday, December 31, 2010

ஒரு மெட்ராஸ் பேச்சுலரின் (சாப்பாட்டு) டைரி


எண்சாண் உடம்பில் வயிறே பிரதானம். சிரசே பிரதானம் என்பதெல்லாம் சும்மா. வயிறு தான் முக்கியம். நாம் எல்லோரும் உழைப்பது (ஏமாற்றுவது , திருடுவது , கொள்ளை அடிப்பது , பிச்சை எடுப்பது என எதைச் செய்தாலும் அது) சாப்பாட்டுக்குத்தான். தத்துவம் சொல்வது மாதிரி இருந்தாலும் உண்மை அதுதானே. சென்னையில் பேச்சுலராய் தனியாய் சுற்றும் போது தான் (ஜாலியாய் அல்ல , சாப்பாட்டுக்காக
ஹோட்டல் ஹோட்டலாய் சுற்றுவது) முன்பு ஊரில் செய்த அட்டகாசங்கள் எல்லாம் மனசில் வந்து மனசாட்சியைக் குத்தும்.

சிறு வயதில் , வீட்டில் எவ்வளவு கஷ்டம் இருந்த போதும் , பணப் பிரச்னை இருந்த போதும் சாப்பாட்டுக்கு மட்டும் எந்தக் கவலையும் இருப்பதே கிடையாது. பதினைந்து ரூபாய் பொன்னி அரிசிதான் சாப்பாட்டுக்கு (அப்போதெல்லாம் அது விலை மிக அதிகம் , இப்போதைய நாற்பது ரூபாய் அரிசிக்குச் சமம்). வேளா வேளைக்கு வக்கனையாக ருசியாக தட்டில் வந்து விழுந்து விடும். அதனால்தானோ என்னவோ
கஷ்டமான சூழ்நிலைகளை மட்டும் என்றுமே உணர்ந்ததில்லை. ஸ்கூல் , வீடு , காலேஜ் என்று சந்தோஷமாக இருந்தாயிற்று.

டிபன் என்ன ? உப்புமாவா ? உப்புமாவை எவன் திம்பான்... உப்புமா இல்லடா , கார தோசை. கார தோசையா ? கார தோசையை எவன் திம்பான்... என்று திமிரெடுத்துச் சுற்றிய காலம் அது. தட்டில் போட்ட சாப்பாட்டை , எனக்கு பிடிக்காது , சாப்பிட மாட்டேன் என்று விசிறி அடிக்கும் அளவுக்கெல்லாம் அராஜகம் செய்ததில்லை என்றாலும் முனகிக் கொண்டே சாப்பிடுவது , அடம் பிடிப்பது எனச் செய்வதுண்டு.
எப்படித்தான் ஞாபகம் வைத்திருப்பார்களோ தெரியாது அதற்குப் பிறகு அந்தந்த டிஷ்களை செய்யவே மாட்டார்கள். கார்த்திக்கு இது பிடிக்காது , பப்பிக்கு அது பிடிக்காது என்று மனப்பாடமாக இருக்கும் அம்மாவுக்கு.

பிடித்த டிஷ்ஷூம் வேண்டும் , ருசியாகவும் இருக்க வேண்டும் , நேரத்துக்கு கிடைக்க வேண்டும் என்று தின்ற நாக்கு இப்போது நல்ல சோறு கிடைக்காதா என்று அலைகிறது. உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் தட்டில் சாப்பாடு போட்டு சாம்பார் , ரசம் ஊற்றி அப்பளத்துடன் பொரியல் போட்டுத்தின்பது எப்படி என்று மறந்தே போய்விட்டது. வீட்டில் இருக்கும் போது சாப்பிடாது விட்ட
உப்புமா வகையறாக்கள் எல்லாம் அமிர்தம் என்று சோத்துக்கு அலையும் போதுதான் மனதில் உறைக்கிறது. கஷ்டத்திலும் நன்றாக சாப்பிட்டோம். ஆனால் , நன்றாக சம்பாதிக்கும் போது சாப்பிட முடியவில்லை. (இதாண்ணே வாழ்க்கை)

அதுவும் சென்னை வந்த புதிதில் (நான் - வெஜ் பழகாதவர்களுக்கு ரொம்பக் கஷ்டம்) ஒன்றுமே செய்ய முடியாது. கிடைத்ததைத் தின்பது என்பார்களே அது தான் கதை. அதுவும் வேலை நிமித்தம் அகால நேரத்தில் ஆபீஸிலோ , மழையிலோ மாட்டிக் கொண்டால் போச்சு , அவ்வளவுதான். அன்றைய சாப்பாட்டில் மண் தான். பட்டினி அல்லது மண் மாதிரி இருக்கும் எதையாவது தான் தின்றாக வேண்டும். ஒரு நாளைக்கு
இரண்டே வேளை.

இதில் சாப்பிடுவது உடம்புக்கு கெடுதல் இல்லாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். ( கூட இருக்கும் எவனுக்காவது அல்சர் வந்து தொலையும் , அம்மை போடும் , டயரியா வரும் , இல்லாவிட்டால் சாப்பிட்டது சேரவில்லை என்று எவனாவது ஒருத்தன் சொரிந்து கொண்டே இருப்பான்) பர்ஸூக்கும் கெடுதல் வரக் கூடாது. நல்ல ஹோட்டலையும் கண்டுபிடிக்க வேண்டும். எத்தனை பிரச்னை.

அது மட்டுமல்ல... எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்பது போல எத்தனை வகை ஹோட்டல் வைத்தாய் இறைவா என்று அவனைக் கைகூப்பி வணங்கலாம். கையேந்தி பவன் , தள்ளு வண்டி , ரோட்டுக் கடை , த்ரீ ஸ்டார் , ஃபைவ் ஸ்டார் , பிரியாணி ஹோட்டல் , ஐயர் மெஸ் , ஆந்திரா மெஸ் , கொல்கத்தா மெஸ் , சைனீஸ் , இத்தாலியன் , தந்தூரி , கான்டினென்டல் , தாலி ஹவுஸ் , போஜன்சாலா , இந்திய உணவுக் கழகம் , போஸ்ட்
ஆபீஸ் கேன்டீன் , முனியாண்டி விலாஸ் , தலப்பா கட்டு , அஞ்சப்பர் , சரவண பவன் , பஞ்சாபி தாபா என்று எத்தனை வகை. ஆனால் எதிலுமே ரெகுலராகச் சாப்பிட முடியாது. காசு முதல் குவாலிட்டி வரை பல காரணிகள்.

எந்த ஹோட்டலிலும் கிச்சனை மட்டும் எட்டிப் பார்த்து விடக் கூடாது. பார்த்தால் சாப்பிட முடியாது. ' என்னடா டேய்... ஹோட்டலில் கிடைக்காத ருசியா ? வெரைட்டியா ? அதைப்போய் இப்படிப் பழிக்கிறாயே ' என்று சொல்லும் வீட்டுச் சாப்பாடு சாப்பிடும் அன்பர்களே , குறைந்த பட்சம் ஒரு வாரத்திற்கு தொடர்ச்சியாக மூன்று வேளை ஹோட்டல்கள் மாற்றி மாற்றி சாப்பிட்டுப் பாருங்கள்.
அப்போது தெரியும் உங்களுக்கு. கிடைப்பதைச் சாப்பிட்டு விட்டு ஃபுரூட் ஜூஸ் , லெமன் ஜூஸ் , வாழைப்பழம் , மோர் , பெப்ஸி , சோடா என எதையாவது உள்ளே தள்ளி சாப்பிட்ட அயிட்டத்தை செரிக்க வைக்க வேண்டும். கூடவே உடம்பு சூடாகாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். சனிக்கிழமை எண்ணெய் தேய்த்து உடம்பை ஊற வைப்பது என்ற கதையே இங்கு நடக்காது. ஆபீஸ் இருக்கும் , அல்லது அன்றைக்குத்தான்
மீட்டிங்கோ , க்ளையண்ட் அப்பாயிண்ட்மென்டோ இருக்கும்.

கண்டதைச் சாப்பிட்டு விட்டு உடம்புக்கு எதாவது , குறிப்பாக வெயில் வியாதிகள் (அம்மை , டயரியா , உட்காருமிடத்தில் கட்டி , மெட்ராஸ் ஐ , முகத்தில் கொப்புளங்கள் அல்லது வீக்கம் போன்றவை) வந்து தொலைத்தால் காலி. அவ்வளவு தான். ஆபீஸூக்கு போனைப் போட்டு சிக் லீவ் சொல்லிவிட்டு , முனகிக் கொண்டே ஊருக்கு ரயிலேற வேண்டியது தான். அதனால் பார்த்துச் சாப்பிட வேண்டும்.

அதிலும் ஹோட்டல்களில் இந்த டிப்ஸ் கருமம் வேறு. டிப்ஸ் வைக்கவில்லையென்றால் கெட்ட வார்த்தையிலேயே திட்டுகிறான்கள். வேளைக்கு மூன்று ரூபாய் டிப்ஸ் வைத்தாலும் ஆவரேஜாக மாதம் முந்நூறு ரூபாய் அதற்கே போகும். அநியாயமாக இல்லை.. ?

அந்த டிப்ஸ் பணத்தில் என்னென்ன செலவு செய்யலாம் ? சத்யத்தில் ஜோடியாக ஒரு படம் பார்க்கலாம் , அல்லது நல்லதாய் நாலு புத்தகம் வாங்கலாம் , அல்லது பன்னிரண்டு லிட்டர் கூல்டிரிங்க் வாங்கலாம் , அல்லது மூன்று டிரெயின் பாஸ் எடுக்கலாம் , அல்லது இரண்டு பஸ் பாஸ் எடுக்கலாம் , அல்லது 20 இங்கிலீஷ் பட டிவிடி வாங்கலாம் , அல்லது சரவணா ஸ்டோர்ஸில் சீப்பாக ரெண்டு டி.ஷர்ட் எடுக்கலாம்
, அல்லது மாசக்கடைசியில் நாலு நாள் சிக்கனமாகச் சாப்பிட்டுச் சமாளிக்கலாம்.

வீட்டில் இருந்தால் வேளைக்கு 8 தோசை அல்லது 17 இட்லி அல்லது 10 சப்பாத்தி அல்லது 30 பணியாரம் அல்லது சாம்பார் , குழம்பு , ரசம் , தயிர் , மோர் , கூட்டு , கீரையோடு , ஒரு ஃபுல் அன்லிமிடெட் மீல்ஸ் சாப்பிடும் சாப்பிடும் வஞ்சனையில்லாத வயிறு எங்களுடையது. ஹோட்டலில் போய் உட்கார்ந்து தோசை வைக்கச் சொல்லி விட்டு விலையைக் கேட்டால் 25 ரூபாய் என்பான் , அடுத்த தோசை சொல்ல மனம்
வருமா உங்களுக்கு ? சரவணா பவன் ஃபுல் மீல்ஸ் விலை என்ன தெரியுமா ? 120 ரூபாய் மக்களே! நூத்தி இருபது ரூபாய். இப்படிச் சாப்பிட்டால் மத்தியானமும் , ராத்திரியும் சாப்பிட காசு வேண்டாமா ? கணக்குப் போட்டு லிமிட்டாகத் தான் தின்ன முடியும். மூன்று வேளைக்கும் இப்படித் தின்றால் எப்படி எடை போடுவது ? பிப்டி கேஜி தாஜ்மஹால்தான் இன்னமும்.

செலவைக் குறைக்க வேண்டுமென்றால் ரூமில் சமையல் செய்து சாப்பிடலாமே ? உடம்புக்கும் கெடுதல் இல்லையே என்று சொல்லும் அட்வைஸ் ஆறுமுகங்களே! வாங்கய்யா வாங்க , உங்களைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன். கையில் சிக்கினால் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு நீங்கள் தான். நான் சொல்லும் கணக்கு வழக்குகளையெல்லாம் கொஞ்சம் பாருங்கள் , பிறகு வருவீர்கள் அட்வைஸ் செய்ய...

முதலில் இதே செல்ஃப் குக்கிங் ஐடியாவுடன் நான்கைந்து பேர் சேர வேண்டும் , பிறகு குறைந்தபட்சம் இரு அறைகள் உள்ள வீடு பார்க்க வேண்டும் (வீட்டு வாடகை , பத்து மாத அட்வான்ஸைக் கணக்கில் சேர்க்கவும்) மண்ணெண்ணெய் அடுப்பா , எலக்ட்ரிக் அடுப்பா , கேஸ் அடுப்பா என முடிவு செய்ய வேண்டும் , கேஸ் தான் சரி என்றால் கேஸ் கனெக்ஷன் வாங்க வேண்டும். இரண்டு , மூன்று மாதங்களுக்கொருமுறை
அட்டென்டன்ஸ் மாறும் ரூமில் யார் பெயரில் கேஸ் கனெக்ஷன் வாங்குவது ?

இன்றிருப்பவன் மூன்று மாதம் கழித்து இருக்க மாட்டான். வேறு ஊருக்கோ , ஏன் வேறு நாட்டுக்கோ கூடப் போயிருப்பான். அரிசி , பருப்பு , மிளகாய் , புளி போன்ற அத்தியாவசியப் பொருட்கள் தவிர மிக்ஸி , குக்கர் , கிரைண்டர் , வாணலி , பாத்திர பண்டங்கள் போன்ற மிகமிக இன்றியமையாத பொருட்களை வாங்கியாக வேண்டும். யார் கணக்கில் , யார் பெயரில் ? எல்லாவற்றுக்கும் மேல் யார் சமைப்பது ?
நைட் ஷிப்டு ஒருவன் , ஈவினிங் ஷிப்டு ஒருவன் , டே ஷிப்டு ஒருவன் , வேலையே இல்லாமல் இன்னொருத்தன் என்றிருந்தால் ?

அடுத்தது... யார் பாத்திரம் கழுவுவது , யார் உதவி செய்வது , எத்தனை பேருக்கான சமையல் ? எத்தனை வேளைக்கு ? இதையெல்லாம் கணக்குப் போட வேண்டும். அதற்கப்புறம் டேஸ்ட்டு ? டேஸ்ட்டா ? அப்படி என்றால் ? இருக்கும் எல்லாவற்றையும்
கொட்டிச்சமைத்து விட்டு வேலை முடிந்ததும் தான் புது டிஷ்ஷூக்கு பெயர் சூட்டுவிழாவே நடக்கும். சூடு ஆறும் முன் உள்ளே தள்ள வேண்டும். இல்லாவிட்டால் கஷ்டம்.

மாதம் பத்து நாள் வெளியூர் மீட்டிங் போகிறவன் , பதினைந்து நாள் ஊருக்குப் போகிறவன் , முப்பது நாளும் மூச்சு விடாமல் சாப்பிடுகிறவன் என்று வெரைட்டி காட்டும் கேரக்டர்கள் இருக்கும் அறையில் ஒவ்வொருவர் சாப்பிட்ட நாள் கணக்கு
மாறினால் , மாதம் முடிந்ததும் செலவை எப்படிப் பிரிப்பது ? பிரணாப் முகர்ஜி பட்ஜெட் போட எடுத்துக் கொண்ட சிரத்தையை விட சற்று அதிகம் கவனம் தேவை இவற்றை கணக்குப் போட்டு சிக்கெடுக்க. கணக்குப் போடுவதற்குள் திக்கித் திணறி மூச்சு
முட்டிப் போகும். ( இந்தக் கணக்கோடு சோப்பு , சீப்பு , பேஸ்டு , பர்ஃபூம் , டாய்லெட் க்ளீனிங் , ஷூ பாலீஸ் , நியூஸ் பேப்பர் , இத்யாதி , இத்யாதி காமன் செலவுக் கணக்குகளை கூட்டிக் கொள்ளல் வேண்டும்)

இந்தச் சாப்பாட்டில் சைவம் அசைவம் பிரச்சினை வேறு... சைவக்காரன் படுத்தும் பாடு தனியென்றால் , அசைவக்காரன் செய்யும் அட்டகாசம் ஸ்பெஷல் வகை. அசைவத்தில் ஈரல் எனக்குப் பிடிக்காது , பீஃப் அவனுக்குப் பிடிக்காது , சிக்கன் சூடு ஏற்றும் ,
மீன் முள் தொண்டையில் குத்தும் என்று ஆயிரத்தெட்டு பிரச்னை வரும். சரி சைவமே தின்று தொலையலாம் என்றால் ஒரு முறை வெறும் ரசம் சாதமும் , முட்டை பொறியலும் செய்ய முயற்சித்து ஆரம்பத்திலேயே கேஸ் காலி. பாதி வெந்த சோறுடன்
குக்கரையும் , அடித்து வைத்த முட்டையையும் , கரைத்து வைத்த ரசம் கரைசலையும் தூக்கிக் கொண்டு எங்கே ஓட ?

ஞாயிற்றுக்கிழமை மதியம் மூன்றரை மணிக்கு கேஸ் கிடைக்குமா ? குறைந்த பட்சம் மண்ணெண்ணெய் ? அப்படியே மண்ணெண்ணெய் கிடைத்தாலும் அடுப்பு கிடைக்குமா ? அல்லது அக்கம் பக்கத்தில் குடும்பத்துடன் ஓய்வெடுக்கும் மக்களிடம் "மம்மீமீ... டாடீடீ.." என்று தட்டைத் தூக்கிக் கொண்டு போய் நிற்க முடியுமா ? கொஞ்சம் யோசிங்க அய்யா யோசிங்க. உங்க வீட்டம்மா வேளை தவறாமல் தட்டில்
போட்டுக் கொண்டு வந்து தருகிறாள் அல்லவா ? தின்று விட்டுப் பேசுவீர்கள் வியாக்யானம்...

இந்தக் கருமத்தையெல்லாம் யோசித்துத் தான் பல பேர் மேன்ஷன்களில் , சேவல் பண்ணைகளில் தஞ்சம் புகுவது. தங்குமிடம் எவ்வளவு கேவலமாக இருந்தாலும் வேளா வேளைக்குச் சோறு நிச்சயம். ஆக இப்படியெல்லாம் திண்டாடி விட்டு... கடைசியில் என்ன செய்ய ? மாதமொருமுறை ஊருக்கு ஓடிப்போய் காலாட்டிக்கொண்டே , டி.வி பார்த்துக் கொண்டே , திட்டு வாங்கிக் கொண்டே வெரைட்டியாய் மூன்று
நாளைக்கு முக்கி முக்கித் தின்று விட்டு வருவோம். ஆனால் அதிலும் , என்னை மாதிரி மம்மி இல்லாத பசங்களைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துப்பாருங்களேன். பாவம் இல்லை...

ஆகவே இளைஞர் பெருமக்களே! நான் சொல்ல வருவது என்னவென்றால்...

என்னவென்றால்...
என்னவென்றால்...
ஒரு வெங்காயமும் இல்லை , படிச்சு முடிச்சாச்சில்ல... போய் வேற வேலை ஏதாவது இருந்தா பாருங்க.

உங்களுக்கு விளக்கம் சொல்லியே என் எனர்ஜி வீணாய்ப் போயிடும் போலிருக்கு. பேசிப் பேசி டயர்டாகிடுச்சு. போய் சாப்பிட்டுட்டு வர்றேன்... அப்புறம் பார்க்கலாம் , என்ன.. ?

Wednesday, December 29, 2010

Late sitting


Mail sent by Narayan Murthy to all Infosys staff:

It's half past 8 in the office but the lights are still on...
PCs still running, coffee machines still buzzing...
And who's at work? Most of them ??? Take a closer look....

All or most specimens are ??
Something male species of the human race...

Look closer... again all or most of them are bachelors... .

And why are they sitting late? Working hard? No way!!!
Any guesses???
Let's ask one of them...
Here's what he says... 'What's there 2 do after going home...Here we get to surf, AC, phone, food, coffee that is why I am working late...Importantly no bossssssss!! !!!!!!!!!'

This is the scene in most research centers and software companies and other off-shore offices.

Bachelors 'Passing-Time' during late hours in the office just bcoz they say they've nothing else to do...
Now what r the consequences. ..

'Working' (for the record only) late hours soon becomes part of the institute or company culture.

With bosses more than eager to provide support to those 'working' late in the form of taxi vouchers, food vouchers and of course good feedback, (oh, he's a hard worker... goes home only to change..!!).
They aren't helping things too...

To hell with bosses who don't understand the difference between 'sitting' late and 'working' late!!!

Very soon, the boss start expecting all employees to put in extra working hours.

So, My dear Bachelors let me tell you, life changes when u get married and start having a family.... office is no longer a priority, family is... and
That's when the problem starts... b'coz u start having commitments at home too.

For your boss, the earlier 'hardworking' guy suddenly seems to become a 'early leaver' even if u leave an hour after regular time... after doing the same amount of work.

People leaving on time after doing their tasks for the day are labeled as work-shirkers. ..

Girls who thankfully always (its changing nowadays... though) leave on time are labeled as 'not up to it'. All the while, the bachelors pat their own backs and carry on 'working' not realizing that they r spoiling the work culture at their own place and never realize that they would have to regret at one point of time.

So what's the moral of the story??
* Very clear, LEAVE ON TIME!!!
* Never put in extra time ' unless really needed '
* Don't stay back unnecessarily and spoil your company work culture which will in turn cause inconvenience to you and your colleagues.

There are hundred other things to do in the evening..

Learn music...

Learn a foreign language...

Try a sport... TT, cricket..... ....

Importantly, get a girl friend or boy friend, take him/her around town...

* And for heaven's sake, net cafe rates have dropped to an all-time low (plus, no fire-walls) and try cooking for a change.

Take a tip from the Smirnoff ad: *'Life's calling, where are you??'*

Please pass on this message to all those colleagues and please do it before leaving time, don't stay back till midnight to forward this!!!

IT'S A TYPICAL INDIAN MENTALITY THAT WORKING FOR LONG HOURS MEANS VERY HARD WORKING & 100% COMMITMENT ETC.

PEOPLE WHO REGULARLY SIT LATE IN THE OFFICE DON'T KNOW TO MANAGE THEIR TIME. SIMPLE !

Regards,
NARAYAN MURTHY.

Tuesday, December 28, 2010

தமிழக தேர்தல் 2011

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடை பெறவுள்ள சட்டசபைத் தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையம் துவங்கியுள்ளது முதல் கட்டமாக இன்று சென்னையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிதிகளுடன் தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தியது.
இதில் திமுக, அதிமுக, பாமக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கு பெற்றனர்.

பெரும்பாலானோர் ,
1.வாக்காளர்கள் அனைவருக்கும் வாக்காளர் அட்டை வழங்க வேண்டும்.
2.வாக்கு எந்திரத்தில் ஓட்டு போடும்போது யாருக்கு ஓட்டு போடப்பட்டது என்பதற்கான அத்தாட்சி தரப்பட வேண்டும்.
3.ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும்.
4.ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்று பொதுவான கருத்துக்களையே வற்புறுத்தினர்.

Monday, December 27, 2010

ராகுல் காந்தி அவர்களே! நீங்கள் தலையிடவும் வேண்டாம்! எங்களைக் கொலையிடவும் வேண்டாம்! - திருப்பி அடிப்பேன் - சீமான் சிறையில் எழுதிய அதிரடித் தொடர் - பாகம் 04


''நான் ஈழத்து சீமான் பேசுகிறேன்...'' - ''நான் தமிழகத்து நடேசன் பேசுகிறேன்...'' எனக்கும் நடேசன் அண்ணாவுக்கும் இடையேயான உரையாடல் இப்படித்தான் தொடங்கும்.

வார்த்தை குறைவாகவும் வாய் நிறைந்த புன்னகையாகவும் பேசுவார் தமிழ்ச்செல்வன், ''தமிழ் ஈழ ஆர்வலர்களின் தொலைபேசிப் பேச்சுகள் பதிவு செய்யப்படுகிறதாமே... அடிக்கடி நான் உன்னோடு பேசுவதால் உனக்கு ஏதும் பிரச்சினைகள் வருமா?'' - தமிழ்ச்செல்வனின் குரலில் பரிவும் பதற்றமும் இருக்கும்.

''நீங்கள் என்ன, தமிழ்நாட்டில் என்னை குண்டு வைக்கச் சொல்லியா பேசுகிறீர்கள்? அங்கே நம் உறவுகளின் தலையில் குண்டுகள் விழுவதைப் பற்றித்தானே அண்ணா பேசுகிறோம்... பதிவு செய்பவர்கள் அதனை உரியவர்களிடம் போட்டுக்காட்டினாலாவது அவர்களின் உள்ளத்தில் கருணை சுரக்கிறதா எனப் பார்க்கலாம்!'' எனச் சொல்வேன். அதைக் கேட்டு வேதனையாக சிரிப்பார் தமிழ்ச்செல்வன்.

''வா... வா...'' என்று வாஞ்சையோடு அழைத்தவன், நான் அங்கே போனபோது எதிர்கொள்ள எதிரே வரவில்லை. ''இறந்து ஒரு வருடத்துக்குப் பிறகுதான் நினைவு இல்லம் எழுப்புவது வழக்கம். அண்ணன் இறந்து 90 நாட்கள்தான் ஆகிறது. அதனால்தான் அவர் புதைக்கப்பட்ட இடம் இப்படி இருக்கிறது...'' எனச் சொல்லி கை காட்டினார்கள். மலர்ந்து சிரித்தவன் மண் குவியலாகக் கிடந்தான். கை நிறையக் கார்த்திகைப் பூக்களைக் கொட்டி கையறு கோலத்தில் நின்ற பாவி நான்!

இதுபோல் ஒன்றா... இரண்டா... ஈழப் போர் தீவிரம் எடுத்த வேளையில், 'நிச்சயம் வெல்வோம்!’ என என்னைத் தைரியப்படுத்திய குரல்கள். இறுதிக் கட்டப் போர்க் களத்தில் நின்றபடி, 'சாவை எதிர்நோக்கி நிற்கிறோம். ஆனாலும், போரைக் கைவிடுவதாக இல்லை!’ என உறுதியோடு சொன்ன குரல்கள்!

உலகத்தின் கண் பார்க்க அவர்கள் அழித்தொழிக்கப்பட்ட நிகழ்வு முடிவுக்கு வந்தபோது, என் சிந்தனை எவை குறித்தெல்லாம் ஓடி இருக்கும்? என் மூளை நரம்புகள் எப்படி எல்லாம் மூர்க்கத்தில் தவித்திருக்கும்?

தோற்றவனாகவும் துடித்தவனாகவும் சொல்கிறேன்... மே 18-ம் தேதியே என் உயிர் பிரிந்துவிட்டது. இது இரவல் மூச்சு. உங்களின் முன்னால் ஒரு சவம்தான் உரையாடுகிறது. இந்த சவத்தை உங்களால் என்ன செய்ய முடியும்? செத்துப்போனவனை வெட்டி வீழ்த்தும் தைரியம் சிறைச்சாலைகளுக்கோ, காக்கி உடுப்புகளுக்கோ இருக்கிறதா?

''ஈழத்து விடிவை இயக்கக் கொள்கையாகப் பூண்டிருப்பவர்களே அமைதியாகிவிட்ட நிலையில் சீமானுக்கு மட்டும் ஏன் இன்னமும் சிலிர்த்துக்கொண்டு நிற்கிறது?'' - அரசியல் சார்ந்தவர்களின் இந்தக் கேள்வி என் காதுபடவே நீள்கிறது.

ஈழத்துக்கும் எனக்கும் நிலவிய உறவைப்போல், தமிழகத்தில் உள்ள பலருக்கும் தமிழ் ஈழ ஆர்வம் இருக்கிறது என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஈழ மக்களும் போராளிகளும் மீள முடியாத கொடூர வளையத்துக்குள் சிக்கித் தவித்தபோது, அண்ணன் பிரபாகரன் மீது பேரன்புகொண்ட முத்துக்குமார் உள்ளிட்ட தமிழகத்து இளங்குருத்துகள் தங்களுக்குத் தாங்களே தீ வைத்து மடிந்தபோது, 'இறுதி நிமிடங்களில் நிற்கிறோம்... தாய்த் தமிழ் உறவுகளே கைகொடுங்கள்’ என யோகி உள்ளிட்ட மூத்த புலிகள் ஏக்கக் குரல் எழுப்பியபோது... ஈழ ஆதரவு அரசியல் கட்சிகள்கூட தமிழகத்தையே ஸ்தம்பிக்கவைக்கும் முயற்சியில் இறங்காதது ஏன்?

மது ஒழிப்பு மாநாட்டுக்குக் கூட்டம் திரட்டுபவர்கள், இன ஒழிப்பு நாட்டுக்கு எதிராக வீதிக்கு வராதது ஏன்? மாநில மாநாடுகளுக்கு லட்சோப லட்சம் தொண்டர்களைத் திரட்டும் கட்சிகள் பலவும் இணைந்து ஈழப் போரைத் தடுக்கக்கூடிய கூட்டத்தில் 5,000 பேர்கூட திரளவில்லையே... இதுதான் ஈழத்து கூக்குரலுக்கு நாம் காட்டும் இரக்கமா? மாநாட்டுக்குக் காட்டும் அக்கறையைக்கூட ஆயிரக்கணக்கான தமிழர்கள் மடிந்தபோது நாம் காட்டாமல் போய்விட்டோமே... ஒப்புக்குக் கூட்டத்தைக் கூட்டி, தப்புக்குத் துணை போனவர்கள் பட்டியலில் ஆள்பவர்களின் பெயரோடு நமது பெயரும்தானே கலந்திருக்கும்?

'நாங்கள்தான் திரட்டவில்லை... நீ எங்கே போனாய்?’ என நீங்கள் திருப்பிக் கேட்கலாம். அன்றைக்கு இந்த சீமானுக்கு அவ்வளவு ஆதரவு கிடையாதய்யா! சுற்றி நின்ற 10 பேரைத் தவிர வேறு படை இல்லை. என் பலம் எனக்குத் தெரியும். அதனால்தான் ஈழ ஆர்வலர்களாகத் தெரிந்த உங்கள் அனைவரின் பின்னாலும் நான் ஓடோடி வந்தேன். இறுதி மூச்சின் கணத்திலும் ஈழ வலியை உணர்த்தும் சக்தி உங்களுக்கு இருக்கும் என நம்பி, தேடித் தேடிப் பின்னால் வந்தேன். பேரதிர்வு நடந்தபோதும், பூமி நழுவாதவர்களாய் தமிழகத்து ஜீவன்கள் வழக்கமான வேலைகளில் மூழ்கியபோதுதான் அரசியல் பக்குவங்கள்(?) பொட்டில் அறைந்தாற்போல் எனக்குப் புரிந்தது.

இயலாமையில் துடித்து அழுதவர்கள் எல்லோரும் கூடி எடுத்த முடிவுதானய்யா, 'நாம் தமிழர்’ அமைப்பு. இது தொடங்கப்பட்டது அல்ல... தொடரப்பட்டது. ஐயா ஆதித்தனார் இந்த அமைப்பைத் தொடங்கிய போது, அவருக்கு வலு சேர்க்கத் தவறிவிட்டது தமிழினம். 'என் வழிவரும் வீரப் பிள்ளைகள் இந்த இயக்கத்தைத் தொடருவார்கள்!’ என அப்போதே நம்பிக்கையோடு சொன்னார் ஆதித்தனார். சிறு பொறிகளாய் திசைக்கொரு பக்கமாய் சிதறிக் கிடந்தவர்களைத் திரட்டி பெருநெருப்பாக ஐயாவின் வழியில் பின்தொடர்கிறோம்.

ஈழத்தை இழவுக்காடாக்கிய காங்கிரஸுக்கு தமிழர்களின் வலியைப் புரியவைக்கும் விதமாகத்தான், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களை எதிர்த்துப் போட்டியிட்டவர்கள் எவராக இருந்தாலும் சரி என்று நாங்கள் ஆதரித்தோம். காங்கிரஸின் தமிழகத் தலைவர் தங்கபாலுவை வீழ்த்தியதன் மூலம் தமிழர்களின் நெத்தியடியை டெல்லி தலைமைக்கே உணர்த்தினோம். இளங்கோவனை மண் கவ்வவைத்தோம். அப்போதே அரசியல் அதிரடிகளை அரங்கேற்றுவதற்கான சக்தி எங்களுக்குப் பிறந்துவிட்டது. ஒடுக்குவதாக நினைத்து இந்த அரசாங்கம் அடுத்தடுத்து என்னை சிறையில் தள்ளி, என் சக்தியைத்தான் பெருக்கிவிட்டது. ஈழத்து வலியை வருகிற சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸுக்குப் புரியவைக்க எங்களின் இயக்கம் இப்போதே தயார்.

ஆனால், காங்கிரஸை கம்பீரமாக நிமிரவைக்க... தாய்த் தமிழகத்தில் இன்றைக்கு நடைபோடுகிறாராம் ராஜீவ் காந்தியின் வாரிசு. தன் முகம் பார்த்த தமிழர்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் விதமாக அந்த ராஜீவ் பெருமகனாரின் வாரிசு, 'இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் நிச்சயமாகத் தலையிடுவேன்!’ எனச் சொல்லி இருக்கிறாராம்.

வேண்டாமய்யா அப்படி ஒரு விபரீத முடிவு! உங்களின் தகப்பன் இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் தலையிட்டார்... 12 ஆயிரத்துக்கும் மேலான எங்களின் உறவுகள் பலியானார்கள். உங்கள் தாய் சோனியா காந்தி இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் தலையிட்டார். எங்களின் இனமே பிணமானது. இப்போது நீங்களுமா? அங்கே மிச்சம் மீதி இருக்கும் தமிழர்களும் உங்கள் கண்களுக்கு உறுத்தலாகத் தெரிகிறார்களா?

ராகுல் காந்தி அவர்களே.... நீங்கள் தலையிடவும் வேண்டாம்... எங்களைக் கொலையிடவும் வேண்டாம்.

தமிழகத்தை மீட்கும் சக்தி உங்களுக்கு இருப்பதாக எண்ணி, அறிவுமிகு மேதாவிகள் உங்களிடம் ஆலோசனை கேட்டார்கள். சோற்றில் விஷம் ஊற்றியவனிடம், செரிமான வெற்றிலைக்கு சுண்ணாம்பு கேட்கும் என் மறத் தமிழர்களின் அறியாமை மிக்க மாண்பை நான் எங்கே போய்ச் சொல்வேன்?

ராகுல்காந்தி அவர்களே... தமிழக இளைஞர்களுக்கு அக்கறையோடு ஓர் அறிவுரையைச் சொல்லி இருக்கிறீர்கள்... 'மது குடிப்பது தவறு’!

அப்படியானால்... இரத்தம் குடிப்பது?!

திருப்பி அடிப்பேன்...

Thursday, December 23, 2010

திருப்பி அடிப்பேன்! - சீமான் பாகம் 03'சிறையில் எப்படி அண்ணா இத்தனை நாள் இருந்தீர்கள்?’ - தம்பிகள் பலரும் தவிப்போடு கேட்கிறார்கள். என் சிறைக்குக் கூரை இருந்தது. நான்கு புறமும் சுவர்கள் இருந்தன. கழிவறை இருந்தது. மூன்று வேளைகளும் சாப்பாடு வந்தது தம்பிகளே!

ஆனால், எந்தத் திசையிலும் தடுப்பு இல்லாமல், கால் நீட்டி அமரக்கூட நிலம் இல்லாமல் மழை யிலும், குளிரிலும் தத்தளித்தபடி முள்வேலிக்குள் முடக்கப்பட்டுக்கிடக்கும் என் உறவுகளின் நிலையை ஒப்பிட்டால், என் சிறை வலி... ஒரு விஷயமே இல்லை.

சிறையில் இருந்து மீள்வதற்கு சில நாட்களுக்கு முன்புதான் தாங்க முடியாத துயரத்தில் தள்ளும் விதமான செய்தியை தம்பி ஒருவன் சொன்னான்.

இசைப் பிரியா கற்பழித்துக் கொல்லப்பட்ட காட்சிகளை சேனல் 4 ஒளிபரப்பி இருக்கிறதாம் அண்ணா! நெஞ்சு நடுங்கவைக்கும் அந்தக் கொடூரத்தைப் பார்த்துவிட்டு, லண்டன், கனடா, நார்வே நாடுகளில் கடுமையான கொந்தளிப்பாம். போர்க் குற்றவாளியாக ராஜபக்ஷேவை அறிவிக்கக் கோரி உலக நாடுகள் பலவும் கண்டனம் எழுப்பி இருக்கின்றனவாம்!'' என்றான்.

அடுத்த சில நிமிடங்களிலேயே சமாதானப் பிரிவைச் சேர்ந்த ரமேஷ் கொல்லப்பட்ட காட்சிகளும் ஒளிபரப்பாவதாக எனக்குச் சொல்லப்பட்டது.

மனதளவில் நான் சோர்ந்து சுருண்டு போனேன். அடுத்த இரண்டாவது நாளில்என் மீதான வழக்கு உடைக்கப்பட்டதாக தாங்க முடியாத மகிழ்ச்சியுடன் தகவல் சொன்னார்கள். ஆனால், உண்மையில் எனக்கு எவ்வித மகிழ்ச்சியும் இல்லை. வெளியே வரவே வெட்கமாக இருந்தது.

இசைப்பிரியா சீரழிக்கப்பட்டார்... ரமேஷ் கொல்லப்பட்டார்... என்பதெல்லாம் பலருக்கும் ஒரு செய்தியாகவே இருக்கும். ஆனால், எனக்கு அது என் வீட்டில் விழுந்த இழவுக்குச் சமம். என் மனக் கண்ணில் இசைப்பிரியா சிரிக்கிறாள்... ஈழத்தில் நான் இசைப்பிரியாவுடன் உரையாடிய நிகழ்வுகள் நெஞ்சுக்குள் வந்து போகின்றன.

இசைப்பிரியா... ஈழத்து உயிரோவியம். அவள் பேசுவதே கவிதை வாசிப்பதுபோல் இருக்கும். அழகுத் தமிழில் என்னை அவள் நேர்காணல் எடுத்த நிகழ்வு, ஏதோ இன்றைக்கு நடந்ததைப்போல் இருக்கிறது. புலிகளின் 'நிதர்சனம்’ தொலைக்காட்சிக்காக இசைப் பிரியா கேள்வி கேட்க... நான் பதில் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, 'அண்ணா கிபீர் வரும் சத்தம்...’ என என்னை அடுத்த இடத்துக்குத் தூக்கிக்கொண்டு போவார்கள். பின்னர், ஆசுவாச நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் பேட்டி தொடரும். நான்கைந்து நிமிடங்களுக்கு மேல் ஓர் இடத்தில் நின்று பேச முடியாது. எந்நேரமும் குண்டு விழும் என்கிற அபாயச் சூழலிலும், புன்னகை மாறாத முகத்தோடு இசைப்பிரியா, ஈழம் குறித்தும் தமிழகம் குறித்தும் நிறைய உரையாடினாள்.

ஈழப் போரின் இறுதிக்கட்ட நேரத்தில் யார் யாருக்கு என்ன நேர்ந்ததோ எனப் பதற்றத்தோடு நான் பட்டியலிட்டுப் பார்த்தவர்களில் இசைப்பிரியாவும் ஒருவர். போர் முடிந்த சில மாதங்களில், 'பிரபாகரன் மகள் துவாரகா கொல்லப் பட்டதாக’ சில ஊடகங்கள் இசைப் பிரியாவின் புகைப்படத்தை வெளியிட்டன.

கொல்லப்பட்டது இசைப் பிரியாதான்... துவாரகா இல்லை!’ என அடுத்த சில நாட்களிலேயே வெளியான உண்மை, தடதடத்த தமிழ் இதயங்களை தைரியம் கொள்ளவைத்தது. ஆனால், அன்றைக்கும் இந்த சீமான் இருந்தது அழுகையோடுதான்! சிறை வாசலில் திரண்ட கூட்டம்... ஆவேச முழக்கம்... ஆதரவுக் கரங்கள்... வழி நெடுக வரவேற்பு... இத்தனைக்கு மத்தியிலும் இசைப்பிரியாவின் துயரம் என் நெஞ்சைத் துளைத்துக்கொண்டே இருந்தது. அதேபோல் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட ரமேஷின் மரணமும்!

போராளிகளின் கட்டளைத் தளபதியாக இருந்த ரமேஷ், அங்கே பெருமரியாதையோடு பார்க்கப்பட்டவர். கண்ணியில் சிக்கிய காடைக் குருவியாய் சிங்களப் பிடியில் சிக்கிய அவருடைய கோலத்தை இணையதளத்தில் கண்டு சுக்குநூறாகிப் போனேன். கொன்றார்களா... வெறி பிடித்துத் தின்றார்களா என்றே தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்ட இசைப்பிரியாவின் இறுதி நிமிடங்களைக் கண்டித்து எழுதக்கூட என் கைகள் நடுங்குகின்றன.

ராஜபக்ஷவுக்கு எதிராகப் போர்க் குற்ற விசாரணையை நோர்வே நடத்தச் சொல்கிறது... கனடா கண்டிக்கிறது... லண்டன், ராஜபக்ஷவை வளைக்கிறது... சுவிட்சர்லாந்து, கண்டனமும் போராட்டமுமாகக் கொந்தளிக்கிறது. ஆனால், என் தாய்த் தமிழ் உறவுகள் வாழும் தமிழ்நாடு மட்டும் எந்தச் சலனமும் இல்லாமல் கிடக்கிறது!

ஒரு குரல் இல்லை... ஒரு கூப்பாடு இல்லை... முதல் தமிழனாக அலறி இருக்க வேண்டிய எங்கள் தமிழினத் தலைவரோ, 'இளைஞன்’ திரைப்பட விழாவில் நமீதாவின் வணக்கத்துக்கு நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறார். தன் மகளாக எண்ணக்கூடிய தளிர் ஒன்றை சிங்கள வல்லூறுகள் சிதைத்துப்போட்ட கோலத்தை எங்களின் தமிழினத் தலைவரிடம் எடுத்துச் சொல்லக்கூட இங்கே ஆள் இல்லை!

அப்படியே சொல்லி இருந்தாலும் என்ன செய்துவிடப் போகிறார்..? 'எடுங்கப்பா ஒரு கடுதாசியை...’ எனச் சொல்லி கடமைக்காக ஒரு கடிதம் எழுதி இருப்பார். ஈழமே இழவுக்காடாகிக் கிடந்த வேளையிலும் அரை நாள் உண்ணாவிரதம் இருந்து அசத்திய தமிழ் மகனிடம், எங்களுக்கான குரலை இன்னமும் எதிர்பார்த்துக் காத்திருப்பது தவறுதான்.

ஆனால், பிணத்தைப் புணர்ந்து இனத்தை ஈனப்படுத்தும் சிங்கள வெறியாட்டங்களாவது, பாசத் தலைவனின் மனதைக் கொஞ்சமேனும் பதறவைக்காதா என்று ஒரு நப்பாசை! இருக்கட்டும், காலம் இப்படியே போய்விடாது. ஈழத்துக் கண்ணீரை இன்னமும் கண்டுகொள்ளாமல் இருக்கும் தமிழினத் தலைவனின் பாராமுகத்துக்குப் பதில் தேடும் காலம் நெருங்கிவிட்டதாகவே நினைக்கிறேன்.

இன்றைக்கு பத்திரிகைகளைப் புரட்டினாலே உங்களின் குடும்ப பராக்கிரமங்கள்தான் கொடி கட்டிப் பறக்கின்றன. மகனை, மகள் திட்டுகிறார். மகளை, பேரன் திட்டுகிறார். இருவரும் உங்களையே 'இயலாதவராக’ விமர்சிக்கிறார்கள். எல்லோருடைய உரையாடல் பதிவுகளும் வெளியாகி, தமிழினத் தலைவராகிய உங்களைத் தத்தளிக்க வைக்கின்றன. அங்கே... இங்கே... என அத்தனை இடங்களிலும் சோதனை நடத்திய மத்தியப் புலனாய்வுத் துறை, அடுத்தபடியாக உங்களின் சி.ஐ.டி. காலனி வீட்டில் நுழைந்தாலும் ஆச்சர்யம் இல்லை என்கிறார்கள். இத்தனை வயதில், 'பதவிகள் நிலைக்குமா... கூட்டணி நீடிக்குமா?’ என ஒவ்வொரு நிமிடமும் உறக்கம் இன்றித் தவிக்கிறீர்களாமே?

உலகத் தமிழர்களின் கண்ணீர்தான் உங்களின் நிம்மதியைக் காவு வாங்கி இருக்கும் என்பது என் அழுத்தமான அனுமானம். இலவசத் தொலைக்காட்சி, ஒரு ரூபாய்க்கு அரிசி என மக்களை சோம்பேறிகளாக்கி, அதைவைத்தே மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என நம்பிக்கையோடு இருந்த நீங்கள்... இன்னும் சில இலவசத் திட்டங்களுக்கு புத்தியைத் தீட்டிக்கொண்டு இருந்தீர்கள். ஆனால், வெண்ணெய் திரண்ட நேரத்தில் தாழி உடைந்த கதையாக, ஸ்பெக்ட்ரம் விவகாரம் இன்றைக்கு சந்தி சிரிக்கிறது.

போரை வழிநடத்துவதே இந்திய இராணுவம்தான்!’ எனச் சொல்லி காங்கிரஸை நாங்கள் கண்டிக்கச் சொன்னபோது, மந்திரிப் பதவிகளை தூக்கி வீசிவிட்டு நீங்கள் வந்திருக்க வேண்டும். நியாயமான மனிதராக - நெஞ்சுரம்கொண்ட தமிழராக இல்லாத நீங்கள், அன்றைக்கு அந்த அற்பப் பதவிகளைத் தூக்கி வீச அஞ்சினீர்களே... இன்றைக்கு காங்கிரஸின் நிர்ப்பந்தமே அதிமுக்கியப் பதவியாக - பணம் காய்க்கும் மரமாக நீங்கள் நினைத்த தகவல் தொடர்புத் துறையைத் தட்டிப் பறித்துவிட்டதே... அது ஈழத்துப் பாவத்தால் நிகழ்ந்திருக்காது என்பது என்ன நிச்சயம்? பதவியை இழந்ததற்கே இப்படிப் பதறுகிறீர்களே... உயிரை இழந்தவர்களின் வலி உங்களுக்கு ஏனய்யா புரியாமல் போய்விட்டது?

இது ஆரம்பம்தான்... நீங்கள் எதற்காக ஈழத் துயரத்தைக் கண்டிக்காமல் கை கட்டி, வாய் பொத்தி, 'ஆமாம் சாமி’யாக இருந்தீர்களோ... அவை அத்தனையும் காங்கிரஸின் இக்கட்டுகளால் உங்களின் கைகளைவிட்டுப் போகும் பாருங்கள். கோபமாக இதனை நான் சொல்லவில்லை. உங்களின் பாராமுகத்தால் பலியான ஆயிரமாயிரம் உயிர்களின் சாபமாகச் சொல்கிறேன்!

ராஜ தந்திரங்களின் தகப்பனாக - சாதுர்யச் சிறுத்தையாக - அரசியல் நெளிவுசுளிவுகளை ஆகக் கற்றவராக வலம் வந்த நீங்கள், இன்றைக்கு ஸ்பெக்ட்ரம் சர்ச்சையில் நிலை குலைந்தவராக - நிம்மதி இழந்தவராக - நெருக்கடி சூழ்ந்தவராக இருக்கிற நிலையைச் சுட்டிக்காட்டிச் சொல்கிறேன்... தமிழினத்தின் வீரத்தை உலகத்துக்கே பறைசாற்றி புலித் தலைவனாய் தீரம் காட்டிய பிரபாகரன் எங்கே... ஊழலில் எப்படி சாதனை படைப்பது என உலகையே திகைக்கவைத்துப் பழித் தலைவனாய் பட்டம் வாங்கி இருக்கும் நீங்கள் எங்கே..?!

திருப்பி அடிப்பேன்

Wednesday, December 22, 2010

உதயநிதிக்காக விட்டுக்கொடுக்கிறேன்-கமல் அறிவிப்பு

மன்மதன் அம்பு படத்தில் கமல் எழுதிப் பாடிய கவிதை ஒன்று இந்துக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. திரிஷாவும் கமலும் கவிதையை படிக்க, படிப்பதற்கேற்ப பின்னணியில் இசை சேர்க்கப்பட்டிருக்கும். இந்தத் தமிழ்க் கவிதையை அழுத்தம் திருத்தமாக உச்சரிக்க திரிஷாவின் மெனக்கெடல் ரொம்ப அதிகமாம். ஆனால் இந்தப் பாடல் படத்தில் இல்லை என கமல்ஹாசன் இப்போது சொல்லியிருக்கிறார்.

கடற்கரை தோறும் காலையும் மாலையும்
தொந்தி கணபதிகள் திரிவது கண்டேன்...

முற்றும் துறந்து மங்கையரோடு
அம்மணத் துறவிகள் கூடிடக் கண்டேன்... என்ற வரிகள் கவிதையில் இடம் பெற்றிருப்பதும்

ஸ்ரீ வரலட்சுமி நமஸ்துதே! என்று சொல்லி கவிதையை முடித்திருப்பதாலும் இந்து அமைப்புகள் இந்தப் பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தப் பாடல் படத்தில் இடம்பெறக் கூடாது என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்தப் பாடலில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று சென்சார் போர்டும் சொல்லிவிட்டது. இருந்தாலும் படத்தில் இருந்து பாடலை நீக்குவது என முடிவு செய்திருக்கிறார் கமல். அதற்கு காரணம் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் என்றும் அவர் சொல்லியிருக்கிறார்.

இது பற்றி அவர் தெரிவித்திருப்பது...

என் இனிய ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம்,

மன்மதன் அம்பு சினிமா படத்தில் நான் எழுதிப் பாடிய பாடல் ஒன்று இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக வந்த செய்தி பரவலாக கிளம்பியதை நான் அறிவேன். இதை தணிக்கை செய்த குழு இப்பாடலில் புண்படுத்தக் கூடிய வரிகள் எதுவும் இல்லாததால் அதை அனுமதித்தனர். தொலைக்காட்சியிலும் மும்முறை ஒலிபரப்பப்பட்டு வரவேற்பை பெற்றப் பாடல். இதுவே எனது நிறுவனமாக இருந்தால் கண்டிப்பாய் அந்த வரிகளை நிஜ ஆன்மீக வாதிகளை புண்படுத்தாது என்ற நம்பிக்கையுடன், சென்சார் சான்றிதழ் சகிதம் வெளியிட்டிருப்பேன். இது ரெட் ஜெயன்ட் மூவிஸ் படம். திரு.உதயநிதி ஸ்டாலின் படம் என்பதாலும், எல்லோரும், எம்மதத்தவரும் படம் காண வர வேண்டும் என்ற எண்ணத்தில், பல கோடி பேர் ஏற்கெனவே பார்த்து ரசித்த பாடலாக இருந்த போதிலும் இப்பாடல் காட்சியை நாங்களே முன் வந்து நீக்குகிறோம்.

என் குடும்பத்தில் வைணவரும், சைவரும், இஸ்லாமியரும், கிருத்துவரும் இருக்கின்றனர். அவர்களில் பலர் என்னைப்போல் அல்ல, தெய்வ விசுவாசிகள். நான் பகுத்தறிவு வாதி அது அவ்வாறாகவே இருந்து வருகிறது அதுவாகவே திகழும்.

மன்மதன் அம்பு வியாபாரம். அதுவும் மற்றவர் செய்யும் வியாபாரம். இதில் நான் வெறும் கலை ஊழியன் மட்டுமே. அரசியல் வாதிகளின் இடையூறு எனக்கு புதிதல்ல. மதமும், அரசியலும் கலந்த இந்தச் சிக்கலில் நல் ரசிகன் பலியாகாதிருக்கவும், அனைவரும் கண்டு ரசிக்கவும் இந்த முடிவு எடுக்கப்படுகிறது. மற்றபடி பகுத்தறியும் பாடலில் என் தேடல் தொடரும். அதில் மக்கள் அன்பிற்கும் நிறைய இடம் உண்டு.

Saturday, December 18, 2010

அதிர்ச்சி ரிப்போர்ட்!!! .. சிக்கன் 65


ராகவனுக்கு முப்பது வயதுகூட ஆகவில்லை. அவருக்கு கேன்சர் என்று மருத்துவர்கள் சொன்னதும், ஒட்டுமொத்த குடும்பமே அதிர்ச்சியில் உறைந்து போனது. காரணம் ராகவனிடம் மது, புகை என்று எந்த கெட்ட பழக்கமும் இல்லை. பிறகு எப்படி கேன்சர்? தலையைப் பிய்த்துக்கொண்ட மருத்துவர்கள் கடைசியாக அவரது உணவுப் பழக்கத்தை ஆராய்ந்தபோதுதான் உண்மை தெரியவந்தது. அசைவப்பிரியரான ராகவன் தினமும் சாப்பாட்டில் சிக்கன் 65 இல்லாமல் சாப்பிடவே மாட்டாராம். அதுவும் செக்கச் சிவந்த நிலையில் மொறு மொறுவென்று இருக்கும் சிக்கன் 65ஐத்தான் விரும்பிச் சாப்பிடுவாராம். அதுதான் அவரது கேன்சருக்குக் காரணமாம். எப்படி? பளிச்சென்று தூக்கலாகத் தெரிவதற்காக சிக்கனுடன் சேர்க்கப்படும் அந்த சிவப்பு நிற கெமிக்கல் பவுடர்தான் அந்த கேன்சருக்கு முழுக்காரணம்.

இந்த கெமிக்கல் கலந்த சிக்கன் 65 சாப்பிடுவதால் வயிற்றில் கேன்சர், சிறுநீரகக் கோளாறு. மரபணுக்களில் பாதிப்பு போன்ற நோய்கள் உண்டாவதைக் கண்டறிந்திருக்கிறார்கள்.உணவுப் பொருட்களில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள் பற்றியும், பயன்படுத்தக்கூடாத நிறங்கள் பற்றியும் நெல்லை மாநகராட்சியின் உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம் பேசும்போது.

உணவு வகைகளில் பயன்படுத்தக்கூடிய செயற்கை நிறங்கள், பயன்படுத்தக்கூடாத செயற்கை நிறங்கள் என உண்டு. இந்தியாவில் 8 வகையான செயற்கை நிறங்களை மட்டுமே உணவுப் பொருட்களில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறங்களும் குறிப்பிட்ட அளவு. அதாவது 10 கிலோ உணவுப் பொருளுக்கு 1 கிராம் மட்டுமே சேர்க்க அனுமதி. ஆனால் இதை யாரும் கடைப்பிடிப்பதில்லை. அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் செயற்கை நிறங்களைச் சேர்த்தால் உடலுக்குக் கேடுதான். எடுத்துக்காட்டாக, உணவில் சிவப்பு நிறம் கொடுக்க பயன்படுத்தப்படும் எரித்ரோசின் அளவு கூடினால் கழுத்துக் கழலை நோய் (goItre) வரும். இந்த செயற்கை நிறங்களும் இனிப்பு வகைகளில் மட்டுமே சேர்க்க அனுமதி. கார வகையான உணவுகளில் சேர்க்க அனுமதி கிடையாது.

பொன்சியூ4.ஆர்., எரித்ரோசின் பயன்படுத்தினால் சிவப்பு நிறம் கிடைக்கும். பிரில்லியண்ட் புளூ, இண்டிகோ கார்மைன் பயன்படுத்தினால் ஊதா கலர் கிடைக்கும். இந்த மாதிரியாக கிடைக்கக் கூடிய எட்டு வகையான கலர்களை ஐஸ்கிரீம் ஃப்ளேவர்டு மில்க், பிஸ்கட், இனிப்பு வகைகள், டின்களில் அடைத்து வரக்கூடிய பட்டாணி வகைகள், பாட்டில் பழ ஜூஸ் வகைகள், குளிர்பானங்கள் என ஏழு வகையான உணவுகளில் மட்டுமே சேர்க்க அனுமதி.

கார வகையான உணவுப் பொருட்களில் செயற்கை வண்ணங்களை கண்டிப்பாகச் சேர்க்கக்கூடாது. ஆனால் நமது மக்களின் மனதில் உணவைவிட உணவின் கலர்தான் பளிச்சென்று பதிந்து இருக்கிறது. சிக்கன் 65 என்றால் சிவப்பாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அது சிக்கன் 65 என்ற முடிவில் மக்கள் இருக்கிறார்கள். மக்களின் மனதிற்கேற்ப வியாபாரிகளும் சிக்கன் 65 நிறத்தைக் கூட்டி, ஆபத்தை அறியாமலேயே வியாபாரம் செய்கின்றனர்.

சிக்கன் 65-ல் செயற்கை வண்ணங்களைச் சேர்ப்பதே தவறு. அதிலும் அனுமதிக்கப்படாத செயற்கை வண்ணங்களை அளவுக்கு அதிகமாக சேர்க்கின்றனர். எடுத்துக்காட்டாக சூடான் டை, மெட்டானில் எல்லோ கெமிக்கல்களைச் சேர்த்து துணிகளுக்கு சாயம் ஏற்றுவார்கள். இன்று இதனை சிக்கன் 65யுடன் சேர்த்து விடுகின்றனர். இப்படி சேர்ப்பதால் சிக்கன் 65 ரெட் கலரில் பளிச்சென்று தூக்கலாகத் தெரியும். இதைச் சாப்பிடுவதால் குடல்கேன்சர், சிறுநீரகக் கோளாறு, மரபணுக்களில் கோளாறு என கொடிய நோய்களை உண்டாக்கி விடுகிறது.

கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் சூடான் டையை உணவில் பயன்படுத்தத் தடை விதித்துள்ளனர். செயற்கை நிறம் கொடுக்கக் கூடிய சூடான் டை கலந்த உணவை எலிகளுக்குக் கொடுத்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில் எலிகளின் சிறுநீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகியதாம்.இப்படி உணவுப் பொருளில் கலப்படம் செய்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள் உணவு தடைச்சட்டத்தின் பிடியிலிருந்தும் ஈஸியாகத் தப்பி விடுகின்றனர்.

உணவுக் கலப்பட வழக்குகளில் ஆஜராகும் வழக்கறிஞர் காந்திமதிநாதன் கூறும்போது: ஃபுட்கலர்ஸ் விற்பவர்கள் மீது சட்டப்படி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. அந்த ஃபுட்கலர்ஸ் உணவுப் பொருட்களில் கலந்து உணவுப் பொருட்களுக்கு நிறத்தைக் கொடுத்த பின்புதான் அது குற்றமாகிறது. கலப்பட உணவுப் பொருட்களின் மீது வழக்குத் தொடரவேண்டுமானால் முதலில் தயாரித்து வைத்த உணவுப் பொருட்களை மூன்று பாகங்களாக சாம்பிள் எடுக்க வேண்டும். முதல் பாகத்தை உடனடியாக கெமிக்கல் லேபுக்கு அனுப்பி கலப்படத்தை உறுதி செய்து, ரிப்போர்ட் வாங்கி அந்த அடிப்படையில் வியாபாரியின் மீது வழக்குத் தொடரவேண்டும். மீதமுள்ள இரண்டு பாகமும் சுகாதார அதிகாரியின் கட்டுப்பாட்டில் வைத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும்போது சுகாதார அதிகாரி கட்டுப்பாட்டில் உள்ள உணவுப் பொருளின் இரண்டு பாகங்களை நீதிமன்றம் மூலம் மத்திய பகுப்பாய்வுக் கூடத்திடம் ரிசல்ட் கேட்கவேண்டும். அந்தச் சூழ்நிலையில் கண்டிப்பாக உணவுப் பொருள் கெட்டுப்போய்த்தான் இருக்கும். மத்திய பகுப்பாய்வுக் கூடத்தால் சரியான ரிசல்ட்டை கொடுக்க முடியாது. இதனால் வழக்கு நிற்காமல் அடிபட்டு விடும்.

எடுத்துக்காட்டாக சூடான்டையால் நிறம் ஊட்டப்பட்ட சிக்கன் 65ஐ சாம்பிள் எடுத்து கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் என்ற கெமிக்கலை சிக்கன்-65 மீது ஊற்றி வைப்பார்கள். அந்த கெமிக்கல் சிக்கன் 65யின் முழுப்பகுதியையும் அடைய வாய்ப்புக் குறைவு. அப்படி கெமிக்கல் படாத இடம் முதலில் கெட்டுப்போய் மொத்த சிக்கன் 65ஐயும் கெட்டுப்போகச் செய்து விடுகிறது. அதனால் அதிலிருந்து சரியான ரிசல்ட் எடுக்க முடியாமல் போய் விடுகிறது.உணவுக் கலப்பட சட்டத்தைப் பொறுத்தமட்டில் வியாபாரிகளுக்கும், சில பங்களிப்பு இருப்பதால் வியாபாரிகள் எளிதில் தப்பிவிடுகின்றனர்'' என்கிறார். அதனால் தேவையற்ற கெமிக்கல் கலர் பொடிகள் சேர்த்த சிக்கன்களைத் தவிர்ப்பது ஒன்றே இதற்குத் தீர்வு?

கேன்சர் ஆபத்து!

இது குறித்து சென்னையைச் சேர்ந்த பிரபல குடல்நோய் நிபுணர் டாக்டர் சதீஷிடம் கேட்டபோது: ``சிக்கன் 65ல் சேர்க்கப்படும் நிறத்தால் உடனடி பாதிப்பாக நெஞ்சு எரிச்சல், அமிலத்தன்மை அதிகரிப்பால் இரைப்பை அழற்சி ஏற்படும். நீண்ட நாட்கள் அதைச் சாப்பிட்டு வந்தால் பெருங்குடலில் கேன்சர், சிறுநீரகப் பாதிப்பு உண்டாகும். தொடர்ந்து சிறுநீரகத்திலிருந்து ரசாயன நச்சுப் பொருட்கள் ரத்தத்தோடு கலந்து சிறுநீர்ப் பைக்கும் செல்லும். அங்கே ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப் பையில் புற்றுநோய் வரும் ஆபத்து உண்டு. கழுத்தில் கழலை, மரபணுக்களில் மாற்றங்கள் ஏற்படுவதையும் தவிர்க்க முடியாது' என்று எச்சரிக்கிறார்

Friday, December 17, 2010

ஈழத்தின் வீழ்ச்சி கருணாநிதியின் இதயத்தை சுட்டிருந்தால்...! - திருப்பி அடிப்பேன்! - சீமான் சிறையில் எழுதிய அதிரடி தொடர் - பாகம் 0
ஏனடா எரிக்கிறாய் என்றோ,

ஏனடா அடிக்கிறாய் என்றோ
எவனடா கேட்டீர் அவனை?
அடியென அவனுக்குச்
சாட்டை கொடுத்தவனும்
சுடுவென தோட்டா கொடுத்தவனும்
தடையென எமக்குத்தானே விதிக்கின்றனர்.
என்ன கொடுமையடா இது!''

- புலிகளின் கவிஞர் புதுவை இரத்தினதுரை எழுதிய வரிகள் என் நித்திரையைக் கிழிக்கின்றன. புரண்டு புரண்டு படுக்கிறேன். கொசுக்கடி இல்லை. குளிர் இல்லை. அட்டைப்பூச்சியோ... அரிப்புத் தொல்லையோ இல்லை. ஆனாலும், நித்திரை வரவில்லை. 'தேசியப் பாதுகாப்பு சட்டத்தைப் பாய்ச்சுகிற அளவுக்கு அப்படி என்ன செய்தோம்?’ என்கிற கேள்வி மனதுக்குள் குறுகுறுக்கிறது. என் மீனவனின் தொண்டையில் விழுந்த தூண்டிலின் வலியைச் சொன்னது தவறா? அதற்கா தேசியப் பாதுகாப்புக்கு பங்கம் வந்துவிட்டதாகப் பாய்ச்சல் காட்டினார்கள்?

என்னை ஒருவன் அடித்தான். 'ஐயோ வலிக்கிறது’ என்றேன். மீண்டும் அடித்தான். 'ஐயோ வலிக்கிறது’ எனத் துடித்தேன். மறுபடியும் சக்தி திரட்டி அடித்தான். 'ஐயோ வலிக்கிறது’ என அலறினேன். அடுத்தும் அடித்தான். இனிமேல் அடித்தால், ஓங்கித் திருப்பி அடிப்பேன். 'ஐயோ வலிக்கிறது’ என அலறுவான். 'வலிக்கிறதா அய்யா, அப்படித்தான் எனக்கும் வலித்தது அய்யா, இனிமேல் என்னை அடிக்காதே!’ என்பேன்.

இதைத் தவிர உலக மகா குற்றத்தை ஏதும் இந்த சீமான் செய்துவிடவில்லை. 60 ஆண்டுகளாக ஈழத்திலும், 20 ஆண்டுகளாக இங்கேயும் தமிழக மீனவர்களைத் துரத்தித் துரத்தி அடிக்கிறான் சிங்களவன். 'இனியும் அடித்தால்...’ என வலி பொறுக்காமல் அலறியது, இந்த அரசாங்கத்தை ஆத்திரப் படுத்திவிட்டதாம். வலையோடு போனவர்கள் ரணமாகவும் பிணமாகவும் ஒதுங்கியபோது, தமிழினத் தலைவராக இருக்கும் மனிதருக்கு வராத கோபம்... 'எம் இனத்தை ஏனடா அடிக்கிறாய்?’ எனக் கேட்டபோது கிளர்ந்துவிட்டதாம்!

சிங்கள மாணவனை அடிப்பேன் என எப்படிச் சொல்லலாம்? இரு இனங்களுக்கு இடையே பிரிவினையைத் தூண்டும் வாதம் அல்லவா இது?'' - ஆத்திரத்தில் அலறியது அரசுத் தரப்பு. எங்களவனை அடிக்கும்போது பாயாத சட்டம், சிங்களவனை அடிப்பேன் எனச் சொல்லும்போதே பாய்கிறது.

சட்டம் - ஒழுங்கு குலைந்துவிட்டதாக, பேருந்துகள் கொளுத்தப்பட்டதாக, போக்குவரத்து ஸ்தம்பித்துவிட்டதாக, ரயில்கள் தடம் புரளவைக்கப்பட்டதாக எங்கெங்கு இருந்து தகவல் வந்ததோ... 'இனியும் சீமானை வெளியேவிட்டு வைத் திருந்தால், தமிழகமே சுடுகாடாகிவிடும்!’ எனப் பதறி, தேசியப் பாதுகாப்பு சட்டத்தைப் பாய்ச்சினார்கள்!

அதன் பிறகுதான் தமிழகம் அமைதியானதாம். சட்டம் - ஒழுங்கு சீரானதாம். பொது மக்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் அமைதியாக நடமாடினார்களாம். இந்த தனிப்பட்ட சீமானால் தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கைக் கெடுக்க முடியுமானால், இந்த நாட்டைவிட பலம் வாய்ந்தவனா நான்? சிரிப்பாகத்தான் இருக்கிறது!

ஓர் அறையைவிட்டு வெளியே வருவதைப்போலத்தான், சிறையைவிட்டு வெளியே வந்திருக்கிறேன். கம்பிக்குள் தள்ளிக் களி தின்னவைத்தால், 'தம்பி’க்காகப் பேசும் பேச்சைத் தடுத்துவிடலாம் என எண்ணினார்களோ என்னவோ... வேலூர் சிறையில் அடைத்தார்கள். என் குரல்வளையை உடைக்கிற சக்தி அந்தக் கொட்டடிக்கு இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. நஞ்சுக் குப்பி கடிக்கவும் தயங்காதவன், அட்டைப் பூச்சிக் கடிக்கு அரண்டுவிடுவான் என நினைத்ததே கேவலம். அவர்கள் பெரியாரின் கொள்கை வழி வந்தார்களோ இல்லையோ... நான் அந்தப் பழுத்த தாத்தாவின் பழுக்கக் காய்ச்சிய தத்துவங்களின் தடம் வந்தவன். 'சோம்பலும் ஓய்வும் தற்கொலைக்குச் சமம்!’ என 90 வயதில் சொன்ன அந்தப் போராளியின் பேரனை ஒரு அறைக்குள் அடைத்துவைத்து அடக்கி விட முடியுமா?

ஐந்து தடவை சிறைவாசம்... அதில் இரண்டு முறை தேசியப் பாதுகாப்பு சட்டம். சரமாரியாக வழக்குகள்... ஏன் இவை எல்லாம்? அரசாங்கத்தையும் அதன் அதிகாரத்தையும் கையில் வைத்துக்கொண்டு, இந்தத் தேசத்தின் வளத்தை சுரண்டித் தின்றேனா... உறவுக் கூட்டத்தை ஊரெல்லாம் வளர்த்து, அகப்பட்ட இடம் எல்லாம் அள்ளி, உலகம் எங்கும் ஓடி ஓடிப் போய்ப் பதுக்கும் அளவு சொத்து குவித்தேனா? எத்தனை சுழியன் என எண்ண முடியாத அளவுக்கு லட்சம் கோடிகளைப் பதுக்கிவிட்டேனா?

ஈசல் இறந்தால்கூட இழவு கொண்டாடும் இனத்தில் பிறந்துவிட்டு, இனமே இறந்து கிடக்கையில் கை கட்டி, வாய் மூடி, கதறல் அடக்க இந்த மூர்க்கக்காரனால் முடியவில்லை. ஒப்பாரி வைத்ததைத் தவிர, ஒரு தவறும் செய்யாதவனை பயங்கரவாதியாகப் பார்க்கிறீர்களே... இந்த சீமான் சென்னைக்கு எதற்காக வந்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?

150 ரூபாய்க்கு மிளகாய் மூட்டையைப் போட்டு விட்டு சென்னைக்கு என்னை பேருந்து ஏற்றி அனுப்பினான் என் அப்பன். வறுமையை ஜெயிக்கவும் - வாழ்ந்து காட்டவும் சென்னைக்கு வந்து, மாதத்துக்கு ஒரு முறை 100 ரூபாயைக்கூட அப்பனுக்கு அனுப்ப முடியாமல், எத்தனையோ வருடங்களை இயலாமையிலேயே கழித்தவன். இன்றைக்கும் சொந்த ஊரில் ஒரு வீடு கட்ட முடியவில்லையே என்கிற ஏக்கம் நீங்காதவன். என்னையா பயங்கரவாதி எனச் சொல்லி பயம் காட்டுகிறீர்கள்?

அறிவாற்றலும், வீரமும் செறிந்துகிடக்கும் இந்த இனத்துக்கு அரசியல் வலிமை சேர்க்கும் பற்றாளர்கள் பற்றாக்குறையாகி விட்டதுதானே எங்கள் பதற்றத்துக்குக் காரணம். கண் முன்னே சொந்த இனம் கருவறுக்கப்பட்டபோது, பட்டம் பதவிகளைத் தூக்கி எறிந்துவிட்டுத் துடிக்கிற தலைவன் எங்களுக்கு இல்லாமல் போய்விட்டானே... இனத்துக்காகக் குடும்பத்தையே வாரிக் கொடுத்த தலைவன் பிரபாகரன் அங்கே களமாடி நிற்க... குடும்பத்துக்காக இனத்தையே காவு கொடுத்து வேடிக்கை பார்த்த கருணாநிதியை எப்படி எங்களின் தலைவனாய் ஏற்க முடியும்?

ஈழத்தின் வீழ்ச்சி கருணாநிதியின் இதயத்தைச் சுட்டிருந்தால்... வல்லூறுகளின் கொடூரங்கள் அவருடைய வாயைத் திறந்திருந்தால்... நாங்கள் ஏனய்யா நரம்பு முறுக்கி சிறைக்குக் கிளம்பப்போகிறோம்? இனத்தைக் காக்க நீங்கள் இருப்பதாக எண்ணி சினத்தை அடக்கி இருப்போமே... 'இனப் பாசம் கிலோ என்ன விலை?’ எனக் கேட்கிற ஆளாக, மொத்தக் கொடூரத்தையும் சத்தமின்றிப் பார்த்துக்கொண்டு இருந்தீர்களே... இப்படிப்பட்ட இதயத்தோடு வாழும் உங்கள் ஊரில் ஒப்பாரிவைப்பதும் உலக மகாக் குற்றம்தான்! கேள்வி கேட்பதும், கேவி அழுவதும் தேசியப் பாதுகாப்பு மீறல்தான்!

கொடூரப் போரில் ஈழமே எரிந்து காடாகிக் கிடந்த வேளையில், எங்களின் கோபம் தமிழகத்தில் வசிக்கும் ஒரு சிங்களவனையாவது சீண்டியதா? ஒரு புத்த துறவியாவது எங்களால் துரத்தப்பட்டாரா? சிங்கள இராணுவத்தின் வெறித் தாண்டவத்துக்கு டெல்லி ஆயுதம் கொடுக்க... அதை சென்னை கை கட்டி வேடிக்கைப் பார்க்க... துடித்துப்போன நாங்கள் எங்கள் உயிர்களைத் தானே தீக்குச்சிக்குத் தின்னக் கொடுத்தோம். எங்களின் இயலாமையும் கோபமும் ஒரு சிங்களவனின் மீதாவது திரும்பியதா? அப்போதும் சிங்கள மாணவர்கள் இங்கே படித்துக்கொண்டு தானே இருந்தார்கள்? சிங்கள வியாபாரிகள் எங்கள் தெருக்களில் திரிந்துகொண்டுதானே இருந்தார்கள்? மாற்று இனத்துக்கு மதிப்புக் கொடுக்கும் எங்களின் மாண்பு அப்போது புரிய வில்லையா இந்த அரசாங்கத்துக்கு? என் இனமே எரிந்து சாய்ந்தபோது... எதிர்த்துக் கேட்கத் திராணியற்றவர்கள், சிங்கள மாணவனை அடிப்பேன் என்றதும் சீறுகிறார்களே... இது எந்த ஊர் நியாயமய்யா?

சிறையில் தள்ளி என் குரல்வளையைச் சிதைத்து விடலாம் எனத் திட்டமிட்ட கருணாநிதிக்குச் சொல்கிறேன்... எத்தனை முறை வேண்டுமானாலும் உங்களின் பயங்கர சட்டங்களைப் பாய்ச்சுங்கள். உங்களைப்போல், 'ஐயோ... கொலை பண்றாங்கப்பா... காப்பாத்துங்கப்பா...’ என அலறித் துடிக்கும் ஆள் நான் இல்லை! என் நாடி நரம்பின் கடைசித் துடிப்பையும் நீங்கள் துண்டித்துப் போட்டாலும், உங்களிடம் மண்டியிட நான் தயார் இல்லை.

எந்த வார்த்தைகளுக்காக என்னை வளைத்தீர்களோ... அதே வார்த்தைகளை கொஞ்சமும் பயமின்றி உரக்கச் சொல்கிறேன்...

''எங்கள் மீனவனை இனியும் அடித்தால், சிங்கள மாணவர்களை நாங்கள் அடிப்போம்!''

ஓயாது அலை..........

நன்றி: ஜூனியர் விகடன்