Thursday, November 28, 2013

யார் இந்த சங்கரராமன்.....


தன்னை தானே வெட்டி தற்கொலை செய்து கொண்ட பாவ பட்ட சங்கரராமன் பற்றிய பதிவு தான் இது.

இந்தியாவில் சட்டம் என்பது ஏழைகளுக்கு மட்டுமே பணகாரர்களுக்கும், உயர் பதவி, உயர் சாதி காரனுக்கு கிடையாது என்பதை வெட்ட வெளிச்சம் ஆகிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கிய நல் உள்ளங்களுக்கு நன்றி...

இந்த காசுக்கு மண்டியிடும் நாய்கள் இருக்கும் வரை இந்தியாவில் சட்டம் ஒழுங்கு என்ற ஒன்றே இல்லை என்று கொள்ளுக....


இந்த பதிவுOne India இந்த பதிவு சங்கர் என்பவரால் எழுத பட்டது. இந்த பதிவின் முக்கியத்துவம் கருதி, அவரின் பதிவை அப்படியே பதிவுயடுகிறேன்.

ஒரு செய்தியாளனாக என்னால் மறக்க முடியாத நபர், நண்பர். காஞ்சிபுரத்தில் நான் இருந்த நாட்களில் தினசரி காலையும் மாலையும் என்னை தவறாமல் சந்திக்க வந்துவிடுவார். அவருடன் ஒரு மெல்லிய துண்டு போர்த்திக் கொண்டு அவரது மகன் கொழுக் மொழுக்கென்று வந்து நிற்பான். சின்னகாஞ்சிபுரத்தைச் சேர்ந்த மகேஷ் என்ற நண்பர்தான் சங்கரராமனை அறிமுகப்படுத்தி வைத்தார். ஒவ்வொரு கோயிலிலும் நடக்கும் முறைகேடுகள் பற்றி துல்லியமாக புள்ளிவிவரம் தருவார் சங்கரராமன். எந்தக் கோயிலில் என்ன விசேஷம், அதன் வரலாறு, இப்போதுள்ள நிலைமை என எனக்குத் தேவையான விவரங்களை தினமும் தருவது அவர் வழக்கம். முடிந்தவரை தமிழகத்தின் அனைத்து கோயில்கள் பற்றியும் எனக்குப் புத்தகங்கள் தந்திருக்கிறார்... ஒரு நாள் விட்டு ஒருநாள் நான் எழுதிய கோயில் கட்டுரைகளை இப்போது தொகுத்தாலும் தனிப் புத்தகம் தேறும். அதற்கான பெருமை சங்கரராமனுக்குத்தான்!


ஒரு முறை வரதராஜ பெருமாள் கோயிலுக்கு 400 ஏக்கர் நிலமிருந்தும் ஒரு மூட்டை நெல்லுக்கு வழியில்லை என்ற தகவலை ஆதாரங்களோடு தந்தார். 'குத்தகைதாரர்கள் தெய்வத்தையே ஏமாற்றும் கொடுமையை யாரும் எழுதமாட்டறாளே' என குமுறினார். அதை படங்களோடு முதல் பக்க செய்தியாக்கினோம். சில தினங்களில் வரதராஜருக்கு வரவேண்டியவற்றில் ஓரளவுக்காவது வர ஆரம்பித்ததை மகிழ்ச்சியோடு சொல்லி, அந்தக் கோயிலின் பிரசித்தி பெற்ற பிரசாதமான 'படி இட்லி' - புதினா சட்னியை கொடுத்துவிட்டுப் போனார்!

இந்தக் கோயிலில் நடந்த இன்னொரு அக்கிரமம்... கட்டாய அர்ச்சனை டிக்கெட் விற்பனை. அதாவது கோயிலுக்குள் நுழையும்போதே இந்த டிக்கெட்டை பணம் கொடுத்து பெற்றே தீர வேண்டும். கிட்டத்தட்ட நுழைவுச் சீட்டு. இது மிகப் பெரிய மோசடி என்பதை கவனத்துக்குக் கொண்டு வந்தார் சங்கரராமன். அப்புறமென்ன.. முதல் பக்க செய்தியானது. அதன்பிறகு, அந்த டிக்கெட் கவுன்டர் காணாமல் போனது.

சங்கர மடத்தில் எதிர்மறையாக என்ன நடந்தாலும், அது செய்தியாக வெளிவரக் கூடாது என்பது எழுதப்படாத உத்தரவு. எனவே புதிதாக வந்த என்னிடம்தான் அவர் சங்கர மடத்து சமாச்சாரங்களை அதிகமாகப் பகிர்ந்து கொள்வார்.

அந்த மடத்தில் அடிக்கடி பிணங்கள் விழும். இளம் ஆண் பிணங்கள். அதனை எந்த செய்தித் தாளிலும் செய்தியாகப் பார்க்க முடியாது. அப்படியே வந்தாலும், மின்சாரம் தாக்கி பலி என்பதோடு நின்றுவிடும். பெரும்பாலும் குருகுலத்தில் படிக்கும் மாணவர்கள் அல்லது வெளி மாநில இளம் பக்தர்கள் இப்படி ஷாக்கடித்து இறந்திருப்பார்கள்.

அதி நவீன வசதிகள் அனைத்தும் கொண்ட சங்கர மடத்தில் ஏன் அடிக்கடி ஷாக் அடிக்கிறது என்பது குறித்து சங்கரராமன் சொன்ன பின்னணி பயங்கர ஷாக்கான சமாச்சாரம்! ஜெயேந்திரரைப் பார்க்க வரும் வெளி மாநில, வெளிநாட்டுப் பக்தர்கள், தரும் ரொக்க - தங்க காணிக்கைகள் குறித்து அவர் அடிக்கடி கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தார். சங்கரராமனுக்கு ஜெயேந்திரர் வைத்திருந்த பெயர் துஷ்டன்! நேருக்கு நேர் பார்த்தால் பக்கத்திலிருப்பவர்களிடம் 'இந்த துஷ்டப் பய எதுக்கு வந்திருக்கான் கேளு.. அவனை முதல்ல போகச் சொல்லு', என்பாராம். இதுவும் சங்கரராமன் சொன்னதுதான்.

எழுத்தாளர் அனுராதா ரமணன் ஜெயேந்திரர் மீது சுமத்திய பாலியல் குற்றச்சாட்டுகளை, தொன்னூறுகளிலேயே பலரிடமும் சொன்னவர் சங்கர்ராமன். பல முறை தன்னை யாரோ துரத்தியதாகவும், தாக்க முயன்றதாகவும் சங்கரராமன் சொல்வார். ஆனால் அதை பெரிதாக நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு நாள் தன்னை சங்கர மடத்து ஆட்கள் அடித்துவிட்டார்கள் என்று கூறி, முழங்காலில் ரத்த காயத்துடன் வந்தார். அதன் பிறகு அவரைப் பார்த்தாலே மற்ற நிருபர்கள் தெறித்து ஓட ஆரம்பித்தனர். 'இதுக்கு வேற வேலயே இல்ல. கண்டுக்காதீங்க... இதுமேலயும் தப்பு இருக்கு,' என்றனர்.

ஒரு கட்டத்தில் சங்கரராமன் தரும் எக்ஸ்க்ளூசிவ் தகவல்களை என்னால் செய்தியாக வெளியிட முடியவில்லை. காரணம், அலுவலகத்தில் பலரும் சங்கர மடத்தின் அறிவிக்கப்படாத பிஆர்ஓக்களாக செயல்பட்டதுதான்.

இதனால் நானே கூட சில சந்தர்ப்பங்களில் சங்கரராமனைக் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டேன். ஆனால் அந்த மனிதர் புரிந்து பக்குவமாகத்தான் நடந்து கொண்டார். டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு செய்திகள் கொடுக்க ஆரம்பித்த நேரம்... ஒருநாள் சங்கரராமன் வந்தார். 'சங்கர் சார், இந்த காமாட்சியம்மன் சந்நிதியில் நடக்கும் அக்கிரமத்தை எழுத மாட்டேளா... குடிச்சிட்டு பூஜை பண்றான்... வெளிப் பிரகார மண்டபத்துக்குள் சாயங்காலம் ஆச்சுன்னா யாரும் போக முடியாத அளவுக்கு அசிங்கம் நடக்குது.. அங்கங்க நிரோத் உறை கிடக்குது. எல்லாத்தையும்விட கொடுமை, மூலஸ்தானத்தில் அம்மனுக்கு சிறப்பாக நடக்கும் தங்க, வெள்ளி நாணய அபிஷேகம் முடிஞ்சதும், அந்த நாணயங்கள் எல்லாம் குறிப்பிட்ட நபரின் தனி கணக்கில் போய் சேருது... இதையெல்லாம் எப்போ எழுதுவேள்,' என்று வந்து நின்றார்.

"ஸாரி சங்கரராமன்... ஒரு வார்த்தை கூட இதுபத்தி இப்போ இருக்கிற பேப்பர்ல எழுத முடியாது," என்றேன். 'என்னண்ணா சொல்றேள்...' என சற்று அதிர்ச்சியுடன் கேட்டபடி வெளியேறினார் சங்கரராமன்.

ஆனால் அவருடனான நட்பில் மாற்றமில்லை. நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் வரதராஜ பெருமாள் கோயிலுக்குப் போனாலே போதும், எங்கிருந்தாலும் ஓடி வருவார்... ஒவ்வொரு பிரகாரம், சந்நிதிகளுக்கும் அழைத்துப் போய் கோயிலின் பெருமை சொல்வார். தவறாமல் படி இட்லி பிரசாதம் பெற்றுத் தருவார். அந்த ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள சிற்பங்கள், கற்சங்கிலிகள் குறித்து அவர் தரும் விளக்கம் சிறப்பாக இருக்கும். கடைசியாக 2001-ம் ஆண்டின் டிசம்பர் மாதம் என்னைப் பார்க்க படி இட்லியோடு வந்திருந்தார் சங்கரராமன்.

பத்திரிகைகள் கைகொடுக்காத நிலையில், ஒரு நாள் தன்னுடைய சொந்த பெயரிலே 'எச்சரிக்கை' என்ற தலைப்பில் ஜெயந்திரர், விஜயேந்திரர், ரகு மற்றும் மேலும் சிலர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, அதை திருத்திக்கொள்ளும்படி கேட்டு ஜெயந்திரருக்கு அனுப்பி வைத்தார்.


அடுத்த நான்காவது நாள், சங்கரராமன் ஒரு நாற்காலியோடு மல்லாக்க ரத்த வெள்ளத்தில் பிணமாக இருந்த காட்சியை தொலைக்காட்சியில் பார்த்துப் பதைத்தேன்! இதையெல்லாம் விலாவாரியாக சொல்லக் காரணம், சங்கரராமன் என்ற மனிதர் ஜெயேந்திரருக்கு எந்த அளவுக்கு பெரும் தலைவலியாகத் திகழ்ந்தார் என்பதைச் சொல்லத்தான்!

Sunday, November 24, 2013

இரண்டாம் உலகம் ஒரு இயக்குனரின் பார்வையில் இருந்து பார்க்க வேண்டிய படம்.


படம் பார்த்து விட்டு வெளியே வரும் பொது ஒரு குழப்பமான சூழ்நிலையில் ல தான் வெளிய வந்தோம். யாரும் படம் நல்லா இருக்கா இல்லையா என்று கேட்டால் என்ன பதில் சொல்லுவது என்ற மண நிலை தான் காரணம். படம் நன்றாக இருக்கு என்று சொல்லவும் சில காரணங்கள் இருக்கிறது, அது போல் தான் நல்லா இல்லை என்று சொல்லுவதற்கும்.

பைக் ஸ்டான்ட் இல் செல்போனில் ஒருவர், அப்பா முடியலடா, தலை வழி என்று கூறி கொண்டு இருந்தான். சரி அது நமக்கு தேவை இல்லை. படத்தை பற்றி பார்போம்.


படம் நமது மக்களுக்கு பிடிக்காமல் அல்லது புரியாமல் போனதற்கு காரணம் என்று பார்த்தால்

இரண்டாவது உலகம் என்படவுது யாதனில் ,கற் காலத்தில் இருக்கும் ஒரு மனித கூட்டம், காதல் , நேசம் , பாசம், இறக்கம் இல்லாத ஒரு மூடர் கூடம், அங்கு காமம் உண்டு ஆனால் காதல் கிடையாது, ஆணாதிக்கம் உண்டு பெண்ணியம் கிடையாது, அங்கு ஒரு முரட்டு பொண்ணுக்கும், முட்டாள் முரடன்கும் இடையில் வரும் காதலா அல்லது இனகவர்ச்சியா என்று தெரியாத பந்தம் உருவாகிறது,

அங்கு ஒரு காதலை உருவாக்க ஒரு பெண் கடவுளும், அந்த கடவுளை கொன்றால் அந்த நாட்டு மக்களை அழித்து விடலாம் என்று இன்னொரு மனித கூட்டமும் இருக்கிறது.


இவை அனைத்தும் நமது உலகத்தில் இருக்கும் ஒரு காதலன் தனது காதலியை எதிர்பாராதவிதமாக இழந்து பைத்தியம் பிடிக்காத குறையாக சுற்றி திரியும் ஆர்யாவின் நினைவலைகள் அல்லது காதல் கடவுளின் சக்தியால் நமது உலகத்தில் இருந்து இந்த கற்காலத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு காதல் என்னும் மலர் மலர உதவுவது என்பது போல் அமைந்து இருக்கும் ஒரு கதை தான் இந்த இரண்டாம் உலகம்.

Negative Points:


1.வெளிநாட்டு மக்களை தமிழில் பேசி நடிக்க வைத்தது. எதோ பழைய இங்கிலீஷ் படத்தே தமிழ்ல டப் செய்து வெளியிட்டது போல இருந்துச்சு, இதனால தான் படத்தில் ஒரு ஈர்ப்பு வாராமல் போனதற்கு முக்கிய காரணம்.

2. திரும்பவும் அதே வேட்டுட்டா, குத்தவா ரக பாடல்கள்.

3. பாடல்களை காட்சியமைக்க பட்ட விதம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் இல்லை. குறிப்பாகத் பணகள்ள பாடல் வரிகளில் வரும்,

“ஒரு பைத்தியம் பிடித்த பௌர்ணமி நிலவு மேகத்தை கிழித்து எரியும்” இது போன்ற வரிகள் பல எதிர்பர்புகளை ஏற்படுத்தி வைத்து இருந்தது.

Positive Points:


1.Graphics chance-அஹ இல்லை.. அவதார் பட ரேஞ்சுக்கு தமிழ் ஒரு படம். அதிலும் குறிப்பாக சிங்கம் என்று கூறி கொண்டு ஒரு வகை மிருகத்துடன் சண்டை இடும் காட்சி.

2. படத்தின் மிக பெரிய பிளஸ் பாயிண்ட் அனுஷ்காவின் ஆளுமை, அனுஷ்கா பதில் வேறு யாறும் அந்த கதாபத்திரத்தில் சிறப்பாக நடித்து இருக்க முடியாது.


3. படத்தின் மியூசிக் எல்லா பாடல்களும் திரும்பவும் கேட்க வைக்கிறது.

4. நம்மால் சிந்திக்க முடியாத ஒரு உலகத்தை நம் கண்முன்னால் காண்பித்தது. (ஆனால் நம்மால் தான் அதை ஏற்றுகொள்ள முடிய வில்லை என்பது வேறு விஷயம் )


படத்தை பற்றின எதிர்மறையான கருத்துகள் நிறைய வந்தாலும், கண்டிப்பாக திரை அரங்கிற்கு சென்று பார்க்க வேண்டிய திரை படங்களில் இதவும் ஒன்று. படம் திரை அரங்கை விட்டு செல்லும் முன்பு கண்டிப்பாக பார்த்து விடுங்கள்.

ஓநாயும் அட்டுகுட்டியும் மிஸ் பண்ணின மாதிரி இதையும் மிஸ் பண்ணி விடாதிர்கள். நான் வேறு யாரும் அல்ல உங்களுள் ஓருவன் தான்

Friday, November 22, 2013

பாதுகாப்பற்ற தானியங்கி இயந்திரம் (ATM)நமது நாட்டில் உள்ள பல ATM தகுந்த பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது, அதற்க்கு பெங்களூர் ATM தாக்குதல் சரியான உதாரணம்.

சரி நானும் இங்கு அந்த நிகழ்வை பற்றி தான் பேச போகிறேன் அல்லது பாதுகாப்பை வளபடுத்த என்ன செய்ய வேண்டும் என்று பேச போவது இல்லை. ஏன் என்றால் அதை பற்றி பலர் பல விதமாக பேசி இருப்பார்கள். சரி இதை பற்றி நான் பேச போவது இல்லை என்றால் வேறு எதை பற்றி பேச போகிறேன் என்று நினைகிர்களா ????

நமது மக்கள் இடையில் இந்த காலகட்டதில் பரவும் ஒரு புத்திசாலிதனமான வதந்தியை பற்றி தான். இந்த கட்டுரை படிக்கும் 100இல் 99 பேருக்கு தெரிந்த விசயம் தான். ஆனால் அது உண்மை என்று நினைத்தால் Iam very very sorry my friend. ATM பின் நம்பரை நேர் எதிராக அடித்தால் பணம் வெளி வரும், அதே நேரம் பக்கத்தில் இருக்கும் காவல் நிலையத்திற்கும் தகவல் சென்று அடுத்த சில நிமிடங்களில் நம்மை காப்பாற்ற காவல் துறை ஹீரோ போல வந்து விடுவார்கள், அல்லது தமிழ் படத்தில் வரும் காவல் துறை போல படம் முடிந்த பிறகாவது வந்து விடுவார்கள் என்றால் நினைத்தால் Iam very very sorry my friend. இப்படி ஒரு சேவை இந்தியாவில் மட்டும் அல்ல உலகத்தில் சில நகரங்களை தவிர வேறு எங்கும் இந்த சேவை உயிரோடு இல்லை. என்பது தான் நிதர்சனமான உண்மை.

The concept of an alternative emergency PIN system, or duress code, for ATM systems has been around since at least July 30, 1986, when Representative Mario Biaggi, a former police officer, proposed it in the U.S. Congressional Record, pp. 18232 et seq. Biaggi then proposed House Resolution 785 in 1987 which would have had the FBI track the problem of express kidnappings and evaluate the idea of an emergency PIN system. HR785 died in committee without debate.

இந்த சட்டம் நடைமுறைக்கு வருவது முன்பே கலைக்க பட்டு விட்டது, அதற்கு பின் வரும் காரணங்கள் இந்த சட்டம் நடைமுறைக்கு வாராமல் போனதற்கு காரணம்.

உதாரணம் 1.

ஒருவரின் பின் நம்பர் 5555, 8888 என்று இருந்தால் அவர் எப்படி போட்டாலும் அவருது பின் நம்பர் அது தான்.

உதாரணம் 2.

ஒருவரின் பின் நம்பர் 1251. 8568 என்று இருக்கிறது என்றால் கை தவறுதலாக கூட இரண்டாவது மற்றும் முன்றாவது என்னை மாற்றி போட வாய்ப்பு இருக்கிறது,

எனவே காவல் துறைக்கு தேவை இல்லாத Fake Call’s அதிகமாக்க செல்ல வழி இருக்கிறது. என்று இந்த சேவை நடைமுறைக்கே வரவே இல்லை. ஆனால் 2006 இல் இருந்து இந்த சேவை இருபத்து போலவே பல சமுக தளங்களில் மற்றும் இமெயில் முலம் இது போன்ற பொய்யான தகவல் பரவி கொண்டு இருக்கிறது.

இந்த ATM Pin no reversal System உண்மையாக இருந்தால் இந்த நேரம் காவல் துறையும், வங்கியும் இப்படி ஒரு சேவை இருக்கிறது அன்று தகவல் வெளிவிட்டு இருப்பார்கள், அவர்கள் இதை பற்றி வாய் திறக்காமல் இருப்பதே இப்படி ஒரு சேவை பழக்கத்தில் இல்லை என்பதற்கு ஒரு சான்று.

நம்மில் சில புத்திசாலி நண்பர்கள் கேட்பார்கள், இந்த தகவல் வெளிய தெரிந்தால் திருடன் உசார் ஆகி விடமாட்டனா என்று ???அதனால் தான் இந்த தகவலை அரசாங்கம் வெளிய தெரிவிக்க வில்லை என்று.... இந்த விசயம் திருடனுக்கு தெரிந்தால் இவன் உண்மை சொல்லுகிறானே இல்லை போய் சொல்லுகிறானே என்ற குழப்பத்தில விட்டு சென்றாலும் விட்டு விடுவான்.

இது போன்ற இணையத்தில் பரவும் மேலும் சில பொய்யான பரப்புரைகளை பற்றின அவனகள் உடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன். நான் வெறும் யாரும் அல்ல.. உங்களுள் ஓருவன் தான்