மருத்துவ இளங்கலை படிப்பில் சேருவதற்காக பொது நுழைவுத்தேர்வு ஒன்றை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை சில நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது
இது குறித்து நடந்து வரும் வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் அவ்வாறு நடத்துவதற்கு மருத்துவ கவுன்சிலுக்கு அனுமதி அளித்துள்ளது
தமிழக அரசு பொது நுழைவு தேர்விற்கு எதிராக தனது நிலையை ஏற்கனவே தெரியப்படுத்தியுள்ளது. பார்க்க சுட்டி
இந்நிலையில் பொது நுழைவுத்தேர்வு என்பது மாணவர்களின் நலன் கருதி என்பது போலவும், பல நுழைவு தேர்வு எழுதுவதற்கு பதில் ஒன்று மட்டும் எழுதினால் போதும் என்பது போலவும் (அவர்களின் கூற்றுப்படி 22 தேர்வுகளுக்கு பதில் ஒரு தேர்வு - இது குறித்து விரிவாக பார்க்கலாம்), தமிழக அரசு மாணவர்களின் நலனுக்கு எதிராக இருப்பது போலவும் விஷ(ம)ப்பிரச்சாரம் ஒன்று வலைத்தளங்களிலும், சமூகவலைத்தளங்களிலும், மின்னஞ்சல் குழுமங்களிலும் நடைபெற்று வருகிறது
இந்த நிலையில், இது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்
இந்தியாவில் இருக்கும் மருத்துவக்கல்லூரிகளை மூன்றாக வகைப்படுத்தலாம்
- நடுவண் அரசால் நிர்வாகிக்கப்படுபவை / மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை - ஏய்ம்ஸ் (AIIMS) , பி.ஜி.ஐ சண்டிகர் (PGI Chandigarh) , எஸ்.ஜி.பி.ஜி.ஐ லக்னோ (SGPGI Lucknow), ஜிப்மர் பாண்டிச்சேரி JIPMER, சித்திரை திருநாள் - திருவனந்தபுரம் (SCTIMST), நிம்ஹான்ஸ் பெங்களூர் (NIMHANS), நிம்ஸ் ஹைதரபாத் (NIMS) போன்றவை
- மாநில அரசால் நிர்வாகிக்கப்படுபவை / மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளவை - சென்னை மருத்துவக்கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி, மதுரை மருத்துவக்கல்லூரி, கட்டாக் மருத்துவக்கல்லூரி போன்றவை
- தனியாரால் நிர்வாகிக்கப்படுபவை / தனியார் கட்டுப்பாட்டில் உள்ளவை - சி.எம்.சி வேலூர், ராமச்சந்திரா, அண்ணாமலை போன்றவை
- இளங்கலை படிப்பிற்கு
- இந்த கல்லூரிகளில் இருக்கும் இடங்களில் 100 இடங்களில் 85 சதவித இடங்கள் அந்த மாநில அரசால் நிரப்பப்படுகிறது
- மீதி இருக்கும் 15 சதம் இடங்கள் நடுவண் அரசால் நிரப்பப்படுகிறது
- இந்த கல்லூரிகளில் இருக்கும் இடங்களில் 100 இடங்களில் 85 சதவித இடங்கள் அந்த மாநில அரசால் நிரப்பப்படுகிறது
- முதுகலை படிப்பிற்கு
- இந்த கல்லூரிகளில் இருக்கும் இடங்களில் 100 இடங்களில் 50 சதவித இடங்கள் அந்த மாநில அரசால் நிரப்பப்படுகிறது
- மீதி இருக்கும் 50 சதம் இடங்கள் நடுவண் அரசால் நிரப்பப்படுகிறது
- இந்த கல்லூரிகளில் இருக்கும் இடங்களில் 100 இடங்களில் 50 சதவித இடங்கள் அந்த மாநில அரசால் நிரப்பப்படுகிறது
- மத்திய அரசால் நடத்தப்படும் பொது நுழைவு தேர்வு
- மாநில அரசால் நடத்தப்படும் பொது நுழைவு தேர்வு
- ஏய்ம்ஸ்
- ஜிப்மர்
- பி.ஜி.ஐ. சண்டிகர்
- எஸ்.ஜி.பி.ஜி.ஐ.லக்னோ
- சித்திரை திருநாள் திருவனந்தபுரம்
- நிம்ஹான்ஸ் பெங்களூர்
- நிம்ஸ் ஹைதரபாத்
- சி.எம்.சி வேலூர்
- மத்திய அரசால் நடத்தப்படும் பொது நுழைவு தேர்வு
- ஏய்ம்ஸ்
- ஜிப்மர்
- பி.ஜி.ஐ. சண்டிகர்
- எஸ்.ஜி.பி.ஜி.ஐ.லக்னோ
- சித்திரை திருநாள் திருவனந்தபுரம்
- நிம்ஹான்ஸ் பெங்களூர்
- நிம்ஸ் ஹைதரபாத்
- சி.எம்.சி வேலூர்
- அதாவது மத்திய அரசின் பொது நுழைவு தேர்வு என்பது
- அதாவது தமிழக பொது நுழைவு தேர்வு, கேரள பொது நுழைவு தேர்வு, கர்நாடக நுழைவு தேர்வு, மகாராஷ்ட்ர நுழைவு தேர்வு, போன்ற 22 மாநில நுழைவு தேர்வுகள் தான் இல்லை
- மத்திய அரசு நிறுவனங்களின் தேர்வுகள் அப்படியே உள்ளன
ஆகா !!
22 தேர்விற்கு பதில் ஒரு தேர்வு என்று வெளியில் சொல்லப்பட்டாலும், இவர்கள் முன்நிறுத்தியுள்ள பொது நுழைவுத்தேர்வானது மாநில அரசின் நுழைவுத்தேர்விற்கு சாவுமணி அடிப்பதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை என்பது தான் உண்மை
உண்மையில் 10 தேர்விற்கு பதில் 9 தேர்வு - அவ்வளவு தான்
எனென்றால் ஒரு மாணவன் ஒரு மாநில அரசின் தேர்வை மட்டும் தானே எழுதமுடியும் (வெகு சிலர் வேண்டுமென்றால் ஒன்றிற்கு மேற்பட்ட தேர்வுகள் எழுதலாம் - ஆனால் அது வெகு சொற்பமே)
---
இந்த தேர்வு வேண்டி வழக்கு போட்டிருப்பவர்களின் உண்மையான நோக்கம் மாணவர் நலன் என்றால் அவர்கள் “அனைத்து தேர்வுகளுக்கும் பதில் ஒரே தேர்வு” என்றல்லவா வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும்
அப்படியில்லாமல் “மத்திய அரசால் நடத்தப்படும் பிற தேர்வுகளை எல்லாம் அப்படியே வைத்து விட்டு மாநில அரசின் தேர்விற்கு மட்டும் தடை கோரி” வழக்கு தொடர்வதன் நோக்கம் தான் என்ன ?
--
மேலும் தோண்டுவோம்
- இன்று மாநில அரசின் பாட திட்டம் (ஸ்டேட் போர்டு) என்று ஒன்று உள்ளது குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள்
- அதே போல் மத்திய அரசின் பாட திட்டம் (செண்ட்ரல் போர்டு - சி பி எஸ் சி) என்றும் உள்ளது
இரண்டு ஒன்றா, இல்லையே
- இதில் நடுவண் அரசின் பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் படிப்பது மேல் குடி மக்களே / நகர் வாழ் மக்களே என்பது உள்ளங்கை நெல்லிக்கனி -
- நடுத்தர மற்றும் ஏழை மக்கள் / கிராமப்புற மற்றூம் சிற்றூர் மாணவர்கள் படிப்பது மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் பள்ளிகளில் தான்
அதே நேரம்
- மத்திய அரசின் பொது நுழைவுத்தேர்வு, எய்ம்ஸ் நுழைவு தேர்வு, ஜிப்மர் நுழைவுத்தேர்வு ஆகியவை மத்திய அரசின் பாடத்திட்டத்தை அடிப்படையாக வைத்து நடத்தப்படுபவை
- மாநில அரசுகள் நடத்தும் நுழைவுத்தேர்வு ஒன்று மட்டுமே மாநில அரசின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் இருக்கும்
எனவே
- மத்திய அரசு நடத்தும் நுழைவுத்தேர்வுகளில் (பொது நுழைவுத்தேர்வு, எய்ம்ஸ் நுழைவு தேர்வு, ஜிப்மர் நுழைவுத்தேர்வு போன்றவை) சி பி எஸ் சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அதிகம் பேர் தேர்வு பெறுவார்கள். மாநில அரசின் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களில் வெகு சிலரே தேர்வு பெற முடியும்
- மாநில அரசு நடத்தும் நுழைவுத்தேர்வுகளில் மாநில அரசின் பாடத்திட்ட பள்ளிகளின் மாணவர்கள் அதிகம் தேர்வு பெறுவார்கள்
இந்நிலையில்
- மத்திய அரசால் நடத்தப்படும் பொது நுழைவு தேர்வு, ஏய்ம்ஸ் நுழைவுத்தேர்வு, ஜிப்மர் நுழைவுத்தேர்வு, பி.ஜி.ஐ. சண்டிகர் நுழைவுத்தேர்வு, எஸ்.ஜி.பி.ஜி.ஐ.லக்னோ நுழைவுத்தேர்வு, சித்திரை திருநாள் திருவனந்தபுரம், நிம்ஹான்ஸ் பெங்களூர் நுழைவுத்தேர்வு, நிம்ஸ் ஹைதரபாத் நுழைவுத்தேர்வு, போன்ற மேல்தட்டு / பெருநகர் மக்களுக்கு வசதியாக உள்ள தேர்வுகளை எல்லாம் அப்படியே வைத்து விட்டு
- நடுத்தர மற்றும் ஏழைகள் மற்றும் கிராமப்புற, சிற்றூர் மாணவர்கள் படிக்கும் பாடத்திட்டத்தின் கீழுள்ள மாநில பொது நுழைவுத்தேர்வு ஒன்றை மட்டும் இரத்து செய்ய வேண்டும்
என்று வழக்கு தொடர்ந்திருப்பவர்களின் உண்மை நோக்கத்தை அறிந்து கொள்வது சிரமமா
அதனால் தான் தமிழக அரசு, இந்த பொது நுழைவு தேர்வை எதிர்த்தது
இந்நிலையில் இந்த செய்தியின் படி, உச்ச நீதிமன்றம் பொது நுழைவு தேர்விற்கு பச்சை கொடி காட்டியதாக தெரிகிறது
இது குறித்து தமிழக அரசும் மாணவர்களும் விழிக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாகவே தெரிகிறது...
$$$$$$$$$$$$$$$$$$$$$$$
கட்டுரையை எழுதியவர் அனைவருக்கும் அறிமுகமான பதிவர், மருத்துவர். !!
உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி பெற்ற இட ஒதுக்கீட்டுக்கு குறுக்கு வழியில் அடி கொடுக்கும் பார்ப்பணீய பிசாசுகளை அனைத்து தளங்களிலும் எதிர்க்கவேண்டும்.
உசிலம்பட்டியில் இருந்து மருத்துவராகவேண்டும் என்று நினைப்பவன் டெல்லியிலும் பெங்களூரிலும் இருப்பவனிடம் போட்டிபோடவேண்டும். இவன் எக்ஸ்போஷர் என்ன, அவன் எக்ஸ்போஷர் என்ன ?
இது குறித்து விவரம் அறிந்தவர்கள் மேலும் பின்னூட்டத்தில் தெரிவிக்கவேண்டும். மாநிலம் தழுவிய அளவில் பிரச்சாரம் ( அல்லது தமிழக அரசே நடத்தும் பந்த் நடத்தவேண்டும் (அல்லது மம்மி ஒரு அறிக்கை விட்டால் தமிழக அரசு விழித்துக்கொண்டு செயல்படும்.).
4 comments:
அற்புதமான விஷயத்தை சொல்லிருக்கிங்க...நுழைவு தேர்வுகளை பற்றி எனக்கு தெரியாத இன்னும் சில விஷயங்களை பகிர்ந்துருக்கிங்க..
//உசிலம்பட்டியில் இருந்து மருத்துவராகவேண்டும் என்று நினைப்பவன் டெல்லியிலும் பெங்களூரிலும் இருப்பவனிடம் போட்டிபோடவேண்டும். இவன் எக்ஸ்போஷர் என்ன, அவன் எக்ஸ்போஷர் என்ன ? //
சிந்திக்க வேண்டிய விஷயம்...மத்திய அரசின் உயர்பதவிகளுக்கு இன்னும் நம்மூரு குறைவான எண்ணிக்கையில் இருப்பதற்கு இந்த கூமூட்டை அரசியல் வாதிகளின் தவறான அணுகுமுறையும் ஒரு காரணம்..தமிழக அரசின் அரைவேக்காட்டு அரசியலுக்கு இதுவும் ஒரு எடுத்துகாட்டு...
நன்றி சகோதிரி..............
'உசிலம்பட்டியில் இருந்து மருத்துவராகவேண்டும் என்று நினைப்பவன் டெல்லியிலும் பெங்களூரிலும் இருப்பவனிடம் போட்டிபோடவேண்டும். இவன் எக்ஸ்போஷர் என்ன, அவன் எக்ஸ்போஷர் என்ன ?
இதே பிரச்சனை சிறிலங்காவுல வந்ததால்தான் முப்பது வருஷம் சண்டையே நடந்துச்சு! இப்போ இந்தியாவிலுமா?
so your accepting nationwide entrance examination...( i thjink it may be crazy)..
இன்னொரு பக்கத்தில் இருந்து பார்க்கலாம்..... (not only knowledge level). எல்லா இந்தியர்களும் பணக்காரன் கிடையாது..... அவர் அவர்கள் வசதிக்கு ஏற்ப தனக்கு பக்கத்தில் இருக்கும் கல்லூரில் சேர்ந்து படிப்பது தான் அவர்களுக்கு ஏற்புடையதாக இருக்கும்... காஷ்மீரில் பிறந்த ஒருவன் கன்னியாகுமரிலும்..... குஜாரத்தில் பிறந்த ஒருவன் கொல்கத்தாவிலும் படிப்தற்கு... பணம், மொழி.... சுற்று சுழல்.... என பல காரணிகள் உண்டு.......
//இதே பிரச்சனை சிறிலங்காவுல வந்ததால்தான் முப்பது வருஷம் சண்டையே நடந்துச்சு! இப்போ இந்தியாவிலுமா?///
என் தனது உரிமைகளுக்கா மக்கள் போரட்ட கூடாது.... என்று சொல்லுறிங்கள MR . Rajeevan?????
Post a Comment