Wednesday, January 12, 2011

பொங்கலும் இன்றைய தமிழகமும்..............

பொங்கல் ஒ பொங்கல் ...........


தை பொங்கல், தமிழர்களின் திருநாளாம்,
செம்மொழி மாநாடு கண்ட தமிழ்க்கும் அதன் இனத்துக்கும் ஒரு முக்கியமான பண்டிகைதான் பொங்கல்.......

உலகத்துக்கு நன்றி சொல்லுவதும், நாமெல்லாம் வாழ்வதற்கும் வாழ்வாதாரம் மாகா இருபவருக்கு நன்றி தேர்விக்கும் நாள்ல பொங்கல் திருநாள்
முதல் வாழ்வதற சக்தி அனா சூரியனே இந்த பொங்கலின் கதாநாயகன், அதன்பிறகே பிற பூதம்கலுகு நன்றி தெரிவிக்கிறோம் (பஞ்ச பூதம்)

அதற்கு அடுத்த நாள், மாட்டு பொங்கல், மாட்டு பொங்கல் என்றால் மாட்டிற்கு மட்டும் எடுக்கும் விழா அல்ல, அன்றைய காலங்களில் ட்ரக்டர், ஹர்வேச்டோர் மிசின் இல்லாத காலத்தில் மனிதனக்கு உளவு வேலை செய்யும் மாடு, வீட்டிற்கு காவல் இருக்கும் நாய், நெல்குவியல்களை எலிகளிடம் இருந்து காபாற்றும் பூனை, இவராக நம்மக்கு உதவி செய்யும் எல்லா வகையான விலங்கிற்கும் நன்றி தெரிவிக்கும் நாளே மாட்டு பொங்கல், நீங்கள் கேக்கலாம் ஏன் மாடிருக்கு மட்டும் தனி இடம், இந்த விழாவே மாட்டின் பெயரால் என்று.........மற்ற மிருகங்களை காட்டிலும் மாடு தான் மனிதனகு பல வழிகளில் உதவிகிறது.......

உதாரணம், காளை மாடுகள் வயலில் உழுவதற்கு, பசு மாடு வீட்டிக்கு பால் குடுகிறது, அதன் சாணம் ஒரு சிறந்த கிரிமி நாசனி....... இதனால் தான் பசு மாட்டிற்கு முதல் உரிமை.............

இன்றைய இளைய தலைமுறைக்கு இப்படி சொன்னால் புரியுமா?????....... இல்லை கண்டிப்பாக புரியாது........ ஆனால் அமெரிக்காவில் கொண்டாடப்படும் THANKS GIVING DAY ......... என்று இருக்கிறது அல்லவா....... அதான் தமிழகதில் கொண்டபடும் பொங்கல் என்று கூறுங்கள்............ ஓஒ அப்படியா என்று கேட்டு விட்டு செல்லுவார்கள்...........
பாவம் அவர்களுக்கு நமது தமிழும், தமிழகதின் பெருமையும் தெரியாது, தெரியாமல் வளர்த்து விட்டோம், அல்லது ஆங்கிலம் படித்தால் தான் நாலு பேர் நம்மளை மதிப்பார்கள் என்று......... சொல்லி சொல்லி வளர்த்து விட்டோம்........... அவர்களை குறை சொல்லி என்ன செய்ய..........

முதலில் நம்மக்கு தெரிந்தால் தானே நாம் பிறர்க்கு சொல்லி குடுக்க????? நாமெல்லாம் பிறரை குற்றம் சொல்லி, அல்லது பிறர் செய்யும் தவறில், நாம் ஒட்டி தப்பித்து கொளுகிறோம், நாம், நமது வாழ்கை, நமது குடும்பம் என்று மட்டும் வாழ்ந்து கொண்டு, குண்டு சட்யில் ஓட்டும் குதிரை போல் ஆகி உள்ளோம், வெளி உலகம் தெரியாமல்....... வேல்லியர்கள் கொண்டு வந்த மெக்கலே கல்வி முறை தான் நாம் இன்றும் கற்று கொண்டு உள்ளோம்......

உலகம் வேகமாக முன்னறி கொண்டு உள்ளது, அரசியல் சாசனம், அரசியல்வாதிகளுக்கு ஏற்றது போல் மாறி வருகின்றது......... ஆனால் இந்தியர்களின் கல்வி முறை மட்டும் மாறுவதே இல்லை, எல்லோரும் குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்ட்வடற்கு இந்த அரசு மட்டும் அல்ல......... யார் வந்தாலும் இதைதான் செய்யவர்கள்......... நாமும் கண்ணை கட்டி கொண்டு.... ஆடு மந்தைகள் போல..... அரசியல்வாதிகள் போடும தாளத்திற்கு தவறாமல் நடனம் ஆடுகிறோம்......

எங்க இன்றைய சமுகம் முழித்து விடுவோமோ என்று அவர்களுக்கு கனவு உலகத்தில் மிதக்க.......... இலவச வண்ண தொலைகாட்சி பெட்டி.....ஒவ்வொரு குடும்பதிற்கும்......

சரி தொலைகாட்சி பெட்டில் அவர்கள் அறிவு சார்ந்த எதுவும் பார்த்து விடுவார்களோ என்று.........காலை 11 மணிக்கு ஆரம்பிக்கும் தொலைகாட்சி தொடர்கள், இரவு 11 மணி ஆனாலும் முடிவது இல்லை...........

இடை இடைய பாச தலைவனுக்கு பாராட்டு விழா....... தானே உக்காந்த தங்க தலைவனுக்கு பாராட்டு விழா.. என்று எதற்கு பார்தாலும் ஒரு பாராட்டு விழா......... அதையும் அவர்கள் தொலைகாட்சி களில் அடிக்கடி போட்டு மக்களை.. தலைவன் என்று ஒத்து கொள்ள வைக்கும் ஒரு முயற்சி...........

எனக்கு பயமாக இருக்கிறது இன்னும் சிறிது காலம் போனால்... வள்ளுவருக்கு அடுத்த படியாக முத்தமிழ் வளர்த்த..... முத்தமிழ் கலைஞர் என்று கூறி விடுவார்களோ என்று...........

sun tv, kalainger tv, k tv, jeya tv, jeya plus, raj tv, தினகரன், மாலைமுரசு, ஹிந்து, தினமலர் , இது போன்ற ஒரு குடும்ப கதைகளை மற்றும் தரும் ஊடகங்களை ஒதுக்கி விட்டு.... உண்மையான செய்திகளை அறிந்து தெரிந்து கொள்ளும் மனபக்குவம் வரும் வரை..............

இந்த தமிழர்கள் உருப்பட போவது இல்லை....................

9 comments:

THOPPITHOPPI said...

//எனக்கு பயமாக இருக்கிறது இன்னும் சிறிது காலம் போனால்... வள்ளுவருக்கு அடுத்த படியாக முத்தமிழ் வளர்த்த..... முத்தமிழ் கலைஞர் என்று கூறி விடுவார்களோ என்று........... //

இதில் என்ன சந்தேகம் கண்டிப்பா சொல்லுவானுங்க

உங்களுள் ஒருவன் said...

நன்றி நண்பர........

sathya said...

தொன்று தொட்டு வந்த தமிழர் புத்தாண்டை , தன்னுடைய வீண் புகழுக்காக மாற்றிய அரசுக்கு ஒரு ஜே........

sathya said...

தங்களுக்கு விவரம் தெரியாமைக்கு வருந்துகிறேன் ... கலைஞரும் வள்ளுவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் ...... திருக்குறளுக்கு எழுத்து பிழை திருத்தம் செய்த பெருமை நம் முதல்வரையே சேரும்......மேலும் விவரங்களுக்கு சன் செய்தியை பாருங்கள்.....

உங்களுள் ஒருவன் said...

தவறு நண்பரே..... கலைஞர் செய்திகள் பார்க்க வேண்டும்.............

sathya said...

குடும்ப தொலைகாட்சியில் இவளவு குழப்பமா.... ? நல்ல குடும்பம் ..........

Madhu said...

சத்யா,
கருணாநிதி செய்த ஒரே நல்ல காரியம் புத்தாண்டை தை திருநாளாக அறிவித்தது தான். சித்திரை முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடும் பழக்கம் பார்பனர்கள் உருவாக்கியது.

ஆனந்தி.. said...

//சரி தொலைகாட்சி பெட்டில் அவர்கள் அறிவு சார்ந்த எதுவும் பார்த்து விடுவார்களோ என்று.........காலை 11 மணிக்கு ஆரம்பிக்கும் தொலைகாட்சி தொடர்கள், இரவு 11 மணி ஆனாலும் முடிவது இல்லை........//

ஆதங்கம் உண்மை சகோதரா...பண்டிகை நாட்களில் எல்லாம் தொலைகாட்சியோடவே மாரடித்து உண்மையான பண்டிகை சந்தோஷங்களை இழந்து கொண்டு இருக்கிறோம்....

(சகோ..நாளை பொங்கல் கொண்டாட ஊருக்கு செல்கிறோம்...பொங்கலோ பொங்கல் உங்களுக்கு...)

உங்களுள் ஒருவன் said...

உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்........... நானும் எனது சொந்த ஊருக்கு சென்று இருந்ததால்.... உடனடியாக மறு பின்னோட்டம் இட முடியவில்லை..........

Post a Comment