Tuesday, March 13, 2012

தமிழனுக்கு மானம் இருகிறதா??????

ஐ நா வின் கூட்டத்தில் நடக்க இருக்கும் இலங்கை க்கு எதிரான வாக்கு எடுப்பில் இந்தியா என்ன செய்ய போகிறது?????? தமிழர்களை கண்டால் பிடிக்காத இந்த கேடு கேட்ட காங்கிரஸ் செய்யும் பெரிய காரியம் இந்த வாக்கு எடுப்பில் கலந்து கொள்ளாமல் இருப்பது மட்டுமே......

என் என்றால் இப்பொழுது இந்தியாவிற்கு தேள் கொட்டினது போல் தான்...... கத்தவும் முடியாது கத்தாமல் இருக்கவும் முடியாது..........

இந்தியா இலங்கைக்கு அதரவாக செயல் பட்டாள் அவர்களும் இந்த தமிழ் மக்களின் படுகொலையில் பங்கு இருக்கிறது என்று..... அப்படி இல்லாமல் இலங்கைக்கு எதிராக செயல் பட்டாள் இலங்கை இந்தியா வை காட்டி குடுத்து விடும் ..... என்னவே இப்பொழுது இந்தியா இரு தலை கொல்லி எறும்பாக தவித்து கொண்து இருக்கிறது..... இன்னொரு பக்கம் காங்கிரஸின் செல்வாக்கு இந்தியா முழவதும் குறைந்து கொண்டு இருக்கிறது சமிபத்திய தேர்தல் இதற்க்கு எடுத்து காட்டு....

இந்த நேரத்தில் தமிழ் நாட்டில் உண்மையுள் நாம் என்ன செய்ய வேண்டும்... ஐ நா வில் நடக்க இருக்கும் வாக்கு எடுப்பில் இந்தியா இலங்கைக்கு அதரவாக செயல் பட கூடாது என்று போரட்ட வேண்டும்........இந்தியாவிற்கு அழுத்தம் குடுக்க வேண்டும், நான் எதோ இந்தியாவை முன்றாம் நபராக பார்பதாக நீங்கள் என்ன வேண்டாம்.... நான் இந்தியவை எதிர்ப்பவன் அல்ல.... தமிழர்களை திரோகியாய் பார்க்கும் இந்த காங்கிரேசை தான் எதிர்கிறேன்.... இலங்கையுள் தமிழர்களை படுகொலை செய்யும் பொது அவர்களுக்கு ஆயுத உதவி செய்தது இந்த காங்கிரஸ் தான்..... தமிழ் மீனவர்களை இலங்கை ராணுவம் கொல்லும் போதும் சரி வாய் முடி இருந்தவர்கள் தானே இவர்கள், எங்கோ இருக்கும் சோமாலிய கடல் கொள்ளைகரர்களை பிடிக்கும் நமது கடலோர காவல் படை என்னோ தமிழ் மீனவர்கள் தாக்க படும் போதும் எங்கு போனார்கள் என்று தெரிய வில்லை.....

இன்னும் கூட தமிழகத்தில் இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் மற்றும் தமிழ் இன கொலைகளை பற்றி தமிழகத்தில் பேச எந்த அரசியல் கட்சியும் முன் வரவில்லை.... எதோ சில அரசியல் சாராத இயகங்கள் அப்பொழுதில் இருந்து போராடி கொண்டு தான் இருக்கிறது.... அனால் தமிழகத்தில் பெரிய அரசியல் கட்சிகள் அனைத்தும் அரசியல் நோக்கதிருக்கு மட்டுமே இதை பயன் படுத்தி கொண்டு இருக்கிறார்கள்...... திமுகவோ காங்கிரஸின் அடி வருடியாக இருந்ததது.... ஆதிமுகவோ அவர்கள் அப்பொழுது ஆட்சியுள் தான் இல்லை என்று பார்த்தல்.... அவர்கள் தமிழகத்தில் கூட இருந்தாக தெரிய வில்லை..... அனால் தேர்தலுக்கு முன்னால் ஒரு நான்கு மாசம் மட்டும் பிரசாரம் செய்து வென்று விட்டார்கள்..... இப்பொழுது அவர்களும் இவர்களை போல கடிதம் மட்டுமே எழுதி வருகிறார்கள்.

இப்பொழுது காங்கிரஸ் எல்லா மட்டத்திலும் அடி பட ஆரம்பித்தவுடன் அதன் அடிவருடியாக இருந்த திமுகா இப்பொழுது முழித்து கொண்டு இலங்கையுள் நடந்த போர் குற்றம் குறித்த சேனல் 4 ஆவன படத்தை கலைங்கர் தொலைகாட்சி யுள் ஒலிபரப்புகிறார்கள். அவர்கள்ளிடம் கேட்க நினைப்பது ஒன்று தான்.... 2009 இல் என்ன ______ பண்ணிக்கிட்டு இருதிங்க??????? அப்பொழுது நடந்த நாடகங்கள் நாம் கண்டிப்பாக மறக்க கூடாது.

நாம் பழைய கதைகள் பேசி கொண்டு இருப்பது பயன் அல்ல.... இனிமேல் என்ன செய்ய வேண்டும் என்று பார்போம்..... இப்பொழுது ஒரு முக்கியமான தருணத்தில் இருக்கிறோம். இப்பொழுதாவது என் தமிழ் இன சொந்தங்களுக்கு நடந்த கொடுமைகளை அனைவர்க்கும் கொண்டு சேர்க்க வேண்டும்... இந்தியா இலங்கைக்கு அதரவாக ஐ நா சபையில் வாக்கு அளிக்க கூடாது.. channel 4 இல் வெளியான கொலை களம் புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களை அன்னைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.... தமிழ் ஈழத்தில் நடந்த வன் கொடுமைகளை பற்றிய தெரிதல், அது பற்றிய புரிதல்கள் அனைவரும் பெற வேண்டும்... அதற்கு நாம் அனைவரும் கண்டிப்பாக பாடுபட வேண்டும்... முத்துகுமரன் மரண வாக்குமுலம் அனைவரும் படிக்கச் வேண்டும்.....

இப்பொழுதாவது என்னது மானம் உள்ள தமிழ் இனம் முழித்து கொள்ளுமா என்ற நப்பாசை இல் உங்களிடம் புலம்பும் உங்களில் ஒருவன்........

2 comments:

pavithala said...

tamizhanukku maanam nichayam irukkirathu enbathai nirubippom!!!!

Vsmani Mani said...

thanmana thamilan ...than manathai patri mattum ninaippavan machchanum mapplliyum sandai.. erindha tho moondru elam kani poriyalarhal ...Madurai sambavam..maman machchan ..?.nalame.. .Kaniyai siraiyil adaithathum nithiin payanam palamurai thslsi nsgsrukku .....THANMANATH TAMILANAIYA...PATRI ERIYUTHU ADIVAYETRIL THAMILANATIL VASIKKUM ITH THELUNGANUKKU ...TAMILAMUKKUM..ELMO MEENAVANO ;.THANNALAMATRA TAMILANI THEDI POOTHU VITANA KANGAL./

Post a Comment