Thursday, August 16, 2012

டெசோ வின் பின்னணி... ஒரு பார்வை

Tamil Ealem Supportes Organinsation (TESO - டெசோ) இப்பொழுது எங்கு பார்க்கினும் இதை பற்றி தான் பேச்சு.... சன் டிவி மற்றும் அதன் குழும தொலைகாட்சிகள்அனைத்திலும் எதோ பெரிய வெற்றி கிடைத்தது போல இந்த மாநாடு நடத்த கிடைத்த தீர்ப்பு எதோ அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றது போல கூறி கொண்டு இருக்கிறார்கள்....

2009 இல விடுதலை புலிகள் தோற்கடிக்க பட்ட பொது... தமிழகத்தில் பல பேர் புர்ரீசல்கள் போல தமிழ் ஈழம், விடுதலை புலிகள், பிரபாகரன், போராட்டம். என பல பேர்கள் இதை பற்றி பேசினார்கள்... நமது சமுதயாடிற்கே உரியதான நியாபக மறதி வியாதியால் அதை மறந்தும் விட்டோம்.... அனால் தற்பொழுது திரும்பவும் வந்து இருக்கிறது டெசோ என்ற பெயரில்...

இலங்கையில் என் தமிழ் இன மக்கள் அழிக்கப்பட்டு சரியாக முன்று ஆண்டுகளுக்கு பிறக்கு இப்பொழுது மிண்டும் தலையெடுத்து இருக்கிறது இந்த டெசோ.. டேசொவுக்கு தலைமை தாங்கும் இன் இந்த கருணாநிதி யார்??

தமிழ் இன மக்களின் காவல் தெய்வம், அபத்தந்தாண்டவன், என்று தன்னை தானா கூறி கொள்ளும் ஒருவன்.... இவன் உண்மையுள் 2009 க்கு முன் இறந்து இருந்தால் உண்மையுள் இந்த உலகம் மட்டும் அல்ல நானும் அப்படி தான் சொல்லி இருப்பேன்..... ஆனால் இப்பொழுது தமிழ் இனத்தின் துரோகியாக மட்டுமே என்னக்கு தெரிகிறான்... என்னது தமிழ் இன மக்கள் அங்கு கொத்து கொத்தாக கொல்ல பட்ட பொது இங்கு காலை சிற்றுண்டி பின் மதிய உணவுக்கு முன் தனது உண்ணாவிரத்த போராட்டத்தை முடித்த கொண்ட உத்தமன் தான் இந்த கருணாநிதி....


இந்த கருணாநிதி இன் அரசியல் வரலாற்றை கொஞ்சம் திரும்பி பார்போம்.... எப்பொழுது எல்லாம் திமுக சரிவை நோக்கி போனதோ அப்பொழுது எல்லாம் இந்தி எதிர்ப்பு என்ற தந்தை பெரியாரின் வாதத்தை முன் வைத்து அரசியல் பண்ணினார்.... இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழக வரலாற்றை மற்றும் அல்ல இந்திய வரலாறை கூட திரும்பி பார்க்க வைத்தது.... இது போன்ற பல போராட்டங்கள் திமுகவுக்கு வெற்றியை பெற்று தந்தாலும் இந்த TESO போராட்டம் பெயரளவில் வேணும் என்றால் வெற்றி பெறலாம்.... ஆனால் மக்கள் மத்தியுள் கண்டிப்பாக வெற்றி பெறாது.....


டெசோ உருவான விதம்:

1984 & 1985 தொடக்கத்தில் LTTE பிரபாகரன் தமிழ் ஈழ போராட்டத்துக்கு நிதி சேகரிக்க தமிழ் நாட்டுக்கு வந்து இருந்த சமயம், அப்பொழுது தமிழக முதல் அமைச்சராக இருந்த MGR தமிழக மக்களிடம் இருந்து ஒரு கோடி பணம் வசூலித்து குடுக்க இருந்தார், ஆனால் அப்பொழுதும் மத்திய அரசு நெருக்கடி காரணமாக்க எம்ஜிஅர் பழ. நெடுமாறன் இடம் குடுத்த மக்கள் பணத்தை வாங்கி விட்டு.. தனது சொந்த பணம் ஒரு கொடியை குடுத்து தனது சொந்த காரிலிய அனுப்பியும் வைத்தார் அது தனி கதை..

.

ஆனால் அதே நேரம் எதிர்கட்சி தலைவராக இருந்து கருணாநிதியும் LTTE மற்றும் இதர போரட்ட குழுக்கள் அனைத்தையும் கூட்டி ஒரு meating க்கு ஏற்பாடு செய்தார்.... ஆனால் LTTE ஏற்கனவே எம்ஜிஅர் இடம் வருவதாக ஒப்புக்கொண்டு உள்ளதால் பிரபாகரன் செல்ல வில்லை.. அவரின் சார்பாக இருவரை அனுப்பி வைத்தார்.... அவர்களுக்கு கருணாநிதி ரூபாய் 15,000/- கூடுக்கிறேன் என்று கூறினர்.. ஆனால் அதை LTTE ஏற்கவில்லை...

இதனால் மனகசப்பு அடைந்த கருணாநிதி LTTE க்கு எதிராக ஒரு இயக்கத்தை தமிழகத்தில் உருவாக்க நினைத்து Tamil Eelam Liberation Organization (TELO - டெலோ) இந்த இயக்கமும் முதலில் LTTE போல ஒரு ஆயுதம் தாங்கிய போரட்ட குழு வாகத்தான் இருந்தது... அதன் பிறக்கு விடுதலை போராட்டத்தை முன் எடுத்த செல்ல LTTE தனது சிந்தனை உடன் ஒத்த கருத்து உடைய பிற போராட்ட குழுக்களை அளித்து தான் மட்டும் விடுதலை போரட்டத்தை முன் எடுத்து சென்றது.... அந்த நேரத்தில் டெலோ உன் அளிக்க பட்டது, டெசோ உம் தான்.. மிஞ்சி இருந்த டெலோ உறுப்பினர்கள் அரசியலில் இறங்கி விட்டார்கள். கடந்த 2010 இலங்கை பார்லிமென்ட் தேர்தலில் டெலோ உறுபினர்கள் இரண்டு பேர் தேர்ந்து எடுக்க பட்டு இருக்கிறார்கள்....


இப்பொழுது திரும்பவும் டெசோ வை கையில் எடுத்து இருக்கிறார் கருணாநிதி இது கண்டிப்பாக தமிழ் ஈழ மக்களின் நலனுக்காக எடுக்க பட வில்லை.. இது அவரின் சொந்த அரசியல் நலனுக்காக மட்டுமே திரும்பவும் உருவாக்கி இருக்கிறார் இவர்.

நமது சமுதாயத்திற்கு உரியதான நியாபக மறதி, நமது முதலமைச்சர் ஜே வின் பாணியில் சொன்னால் Selective Amnesia. அவரின் பழைய கபட நாடகங்களை எல்லாம் மறந்து தமிழ் ஈழடிற்காக யாரு போராடினாலும் நாம் ஆதரவு தெரிவிப்பது வழக்கமாக்கி விட்டது..... சனியன்னால நல்லது நடத்த சரி தான்.... இந்த மாநாட்டை ஈழ ஆதாரவாளர்கள் சீமான், பழ. நெடுமாறன், வைகோ என யாரும் ஆதரவு தெரிவிக்க வில்லை. என்பது குடுதல் செய்தி...


எது எப்படியோ இந்த போராட்டத்தில தமிழ் ஈழ மக்களுக்கு நல்லது நடக்குமாயின் எல்லாம் நன்மைக்கே....

இப்படி க்கு.... ஈழ போராட்டத்தில் அண்ணன் பிரபாகரன் லட்சிய கனவோடு.... நான் உங்களுள் ஒருவன்

6 comments:

Unknown said...

எங்கள் கலைஞர் அவர்களை அவன் இவன் என்று எழுத நீ யாருடா மானம் கெட்டவனே அவரை பற்றி பேச எழுத நீ என்ன பூடிங்கியா சீமான் எப்போ வந்தான் சினிமா காரனை பின் பற்றும் உன்னை என்ன சொல்வது என்று தெரியவில்லை போடா தே..................னே

உங்களுள் ஒருவன் said...

வாங்க அன்பு சார்.... நா உங்களை தான் இவ்ளோ நாலா தேடிகித்து இருந்தேன்..... அந்த கட்டுமரம் என்ன செய்தாலும் நம்புவின்களா.... 2009 ல ஈழ தமிழர்கள் கொல்லப்பட்டபோது இங்கு உண்ணாவிரதம் மற்றும் கடிதம் எழுதிவர், அவரது மகள். பேரனுக்கு cabinet minister பதவி வேண்டும் என்பதிரகாக டெல்லி க்கு சென்று சோனியா க்கு சலாம் போட்டவர் தானே இவர்...
ஐயா நா இங்கு கூறி இருப்பவை அனைத்தும் வரலாற்று உண்மைகள்.... கொஞ்சம் திரும்பி பாருங்கள்.....
நான் வேறு யாரும் அல்ல... உங்களுள் ஒருவனாக நின்று இந்த சமுக அவலங்களை பார்த்து கோந்து இருக்கும் ஒரு வழிபோகன்....

Unknown said...

தமிழர்கள் 2009 முதல்வராக கலைஞர் அவர்கள் இருந்த போது சட்டமன்றத்தில் போட்ட தீர்மானங்கள் எத்துனை அதற்கு தமிழ் ஆதரவாளர்கள் என்று கூறிக்கொள்ளும் சைகோ கீமான் தொடுமாரன் உங்கள் அன்புக்குரிய ஈழத்தாய் ஜெயா ஆகியோர்கள் அதை கபட நாடகம் என்று கூறி அதிலே பங்கெடுக்க மறுத்து விட்டார்கள் ஒரு இனத்தை காப்பற்ற ஒருவர் மட்டும் முயன்றால் முடியாது ஓசை இரு கைகள் தட்டினால் தான் வரும் அது போல் நமக்கு சகோதர யுத்தம் வந்ததால் தான் தமிழர்களுக்கு சோதனையும் அழிவும் ஏற்பட்டது என்பது வரல்ற்று உண்மை 80களில் இன படுகொலை நடந்த போது தலைவர் கலைஞர் அவர்களின் போராட்டம் எந்த அளவுக்கு இருந்தது ltte ஆதரவு நிலைக்காக இரண்டு தடவை ஆட்சியை இழந்தார் 91ல் ராஜீவ் கொல்லப்பட்டபோது கொலை பழி அவர்மேல் சுமத்தப்பட்டது அதையே பிரச்சாரமாக செய்து ஈழத்து ராணி ஜெயா அனுதாப முதல்வரானார் அதெல்லாம் உனுக்கு எங்கே தெரியபோகுது உங்களை போன்றவர்கள் தமிழ் நாட்டில் இருக்கும் போது எப்படி தமிழனுக்கு விடிவு காலம் பொறக்கும் கலைஞர் எதை செய்தலும் குற்றம் சொல்லும் உங்களுக்கு ஒரு பழ மொழி தான் "மஞ்சள் காமாலை கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சளாகதான் தெரியும்"

உங்களுள் ஒருவன் said...

அன்பு சார்.. எப்படி சார் இப்படி வேலேன்தியா இருகிங்க ????? 2009 ல அப்படி அவரு என்ன என்ன சட்டமன்ற தீர்மானங்கள் போட்டார்.. எத்தனை முறை அவரு பிரதமருக்கு கடிதம் எழுதினார், என்ன என்ன போராட்டம் நடத்தினார் என்பது அன்னத்தையும் யாம் அறிவாம்....

சார்.. விஜய கிண்டல் அடித்தால் அவன் அஜித் ரசிகன்
ஹிந்துவ அடித்தால் அவன் முஸ்லிம்
உங்க கருணாநிதிய கிண்டல் அடித்தால் அவன் அம்மாவின் விசுவாசிய???
ஏன் சார், ஒரு விக்ரம் ரசிகனகொவா, கிறிஸ்டின் ஆகவோ, விஜயகாந்த் கட்சியை சார்ந்தவனகவோ இருக்க குடாத???? எப்போ சார் இந்த கனனம்முச்சி விளையாடிக்கிட்டு இருபிங்க??? நான் கருணாநிதியை கிழித்ததை விட அதிகமாக அம்மா வை கிழித்து இருக்கிறேன்... என்னது முந்தைய பதிவுகளை படித்தால் உங்களுக்கே தெரியும்....
ஐயா 2009 வரைக்கும் நானும் திமுக தான்....

Unknown said...

நீ தி மு க காரணக இருக்கவே முடியாது காரணம் கலைஞர் அவர்கள் ஈழ தமிழர்களுக்காக செய்த தியாகத்தை கொச்சை படுத்தி எழுத முடியாது ஒரு மாநிலத்தின் முதல்வர் வெளி நாட்டு பிரச்சனையில் எந்த அளவுக்கு அழுத்தம் தரமுடியும் என்ற சட்ட பிரச்னை உள்ளது அதற்குள் தான் தரமுடியும் அப்படி பார்த்தால் ஒரு மாநில முதல்வருக்கு எந்த அளவு அதிகாரம் உள்ளதோ அந்த அதிகாரத்தை பயன் படுத்தினார் என்றே நான் நினைக்கிறன். தமிழகம் இந்தியாவின் ஒரு அங்கம் இந்திய வெளியுறவு கொள்கையை மதித்து நடக்க வேண்டியது ஒவொரு இந்தியனின் கடமை. அப்படி பார்த்தால் கலைஞர் அவர்கள் ரகசிய காப்பு பிரமாணத்தின் படி இந்திய சட்டத்திற்கு கட்டுப்பட்டுதான் ஆகவேண்டும் அதையும் மீறி சட்டமன்ற தீர்மானங்கள் மனித சங்கிலி தமிழ்நாடு பந்த் உன்னவிருத போராட்டம் நடத்தினார் அனால் எந்த ஒரு பதவியும் இல்லாத சைகோ கீமான் தொடுமரன் தா பா போன்றவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டியதுதானே. நீங்கள் கேட்கலாம் மத்திய அரசிலிருந்து விலகி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்திருக்கலாம் என்று அன்றய நிலையில் ஈழத்தமிழ் ஆதரவாளர் என்று மார் தட்டிக்கொள்ளும் புடிங்கிகளும் அதரவு தரவில்லையே. மத்திய அரசிலிருந்து விலகி வந்து தனியாக போராட்டத்தை முன்னெடுத்து செல்ல முடியுமென்றாலும். இங்கே இருக்கிற அ தி மு க காங்கிரசுடன் கை கோர்த்து போராட்டத்தை நசுக்க முயற்சி செய்து அதில் வெற்றி கண்டு விடகூடாது என்ற ராஜதந்திர முடிவுடந்தான் கலைஞர் மத்திய அரசில் இருந்து கொண்டே அழுத்தம் கொடுக்க விரும்பினார் அதனால்தான் அரசில் இருந்து விலக வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டதாக தான் நான் பார்கிறேன். எல்லா பதிவர்களும் கலைஞர் அவர்களை குற்றம் சாட்டுகிறார்கள் விடுதலை புலிகளுக்குலே சகோதர யுத்தம் ஒன்று நடந்ததால் தான் கருணா என்ற கயவன் கட்டிக்குடுக்கும் எட்டப்பனணன். தமிழ் சகோதரர்களை கொன்றவர்கள் அவனையும் கொன்று போட்டிருந்தால் விடுதலை புலிகளுக்கு இந்த அழிவு ஏற்பட்டிருக்காது உன் உள்ளதை தொட்டு கேட்டுப்பார் சகோதர யுத்தம் ஒன்று நடந்திருகவிட்டால் தமிழீழம் என்றோ கிடைத்திருக்கும். அதே சகோதர யுத்தத்தை தமிழ்நாட்டிலும் ஏற்படுத்த வேண்டாம் என்று என் வயதில் சிறியவனாக நீ இருந்தாலும் உன் பாதம் பணிந்து கேட்டுகொள்கிறேன். "ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்" என்ற பழமொழி ஈழதோல்விக்கு கண்டிப்பாக பொருந்தும்.எது எப்படி இருந்தாலும் நமக்குள் பகைமை பாரட்டமால் தமிழர்களான நாம் அனைவரும் ஒன்றுபட்டு "ஊர் கூடி தேர் இழுத்தல் வந்து சேரும்" என்ற வரிகளை மனதிலே வைத்து அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒரே குரலாய் மத்திய அரசை வற்புறுத்தி தமிழீழம் அமைய பாடுபடவேண்டும் கலைஞர் அவர்களின் கனவு நினைவாக்குவோம். மறபோம் மன்னிபோம் என்ற எண்ணத்துடன் நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும் நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். வாழ்க கலைஞர், வளர்க தமிழ், அமையட்டும் தமிழீழம், வளரட்டும் இந்தியாவின் ஒற்றுமை, ஒரே எண்ணம் ஒரே மனதோடு நமது அண்டை நாட்டில் சகோதர உள்ளத்துடனும் சமாதான எண்ணத்துடனும் சுதந்திர கற்றை சுவாசிக்க நம்மால் முடிந்த உதவியுடனும் சுதந்திர என்னத்தை ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் உன்றும் விதையாக உங்கள் பதிவுகள் இருக்கட்டும் நன்றி வணக்கம்.

Nalliah said...

தனி நாட்டுக்கான தமிழீழப் போராட்டத்தில் மனித உயிர்களுக்கும் சாதாரண பொது மக்களுக்கும் எந்தவித மதிப்பும் கொடுக்கப்படவில்லை.

பிணக்கணக்கு காட்டியே அரசாங்கமும் போராட்ட இயக்கங்களும் தமக்கான பிரச்சாரங்களை முன்னெடுத்தன.

இதுதான் தமிழீழப் போராட்டம் வெற்றிபெறாது போனதுக்கு அடிப்படைக் காரணம்.

பொருளீட்ட முயற்சி இல்லாதவனால் வெற்றிகரமாக வணிகம் செய்ய முடியாது. அதே போல மக்களை மதிக்காத மனித உயிர்களை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காத நபர்களால் விடுதலைக்கான ஒருபோராட்டத்தை வழி நடாத்த முடியாது.

நீதிமன்றங்களால் வழங்கப்படும் கோரக் கொலையாளிகளின் மீதான மரண தண்டனைகளையே தடுப்பதற்கு நாகரிகம் அடைந்த மனித சமுதாயம் போராடிவரும் இன்றைய கால கட்டத்தில் ஆயிரக்கணக்கில் அப்பாவி மனித உயிர்களைப் பலியெடுத்து எதுவுமே சாதிக்க முடியாது.

கத்தி எடுத்தவன் கத்தியாலேயே சாவான் என்பது முதுமொழி. கடந்த 41 வருடங்களில் நமது நாட்டில் சகல இனத்தவரும் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இக்கொலைகளுக்கு அரசாங்கங்கள் மட்டுமல்ல ஆயுதம் ஏந்திய இளைஞர்களும் அவர்களை வழி நடாத்தியவர்கள் பொறுப்பாளிகள்.

எந்த நாட்டை ஆளும் அரசாங்கமும் தமக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடுபவர்களை கைது செய்வதும் சுற்றி வளைத்து தாக்கிக் கொல்வதும் சட்டபூர்வமான விடயங்களே. அதற்காகத்தான் முப்படைகளையும் வைத்திருக்கின்றன.

ஆயுதம் ஏந்திய சிங்கள, தமிழ் மற்றும் வஹாபி முஸ்லீம்கள் இலங்கையில் ஆயிரக்கணக்கான கோரக் கொலைகளை மட்டுமல்ல படு மோசமான சித்திர வதை முகாம்களை நிர்வகித்து ஆயிரக் கணக்கில் எழுத்தில் வடிக்க முடியாத அளவுக்கு சித்திரவதை செய்து கொன்று புதைத்தனர்

அரசாங்களில் பதவி வகித்தவர்களில் இருந்து ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் வரை அனைவரும் நமது நாட்டில் பிறந்து நமது நாட்டில் வளர்ந்த எங்கள் சமூகத்தினால் உருவாக்கப்பட்டவர்களே

நாங்கள் அனைவரும் எம்மை ஒருகணம் திரும்பிப் பார்க்க வேண்டும்.

ஏன் எங்களுக்கு இந்தக் கொலை வெறி?

Nalliah Thayabharan

Post a Comment