Wednesday, November 21, 2012

ஜாதிகளிடம் இருந்த ஒழிய வேண்டும்.


நெடும் நாட்களாக சமுதாயம் பற்றி பதிவு எழுதவ இல்லை. சரி சமுதாயத்தில் பிரச்சினைகளே இல்லை என்று சொல்ல முடியாது.. இப்பொழுது எனக்கு நேரமும் கிடைத்து விட்டது. எழுதுவதற்கு டாப்பிக் கும் கிடைத்து விட்டது...

கடந்த மாதம் ஜாதிகள் மாதம் என்று சொன்னால் மிகை ஆகாது.. அந்த அளவுக்கு ஜாதிகள், மதம். என்று எங்கு பார்த்தாலும் இந்த பிரச்சினை தான். சரி அதை நமது பாணியில் கொஞ்சம் அலசலாம்.

  • தருமபுரி ஜாதி திருமணம் •
  • Splendor IYER •
  • விஸ்வரூபம் / துப்பாக்கி சர்ச்சை •
  • சின்மயி / பிராமணாள் காப்பே.

1. இந்த நூற்றாண்டில் நடந்த மிக பெரிய கோரம், இலங்கைக்கு அடுத்தது. இலங்கையில் கூட சிங்களன், தமிழன் என்று தான் வேறுபாடு. ஆனால் இங்கு ஜாதியின் பெயரில் இவ்ளோ நாட்களாக சகோதர்களாக ஒன்றாக ஒரே கோவிலுக்கு ஒன்றாக சென்றவர்கள், ஒரு காதல திருமணம், அதனால் ஏற்பட்ட மனக்கசப்பு, சில கிராமங்களை முழுதுமாக எரித்து அவர்களை பொருளாதார அடிபடையில் பின்னுக்கு தள்ளி, அவர்களின் வாழ்வாதாரங்களை அழித்தனர்.

தமிழகத்தில் பெரியார் உட்பட அனைவரும் கலப்பு திருமணம், ஜாதி ஒழிப்பு, தீண்டாமை என்று எத்தனை இயங்கங்கள் வந்தாலும், போராட்டம் செய்தாலும் இது போன்ற சில அயோக்கிய தனங்கள் அரங்கேறிகொண்ட் தான் இருக்கின்றன. ட்விட்டரில் ஒரு நண்பர் ஒரு ட்வீட் போட்டு இருந்தார், “ஒரு தமிழன் ஒரு தமிழச்சியை கட்டுவதில் என்னையா கலப்பு திருமணம்.” கலப்பு திருமணம் என்ற பேச்சில் கூட இரண்டு ஜாதிகள் என்று வந்து விடுகிறது. அதற்கும் ஒரு படி மேல் போய் அவர் கூரிய வசனம் சக்தி வாய்ந்தகவே நான் கருதுகிறேன்.

2. ஒரு இரு சக்கர வாகனத்தின் விளம்பரம். இணையம் முழவதும் தீ போல பரவியது. அந்த விளம்பரத்தின் கான்செப்ட் என்று பார்த்தால், அந்த வாகனமும் அவர்கள் குடும்பத்தில் ஒருவராகக் மாறி விட்டது என்று தான் அவர்கள் கூற வந்தது. ஆனால் அவர்கள் அதுக்காக பயன்படுத்தியது ஒரு ஜாதியின் பெயர், அங்கு தான் சர்ச்சைய வந்தது.

இணையத்தில் உள்ள பேச்சு உரிமை, கருத்து சுதந்திரம் தான் இதற்கு வித்துதிட்டது. இணையத்தில் நமது சகதோரர்கள் மற்றும் தோழர்கள். குடுத்த tweet, status, mention இணையத்தில் பெரும் புரட்சி போல் பரவி, இரண்டு நாட்களில் அந்த விளம்பரம் நிக்க பட்டது, தமிழகம் தவிர பிற மாநிலத்தில் அங்கு உள்ள உயர் ஜாதியின் பெயரால் தான் அந்த விளம்பரம் இன்று வரை அப்படியே தான் இருக்கிறது. தமிழகத்தில் பெரியாருக்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும்.

3. சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவணம் ஒரு வீடியோ காட்சியை youtube இல் வெளியீடு செய்தது. அதில் நபிகள் நாயகம் பற்றி சில்ல தவறான கருத்துகள், சில தவறான செய்திகள் அதில் இடம் பெற்றது. அதில் இருந்தது கொதித்து போன நமது முஸ்லிம் நண்பர்கள் போராட்டதில் இறங்கினர், அது வன்முறை கலந்த போராட்டமாக தான் இருந்தது, ஆனால் தருமபுரி போல் அல்ல.

நமது இந்திய கலாச்சாரத்தில் முஸ்லிம் என்றால் தீவிரவாதி என்று காந்தி காலத்தில் இருந்தது அந்த கருத்தை இந்தியர்கள் மனதில் திணித்து விட்டார்கள். அதன் வெளிப்பாடு முஸ்லிம் என்றால் தீவிரவாதி என்று எல்லாரும் நினைக்கும் நிலை வந்து விட்டது. அதைய நமது இந்திய சினிமாவும், தமிழ் சினிமாவும் தீவிரவாதிகள் என்றால் முஸ்லிம் என்று சொல்ல ஆரம்பித்தது விட்டார்கள்.

இப்பொழுது தான் நமது முஸ்லிம் நண்பர்கள் முழித்துக் கொண்டு இனி தமிழ் சினிமாவில் முஸ்லிம்கள் தீவிரவாதிகளாக கட்டினால் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்று முடிவு செய்து கொண்டனர், அப்பொழுது தான் நமது கமலின் விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம் தீவிரவாதம் பற்றி வருவது போல் டிரைலர் அமைந்ததால் அந்த படத்தை முஸ்லிம்களுக்கு போட்டு காட்டிய பிறக்கு திரை இட வேண்டும் என்றனர். துப்பாக்கியும் அதே தான்,

நமது கமலின் பாணியில் சொல்ல வேண்டும் என்றால், முஸ்லிம் அனைவரும் தீவிரவாதிகள் கிடையாது, தீவிரவாதிகள் பலே பேர் முஸ்லிம் களாக இருக்கிறார்கள்.

தசாவதாரம் படத்தில் பல்ராம் நாய்டு கூறுவார் ஓஒ!!! முஸ்லிம் அப்போ எல்லாரும் terrorist எல்லாத்தையும் விசாரணை செய்ய வேண்டும், ஆனால் அதே படத்தில் கலிபுல்லா கான், முஸ்லிம் மிகவும் நல்லவர். உன்னை போல் ஓருவன் படத்தில் தீவிரவாதிகளை கொல்ல வேண்டும் என்று நினைக்கும் ஒரு பொது ஜனம், The Common Man (கமல்) ஒரு முஸ்லிம். கடைசி கட்டத்தில் அவர்களை என்கௌண்டேர் செய்யும் இரண்டு போலீஸ் அதிகாரிகளில் ஒருவர் முஸ்லிம். ஆனால் விஜயின் துப்பாக்கி படத்தில் முஸ்லிம்கள் அனைவரையும் தீவிரவாதிகள் போல் காட்டி இருப்பார்கள் அங்கு தான் பிரச்சினை. படத்தில் விஜயின் நண்பர் சத்யன் கேரக்டர் ஒரு முஸ்லிமாக இருந்தால் கண்டிபாக்க எந்த பிரச்சினை உம் வந்து இருக்காது.

நாம் அனைவரும் ஆயுதம் எடுதவனை திவிரவாதி என்கிறோம். மக்களே சற்று சிந்தித்து பாருங்கள். அவன் ஆயுதம் எடுபதற்க்கு யார் காரணம், அவனுக்கு யார் முதலில் ஆயுதம் குடுதார்கள் என்று பார்த்தால் யார் உண்மையுள் தீவிரவாதி என்று தெரிந்து விடும்.

4. சின்மயி, தமிழகத்தில் இருக்கும் ஒரு செல்ல குரல் தேவதை. அவளின் குரல் வளதிருக்கு தமிழகம் மட்டும் அல்ல தமிழ் பேசும் அணைத்து நாட்களிலும் அவர்க்கு விசிறிகள் இருக்கிறார்கள், நானும் ஓருவன் என்று கூட கூறலாம்.

இணையத்தில் சில நாட்கள் / மாதங்களுக்கு முன்பு அவர் ஒரு ட்வீட் செய்து இருந்தார். “மீனவர்கள் மீன்களை கொல்லுகிறார்கள்” அப்படி என்றால் சிங்களவர்கள் நமது மீனவர்களை கொன்றால் அது தவறு இல்லையா ?????? என்று அந்த ட்வீட் மருவி மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானது. இதனால் கொதித்து போன நமது நண்பர்கள் சிலர் அவரை வசை பாடி விட்டனர். அதை அப்படியே ஸ்க்ரீன்ஷாட் எடுத்து Cyber Crime இல் குடுத்து விட்டார்.

இங்கு தான் பிரச்சினை ஆரம்பித்தது. oru Famous Personality கம்பலின்ட் குடுத்த உடன் செயல் பட்ட நமது காவல் துறை, என் ஒரு பொது மக்கள் கம்பலின்ட் குடுத்தால் அதை மதிக்க கூட மாட்டுகிறார்கள். Cyber police இடம் இது போன்ற கம்பலின்ட் சில ஆயிரம் கணக்கில் இருக்கின்றேன, ஆனால் அதுக்கு எல்லாம் முக்கியத்துவம் குடுக்காமல் சின்மயி போன்ற பிரபலங்கள் குடுத்த உடன் அக்கறை காட்டுவது ஏன்?????

என் என்றால் அவரின் ஜாதி, அதிகாரவர்கத்தில் அவரின் ஜாதிக்கு இருக்கும் செல்வாக்கு தான் காரணம்,

மேலும் இந்த விவகாரம் இன்னொரு கோணத்திலும் பார்க்க படுகிறது அதிகாரவர்கதிர்க்கு எதிர்க்க குரல் கூடுப்பவர்களை முளையிலேயே கில்லுவதர்க்கு இது ஒரு தொடக்கமாகக் இருந்தது விட கூடாது. என்பது தான் இனயத்தில் இருக்கும் பலருக்கு உள்ள ஒரு பயம்.

5. இன்னொரு முக்கியமான இணையத்தில் பெரும் தாக்கம் ஏற்படுத்திய இன்னொரு சம்பவம் பிராமணாள் கப்பே. அவளுக்காக அவாள்ள ஏற்படுத்திய ஒரு சிறு ஹோட்டல். இங்கும் வழக்கம் போல் சிலர் எதிராக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர. முன்பே கூறியது போல் SPLENDOR ஐயர். அங்கு கூறிய பிரச்சினை வேறு, அது ஒட்டுமொத்த தமிழகத்தையும் represent பண்ணியதால் ஏற்பட்ட போராட்டம். ஆனால் இங்கு நடந்து வேறு. எதோ ஒரு ஊரில் ஒரு சமுகத்தை சார்ந்த மக்கள் ஏற்படுத்திய உணவு விடுதி. அதற்க்கு எதிராக போராட்டம் நடத்தியது தவறு.

ட்விட்டர் இல் ஒரு நண்பர் போட்ட ட்வீட் “பிராமணாள் என்று பெயர் வைத்ததால் வந்த போராட்டம், மற்றே ஜாதி பெயரில் தோடங்கபட்டால் இப்படி ஒரு போராட்டம் வந்து இருக்குமா என்பது சந்தேகமே” ஏன் மதுரை தேவர் மெஸ், கோனார் தமிழ் உரை, இம்மொனுவேல் தொலைபேசி நிலையம், நாயர் டீ கடை, செட்டியார் மளிகை கடை என்று இன்னுமும் இருக்க தானே செய்கிறது. அவற்றை எல்லாம் ஏன் எதிர்க்க வில்லை. இது ஒரு வகையனா INFERIORITY COMPLEX என்றே நான் சொல்லுவேன்.

இன்னும் எதன்னை நாட்கள் தான் ஜாதிகளை கட்டிக்கொண்டு அழ போகிறோமே தெரியவில்லை. ஒரு பழமொழி உண்டு “ நான்கு தலைமுறை முன்பு பார்த்தால் நாவிதணும் சொந்தக்காரன் அவான் என்று” முதலில் இந்த ஜாதிகளை, கடவுள்களை ஒழித்தல் போதும் தமிழகத்தில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் அமைதி பூங்காவாக அமையும்.

சரி இந்த ஜாதிகள் அனைத்தையும் ஒழித்து விடலாம். அனைவரும் சமம் என்று ஒரு நிலை வந்தால் உயர் வகுப்பில் இருப்பவன் முன்னறி கொண்டே தான் இருப்பார்கள், ஏழைகள் ஏழைகள்கவே தான் இருப்பார்கள், அதனால் சமுதாயே ஏற்ற தாழ்வு நின்கி விடுமா என்றால் கண்டிப்பாக இல்லை. ரஜினி சொல்லுவது போல் “RICH GET RICHER, POOR GET POORER” அதனால் தான் QUOTA அமைப்பு வேண்டும் என்று சொல்லுவது, பிற்பட்டுத்த வகுப்பு இனரும் வாழ்வில் முன்றே தான் இந்த QUOTA அமைப்பு. அதை சில பேர் தவறு என்று கூறின்னாலும் அந்த அமைப்பு கண்டிப்பாக வேணும் என்பது தான் என்னது கருத்து. நல்லா வசதியான நிலையில் இருக்கும் ஓருவன், அவனது குழந்தைக்கு படிப்பு சம்பந்தமாகக எந்த வசதிகள் வேண்டும் என்றால்லும் அவனுக்கு செய்து கொடுக்க முடியும். ஆனால் ஏழை குடும்பத்தில் பிறந்த ஓருவன் மிகவும் கஷ்ட பட்டு தான் படித்து வருவார்கள், முதலில் கூரிவயன் 1200 KU 1000 எடுப்பதும், கஷ்டபட்ட ஓருவன் 1200 KU 850 எடுப்பதும் ஒன்று தான்.

முதல்வன் படத்தில் அர்ஜுன் கூறுவது போல. “ தமிழகத்தில் உள்ள ஜாதிகள் அனைத்தையும் நிக்கி விட்டு OC, BC, MBC, SC & ST என்று வைத்தால் மிகவும் நன்றாக இருக்கும். “Reservation Quota” வும் இருக்கும். ஜாதிகளும் இருக்காது.

ஆனால் எனது கருத்து ஜாதிகளை அழிப்பதை விட கடவுள்களை அழித்து விட்டால். எந்த பிரச்சினையும் இருக்காது. பொருளாதார அடிபடையுள் “OC, BC, MBC, SC&ST” என்று பிரித்து வைத்தால் சமுதாய ஏற்ற தாழ்வு நீங்கும் என்பது என்து தாழ்மையான கருத்து.

இந்த பதிவு எழுதி முடிக்கும் பொது தான், பால் தாக்ரே இன் மரணம்,அதை அடுத்து FACEBOOK IL STATUS போட்ட குற்றத்திற்காக கைது செய்ய பட்ட பெண், மற்றும் அந்த STATUS கு லைக் குட்டுத பெண் என்ற இருவர் கைது செய்ய பட்ட சம்பவம், இது குறித்து கூடிய சிக்கிரம் ஒரு பதிவு போடுகிறேன். நமது நாட்டில் கருத்து சுதந்திரம் எங்கு போய் கொண்டு இருக்கிறது????? இப்படி உங்களிடம் புலம்பி கொண்டு இருக்கும் நான் வேறு யாரும் இல்லை. உங்களுள் ஒருவனாக இருந்தது இந்த சமுக அவலங்களை பார்த்து உங்களிடம் புலம்பி கொண்டு இருக்கும் ஒரு சாதாரண இந்திய (தமிழ் ) பிரஜை......

No comments:

Post a Comment