Friday, November 22, 2013

பாதுகாப்பற்ற தானியங்கி இயந்திரம் (ATM)



நமது நாட்டில் உள்ள பல ATM தகுந்த பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது, அதற்க்கு பெங்களூர் ATM தாக்குதல் சரியான உதாரணம்.

சரி நானும் இங்கு அந்த நிகழ்வை பற்றி தான் பேச போகிறேன் அல்லது பாதுகாப்பை வளபடுத்த என்ன செய்ய வேண்டும் என்று பேச போவது இல்லை. ஏன் என்றால் அதை பற்றி பலர் பல விதமாக பேசி இருப்பார்கள். சரி இதை பற்றி நான் பேச போவது இல்லை என்றால் வேறு எதை பற்றி பேச போகிறேன் என்று நினைகிர்களா ????

நமது மக்கள் இடையில் இந்த காலகட்டதில் பரவும் ஒரு புத்திசாலிதனமான வதந்தியை பற்றி தான். இந்த கட்டுரை படிக்கும் 100இல் 99 பேருக்கு தெரிந்த விசயம் தான். ஆனால் அது உண்மை என்று நினைத்தால் Iam very very sorry my friend. ATM பின் நம்பரை நேர் எதிராக அடித்தால் பணம் வெளி வரும், அதே நேரம் பக்கத்தில் இருக்கும் காவல் நிலையத்திற்கும் தகவல் சென்று அடுத்த சில நிமிடங்களில் நம்மை காப்பாற்ற காவல் துறை ஹீரோ போல வந்து விடுவார்கள், அல்லது தமிழ் படத்தில் வரும் காவல் துறை போல படம் முடிந்த பிறகாவது வந்து விடுவார்கள் என்றால் நினைத்தால் Iam very very sorry my friend. இப்படி ஒரு சேவை இந்தியாவில் மட்டும் அல்ல உலகத்தில் சில நகரங்களை தவிர வேறு எங்கும் இந்த சேவை உயிரோடு இல்லை. என்பது தான் நிதர்சனமான உண்மை.

The concept of an alternative emergency PIN system, or duress code, for ATM systems has been around since at least July 30, 1986, when Representative Mario Biaggi, a former police officer, proposed it in the U.S. Congressional Record, pp. 18232 et seq. Biaggi then proposed House Resolution 785 in 1987 which would have had the FBI track the problem of express kidnappings and evaluate the idea of an emergency PIN system. HR785 died in committee without debate.

இந்த சட்டம் நடைமுறைக்கு வருவது முன்பே கலைக்க பட்டு விட்டது, அதற்கு பின் வரும் காரணங்கள் இந்த சட்டம் நடைமுறைக்கு வாராமல் போனதற்கு காரணம்.

உதாரணம் 1.

ஒருவரின் பின் நம்பர் 5555, 8888 என்று இருந்தால் அவர் எப்படி போட்டாலும் அவருது பின் நம்பர் அது தான்.

உதாரணம் 2.

ஒருவரின் பின் நம்பர் 1251. 8568 என்று இருக்கிறது என்றால் கை தவறுதலாக கூட இரண்டாவது மற்றும் முன்றாவது என்னை மாற்றி போட வாய்ப்பு இருக்கிறது,

எனவே காவல் துறைக்கு தேவை இல்லாத Fake Call’s அதிகமாக்க செல்ல வழி இருக்கிறது. என்று இந்த சேவை நடைமுறைக்கே வரவே இல்லை. ஆனால் 2006 இல் இருந்து இந்த சேவை இருபத்து போலவே பல சமுக தளங்களில் மற்றும் இமெயில் முலம் இது போன்ற பொய்யான தகவல் பரவி கொண்டு இருக்கிறது.

இந்த ATM Pin no reversal System உண்மையாக இருந்தால் இந்த நேரம் காவல் துறையும், வங்கியும் இப்படி ஒரு சேவை இருக்கிறது அன்று தகவல் வெளிவிட்டு இருப்பார்கள், அவர்கள் இதை பற்றி வாய் திறக்காமல் இருப்பதே இப்படி ஒரு சேவை பழக்கத்தில் இல்லை என்பதற்கு ஒரு சான்று.

நம்மில் சில புத்திசாலி நண்பர்கள் கேட்பார்கள், இந்த தகவல் வெளிய தெரிந்தால் திருடன் உசார் ஆகி விடமாட்டனா என்று ???அதனால் தான் இந்த தகவலை அரசாங்கம் வெளிய தெரிவிக்க வில்லை என்று.... இந்த விசயம் திருடனுக்கு தெரிந்தால் இவன் உண்மை சொல்லுகிறானே இல்லை போய் சொல்லுகிறானே என்ற குழப்பத்தில விட்டு சென்றாலும் விட்டு விடுவான்.

இது போன்ற இணையத்தில் பரவும் மேலும் சில பொய்யான பரப்புரைகளை பற்றின அவனகள் உடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன். நான் வெறும் யாரும் அல்ல.. உங்களுள் ஓருவன் தான்

4 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சில விஷயங்கள் கேள்விபடும்போது பயமாகத்தாங்க இருக்கிறது...

Anonymous said...

சமூக ஊடகங்கள் மற்றும் தொலைதொடர்பு வளர்ச்சிகள் நன்மைகள் செய்கின்ற போதும், புரளிகளை பரப்புவது, பொய்த் தகவல்கள், வன்மங்கள், மத சாதி இன பாலியல் வெறிகளை தூண்டுவது என பல கெட்ட காரியங்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றது வருத்தமளிக்கின்றது.

உங்களுள் ஒருவன் said...

கவிதை வீதி... // சௌந்தர் //
பெங்களூர் ATM தாகுதல் சம்பவம் அணைத்து சாதாரண பொது மக்களையும் பலமாக பாதித்து இருக்கிறது என்பது நிதர்சனமா உண்மை

உங்களுள் ஒருவன் said...

விவரணன் நீலவண்ணன் . நீங்கள் சொல்லுவது உண்மைதான் நண்பா, அதற்கா தான் நான் எடுத்து இருக்கும் ஒரு சிறிய முயற்சி. இது போல் இணையத்தில் திட்டமிட்டு பரப்ப பாடும் பொய்யான வதந்திகளை தடம் அறிந்து அவரை பற்றின உண்மையான நிலைமை மகளுக்கு எடுத்து குறலாம் என்று நினைக்கிறன்.. வரும் பதிவுகளில் இது போன்ற தகவல்களுக்கு முக்கிய துவம் குடுக்கலாம் என்று இருக்கிறேன்.

Post a Comment