Tuesday, April 12, 2011

தேர்தல் முடியும் வரை அணைத்து கட்சி களும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்

தேர்தல் தலைமை அதிகாரி பிரவீண் குமார் வெளியிட்டு உள்ள விதிமுறைகள் அனைத்து கட்சிகளும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், அப்டி தவறினால் கடுமையான சட்டம் பாயும்.... அனால் அய்யா தேர்தல் அதிகாரி...... எந்த அளவுக்கு நீங்க கடினமாக இருபிங்க??? எந்த கட்சி உடனும் சேராமல், நடுநிலையாக நீங்கள் அவது இருபிரிகலா?? இல்லை எதாவது ஒரு கட்சி இடம் பணம் பெற்று கொண்டு அவர்களுக்கு அதரவாக இருபிரிகலா????

சென்னை-இல் ஏற்கணவ ரவுடிகள் வந்து தங்கி இருப்பாடாக ஒரு தகவல், அங்கு அங்கு வாக்குக்கு பணம் குடுக்க தான் செய்கிறார்கள், பணமாகவோ, அல்லது வேறு வடிவிலோ வாக்களர்களுக்கு சென்று சேர வேண்டியது சேர்ந்து கொண்டு தான் இருக்கிறது, ஆனாலும் தேர்தல் ஆணையம், 10 ரூபாய் பிடித்து கொண்டு 100 ரூபாய் விடுவிடுவதாக ஒரு தகவுலும் இருக்கிறது.... இதில் எது உண்மை??? எது பொய் என்று தெரியவில்லை.... இதை பார்க்கும் பொது எனக்கு எம்ஜிஆர் இன் பாடல் ஒன்று தான் நினைவுக்கு வருகிறது,

"திட்டம் போட்டு திருடர கூட்டம் திருடி கொண்டே இருக்கிறது,
அதை
சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்து கிட்ட இருக்கிறது".....

எப்படியோ தேர்தல் ஆணையம் பணநாயகத்தை அழித்து நல்ல தேர்தல் நடத்தினால் சரிதான்,

தேர்தல் ஆணையத்தின் தேர்தல் கால விதிமுறைகள்:
  1. தேர்தலையொட்டி யாரும் பொதுக்கூட்டமோ, ஊர்வலமோ நடத்தவும் கூடாது, அவற்றில் கலந்து கொள்ளவும் கூடாது. தேர்தல் தொடர்பான விஷயங்களை விளம்பரம் செய்யவோ, தொலைக்காட்சியில் ஒளிபரப்பவோ கூடாது. இதில் தேர்தல் தொடர்பான அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களும் அடக்கம்.
  2. வாக்காளர்களை கவரும் வண்ணம் இசை நிகழ்ச்சி, நாடகம், பொழுதுபோக்கு மற்றும் வேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தவோ, ஏற்பாடு செய்யவோ கூடாது. இதனை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். தேர்தல் பணி புரிவதற்காக வெளியூர்களில் இருந்து வந்தவர்களும், தொகுதியில் வாக்காளர்கள் அல்லாதவர்களும் இன்று மாலை 5 மணிக்கு பிறகு அத்தொகுதியைவிட்டு உடனடியாக வெளியேற வேண்டும்.
  3. திருமண மண்டபம், சமூகநலக் கூடம், விடுதிகள், விருந்தினர் மாளிகை ஆகியவற்றில் வெளியாட்கள் யாராவது தங்கியிருக்கிறார்களா என்று சோதனை செய்து தொகுதிக்குள் வெளியாட்கள் இல்லை என்பது உறுதி செய்யப்படும். தொகுதியில் இல்லாத வெளியாட்களின் வாகன போக்குவரத்தை கண்காணிப்பதற்காக ஒவ்வொரு தொகுதி எல்லையிலும் வாகன சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
  4. வேட்பாளர்களின் பிரசாரத்திற்காக அளிக்கப்பட்ட வாகன அனுமதி இன்று மாலை 5 மணிக்கு பிறகு செல்லாததாகிவிடும். தேர்தல் நாளில் வேட்பாளர்கள் பயன்படுத்துவதற்காக, அவரது சொந்த உபயோகத்திற்கு ஒரு வாகன அனுமதியும், தேர்தல் ஏஜெண்டுகளுக்கு ஒரு வாகன அனுமதியும், கட்சி தொண்டர்கள் அல்லது ஆதரவாளர்களுக்கு ஒரு வாகன அனுமதியும் தனித்தனியாக வழங்கப்படும்.
  5. தேர்தல் நாளில் அரசியல் காரணங்களுக்காக மேற்கண்ட அனுமதி பெற்ற 3 வாகனங்களை மட்டும் பயன்படுத்தலாம். தேர்தல் பிரசாரத்தின்போது வழங்கப்பட்ட வாகன அனுமதி, தேர்தல் நாளில் செல்லுபடியாகாது. அதே நேரத்தில் பொது மக்கள் தங்களது சொந்த விஷயங்களுக்காக பயன்படுத்தும் தனியார் வாகனங்களுக்கு தடை கிடையாது.
  6. தேர்தல் நாளன்று வாக்காளர்களை வாகனங்களின் மூலம் வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்வதும், ஓட்டு போட்டவுடன் மீண்டும் கொண்டுபோய் வீட்டில் விடுவதும் 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவு 133-ன்படி தண்டனைக்குரிய ஊழல் குற்றமாகும்.
  7. வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அரசியல் கட்சிகளோ, வேட்பாளர்களோ இரண்டு நபர்களுடன் தற்காலிக அலுவலகத்தை அமைத்துக்கொள்ளலாம். ஆனால் அந்த இருவரும் அங்கு தேவையில்லாமல் கூட்டம் கூட்ட அனுமதி கிடையாது. இங்கிருந்து தின்பண்டங்கள் எதுவும் வினியோகிக்கக் கூடாது. இந்த அலுவலகத்தில் இருக்கும் இருவரும் அந்த வாக்குச்சாவடியைச் சேர்ந்த வாக்காளர்களாக இருக்க வேண்டும். சரிபார்த்தலுக்காக இருவரும் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். குற்ற பின்னணி இருப்பவர்கள் இந்த அலுவலகங்களில் இருக்க அனுமதி கிடையாது.
  8. 11/04/20011 மாலை 5 மணியில் இருந்து 13ம் தேதி மாலை 5 மணி வரை தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிடவும், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு நடத்தவும் தடை விதிக்கப்படுகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பிற்கு கடந்த 4ம் தேதியில் இருந்து மே மாதம் 10ம் தேதி வரை ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது
    .
  9. கடந்த காலத்தில் சில வாக்குச்சாவடி அதிகாரிகள் தேர்தல் முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள `குளோஸ் பட்டனை' அழுத்தவில்லை. அதனால் அந்த வாக்குப்பதிவு எந்திரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என்று புகார் கூறப்பட்டதை தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, இந்த தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்தும் வகையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை கையாளுவது தொடர்பாக தேர்தல் ஆணையம் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது
  10. அதன்படி வாக்குச்சாவடி அதிகாரிகள் தேர்தல் முடிந்ததும் அனைத்து தேர்தல் ஏஜெண்டுகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள `குளோஸ் பட்டனை' அழுத்திவிட்டு பின்னர் மூடிவிட வேண்டும். அதுபோல ஓட்டுப்பதிவின்போது வாக்காளர்கள் அனைவரும் கையெழுத்திடும் 17 ஏ பதிவேட்டில், தேர்தல் முடிந்ததும் கடைசி கையெழுத்திற்கு கீழே கோடிட்டு, கடைசி பதிவின் வரிசை எண்ணைக் குறிப்பிட்டு அனைத்து ஏஜெண்டுகளிடமும் கையெழுத்து வாங்க வேண்டும். அதுபோல தேர்தல் முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் எத்தனை வாக்குகள் பதிவாகியுள்ளன என்பதை 17 சி படிவத்தில் எழுதி, தேர்தல் ஏஜெண்டுகளிடம் கையெழுத்து வாங்க வேண்டும். அதன் நகலை அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
இந்த தேர்தலில் பணம் வழங்கியது தெரிய வந்தால், தேர்தலை ஒத்தி வைக்க படும் என்று கூறி உள்ளனர்.... இந்த தேர்தலில் ஒரு மாற்றம் ஏற்படுமா என்று ஆவலோடு காத்து கொண்டு இருக்கும் உங்களுள் ஒருவன்.......

5 comments:

ஆனந்தி.. said...

சகோ...வோட்டு போட்டிங்களா? ...எனக்கு மெட்ராஸ் ஐ சகோ..:((( ஆனாலும் அதோட வோட்டு போட்டு வந்துட்டேன்...:))) ஜனநாயக கடமையை ஆத்து ஆத்துன்னு ஆத்த வேண்டாமா என்ன...:))) ஆனால் போன முறைக்கு இந்த முறை பூத் இல் நல்ல கட்டுப்பாடு இருந்தது...கரைவேட்டிகள் ரொம்ப அடக்கி வாசிச்ச மாதிரி பீல்...தேர்தல் கமிஷனுக்கு நிஜமாய் ஒரு பிக் க்ளாப்ஸ் சகோ...பாப்போம் மே 13 ...:))) என்ன நடக்குதுன்னு...

ஆனந்தி.. said...

என் சகோதரனுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

உங்களுள் ஒருவன் said...

நன்றி சகோ... உங்களுக்கும் என்னது தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

உங்களுள் ஒருவன் said...

வோட்டு போட ஊருக்கு போய்டமலே..... 49-0 கு தான் என்னோட வோட்டு........ எங்க தொகுதில திமுக வும் ஆதிமுக வும் தான்.... அதான் பார்த்தன் 49 ல ஓர குத்து......

உங்களுள் ஒருவன் said...

உண்மையுள் இந்த முறை தேர்தல் அன்னையதிற்கு பாராட்டுகள்......

Post a Comment