Saturday, May 14, 2011

திரும்பவும் அம்மாவின் கையுள் சர்வாதிகாரம்

என்னடா தலைப்ப பார்த்த உடன் இவன் திமுக வோ என்று எண்ணி விட வேண்டாம்.... காங்கிரஸ் ம் அதன் உடன் அடி வருடி திமுகவும் தோற்க வேண்டும் என்று கங்கணம் கட்டி கொண்டு வேலைகள் பார்த்தவர்களில் நானும் ஒருவன்...

தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்து இருக்கும் போதே சாலைகளில் ஆஇதிமுக கொடியுடன் இரு சக்கர வாகனம் மற்றும் முன்று சக்கர வாகனகளில் தொண்டர்கள் செல்வதை பார்க்க முடிந்தது..... மாலையுள் அலுவலகம் முடிந்து வீடு திரும்பும் பொது தி மு க தலைமை செயலகம் தில் 15 இல் இருந்து 20 பேர்கள் தான் இருந்திருப்பார்கள்... அதை பார்த்த என்னக்கு இதை விட தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் அதிகம் என்று தான் என்ன தோன்றியது.....

தமிழகத்தில் காங்கிரஸ் ஐ அடியோடு அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி பிரச்சாரம் செய்த சீமானுக்கு மிக பெரிய வெற்றி இந்த தேர்தல் அறிக்கை.... ஆனால் அவருக்கு அதற்கான அங்கீகாரம் கிடைக்குமா என்றால் அது சந்தகேமே.....

அனைவரும் ஆஇதிமுக வெற்றி பெற்றது அவர்களுது ஆளுமையால் என்று நினத்தால் அது தவறு... இப்படி தான் அனைவரும் பேசுகிறார்கள்... ஆனால் அந்த அம்மையார் கைதந்த நான்கு அரை ஆண்டுகள் வனவாசம் இருப்பது போல் கோட நாட்டில் ஒய்வு எடுத்து விட்டு கடைசி ஆறு மாதங்களில் பிரச்சாரம் செய்து இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றாரா என்று கேட்டால் அது மிக பெரிய கேள்வி கூறி.....

இது காக்கை உக்கார பனம்பழம் விழந்த கதை தான் இங்கயும் நடந்து உள்ளது.... தேர்தல் அன்று All India Radio vil முத்த பத்திரிகை ஆசாரியர்களும் அணைத்து கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொந்த விவாதம் நடந்து... அதில் ஒரு பத்திரிகை ஆசாரியர் கூறும் பொது திமுக வின் விழுச்சி ஐ Chaos theory ஓடு ஒப்பிட்டார்... அதாவது தசாவதாரம் படத்தில் கமல் சொல்வது போல்.. ஒரு வண்ணத்தி புச்சியுன் இறகை அசைவில் இருந்து வெளிப்படும் சக்தி ஒரு அழி பேர் அலை உருவாகுவதற்கு காரணமாக அமையும் என்பது தான் Chaos theory இண வெளிப்பாடு....
அது போல் தான் திமுகவில் மதுரையுள் நடந்த தினகரன் அலுவலகம் மிதான தாக்குதல் தான் தயாநிதி மாறன் பதவி விலகவும், அந்த இடத்தில கனிமொழி யின் ____________ ராஜா க்கு அந்த பதவி வழங்க பட்டது, அந்த பதவி யின் முலம் 2g spectrum இல் நடந்த முறைகேடு, அதை பின் புலமாக வைத்து காங்கிரஸ் திமுக வை பல இடங்களில் மிரட்டி தங்கள் கைக்குள் வைத்து கொண்டது.... குறிப்பாக இலங்கை விவகாரம், தேர்தல் போட்டி இடும் இடங்கள் என எல்லாவரிலும் திமுகவால் வாய் திறக்க முடியாத நிலைமை.... என்று இந்த பட்டியல் நில்கிறது.....

மேலும் பொது மக்களை நேரடியாக பாதித்த விசயங்கள், விலைவாசி உயர்வு, மின் வெட்டு கருணாநிதின் குடும்ப அரசியல், சிலந்தி வலை போல் பின்னப்பட்ட குடும்ப வியாபாரம், அணைத்து துறைகளிலும் கால் வைத்து நடு தர மற்றும் கிழ தர மக்களை பாதித்த விசயங்கள் தான் திமுகவின் சரிவிற்கு முக்கியமான விசயங்கள்.....

இது இப்படி இருக்க தனது பரகிரமிதில் தான் வெற்றி பெற்றோம் என்றும் குதிக்கும் ஆஇதிமுக பார்த்தல் எனக்கு வேடிக்கையாக தான் இருக்கிறது... இது காக்கை உக்கார பனம்பழம் விழந்த கதை என்பது இவர்களுக்கு தெரிய வில்லை... ஆனால் தெரிந்தோ தெரியமொலோ தமிழக மக்கள் ஒரு சவகுளியுள் இருந்து தப்பித்து ஒரு புதை குளியுள் மாட்டி கொண்டார்கள்.....

ஏற்கனவே இந்த அம்மையார் தனது இஷ்டம் போல் தான் நடக்கும் யாரையும் மதிக்காது.... தனது காலில் விழுபவன் தனை துதி பாடுபவர்களை மட்டுமே பக்கத்தில் வைத்து ஒரு அல்லி ராஷியம் நடத்தி வந்தவர்க்கு இப்பொழுது எதிர் கட்சி என்ற ஒன்ற இல்லாத ஒரு நாடளுமன்றத்தை குடுத்து இருக்கிறோம்..... இனிமேல நடக்க போவது ஒரு சர்வாதிகாரம் தானே தவிர வேறு ஒன்றும் இல்லை...

கவனிக்க: அந்த அம்மையார் முன்பு இருந்தது போல் இல்லை, அவர் மாறி விட்டார் என்று சப்பை கட்டுவோர்கள் கவனிக்க..... அந்த அம்மையார் இன்னும் மாற வில்லை என்பதற்கு ஏ. கா. தொகுதி பங்கிடு சமையத்தில் தனிசையாக வேட்பாளர்கள் பட்டியல் அறிவித்து விட்டு 2 நாள்களில் அந்த பட்டியல் கும் என்னகும் எந்த சம்பத்தும் இல்லை... என்று கூறி அடுத்த பட்டியல் தயாரித்து வெளி இட்டது, அதில் வைகோ பெயர் சேர்க்க படவில்லை... இவொலோ நாட்களாக கூட இருந்த கூட்டனி கட்சி ஐ நிக்கிவர் தானே....

இதற்கு மேல் அம்மா சொல்லுவது தான் வேதம், எழுதவது தான் சட்டம், என் என்றால் வனவாசம், எதற்கு என்றால் சிறைவாசம்.... சுருக்கமாக சொன்னால் இனிமேல தமிழ் நாட்டில் அடுத்த ஐந்து ஆண்டுகள் நடைபெற போவது சர்வாதிகாரம்........

இந்த காங்கிரஸ் மற்றும் திமுகவை எதிர்க்க வேண்டும் என்று நினைத்து உண்மை தான்... ஆனால் பாவம் அவர்கள் எதிர் கட்சி என்ற அந்தஸுது குட பெற முடியாத அளவுக்கு எதிர்திற்க கூடாது,

இந்த சர்வாதிகாலத்தில் நடக்க போகும் இன்ப துன்பங்களில் உங்களுள் ஒருவனாக இருந்து பார்த்து பழகி போக போகும் ஒரு சாதாரண பொது ஜனம்

7 comments:

Anonymous said...

ஐயா, நடந்த ஆட்சி போய் புதுசா தேர்ந்தேடுத்தீகளே யாரை தேர்ந்தெடுத்தீக இன்னொருமுறை ஊழலைதான் தேர்ந்து எடுத்திருக்கீக.இந்த தேர்தல் கமிசனை பத்தி தேர்தல் நடக்கும்போதெல்லாம் ஆகா ஓகோன்னு பெசுரீக. இந்த தேர்தல் கமிஷனோ அல்லது எதோ ஒரு பெரிய அதிகாரசக்தியோ ஊழல் செய்தவங்க வாழ்நாளெல்லாம் போட்டியிடமுடியாதுன்னு உச்சவரம்பு கொண்டு வந்திருந்தா ஊழல் இல்லாத ஒரு தலைமை கிடைச்சிருக்கும். ஆமாம் சொல்லிபுட்டேன்

Anonymous said...

it's is Chaos theory not kayas theory fool

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Don t worry . . Eavalovo pathudom . .

Anonymous said...

இதை விட வேற யாரும் அதிகம் ஊழல் பண்ண முடியாது என்பது போன்று செய்துவிட்டு போயிருக்கிறது திமுக. ஜெ ஆட்சியில் வழக்கம் போல அடாவடிதனங்களும், பொருளாதார வளர்ச்சியில் ஒரு மெத்தன போக்கும் தொடரும் என்றே நினைக்கின்றேன்.

Anonymous said...

Thank you Anonymous you have tried to help. But this guy will have a look at a dictionary for the word chaos and improve his knowledge. I doubt it.

உங்களுள் ஒருவன் said...

ஊழல் செய்தல் தூக்கு தண்டனை என்று சட்டம் கடுமை அகப்பட வேண்டும்... அபொழுது தான் ஊழல் செய்ய அரசியல்வாதிகள் பயபடுவர்கள்.... நமக்கு ஊழல் இல்லாத அரசாங்கம் அமையும்... அதுவரைக்கும் நமக்கு வேறு மாற்று அரசாங்கம் கிடைக்காது..... நன்றி Anonymous 1 and 3

உங்களுள் ஒருவன் said...

நன்றி எனது தவறை சுட்டி காட்டிய Anonymous 2 and 4.......

Post a Comment