Sunday, November 20, 2011

government bus la ticket எடுப்பவன் கேனையன்...... பேருந்து பயண கட்டணம் ஒரு கிலோமீட்டர் க்கு எட்டு பைசா(0.08 Paise) மட்டுமே.......

என்ன பாஸ் நம்ப முடியலையா ??? என்னக்கும் first அப்படி தான் இருந்துச்சு......
பஸ்சில் பயண கட்டணம் எத்தின உடன்.... பஸ் இல் இருபவர்கள் புலம்பியதை பார்த்த பிறக்கு..... என்னக்கு தோன்றியது... வழக்கமாக சினிமா வில் மட்டுமே பார்த்து பழகிய காட்சிகள்... நேரில் பார்த்த உடன் மணம் கேட்க வில்லை......

நாமே தான் ICWAI படித்த, படித்து கொண்டு இருக்கும், படிக்கும் மாணவன் ஆச்சே.... இந்த பேருந்து கட்டணத்தை நாம் re-calculate செய்து பார்த்தல் என்ன என்று தோன்றியது.... அதில் உருவானதுதான் இந்த பதிவு முதலில் ICWAI என்றால் The Institute of Cost and Works Accountants of India.... அதாக பட்டது என்னன்னா ..... ஒரு பொருளுக்கு விலை நிரண்யம் செய்தல் பற்றி படிப்பது தான் அது.....


ஒரு பொருளுக்கு விலை நிரண்யம் செய்வதற்கு முன் சில அடிபடைகளை தெரிந்து வைத்து கொள்ளுவது நல்லது.

Selling price = Fixed price + variable cost + profit

Fixed cost: (நிரந்தரமான செலவு)
ஒரு பொருள் உற்பத்தி செய்தாலும், 1000 பொருள் உற்பத்தி செய்தாலும், இந்த expenses... குடாது குறையாது..... for an example.... workers salary, Depreciation (தேய்மானம் ) room rent, security salary, traveling cost etc

Variable cost ( மாறும் தன்மை உடைய செலவு)

ஒரு பொருள் உற்பத்தி செய்ய ஏற்படும் செலவு.... இது நாம் எவ்ளோ உற்பத்தி செய்கிறோமோ அதற்க்கு ஏற்றால் போல் இதன் செலவு உயரும்...... அதாவுது அந்த பொருள் உற்பத்தி செய்ய தேவை படும்.. man, meterial, mechin இவ்வை அனைத்தும் அடங்கும்.....

சரி நாம் ஒரு பேருந்து கட்டணம் எப்படி நிரனையம் செய்ய படுகிறது என்று பார்போம்.... அதாவது ஒரு பேருந்தின் ஆயுட் காலம், அதன் விலை, அதன் தெயுமானம்(depreciation charges for an year) அது எவளோ தூரம் செல்கிறது... எரிபொருள் செலவு... ஆகியவறை கொண்டு அதில் பயணம் செய்யும் மக்களிடம் அந்த கட்டணம் வசூலிக்க படுகிறது......
இந்த calculation சில assumption அடிபடையுள் கணிக்க பட்டது.....

Fixed Cost:
Assumption 1:
ஒரு பேருந்தின் விலை approz 1 crore.
life time: 20 yrs, so cost for an year 1 crore/20 yrs = 5 lakhs in a year charged as depreciation.

கவனிக்க: அப்படி 20 yrs, ஒவ்வொரு வருடம் எடுத்து வைத்தால்...இருபதாவது வருட முடியுள் ஒரு பேருந்தின் மொத்த பணமும் திரும்ப கிடைத்து விடும்.... அதாவது போட்ட முதலை அப்படிய எடுத்த விடலாம்..... அந்த இருபது வருடம் கழித்து, அந்த பேருந்தை பழைய இருப்புக்கு பெரிச்சபலம்.. வாங்கினால் கூட அது லாபம் தான்.....

Variable Cost:
Assumption 2 ;
ஒரு பேருந்து ஒரு முறைக்கு (one trip )20 km செல்கிறது என்று வைத்து கொள்ளலாம்.(for an example: saidepet to high court)...அப்படி ஒரு நாளைக்கு 20 முறை செல்லும் என்று வைத்து கொள்ளலாம்..... மொத்தமாக ஒரு நாளைக்கு இருபது கிலோமீட்டர், இருபது முறை செல்லும் என்றால் மொத்தமாக 400 கிலோமீட்டர் செல்லும்....

ஒரு லிட்டர் பெட்ரோல் ஐந்து கிலோமீட்டர் கூடுக்கும் என்று வைத்து கொள்ளுவோம்..... மொத்தமாக ஒரு நாளைக்கு 400 kms / 5 = 80 liters.
ஒரு வருடதிற்கு 80 liters * 365 days = 29200 liters ஒரு லிட்டர் பெட்ரோல் இன்றைய விலை இல் 70 ரூபாய்... அக மொத்தம் 29200 liters * 70 rs = Rs. 20,44,000 for a year.

Assumption 3: பேருந்தின் மொத்த 55 நபர்கள் பயணம் செய்யலாம்..... (total seats available) எப்பொழுதும் எல்லா இருகைகளும் நிரம்பி விடாது.... என்னவே அறுபது சதவிதம் மக்கள் பயணம் செய்பர்கள் என்று வைத்து கொள்ளலாம்... 55 * (60/100) = 33 passengers in a trip மொத்தமாக ஒரு நாளைக்கு 33 passengers in a trip * 20 trips = 660 passengers
அக மொத்தம்... ஒரு பேருந்தில் ஒரு நாளைக்கு 660 மக்கள் மொத்தமாக 400 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்கிறார்கள்.... அதாவது மொத்தம் 400 kms * 390 passengers = 1,56,000 passengers km. ஒரு வருஷம் திற்கு 365 days * 1,56,000 passengers km = 5,69,40,000 kms

கவனிக்க : Peek hoursல பேருந்தின் foot board இல் பயணம் செய்யும் நமது நண்பர்களை நான் இதில் கணக்கில் எடுத்து கொள்ள வில்லை........குத்து மதிப்பாக அனைத்து பேருந்துகளும் இந்த சராசரி 33 நபர்களுடன் செல்லும் என்பதை சொல்ல முடியாது.... என்னவே தான் சராசரியாக 33 நபர்கள் அணைத்து பேருந்துகளுக்கும் பொதுவாக இருக்கும் என்று எடுத்து கொள்ளுகிறேன்....


Assumption 4:
ஒரு பேருந்திற்காக செலவு செய்யும் மொத்த தொகை ஒரு வருடதிற்கு... driver, conductor salary, maintaining cost, dipo rent, mechanic, formen, manager salary இது எல்லாம் சென்னை இல் இருக்கும் மொத்த பேருந்திற்காக செலவு செய்யும் செலவுகள்...... நாம் ஒரு பேருந்திற்கு ஒரு குத்து மதிப்பாக 20 லட்சம் என்று வைத்து கொள்ளலாம்......

Formula :

Fixed cost + veriable cost
----------------------------------
Passengers Kms


Fixed cost = Depreciation charges(assumption 1) + Maintaing cost (assumption 4)
Variable cost = Petrol Expenses (Assumption 2)
Petrol Cost (Assumption 3)
(5,00,000 + 20,00,000 ) + 20,44,000
--------------------------------------------------------------------- = 0.08 Paise
5,69,40,000

அக சரசரியாக ஒரு கிலோமீட்டர் க்கு எட்டு பைசா மட்டுமே...... அவர்கள் நூறு சதவித லாபத்தில் இயங்கினால் குட ஒரு கிலோமீட்டர் க்கு 18 பைசா மட்டுமே..... minimum charges for 10 kms is Rs. 1. 80 only.... அனால் நமது அரசாங்கம் minimum ticket fare என்று Rs. 8 வரை வசுளிகிரர்கள்..... இது கிட்ட திட்ட 10 மடங்கு லாபம்.... இப்பவும் அவர்கள் நஷ்டத்தில் தான் இயங்குகிறேன் என்றால் அவர்கள் முகத்திலே குத்தலாம்.. ஒன்றும் தப்ப இல்லை.....

இந்த கணக்கை நன்றாக தெரிந்தால் தான் லல்லு பிரசாத் யாதவ்.. ஒரு முறை குட ரயில் பயண கட்டணம் குட்டவில்லை... இந்த பொது துறை அமைப்புகளுக்கு சரியாக நிருவாக தலைமை இல்லாதது தான் காரணம் என்று தெரிந்து அவர் கையுள் நிர்வாகம் சென்ற உடன்.... நஷ்டடில் சென்ற railway budget லாபத்திற்கு மாறியது......

இன்றும் வரை BSNL நஷ்டடில் தான் இயங்குகிறது...... அதன் call charges minimum 60 paise per minute.... ஆனால் தனியார் நிறுவனகள்... minimum call charges 0.005 paise per second என்று குடுகிறார்கள்... ஆனால் அவர்கள் லாபடடில் மட்டுமே செல்லுகிறார்கள்... இப்பொழுது சொல்லுங்கள் மக்களே..... இந்த பொது துறை நிறுவனங்களுக்கு நிருவாக திறமை இல்லாத காரணத்தால் பொது மக்கள் நாம் அவஸ்தி படலாமா?????

இவர்களின் பழைய பயண கட்டணம்.... கொண்டு வந்து குறைந்தது 5 ஆண்டுகள் இருக்கும்... அப்பொழுது பெட்ரோல் வில்லை மிகவும் குறையு... அப்பொழுதே அவர்கள் 5 இல் இருந்து 8 மடங்கு லாபத்தில் தான் இயங்கி இருக்கிறார்கள்.... அப்படியும் அவர்கள் நஷ்ட கணக்கு காட்டினால் அவர்களுக்கு சரியான நிறுவாக திறமை இல்லை என்று தான் நாம் ஏற்று கொள்ள வேண்டும்......

அம்மா க்கு சால்ர அடிபவரகள் கொஞ்சம் இங்கே கவனிக்க..... பெட்ரோல் விலை 2009 இல் ஒரு barrel 100 dollars என்று இருந்த பொது தமிழகத்தில் 45 ரூபாய்... இப்பொழுது 70 ரூபாய்.... இது இவர்களது திறமை இல்லாமையே காட்டுகிறது..... இதற்கு எங்கள் வரி பணத்தில் இருந்து கொண்டு எங்களுக்கே அப்பு அடிகிரிங்கள.... இது உங்கலகே நியாம் தானா???
அம்மா நீங்கள் எங்களுக்கு இலவச ஆடு, மாட்டு, குதிரை எல்லாம் குடுக்க வேண்டாம்.... அதற்க்கு பதில் எங்களுக்கு இலவச பயண சீட்டு குடுங்கள்..... எங்களிடம் அநியாமாக இப்படி பணத்தை வசூலித்து எங்களுக்கே அதை திருப்பி தரும் உங்கள் திட்டம் எங்களுக்கு வேண்டாம்....


இப்படி புலம்பி திற்பவன் வேறு யாரும் அல்ல... உங்களோடு உங்கள்ளக்க .... தினமும் நீங்கள் பார்க்கும் சாதாரண பொது ஜனம்.... நான் உங்களுள் ஒருவன்............

16 comments:

Anonymous said...

நண்பரே இது மட்டும் நடக்கவில்லை , சாதாரண M சர்விஸ் பேருந்து பலகையில் "DELUX" என்று எழுதிவிட்டு கொள்ளை நடக்கிறது , இதற்கு முன்னால் நான் ஐந்து ரூபாய் கொடுத்தேன் இப்போது 17 ரூபாய் .......... நஷ்டத்தில் இருக்கும் தமிழ்நாடு அரசுக்கு, காவல் துறைக்கு மட்டும் வரி விலக்கு செய்ய எப்படி தான் மனம் வந்ததோ ..... ?

ELIYAVAN said...

மன்னா உங்கள் அனுமானத்தில் ஒரு பிழை உள்ளது.

ஒரு பேருந்தின் உழைப்பு ஆண்டு 20 என அனுமானுத்துள்ளீர்கள். அது சரியன்று. சராசரியாக ஒரு பேருந்தின் உழைப்பு ஆண்டு வெறும் 3 ஆண்டுகள் என்றுதான் கணக்கிடப்படுகிறது. எனவே, ஒரு கிலோ மீட்டருக்கு பஸ் கட்டணம் {[(ரூ 1 கோடி/3 ஆண்டுகள்) + 20,00,000) + 20,44,000] / 5,89,40,000} ரூ 0.1296 அல்லது 13 பைசாக்கள் ஒரு கிலோ மீட்டருக்கு. இதோடு ஒரு கிலோமீட்டருக்கு 5 பைசா லாபம் என்று வைத்துக்கொன்டால், அம்மா கணக்குப்படி 18 பைசா ஒரு கிலோமீட்டருக்கு என்று விலை நிர்னயித்தது சரிதானே.

உடனேயே ஒரு ஐயப்பாடு எழும். அதெப்படி மூனே வருஷத்துல பஸ்ஸை பேரீச்சம்பழத்துக்குப் போடுவாங்க என்று. இங்கதான் அரசு இன்னொரு தந்திரம் செய்கிறது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே பஸ்ஸை இன்னொரு பேருந்துக்கழகத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்தக் கழகத்தில் பேருந்தை விலைக்கு வாங்கியதாகக் கணக்கு எழுதப்படுகிறது. இப்படியாக ஒவ்வொரு மூண்று ஆண்டும் இந்த தந்திரம் கடைப்டிக்கப்படுகிறது. ஆகையால், ஒவ்வொரு ஆண்டும் செலவு கணக்கு கழகங்களுக்கு ஏறிக்கொண்டே போகும். ஆனால், சாலைகளில் பழைய பஸ் ஓடிக்கொன்டே இருக்கும்.

antony said...

best article

KOMATHI JOBS said...

Dear Friend,

Nice initiative for a better calculative explanation,

In the post you mentioned, Buses run by petrol.

All buses operated by Diesel and the diesel prices @ Rs.40 so you used to calculate Rs 70 for petrol should be Rs 40 for Diesel then, the Operating cost comes very Low!

In TNSTS, SETC, MTC Buses are already with the collection of Rs.6000-12,000 per day!
you know, the Bus depot Managers, Purchasing spares and making forgery bills, commission while purchasing new bus chasis-ministers & officers sharing the commission %, then


if you increase the bus spare 200% also, next year they say the same slogan..,

TNSTC,SETC,MTC operated under loss!

Then why bullshit Govt? and Public sector units???
better close them!!!

உங்களுள் ஒருவன் said...

@ sathya @ நண்பா.... இப்பொழுது தமிழகத்தில் white board பேருந்தே இல்லை... அனைத்தும் express, delux என்ற ஒரு சின்ன stricker முலம் மாறி விட்டேனே......

உங்களுள் ஒருவன் said...

@ அந்தோணி @ உங்களுது கருத்துக்கு நன்றி

உங்களுள் ஒருவன் said...

@ gomathi jobs @ உங்களுது கருத்துக்கு நன்றி நண்பரே..... இங்கு அரசியல்வாதிகளை பற்றி கூற ஒன்றும் இல்லை.... இந்த பொது துறை நிறுவனகள்..... அரசாங்கத்துக்கு என்ன தகவல் கூருகிறார்களோ அதை அலசி ஆராய அவர்களுக்கு எது அறிவு...... எதிர் கட்சியை குறை கூருவதற்கும் அவர்கள் கொண்டு வந்த திட்டங்களை மீது இவர்கள் ஈகோ யுத்தம் செய்வதற்கு இவர்களுக்கு நேரம் சரியாக இருக்கும்... இது திமுக விற்கும் பொருந்தும்......

இந்த பொது துறை நிறுவனகள் யாவையும்.... பாதிக்கு பாதி தனியாருக்கு குடுத்தால்... இந்த ஊழல் குறையும்.... பேருந்து கட்டணமும் குறையும்... எப்படி தொலைபேசி கட்டணம் குறைந்தோ.. அதை போல்......

உங்களுள் ஒருவன் said...

@ ELIYAVAN @//அதே பஸ்ஸை இன்னொரு பேருந்துக்கழகத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. அந்தக் கழகத்தில் பேருந்தை விலைக்கு வாங்கியதாகக் கணக்கு எழுதப்படுகிறது. இப்படியாக ஒவ்வொரு மூண்று ஆண்டும் இந்த தந்திரம் கடைப்டிக்கப்படுகிறது. ஆகையால், ஒவ்வொரு ஆண்டும் செலவு கணக்கு கழகங்களுக்கு ஏறிக்கொண்டே போகும். ஆனால், சாலைகளில் பழைய பஸ் ஓடிக்கொன்டே இருக்கும். //

உங்கள் கருத்து புதியது நண்பரே...... இது என்னக்கு இவொலோ நாளாக தெரியாமல் இருந்து விட்டேன்

Anonymous said...

kanakku superthan. ana eppidi oru bus 20 trip adikkum. denominator 5,69.40,000 i half panni partha kanakku saria varum. podara kanakka saria podanum mamae. athaiyum kooda amothika alluka irukku. gr

Anonymous said...

ALL BUSES RUN IN DIESEL. SO BETTER CHANGE UR CALCULATION

உங்களுள் ஒருவன் said...

@ anonymous 1@ ஒரு பஸ் எப்படி 20 trip அடிக்குனு தானே கேட்கிறிங்க???? (for an ex. saidapet to broadway 1 trip, and broadway to saidepet 2 trip.... so இதை மாதிரி ஒரு நாளுக்கு 10 முறை செல்லும் என்றால்..... 20 trip அச்சு.....
அதன் பிறர்க்கு denominator பற்றி கேடிர்கள்... எப்படி இவொலோ பெரிய நம்பர் வந்தது என்று,,, for an example.... ஒரு பஸ் ஒரு ட்ரிப் க்கு ஆயிரம் ரூபாய் செலவு என்றால் அதில் பயணம் செய்யும் அனைவர்க்கும் அது பொது..... அப்படி என்றால் எனது கணக்கு படி ஒரு ட்ரிப் க்கு 33 பேர் பயணம் செய்கிறார்கள்...... அவர்கள் அனைவரும் பேருந்தின் தொடக்கம் முதல் முடிவு வரை அதில் பயணம் செய்வது இல்லை... என்னவே அவர்கள் பயணம் செய்யும் கிலோமீட்டர் க்கு ஏற்ப அவர்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டும்..... என்னவே தான் அதை ஒரு passenger km க்கு மாற்றுகிறோம்..... அதாவது (33 person * 20 kms = 660 psr km) இப்படித்தான் எல்லாமே கணக்கு இடபடுகிறது.......

என்ன கணக்கு சொன்னாலும் நம்புவதற்கு இவர்கள் ஒன்ன்றும் அடு மாடுகள் அல்ல..... நன்றாக யோசித்து, செயல்படுவர்கள்......... இந்த கணக்கை எந்த auditor இடம் வேண்டும் என்றாலும் காட்டுங்கள்... அவர்கள் இதை ஒற்று கொள்ளுவார்கள்........

உங்களுள் ஒருவன் said...

@ anonymous 2 @ எனது தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி..... இது ரொம்ப நல்லதா போச்சு..... பெட்ரோல் விலைக்கே 0.08 பைசா என்றால் டீசல் விலைக்கு 0.06 பைசா மட்டுமே........

Anonymous said...

திருடர்கள் வருவது திருடத்தானேயன்றி வேறு எதற்கும் அல்ல. கண்களை மூடிக்கொண்டு மாற்று அரசைத் தேர்ந்தெடுக்கும் மக்கள் தெளிவான பார்வை பெறட்டும்

தெளிவான அலசல்...சரியான பதிவு
கொஞ்சம் எழுத்து பிழையை மட்டும் சரி செய்யுங்கள் நண்பரே :-)

Anonymous said...

Thanks for the information. Friends please share it to everyone.

உங்களுள் ஒருவன் said...

@ மின்னலன் @ //கண்களை மூடிக்கொண்டு மாற்று அரசைத் தேர்ந்தெடுக்கும் மக்கள் தெளிவான பார்வை பெறட்டும்// நமக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு இரண்டு கயவர்களில் ஒருவரை தேர்ந்து எடுப்பது தான்..... முன்றாவது மாற்று சமுக கட்சி ஒன்று தோன்ற வேண்டும்..... இதில் நான் விஜயகாந்த் ஐ.. கணக்கில் எடுக்க வில்லை..... (முன்றாவது மாற்று சமுக கட்சி க்கு)
நான் அங்கிலம் படித்து தமிழை மறந்த கயவர்களில் நானும் ஒருவன்..... கொஞ்சம் கொஞ்சமாக என்னை மாற்றி கொள்ளுகிறேன்...... எனது தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி......

ADAM said...

GOOD ARTICLE

Post a Comment