Thursday, February 23, 2012

ENCOUNTER க்கு பிறக்கு வேளச்சேரி.......

நேற்று இரவு தான் வங்கியை கொள்ளை அடிப்பது எப்படி ??? என்ற ஒரு பதிவு போட்டு விட்டு... கொஞ்ச நேரம் தொலைக்காட்சி பார்த்து விட்டு இரவு 12 மணிக்கு தூங்க சென்று விட்டேன்... காலையில் எழுந்த உடன் ஒரே சோம்பல்.... என்று அலுவலகம் செல்ல வேண்டுமே என்று கடுப்பு ஒரு பக்கம்...... இன்று ஒரு நாள் விடுப்பு போட்டால் என்ன வென்று ஒரு சோம்பல்....... கடைசியுள் சோம்பல் ஜெவித்து அலுவகத்திற்கு விடுப்பு தெரிவிக்கலாம் என்று எண்ணி கொண்டு ..... எழுந்து தொலைகாட்சி ஐ அன் செய்தல்.... வங்கி கொள்ளையர்களை காவல் துறை என்கௌன்ட்டர் செய்த தகவல் அணைத்து சேனல் இல்லும் இந்த செய்தி தான்......

பரவா இல்லையா நமது காவல் துறை இப்பொழுது முழித்து கொண்து விட்டார்களே என்று எண்ணி கொண்து செய்தியை உற்று நோக்கினாள் அந்த இடங்கள் யாவும் எங்கோ பார்தது போல இருந்தது..... சரி எந்த ஏரியா என்று பார்த்தல், வேளச்சேரி, அடே நம்ம ஏரியா.... நேரு நகர், சரியாய் போச்சு எங்க என்று பார்த்தல் எனது தெரிவிருக்கு அடுத்த தெரு தான்...... அட பாவிகளா இங்க தான் இருந்திர்கள என்று எண்ணி கொண்து வெளிய வந்தால் பகத்து பெட்டி கடை காரரிடம் என்ன நா நம்ம ஏரியா வ இப்படி என்று கேட்டேன்.... அப்போதான் கொஞ்சம் கொஞ்சமாக தகவல் கசிந்து தெரிவில் மக்கள் சிறு சிறு குட்டமாக நின்று இதை பற்றி பேசி கொண்டு இருந்தார்கள்.......


சரி எனது அறைக்கு வந்து... நன்றாக குறைட்டை விட்டு தொங்கி கொண்டு இருந்த நண்பர்களை எழுப்பி விசயத்தை சொனேன்...... அவர்களும் ஒன்றும் தெரிய வில்லை..... கிட்டதிட்ட 200 அடி தான் இருக்கும் என்கௌன்ட்டர் நடந்தே இடத்திற்கும், என்னது ரூமிற்கும்.... இரவில் ஒரு சின்ன சத்தம் கூட கேட்க வில்லை..... ஆனால் போலீஸ் ஒரு மணி நேரம் கடும் துப்பாக்கி சண்டை நடந்ததாக கூறுகிறார்கள்...... சரி போலீஸ் சிலேன்செர் பயன் படுத்தி இருக்கலாம்..... ஆனால் கொள்ளையர்கள் ???????

என்னது நண்பர் ஒருவரின் facebook பதிவு....

இவங்க அவங்கள பிடிக்க போனாங்களாம்... அவங்க ஷூ எல்லாம் போட்டுக்கிட்டு ரெடியா இருந்தாங்களாம்......

என்னையா கலர் கலரா ரீல் சுத்துறீங்க ?!?!

இதை எல்லாம் பார்க்கும் பொழுது எங்களுக்கு சந்தேகம் வருகிறது உண்மையுள் இது என்கௌன்ட்டர் தானா என்று.....

காலையில் டீ குடிக்க வழக்கமாக செல்லும் பாய் கடைக்கு சென்றோம்..... அங்கு சென்று பாய் ஐ வம்புக்கு இல்லுக்கலாம்.. என்று பார்தால்... உள்ள இரண்டு காவல் துறை ஆணையாளர்கள்.... டீ, வடை என்று ஒரு வெட்டு வெட்டி கொண்டு இருந்தார்கள்...... சரி அவர்கள் போகட்டும் என்று பொறுமையாக இருந்தோம்..... அப்பொழுது அவர்களுள் ஒருவர்க்கு தொலைபெசியுள் அழைப்பு வர... இருவரும் மாமனார் விட்டில் சாபிட்டு விட்டு செல்வது போல் சென்றார்கள்..... அதன் பிறர்க்கு பாய் இடம்.... என்ன அண்ணே.... உங்களுக்கும் அந்த பசங்களுக்கும் ஒரு link இருக்குனு வெளிய சொல்லுறாங்க அப்படியா என்று கேட்டேன்... உடனே அவர் ஏப்பா சும்மா இருங்க பா... இப்போ தான் போலீஸ் போகுது.... என்னே அண்ணே உங்கள் தொகிடுவன்களா என்று கேட்டேன்... எப்படி தொகுவங்கே???? அதான் ஓசி டீ, வடை எல்லாம் குடுத்து இருக்கேனே என்று கூறினர்...... இனிமேல இந்த ஏரியா ல north indians ah பார்க்க முடியாது போல என்று கேட்டேன்.... அதற்க்கு அவர்.... இவங்க எங்களை (முஸ்லிம்) தான் சந்தேகம் படுவாங்க.... north indians வந்தா விட்டு விடவார்கள் என்று கூறினர்... இதும் உண்மை தானே.....

எதோ ஒன்று, இரண்டு, முஸ்லிம் இன் தவரான அணுகு முறையால் ..... எல்லா முஸ்லிமையும் கூறை கூருவது, சந்தேகம் படுவது ஏற்புடையது அன்று...... அவர்களும் நம்மை போல் ஒரு சாதாரண வாழ்கை நடத்தும் மக்கள் தானே...... இவர்களை மட்டும் ஒரு சந்தேக பார்வை பார்ப்பது நல்லவா இருக்கு....

corparation bank atm பக்கத்தில் தான் இந்த encounter நடந்து இருந்தது. சரி அந்த பக்கம் சென்று நிலைமை எப்படி என்று தெரிந்து வரலாம் என்று அந்த பக்கம் சென்றேன்...... அங்கு ஒரு போலீஸ் பேருந்து நிறைய காவலர்கள் ஒவொருவராக வந்து கொண்டு இருந்தார்கள்..... அப்போதுதான் majistrate விசாரணை முடித்து கிளம்பினர், அல்லது வேறு முக்கியமான நபர் வந்து பார்த்து விட்டு சென்று இருக்கலாம்..... அந்த இடம் முழுவதும் மீடியா, போலீஸ் என்று அந்த இடம் முழவதும் ஆட்கள் நிரம்பி இருந்தனர்.... அந்த தெரிவிற்குள் பொது மக்கள் யாரையும் அனுமதிக்க வில்லை...... என்னவே என்னால் சென்று பார்க்க முடிய வில்லை.......

அந்த இடதில் இருந்த பொது மக்கள் தங்களுடைய தொலைபெசியுள் பேசி கொண்டு இருந்தார்கள்..... அவற்றை ஒட்டு கேட்கும் போது கேட்ட சில வரிகள்.....

  1. மச்சி நா அப்போ அங்க தண்டா இருந்தேன்..... நைட் ஒரு சத்தமா இருந்துச்சு வெளிய வந்தா போலீஸ் துப்பாக்கி ல சுட்டு கிட்டு இருந்தாங்க
  2. போலீஸ் என்னிடம் தான் வழி கேட்டார்கள்.....
  3. போலீஸ் வருவதை முதலில் பார்த்ததே நான் தான்....
  4. போலீஸ் அந்த பசங்களை பற்றி என்னிடம் தான் கேட்டார்கள்
  5. அந்த பசங்கள என்னக்கு நல்லாவே தெரியும்... அவனுக்கே யார்கிட்டையும் அதிகமா பேச கூட மாட்டார்கள்.....
  6. நம்ம தேருக்கு பக்கத்துல தான் அவனுக இருந்தானுக.....

என்று விதம் விதமாக தொலைபெசியுள் கூறி கொண்டு இருந்தார்கள்...... இதை எல்லாம் என்னக்கு கேட்க்கும் பொழுது சிரிப்பு தான் வந்தது...... வதந்திகள் இப்படி தான் கிளம்பு கிறார்கள்.... ஒரு விசயம் நடந்தால்.... தனக்கு எதுவம் அதை பற்றி தெரியாது என்று கூறினால் நம்மை சுற்றி இருபவர்கள் நம்மை மதிக்க மாட்டார்களோ என்ற ஒரு சின்ன காரணத்திற்கு இப்படி வதந்திகள் கிளும்புகின்றன........ இதற்கு மேலாக எனது நண்பன்... அவனது அலுவலகதிற்கு தொலைபசியுள் அழைத்து ஒரு மணி நேரம் permission காரணம், போலீஸ் யாரையும் தெருவை விட்டு வெளிய வர கூடாது என்று கூறி இருக்கிறார்கள்..... என்று கூறி பெர்மிச்சியன் வாங்கி விட்டான்.... என்ன கொடுமை சார் இது..........

காலை 11 மணிக்கு வேலைக்கு செல்பவர்கள், மாணவர்கள் அனைவரும் சென்று விட.... இல்லத்து அரசிகள்... கூட்டம் கூட்டமாக அந்த தெருவிற்கு சென்று வந்து கொண்டு இருந்தார்கள், எக்கா உன்னக்கு விசயம் தெரியுமா இவனுக அங்க வழிப்பறி பண்ணினன்களா அவனுகளா.... பேங்க் ல கொள்ளை அடிச்சா பணத்தை அந்த விடல தான் இன்னும் இருக்கமே... உனக்கு தெரயும்மா????? எங்க விட்டுக்காரர் தான் சொன்னாரு..... என்று பெண்கள் ஒரு பக்கம் வதந்தியை கிலோ கணக்கா பரப்பி கொண்டு இருக்க..... நான் எனது விட்டிருக்கு பகத்தில் இருக்கும் பெட்டி கடை காரரிடம் சும்மா ஒரு மொக்கையை போட அப்பொழுது அங்கு வந்தே பெரியவர்..... இந்த பொம்பளைங்க எங்க கூட்டமா பொய்த்து வரலுங்க... என்ன திருவிழவா என்று கேட்டார்.... நான் கூறினேன்... அதான் நேற்று திபாவளி கொண்டடி இருகண்களா அதான் என்று கூறினேன்... அந்த பெண்களை திட்டி கொண்டு பெரியவர் புலம்ப ஆரம்பித்தார்..... நான் கேட்டேன் பெரியவரே இந்த பசங்களுக்கு விடு பார்த்து குடுத்த புரோக்கர் யாருன்னு கேட்டேன்.... இதுல்லாம் இப்படி நடக்கும்னு யாருக்கு பா தெரியும்..... வரும் பொது எல்லாம் நல்ல பசங்கள தான் இருகாங்க..... ஆனா இப்போ.... என் நானே அவர்களுக்கு அந்தே விட்டை முடித்து குடுத்து இருக்கலாமான்னு சொல்லுறார்.....

அவரிடம் அண்ணே அந்த வீடு விலைக்கு வந்தால் சொல்லுங்கள் கம்மியான விலைக்கு வாங்கி விடலாம்.... என்ன ஐந்து நபர்கள் செத்த வீடு... ஒருத்தன் வர மாட்டன்.... நாமா அத வாங்கிடலாம்......

எங்களுக்கு உள்ள வருத்தம் என்ன வென்றால் பக்கத்துக்கு தெரிவில் தான் இருந்து இருந்தான் .... ஒரு ஷேர் குடுத்து இருக்கலாம், பாவிபய... கூடவே சுத்துறிய செவாலை நீயாவது இத கேட்க மாட்டிய..... எங்கங்க கேட்கிறான் கண்ட கண்ட போலீஸ் எல்லாம் வந்து என்கௌன்ட்டர் பண்ணும் சொன்னா கேட்கிரேன..... இப்போ என்கௌன்ட்டர் அச்சுல........


இனிமேல எங்களுக்கு எங்க ஏரியா வில் உள்ள problems.......

  1. இரவு பத்து மணிக்கு மேல் வெளிய வரே முடியாது.....
  2. எப்பொழுதும் போலீஸ் ரவுண்டு ஆப் இருக்கும்......
  3. இந்த ஏரியா வில் இருக்கும் பெச்லோர்ஸ் பசங்க எல்லாரயும் ஒரே சந்தேக பார்வை உடன் தான் பார்ப்பார்கள்....
  4. சும்மாவே பெச்லோர்ஸ் க்கு வீடு குடுக்க மட்டங்க... இப்போ இது வேரயா.......
  5. இந்த ஏரியா வில் இருக்கும் நோர்த் இந்தியன்ஸ் எல்லோரும் மீதும் போலீஸ் பார்வை பயங்கரமா இருக்கும்........ (நம்ம ஆளுங்க ஒரு விசயம் நடந்த பிறர்க்கு தான் அந்த விசயம் பத்தி கவனம் செல்துவார்கள்.... உன்னை போல் ஒருவன் படத்தில் கமல் சொல்லுவது போல்..... ஒரு தீவிரவாதி வயதில் குண்டு வைத்து வந்தால்..... வருபவர்கள் அனைவரையும் வயதில் மட்டும் தேடி பார்ப்பார்கள்..... ஒருவன் காலில் குண்டு வைத்து வந்தால் அவனை விட்டு விடுவார்கள் )
  6. பெச்லோர்ஸ் பசங்க அனைவரின் அட்ரஸ் உம் வாங்க படும்

இந்த என்கௌன்ட்டர் பற்றி இணையத்தில் வரும் தகவல்கள் பார்க்கும் பொது உண்மையுள் இந்த என்கௌன்ட்டர் தேவை தானே என்று யோசிக்க தோன்றுகிறது....... இவர்கள் அப்படி என்ன தப்பு செய்து விட்டார்கள்..... வங்கியுள் பணத்தை கொள்ளை அடித்தார்கள் அவோலோதனே ..... இவர்கள் என்ன கொலை, கற்பழிப்பு என்று தேச துரோக செயல்களா செய்தார்கள்...... இவர்கள் பணம் கொள்ளை அடித்து தவறு என்று நீங்கள் கூறினால் அப்படி என்ன்றால் ஜெயா, கருணா, ராஜா, இவர்களை என்ன செய்யலாம் ??? நீங்களே கூறுங்கள், சிறிதாக வழிப்பறி, செயின் பறிப்பு, பிக் பாக்கெட் என்று செய்தல் பொது மக்கள் தரும அடி, போலீஸ் லாக் அப்..... பெரிய spectrum கொள்ளை நில அபகரிப்பு என்று போனால் ஜெயில் தண்டனை, உச்ச நிதிமன்றம், வைத்தா... என்று இழுத்து அடிபர்கள்.....

ஆனால் இவர்களை போல வங்கி கொளையர்களை மட்டும் என்கௌன்ட்டர் என்றால் என்ன நியாயம் மக்களே ..... நீங்கேள கூறுங்கள்.... இந்த என்கௌன்டர் போலீஸ்இன் மரியாதையை, காப்பறு வதற்காக செய்ய பட்டது என்றே நான் கூருவேன்.... கடந்த ஒரு மாதமாக போலீஸ் ஐ எல்லோரும் திட்டி தான் வருகிறார்கள்... ஒரு வங்கி கொள்ளை அடிக்க பட்டு உள்ளது... இவர்கள் என்னதான் செய்யது கொண்டு இருக்கிறார்கள் ....... இவர்கள் இந்த கொள்ளைகரர்களை பிடிக்க ஒரு துப்பு இல்லை என்று அனைவரும் கூறி கொண்டு தான் இருக்கிறார்கள்,.... அந்த நேரத்தில் இரண்டாவது வங்கியும் கொள்ளை அடிக்க பட்டு விட கொதித்து பொய் விட்டது இந்த மானம்கெட்ட காவல் துறை...... அவர்களை பற்றி ஒரு தொலைபேசி அழைப்பு வந்த உடன் ஒரு பட்டலியன் உடன் போலீஸ் வந்து அனைவரையும் கொன்று விட்டது .... எது என்ன என்று விசாரிக்க கூட வில்லை...... ஒருவனை யாவது உயிரோடு பிடித்து இருந்தால் இவர்களை பாராட்டி இருக்கலாம்...... ஆனால் இவர்கள் செய்தது பேர், பெருமைக்க செய்த என்கௌன்ட்டர் இதில் பெருமை வேறு...... தமிழகத்தில் நடந்த மிக பெரிய என்கௌன்ட்டர் இது தான் என்று.......


நாம் கசாபைய உயிரோடு கறியும் சோறும் போட்டு தான் பார்த்து கொண்து இருக்கிறோம்...... பணத்தை கொள்ளை அடித்து தவறு தான்.... நாங்கள் இதை தவறு இல்லை என்று கூறவில்லை..... ஆனால் அதற்க்கு என்கௌன்ட்டர் ரொம்ப அதிகம்..... அட்லீஸ்ட் ஒருவன் வது உயிரோடு பிடித்து இருக்கலாம்...... மனித உயிர் என்றால் இவர்களுக்கு அவொலோ கேவலமா...... இவர்கள் north indians ...... இவர்களை போட்டாள் கேட்க ஆல் கிடையாது என்று கையாலகாத காவல் துறை தனது கை வரிசை காட்டி இருக்கிறது... இது உண்மையுள் பெருமை படவேண்டிய விசயம் அல்ல....... வருத்த பட வேண்டிய விசயம்........ நான் வேறு யாரும் அல்ல உங்களுள் ஒருவனாக இந்த சமுக அவலங்களை பார்த்து கொண்டு இங்கு புலம்பி கொண்டு இருக்கும் ஒரு சாதரனே சாமானியன்..... நான் உங்களுள் ஒருவன்.........

7 comments:

HotlinksIN.com திரட்டி - வலைப்பதிவுகளின் சங்கமம் said...

மிக மிக சரியாக சொன்னீர்கள் நண்பரே...

Anonymous said...

police enna saakarathukku piranthaangalaa? Nee police aa irunthu parrda therium. Enna pannalum kutham kandupidikira unna mathiri aalungala thiruthavae mudiyayhu.

Anonymous said...

naattu pannathai kollaiuaduchh arasiyal and athikarigal kku enkounter eppo???????????????????

Anonymous said...

ஜெயா, கருணா, ராஜா, இவர்களை என்ன செய்யலாம் ??? நீங்களே கூறுங்கள், சிறிதாக வழிப்பறி, செயின் பறிப்பு, பிக் பாக்கெட் என்று செய்தல் பொது மக்கள் தரும அடி, போலீஸ் லாக் அப்..... பெரிய spectrum கொள்ளை நில அபகரிப்பு என்று போனால் ஜெயில் தண்டனை, உச்ச நிதிமன்றம், வைத்தா... என்று இழுத்து அடிபர்

சிரிப்புசிங்காரம் said...

நீங்க கேட்ட கேள்வி மிகவும் சரியான கேள்வி..ஆனா கேட்ட இடம்தான் சரியில்ல....சிறு குழந்தைகளையும்,வயதான பெரியவர்களையும் கொன்ற கொலைகாரர்களைப் பார்த்து கேட்டிருக்கவேண்டும்...பரவாயில்லை இனிமேலாவது வாயை மூடிகிட்டு இருந்தால் நல்லது.......

உங்களுள் ஒருவன் said...

@ சிரிப்பு சிங்காரம் @ நானும் அதை தான் சொல்லுகிறன், வயதானவர்கள், குழந்தைகள் களை கொன்றவர்களை, என்கௌன்ட்டர் பண்ணி இருந்தால் அவர்களை பாராட்டி இருக்கலாம்..... அனால் இவர்கள் வங்கியுள் கோளை அடித்தவர்கள் தான் இவர்களை பிடித்து நிதிமன்றத்தில் நிறுத்தி இருக்கலாம்..... அங்கு தண்டன்னை பெற்று குடுத்தால் இவர்களின் திறமையை கண்டிப்பாக பாராட்டி இருக்கலாம்...... இது மனித தன்மை அற்ற செயலகவே நான் பார்கிறேன்......

உங்களுள் ஒருவன் said...

@ annonymous 1 @ தவறு யார் செய்தலும் அது பற்றி கேள்வி எழும் பொது தான்..... மக்களுக்கு உண்மை தெரியவரும்.... சமுகத்தில் எது நடந்தாலும் அதை பார்த்தும் பார்க்காதது போல என்னால் இருக்க முடியாது...... ஐந்து பேரயும் கொன்றது தவறு.... குறைந்தது ஒருவனை அவது உயிரோடு பிடித்து இருக்கே வேண்டும்....... அனைவரயும் கொன்று..... ஒரு தலை பட்சமாக போலீஸ் கூறுவதை கேட்டு கொண்டு இருக்க முடியாது... நண்பரே

Post a Comment