Thursday, March 22, 2012

இன்னொரு முள்ளிவாய்க்கால்

இலங்கையில் தான் தமிழர்கள் படுகொலைகள் செய்ய பட்டார்கள் நாம் என்ன செய்து கிழித்து விட்டோம், சும்மா வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டு இருந்தவர்கள் தானே நாம்..... இப்பொழுது தமிழகத்தில் ஒரு முள்ளிவாய்க்கால் உருவாக்கும் ஆபாயம் ஏற்பட்டு உள்ளது..... அதுதான் இடிந்தகரை.....
இடிந்தகரை இல் அணுஉலை அமைத்து தான் அந்த மக்களை கொல்ல பட வேண்டும் என்பது அல்ல..... அங்கு அணுஉலை அமைப்பதற்கு கூட இந்த மக்கள் கொல்லபடலாம் என்பது தான் இந்த மக்கள் விரோத ஆட்சி இல் செய்கிறார்கள்...... சங்கரன்கோவில் இடை தேர்தல் முடியும் வரை இந்த போரட்டத்துக்கு அதரவு தெரிவிப்பது போல செயல் பட்டு விட்டு இப்பொழுது எதிர்கிறார்கள்.... எப்படி காங்கிரஸ், திமுக 2009 இல் தேர்தல் வரை அமைதியாக இருந்து விட்டு தேர்தல் முடிந்த உடன்.. அங்கு தமிழர்கள் கொத்து கொத்தாக கொன்றார்களோ அதை போல் இப்பொழுது அம்மையாரும் அதற்க்கு சளைத்தவர் அல்ல என்பது போல இங்கயும் தமிழர்களை கொல்ல எத்தனித்து விட்டார்.... என் அவர் உண்மைல்ய்ல் வீர மங்கை, தங்க தாரகை என்றால் தேர்தலுக்கு முன்பு இதை செய்து இருக்கலாமே...

அவர்களின் போராட்டம் நியாயம் இல்லாமல் கூட இருக்கட்டும்... அதற்கு இப்படி தான் ஒரு அரசு தனது மக்கள் மீது போர் தொடுப்பது போல இராணவத்தை வரவழைத்து அந்த மக்களை திறந்த வழி சிறை சாலையில் அடைப்பது போல் அடைபதா????? ...... கூடங்குளம், இடிந்தகரை சுற்றி 144 தடை உதரவு போட்டு அந்த மக்களை தனிமை படுத்தி, அவர்களக்கு பால், தண்ணிர், மின்சாரம், உணவு பொருட்கள் அனைத்தும் தடை செய்ய பட்டு உள்ளது......

எப்படி முள்ளிவாய்க்கால் இல் தமிழர்கள் அன்னைவர்ரையும் ஒரு குறிபிட்ட இடதிருக்கு கட்டயமாக வரவழைத்து அவர்கள் அனைவரயும் கொத்து கொத்தோக கொன்றார்களோ... இப்பொழுதும் இடிந்தகரைஇல் அப்படிதான் இருக்கிறது..... இடிந்தகரை இல் இருக்கும் சில ஆயிரம் மக்களை பணிய வைக்க ஆயுதம் ஏந்திய ராணுவமும், காவல்துறையும் அங்கு முகாம் இட்டு இருக்கிறார்கள். அந்த மக்களின் இயல்ப்பு வாழ்கையை தடுகுகிரர்கள்.... இது எந்த வகையுள் நியாயம்?????

சில நண்பர்கள் கேட்கிறார்கள் இவொலோ நாளாக இல்லாமல் இப்பொழுது என் இந்த போராட்டம் இவொலோ முக்கியம் பெற வேண்டும் என்பது..... நான் ஒன்று கூறி கொள்ளுகிறேன்..... அவர்கள் கூடங்குளம் அனு உலை திட்டம் ஆரம்பம் பொழுது இருந்து போரரட்டம் நடத்தி தான் வருகிறார்கள்.... முதலில் இந்த அனு உலை திட்டம் நேரடியாக தமிழகதிருக்கு வரவில்லை, நமக்கு பக்கத்தில் இருக்கும் இரண்டு மாநிலத்திற்கும் சென்று அங்கு அவர்கள் வேண்டாம் என்று தூக்கி போட்ட திட்டம் தான் இந்த அனு உலை திட்டம், அதை அப்பொழுது இருந்த அரசுகள், நமக்கு இதில் எவ்ளோ பணம் அடிக்கலாம் என்று மட்டும் பார்த்து விட்டு இந்த திட்டதை சரி என்று ஏற்று கொன்றார்கள்..... அப்பொழுது ஆரம்பித்த இந்த போரரட்டம் இன்றும் ஓய்ந்த பாடில்லை.......

நான் ஒன்று கேட்கிறேன்.... ஐயா என்னிடம் ஒரு நல்ல பாம்பு இருக்கிறது.... அதற்கு பல்லும் பிடிங்கி விட்டேன்... அதை சிறிது காலம் உங்களுது விட்டில் வைத்து கொள்ளலாமா என்று யாராவது உங்களிடம் கேட்டால் நீங்கள் என்ன பதில் சொல்லுவிர்கள்????? சரி வைத்து கொளுகிறேன் என்று சொல்லுவிர்களா ??????? அதை தான் இந்த இடிந்தகரை மக்களும் கூறுகிறார்கள்..... அவர்களுது பயத்தை போக்காமல் இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல் படுவது முட்டாள் தனம்.....

அணு உலை எதிர்ப்பு கூட்டத்தின் தலைவர் உதயகுமார் கேட்கும் கேள்விகளுக்கு யாரும் சரியாக பதில் சொல்லுவத இல்லை, புதிய தலைமுறை தொலைகாட்சி இல் அவர் ஒரு கேள்வி கேட்டால் அரசாங்கம் அதற்கு கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல் அணு உலை மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்று மட்டும் கூறுகிறார்கள்.... இதற்கு காங்கிரஸ் அமைச்சர் ஒருவர் நாராயணசாமி.... விமானமே வந்து மோதினாலும் அணு உலை க்கு பாதிப்பு இல்லை என்கிறார் முதலில் இவனை தூக்கி விட்டால் போதும் எல்லாம் சரியாகி விடும்... முதலில் மக்களுக்கு ஒரு படிப்பினை குடுக்கவேண்டும்.... அவர்களின் பயத்தை போக்க வேண்டும்..... அவர்களுக்கு புரிகின்ற மாதிரி சொல்ல வேண்டும்.... அவர்கள் எதற்கும் சரி வரா விட்டால் அந்த திட்டதை வேறு ஒரு இடதிற்கோ அல்லது கை விட வேண்டும் இது தான் ஒரு நல்ல அரசாங்கத்தின் செயல்.... மக்கள் மதிக்காத அரசாங்கம் எதற்கு ????? முதலிலைய அவர்களின் அதரவை பெற்று விட்டு அல்லவா அந்த இடதில் அணு உலை கட்ட பட்டு இருக்க வேண்டும்... அதை விட்டு விட்டு தான் புடித்த முயலுக்கு முன்று கால் என்று ஆணவத்தில் ஆடுவது சரி அல்ல.....

தமிழகத்தில் இப்பொழுது மின்சார தட்டுப்பாடு என்று ஒரு மாய தோற்றதை உருவாக்கி, தமிழகம் முழுவதும் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் மின் வெட்டு என்று மக்கள் அனைவரயும் நம்ப வைத்து, அதற்கு ஒரு வழி கூடங்குளம் அணு மின் நிலையத்தை தொடுங்கவது தான் என்று மக்கள் அனைவரையும் நம்ப வைக்கே சில கட்சி சார்ந்த தொலைகாட்சிகள், செய்தி தாள்கள் முலம் ஒரு மறைவு பிரசாரம் செய்து... உடையகுமர்க்கு எதிராக அனைவரயும் திருப்ப பார்கிறது .நான் ஒன்று கேட்கிறேன்.. இந்த கூடங்குளம் அணு மின் நிலையம் செயல் பாட்டுக்கு வந்தால் அதில் இருந்து கிடைக்கும் மின்சாரம் எத்தனை சதவிதம் நமது தமிழகத்திற்கு கிடைக்கும்.... அதிலும் எத்தனை சதவிதம் பொது மக்களின் உபயோகத்திற்கு கிடைக்கும்... பெரும்பாலும் factories and industries க்கு தான் போகும் மிச்சம் மிதி இருப்பது மட்டுமே பொது மக்களில் உபயோகைதிர்க்கு வரும்.. அப்பொழுதும் தமிழகத்தில் மின்சார தட்டுப்பட்டு இருக்க தான் செய்யும். அதற்கு பதில் மற்று ஏற்பாடு செய்யலாம்.... சூரிய ஒழி வழி கற்று வழியாக மின்சாரம் எடுக்க மக்களுக்கு மானியம் குடுக்கலாம், அதை விட்டு விட்டு.... அந்த மக்கள் மிது பொய் வளைகு போதுவது. பொய்யாக விமர்சனம் செய்யது நல்லவ இருக்கு..... எதோ ஒரு ஜேர்மன் கரனை பிடித்த இவன் தான் அவர்களுக்கு பணம் உதவி செய்தான் என்று கூறி அவனை நாடு கடதுனிர்கள்.... அப்படி அவன் உண்மையுள் பணம் உதவி செய்து இருந்தால் அவனை கைது செய்து விசாரணை அல்லவா செய்து இருக்கே வேண்டும்..... இந்த போரடடிருக்கு எங்கு இருந்து பணம் வருகிறது என்று இந்த போராட்டத்தை கொச்ச படுத்துவது போல் வெளி நாட்டில் இருந்து பணம் வருகிறது என்று கூறுபவர்கள்... அரசாங்கமே இவர்கள் தானே இவர்களுக்கு தெரியாமல் வெளி நாட்டில் இருந்து பணம் எப்படி இந்தியவிற்கு வரும்... அப்படியே வந்தாலும் அதை கண்டு பிடிக்க குட முடியாத இந்த அரசாங்கம் என்ன ______ பண்ணுகிறார்கள்?????? இப்படி இவர்கள் போராட்டத்தை கொச்சை செய்யாமல் இருந்தால் போதும்.....

இவர்கள் அனைவரயும் கொன்று தான் இந்த இடத்தில அணு உலை கடுவிர்கள் என்றால் நீங்கள் உண்மையான மக்கள் நலனில் அக்கறை கொந்த அரசாங்கம் தானே என்று சந்தேகம் வருகிறது....... இந்த போராடத் குழு மீது மீது நடக்கும் அவலங்களை பார்த்து கொண்து சும்மா இருக்க முடியாமல் உங்களிதம் புலம்பி தவிக்கும் உங்களுள் ஒருவன்...........

3 comments:

ஆர்வா said...

கேட்டிருக்கும் எல்லா கேள்வியுமே செவிட்டில் அறைவது போல்தான் இருக்கிறது....

நட்புடன்
கவிதை காதலன்

உங்களுள் ஒருவன் said...

எனது பதிவிற்கு வந்தமைக்கு நன்றி..... @கவிதை காதலன்@

தமிழரின் தாய்மதம் said...

, அந்த , முள்ளிவாய்க்கால் காலத்தையும் அமைதிபடை காலத்தையும் ஒப்பிட்டு அமைதிபடை காலத்தில் இருந்த ஈழத்தவரிடம் கேட்டால் சொல்வார்கள்
சிங்கள ராணுவம் என்பது எவ்வளவு இரக்கமில்லாத அமைப்பு என்பது எங்களுக்கு பின்னாளில்தான் விளங்கிற்று, அப்படி பார்க்கும்பொழுது இந்திய ராணுவம் ஓரளவு பொறுமையுடந்தான் போராடிற்று, முடிந்த அளவு பொறுமை காத்தது, அழிவுகளையும் அவமானங்களையும் பொறுத்துகொண்டது.
மக்கள் அழிவுகளை பற்றி கவலை இன்றி அடித்து நொறுக்கி இருக்குமானால் புலிகளை வீழ்த்த அதற்கு 1 நாள் கூட ஆகியிருக்காது.
ஆயிரம் அர்த்தம் நிறைந்த வார்த்தை அது,
உதவ வந்த அந்த படையினை விரட்டிவிட்டு, மொத்த வன்னிமக்களையும் முள்ளிவாய்க்காலில் சிங்களனிடம் ஒப்படைத்துவிட்டு, இனபடுகொலை, வெள்ளைகொடி படுகொலை, மனித உரிமை மீறல் என்றெல்லாம் சொல்வதை 1500 வீரர்களையும் ஒரு தலைவனையும் இழந்து, பெரும் பழி சுமத்தபட்ட‌ இந்த பெரும் தேசம் எப்படி எடுத்துகொள்ளும்?
ஈழத்தில் என்ன பிரச்சினை என்பதற்கு முன்பு ராஜிவ்காந்தி அருமையான பதில் சொன்னார்,
"ஒரு நபர் தன் ஆயுதத்தை கீழே வைத்தால் மறுநொடி கொல்லபடுவோம் என அஞ்சுகின்றார், ஆயுதம் இல்லாமல் அவரால் வாழமுடியாது. தன் ஆளுகைகுட்பட்ட நாட்டில், காலம் வரை ஆயுத துணையோடு வாழும் முடிவில் அவர் இருக்கின்றார், அதுதான் பெரும் பிரச்சினை" ,
பின்னாளைய வரலாறு அதனை உண்மை என காட்டிற்று.

Post a Comment